ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம்
இலங்கையில் மனித உரிமைகள் பற்றி செய்தி அறிக்கையிடல் : ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம்
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில் துஷியந்தினி கனகசபாதிபதிப்பிள்ளை வழங்கிய “ ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம் ” என்ற கருத்து முன்னிலைப்படுத்தலின் முழு எழுத்து வடிவம்:
ஆபிரிக்க பெண் ஒருவரின் பாடல் ஒன்றை பாடுவதனூடாக எனது கருத்து முன்னிலைப் படுத்தலை ஆரம்பிக்க விழைகின்றேன். அந்தப் பாடல் வருமாறு:
நான் ஒரே வேண்டுகோளையே முன்வைக்கின்றேன்
எனக்கு அந்தத் தேவை இருந்த போதிலும்..
நான் பணம் தேவையென வேண்டவில்லை
நான் இறைச்சி அவசியமென வேண்டவில்லை
நான் வேண்டுதலெல்லாம்
எனது வழியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக் கற்களை
நீக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே! - ஆச்சோலி கவிதை தொகுப்பின் லாவினோ பாடல் - ழூ ஒகோட் பீபிட்டிக்