Main

October 27, 2008

95வது வயதை பூர்த்தி செய்யும் பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

கொழும்பு 10 கப்பித்தாவத்தை ஸ்ரீபாலசெல்வ விநாயகர் ஆலய பிரதம குருவும் இலங்கையின் அந்தண குழாமின் மூத்த சிவாச்சாரியாருமான பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா இன்று செவ்வாய்க்கிழமை - அக்ரோபர் 28ம் திகதி, சித்திரை நட்சத்திரத்தில் விநாயக பெருமானின் அநுக்கிரகத்துடன் 95 வயதை பூர்த்தி செய்கின்றார்.

இவர் 1942 இல் இராஜலக்ஷ்மி அம்மாளை மணம் புரிந்தார். மணவாழ்வில் புகுந்த அவர் பெரியோர்களின் ஆசியின் படியே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதற்கிணங்க 8 ஆண் குழந்தைகளையும் 3 பெண்பிள்ளைகளையும் தவப்புதல்வர்களாக கொண்டவர். மனைவி ராஜலக்ஷ்மியும் சுமங்கலியாகவே சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தார்.

Continue reading "95வது வயதை பூர்த்தி செய்யும் பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா" »

October 22, 2008

தீபாவளியை அண்மிக்கும் இத்தருணத்திலாவது மலையக மக்கள் நலன் முன்னுரிமை பெறவேண்டும்

ல கோடி பணம் யுத்ததிற்காகவும் வேறும் அதிகார துஷ்பிரயோகங்களினாலும் விரயமாகப்பட்டுக் கொண்டிருக்கையில், நாட்டிற்கு கணிசமானளவு அந்நிய செல்லாவணியை தலமுறைகள் வழியாக ஈட்டித்தரும் தமிழ் - மலையக தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்படும் நிலயே தொடர்கிறது.

நாட்டில் அன்றாடம் அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்கள் மற்றும் பண வீக்கங்களுக்கு மத்தியில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவது பெரும் சவாலாகவே இருந்து வருவதனை சுட்டிக்காட்டியும், அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை மனிதாபிமான ரீதியில் உணர்ந்து நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும், கொழும்பில் இருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழான வீரகேசரி, ஒக்ரோபர் 23ம் திகதி ஆசிரியத்தலையங்கம் தீட்டியுள்ளது.

[மலையகத்தில் - படப்பிடிப்பு: Kaz]

ஒக்ரோபர் 28ம் திகதி, தீபாவளிப்பண்டிகையை மிகவும் விசேடமாக கொண்டாடும் பெருந்தோட்டத்துறை மலையக மக்களுக்கு உரிய முற்பணங்களையும் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியத்தலையங்கம் முழுவதுமாக:

Continue reading "தீபாவளியை அண்மிக்கும் இத்தருணத்திலாவது மலையக மக்கள் நலன் முன்னுரிமை பெறவேண்டும்" »

October 05, 2008

சங்க இலக்கியத்தில் மனித நேயம்

முனைவர் ந. முருகேசன்

னிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத் துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர் களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்க ளின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.

Continue reading "சங்க இலக்கியத்தில் மனித நேயம்" »