Main

February 29, 2008

கொசோவோ விடுதலை இராணுவத்தின் பரிணாம வளர்ச்சி

டி.பி.எஸ். ஜெயராஜ்

சுதந்திர கொசோவோ என்னும் பறவைக் குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்து ஒரு வாரகாலமாகிறது. கடந்த 17ம் திகதி சேர்பிய மாகாணமான கொசோவோ, சேர்பியாவிலிருந்து விலகி சுதந்திரபிரகடனத்தை மேற்கொண்டது. 39 வயதான பிரதமர் ஹசீம் தாசியினால் இந்த சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திரத்தையொட்டி கொசோவோ மக்கள் கீதங்கள் இசைத்தும், ஆரவாரித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொசோவோ மக்கள் தலைநகர் பிரிஸ்றினாவில் பெப்பிரவரி 16 இரவு கொண்டாட்டத்தில்: படம்: நியு யோர்க் ரைம்ஸ்

புதிய தேசத்தில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணத்தினாலான கொடிகள் திக்கெங்கும் ஏற்றப்பட்டன.

இது உண்மையிலேயே அல்பானிய மக்கள் மகிழ்ச்சி களிப்படைய வேண்டிய தருணமாகும். பல தசாப்தங்களாக அஹிம்சை மற்றும் வன்முறைப் போராட்டங்களினால் சிந்திய வியர்வைக்கும், இரத்தத்திற்கும் கிடைக்கப்பெற்ற விலைமதிப்பற்ற சன்மானமாக கொசோவோ மக்கள் தமக்கே உரிய தனிநாட்டைப் பெற்றுக்கொண்டனர்.

கொசோவோ விடுதலை இராணுவத்தினது நீண்டகால போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர் என்ற ரீதியில் பிரதமர் தாசிக்கு தனிப்பட்ட ரீதியில் இதுவொரு மாபெரும் வெற்றி மைல்கல்.

ஒரு காலத்தில் பிரதமர் ஹசீம் தாசி பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டிருந்தார். சேர்பிய நீதிமன்றம் ஹசீம் தாசிக்கு பத்தாண்டு கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. எனினும் தாசியை சிறைப்பிடிப்பதென்பது சுலபமான காரியமாக அமையவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளிடம் தக்க தருணத்தில் தலைசாய்ப்பதனூடாக இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என்பதை தாசி நன்றாக விளங்கிக் கொண்டிருந்தார். 

கொசோவோ விடுதலை இராணுவம் உஸ்ற்ட்ரா ச்ரிமேட்ரே ஈ கொசோவோ அல்லது யூ.சீ.கே என அல்பானியாவில் பிரபலமடைந்திருந்தது. அண்மைக்கால கெரில்லா போராட்ட இயக்கங்களில் மிகவும் வெற்றிகரமான இயக்கமாக கொசோவோ விடுதலை இராணுவத்தைக் குறிப்பிடலாம். கொசோவோ விடுதலை இராணுவம் அதன் முக்கிய இரண்டு இலக்குகளில் ஒன்றை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதலாவது சேர்பிய மாகாணமாக காணப்பட்ட கொசோவோவை தனிநாடாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகும்.

மற்றைய இலக்கை அவர்கள் எவ்வாறு அடைவார்கள் என்பது குறித்த தேடல் மிகச் சுவையானது. அல்பானிய இராச்சியமொன்றை அமைத்தலே அவர்களது மற்றைய இலக்கு.

உலகின் பல முன்னணி விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் ஒப்பீடு செய்யும் போது கொசோவோ விடுதலை இராணுவம் அவ்வளவு பலம் பொருந்திய ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு இருந்த போதிலும் அவர்கள் தமது இலக்கை என்ன வழிமுறையில் அடைந்தார்கள் என்பது நோக்கத்தக்க ஒன்றாகும்.

கொசோவோ இராணுவத்தை; ஒரு பலம்வாய்ந்த இராணுவ அமைப்பாக குறிப்பிட இயலாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் சேர்பிய படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது சூட்சுமமாக கொசோவோ இராணுவம் பின்வாங்கியிருந்தது.

என்றாலும், வெற்றியோ, தோல்வியோ கொசோவோ இராணுவம் ஒரு அமைப்பு என்ற வகையில் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொரு அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. 

புவியியல் அமைப்பின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவத்தை நிராகரிக்க முடியாத ஒரு சூழ்நிலைக் காணப்பட்ட போதிலும், ஏனைய பல அமைப்புக்கள் இதனைவிட சாதகமான பின்புலத்தைக் கொண்டிருந்த போதிலும் தமது போராட்டங்களில் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

யதார்த்தபூர்வமான அனுமுறையின் மூலமே கொசோவோ விடுதலை இராணுவம் வெற்றியீட்டியுள்ளது. ஆயுதப் போராட்டமொன்றின் வரையறைகளை மிக நுணுக்கமாக கொசோவோ இராணுவம் அறிந்து வைத்திருந்தது. எந்த நேரத்தில் போராட்டம் நடத்த வேண்டும், எந்த நேரத்தில் மௌனம் காக்க வேண்டும் என்பதனை நன்கு உணர்ந்திருந்தது. 

இந்த அமைப்பு இராஜதந்திர விளையாட்டில் அதிகாரம் என்ற பந்தை மிக சிறப்பான முறையில் கையாண்டதாகவே குறிப்பிடவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் நிபந்தணைகளுக்குக் கட்டுப்பட்டு, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக செயலாற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தைகளை நீட்டிச் சென்றது. எந்த நேரத்தில் சமாதான இணக்கப்பாடுகளை தமக்குத் தேவையான கோணத்திற்கு திசைதிருப்ப வேண்டும் என்பதை கொசோவோ விடுதலை இராணுவம் தெளிவாக புரிந்து வைத்திருந்தது.

எதிர்த்தரப்பினர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளாத சந்தர்ப்பங்களிலும் கூட கொசோவோ விடுதலை இராணுவம் போற்றத்தக்கதோர் பொறுமையுடன் செயலாற்றியது. பேச்சுவார்த்தைகளை ரத்து செய்து ஆயுதப் போராட்டத்தில் மீண்டும் குதிக்காமல் தமது இலட்சிய பாதையில் சற்றும் விலகாமல் நிலைத்து நின்றது.

இதனால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை கிட்டியது. கொசோவோ விடுதலை இராணுவத்தின் முக்கியஸ்தருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக அமெரிக்கா பிரச்சாரம் செய்திருந்தமை நோக்கத் தக்கதோர் விடயமாகும்.

கொசோவோ சேர்பியாவின் ஒரு மாநிலமாகும். புராதண காலத்தில் சேர்பியாவின் முக்கிய கலாச்சார சின்னமாகவே கொசோவோ மாநிலம் கருதப்பட்டது. இந்த மாநிலத்தில் அதிகமாக சேர்பியர்களே வாழ்ந்து வந்தனர். பின்னர் கிறிஸ்தவர்கள் இந்த மாநிலத்தில் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

1389ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி கொசோவோவில் வரலாற்று புகழ்பெற்ற இராணுவப் போராட்டம் நடைபெற்றது. துருக்கிய சக்கரவர்த்தி ஒட்டமானின் ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கொசோவோ 523 ஆண்டுகள் துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ்; காணப்பட்டது. தென்கிழக்காசிய யுத்தத்தின் மூலம் 1912ம் ஆண்டு சேர்பியா கொசோவோவை கைப்பற்றியது. 1913ம் ஆண்டு லண்டன் உடன்படிக்கையின் மூலம் கொசோவோ சேர்பியாவுடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது.

முதலாவது உலக மகா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், 1918ம் ஆண்டு கொசோவோ சேர்பிய இராச்சியத்தின் ஒரு அங்கமாக சட்டரீதியாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் போது கொசோவோவின் பெரும்பகுதி இத்தாலியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கொசோவோ யுகோஸ்லாவிய சமஷ்டி ஆட்சின் அங்கமான சேர்பியாவின் ஒரு மாகாணமாக 1946ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

அறுபதுகளில் யுகோஸ்லாவியாவின் அதிபர் மார்ஸல் டுடோவினால், சேர்பியாவின் தீவிர தேசியவாதத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் உத்தியாக கொசோவோ மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்கியிருந்தார். 1974ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தத்தின் மூலம் குறிப்பிடத்தக்களவு சுயாட்சி அதிகாரம் கொசோவோ மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக கொசோவோ அதிக ஜனத்தொகை ரீதியான மாறுதல்களைக் கண்டுள்ளது. சேர்பிய சனத்தொகை குறைவடைந்ததுடன், அல்பானியர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்தது. மத அடிப்படையில் கிறிஸ்தவர்கள் வெகுவாக குறைவடைந்த அதேவேளை, முஸ்லிம்கள் பெருகத் தொடங்கினர். 

இருபதாம் நூற்றாண்டில் சேர்பியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பான்மை இனத்தவராக அல்பானியர்கள் காணப்பட்டனர். பெரும்பாலும் அல்பானியர்கள் முஸ்லிம்களாகவும், சேர்பியர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர்.

சேர்பிய கிறிஸ்தவர்களுக்கும், அல்பானிய முஸ்லிம்களுக்கும் இடையில் நீண்டகாலமாக ஒரு பனிப்போர் நிலவிவந்தது. தேசியவாத உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் நதிமூலமாக 1979களில் பிரபலமடைந்திருந்த கொசோவோ குடியரசு இயக்கத்தை குறிப்பிடலாம். அல்பானிய சர்வாதிகாரி என்வர் ஒக்ஸாவினால் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. அல்பானியர்களின் இந்த உந்துதல் கொசோவோ தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது என்று கூறின் அது மிகையாகாது.

1981ம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் பிரிவினைவாதம் பரவி வியாபித்து, இறுதியில் ஓர் கலகமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவி நாடப்பட்டது.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி சுவிட்ஸர்லாந்தில் இயங்கிய மார்க்சிச – லெனின்வாத கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினர். 1982ம் ஆண்டு கொசோவோ மக்கள் இயக்கம் என்ற அமைப்பை சுவிட்ஸர்லாந்தில் நிறுவினர்.

அயர்லாந்தின் விடுதலை இராணுவத்தை (ஐ.ஆர்.ஏ) மாதிரியாகத் தழுவி தமது செயற்பாடுகளை கொசோவோ மக்கள் இயக்கம் ஆரம்பித்தது. யுகஸ்லாவிய சோசலிச குடியரசுக்குள் அல்பானிய தேசிய குடியரசொன்றை நிறுவுவதே இந்த அமைப்பின் பிரதான இலக்காக காணப்பட்டது. படிப்படியாக பாரிய அல்பானிய சாம்ராஜ்ஜியமொன்றை கட்டியெழுப்புவதே அவர்களின் இரண்டாவது இலக்காக அமைந்திருந்தது.

கடும்போக்குடைய தேசியவாத கொள்கைகளைக்க் கொண்ட ஸ்லொபொடன் மிலொச்சிவிக் சேர்பிய ஆட்சிப் பொறுப்பிற்கு அறிமுகமானதுடன் பிரிவினைவாதம் உச்சமடைந்தது. 1974ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் பிரகாரம் கொசோவோவிற்கு வழங்கப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை மிலொச்சிவிக் ரத்து செய்தார். இந்த செயல் கொசோவோ மக்களின் இதயங்களில் ரணமேற்படக் காரணமாக அமைந்தது. 1989ம் ஆண்டு அல்பானிய தலைவர்கள் சேர்பியாவிலிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். இதனால், சேர்பிய அரசாங்கம் கொசோவோவின் ஆட்சியைக் கலைத்தது. 

செப்டம்பர் மாதம் 100,000ற்கும் அதிகமான அல்பானியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் அடக்குமுறையின் மூலம் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது.

1991ம் ஆண்டு ஸ்லோவேனியா, குரேஷியா மற்றும் பொஸ்னியா ஆகிய நாடுகள் யுகோஸ்லாவியிலிருந்து விலகி சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதன் காரணமாக யுத்தம் வெடித்தது. 

அல்பானிய தலைவர்களும் ஒருதலைபட்சமாக 1991ம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டனர். எனினும் இதனை அல்பானியா மாத்திரமே அங்கீகரித்தது. 

1992ம் ஆண்டு எழுத்தாளர் இப்ரஹிம் ரொகுவா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

ரொகுவா ஓர் காந்தியவாதி, அஹிம்சை வழியில் சுதந்திரம் அல்லது சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைளை அவர் மேற்கொண்டார். 

எனினும், மிலோசிவிக்கினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தின் முன்னால் இந்த காந்தியவாத அஹிம்சைப் போராட்டத்;திற்கான உரிய பலன் கிடைக்கவில்லை.

சேர்பிய இராணுவப் படையினர் கொசோவோவின் அல்பானியர்கள் மீது இன ஒடுக்குமுறைகளைப் பிரயோகத்தினர்.

கொசோவோ மாநிலத்தில் சேர்பிய பெரும்பான்மையை உருவாக்கும் எண்ணத்தில் அல்பானிய இனத்தை களையும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன.

பல்லாயிரக்கணக்கான கோசோவோ அகதிகள் அல்பானியா, மசிடோனியா மற்றும் மொன்டென்க்ரோவில் சரணாகதி அடைந்தனர்.

ரொகுவாவின் வன்முறைகளற்ற காந்தியவாதப் போராட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் ஏமாற்றம் கொசோவோ மக்கள் அமைப்பு ஆயுதப் போராட்டக்குழுவாக வளர்ச்சி பெறுவதற்கு ஒரு துணைக்காரணியாக அமைந்திருந்தது. 1993ம் ஆண்டு கொசோவோ விடுதலை இராணுவம் மசிடோனியாவில் இரகசியமாக தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

அயர்லாந்து விடுதலை இராணுவத்தை மாதிரியாகக் கொண்டு கொசோவோ விடுதலை இராணுவம் தன்னை நெறிப்படுத்திக் கொண்டது. கொசோவோவிற்கும் சேர்பியாவிற்கும் இடையில் பாரிய மோதலொன்றை ஏற்படுத்துவதற்கு தூண்டுவதே அப்போதைய பிரதான தந்திரோபாயமாக காணப்பட்டது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் ஆரம்ப கர்த்தாக்காளக சஹிர் பஜ்ஜாட்சி மற்றும் அதம் ஜஸ்ரி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கொசோவோ விடுதலை இராணுவம் மாறுபட்ட தரப்புக்களிடமிருந்து நிவாரணங்களையும், உதவிகளையும் பெற்றுக்கொண்டது. அமெரிக்காவும், ஜேர்மனியும் ஆயுதங்கள், ஆயுத பயற்சி மற்றும் நிதி உதவி முதலியவற்றை  வழங்கின. உண்மையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான தந்திரோபாயமாகவே இந்த உதவிகள் நோக்கப்படுகிறது.

மறுபுறத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. 

எனினும், அமெரிக்க அரசாங்கம் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு மறைமுகமாக உதவிகளைத் தொடர்ந்தது.

அல்கய்தா அமைப்பு, கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய மற்றுமொரு சக்தியாக திகழ்கிறது. கொசோவோ விடுதலை இராணுவ வீரர்கள் பல சந்தர்பங்களில் ஆப்கானிஸ்தானில் பயிற்சிகளை பெற்றனர். இந்த விடயங்கள் அம்பலப்படுத்தபடாதவையாக காணப்படுகின்றன. 

1995ம் ஆண்டு கொசோசோ விடுதலை இராணுவம் சேர்பிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். 1996களில் மிகப் பிரபலமான ஒரு ஆயுதப் போராட்டக் குழுவாக கொசோவோ விடுதலை இராணுவம் உலகில் பிரபலமடைந்தது.

வடக்கு, கிழக்கு அல்பானிய பகுதிகளில் கொசோவோ விடுதலை இராணுவம் தமது பயிற்சி முகாம்களை நிறுவியது. யுகோஸ்லாவிய படைகளைச் சேர்ந்த பல அல்பானிய படையதிகாரிகள் பதவி விலகி கொசோவோ விடுதலை இராணுவத்தில் இணைந்து கொண்டனர். புதிய படைவீரர்களுக்கு அவர்கள் பயிற்சிகளை வழங்கினர். ஒரு இராணுவ அகடமி உருப்பெறும் அளவிற்கு இது வளர்ச்சிப் பெற்றிருந்தது.

16-20 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய கட்டளைக் கட்டமைப்பைக் கொண்ட குழுக்களாக கொசோவோ விடுதலை இராணுவ இயக்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 7 இராணுவ நடவடிக்கை வலயங்களாக கொசோவோ மாநிலம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வலயத்திற்கும் பொறுப்பான கட்டளைத் தளபதியொவருவர் காணப்பட்டார். “டி குரிஸ்” என கொசோவோ மொழியில் இந்தத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இதற்கு மேலதிகமாக அரசியல் துறையொன்றும் காணப்பட்டது. “ட்ரிஜிடோரியா பொலிட்டிகா” என இந்தத்துறை அழைக்கப்பட்டது. இந்த அரசியல்துறைக்கு தற்போதைய கொசோவோ பிரதமர் ஹசீம் தாசி தலைமை வகித்தார்.

1997 – 1999 ஆண்டு காலப்பகுதியில் கொசோவோ இராணுவம் ஒரு சடுதியான வளர்ச்சிப் போக்கை வெளிக்காட்டியது. ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சிவில் படை அதிகாரிகள் மீது கொசோவோ விடுதலை இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. தடைகளை அமைப்பதன் மூலம் அரசாங்கப் படைத்தரப்பின் ரோந்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியது.

1998ம் ஆண்டின் மத்தியபகுதியில் கொசோவோ மாநிலத்தின் ஒரு கால்வாசிப் பகுதியை கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர். கொசோவோவின் டெரினிக்கா பிராந்தியத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் பலம் ஓங்கிக் காணப்பட்டதுடன், ப்ரிகாஸ் என்ற கிராமத்தில் விடுதலை இராணுவத்தின் தலைமைக் காரியாலத்தை அமைத்திருந்தனர்.

சேர்பிய தலைநகர் பில்கிரேட் விடுதலை இராணுவத்தினரின் பலத்தை நூற்றுக் கணக்கில் மதிப்பிட்டது. எனினும், 20,000க்கும் மேற்பட்ட போராளிகளையும் பல நவீன ரக ஆயுதங்களையும் கொண்டமைந்த பாரிய போராட்ட இயக்கமாக கொசோவோ விடுதலை இராணுவம் வளர்ச்சிப் பெற்றது.

குறிப்பாக ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், ஆர்.பி.ஜீ. – 7 ரக ஆயுதங்கள் மற்றும் எஸ்.ஏ. – 7 ரக ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆரம்பத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரேசங்களுக்கான ரோந்து நடவடிக்கைகளை சேர்பிய இராணுவம் தவிர்த்துக் கொண்டது. விடுதலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடைந்த மோசமான தோல்விகளினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், நேரடியான மோதல் ஒன்றின் போது சேர்பிய படையினருடன் ஒப்பிடக்கூட முடியாத அளவிற்கு சிறிய சக்தியாகவே கொசோவோ விடுதலை இராணுவம் கருதப்படுகிறது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் பாரிய போராட்ட பின்னடைவாக ஹொராஹொவாக் பகுதியை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்னகர்வைக் குறிப்பிடலாம். உண்மையில் இந்த முயற்சியின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியது. அதன்பின்னர், சேர்பிய இராணுவத்தரப்பினர் அடிக்கடி கொசோவோ இராணுவத்தினருடன் மோதல்களில் ஈடுபட்டனர். 

இந்த மோதல்களினால் விடுதலை இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர். அதுவரையில் கெரில்லா இயக்கத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பல பகுதிகளை சேர்பிய இராணுவம் முற்றாக மீட்டெடுத்தது. எல்லைப்புறமான ஜூனிக்கைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளின் கட்டுப்பாட்டையும் தலைநகர் பில்கிரேட் கைப்பற்றிக் கொண்டது.

சேர்பிய இராணுவத்தினரின் மோசமான தாக்குதல்களின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. கொசோவோ விடுதலை இராணுவத்திற்கோ இதுவொரு எதிர்பாராத தண்டனையாக அமைந்தது. இஸ்ரேலுக்கு வெளியே வசிக்கும் யூதர்கள் (அல்பானியர்கள்) இதனால் கொதிப்படைந்தனர். கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்குலக நாடுகளில் உச்சமடைந்திருந்தது. ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொசோவோ விடுதலை இராணுவத்தில் இணையும் பொருட்டு தாயகம் திரும்பினர். உண்மையில் இந்த பெரும் எண்ணிக்கையிலானோரை சமாளிப்பதில் கொசோவோ விடுதலை இராணுவம் சிக்கல்களை எதிர்நோக்கியது என்றே கூறலாம்.

அப்பாவி அல்பானியர்கள் பாரியளவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களினால் கொசோவோ விடுதலை இராணுவத்திற்கான ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது எனலாம். கொசோவோ விடுதலை இராணுவ வீரர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் நான்கு சேர்பிய பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் தாக்குதலாக நிக்சோசன் மற்றும் சிரிஸ் ஆகிய கொசோவோ கிராமங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை சேர்பிய படையினர் மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட கிராமங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஏழுமாத கர்ப்பிணித் தாயயொருவரின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மற்றுமொரு இடத்தில், அதம் ஜசரி என்ற கொசோவோ விடுதலை இராணுவத்தின் தளபதியை கைது செய்வதற்காக பிரிகாஸ் கிராமத்தில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 60 பேர் கொல்லப்பட்டனர். இதில் 45 அப்பாவி சிவிலியன்களும் அடங்குகின்றனர். இந்த மோதல்களின் போது அதம் ஜசரியும் கொல்லப்பட்டார்.

சேர்பிய இராணுவத்தினரால் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை கொசோவோ விடுதலை இராணுவம் தமது பிரச்சார உத்தியாக கையாண்டது. சேர்பிய அரசாங்கத்தின் இனஒடுக்குமுறை முழு உலகிற்கும் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டது. பொஸ்னியாவின் அப்போதைய சூழ்நிலை இதற்கு மேலும் வலுவூட்டியது.

1999ம் ஆண்டு மார்ச் மாதமளவில் கொசோவோவில் முழுஅளவிலான போர் வெடித்தது. சேர்பிய மற்றும் யுகோஸ்லாவிய படையினர் கொசோவோ விடுதலை இராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் விடுதலை இராணுவம் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியதுடன், அல்பானியவிற்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கொசோவோவில் சில ஆயிரம் போராளிகளே எஞ்சியிருந்தனர்.

கொசோவோ படையினர் நேட்டோ படையினருடன் இணைந்து செயற்பட்டனர். நேட்டோ படையினர் 78 நாள் வான்தாக்குதல்களை மேற்கொண்ட போது கொசோவோ விடுதலை இராணுவத்தினர் இலக்குகளை அடையாளங்காட்டுவதில் ஒத்துழைப்பு வழங்கினர்.

1999ம் ஆண்டு மே மாதத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் கமாண்டர் ஸ்லிஜமன் செலிமி பதவி நீக்கம் செய்யப்பட்டு, அல்பானிய இனத்தவரும், முன்னாள் செச்னிய இராணுவ பிரிகேடியர் ஜெனரலுமான அகீம் செகு புதிய கமாண்டராக நியமிக்கப்பட்டார். 

அகீம் சேகு பதவியேற்றதன் பின்னர் தீவிர இராணுவ முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அடிக்கடி சேர்பிய பாதுகாப்பு அலகுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில், நோட்டோவும் சேர்பிய தலைவர்களும் சமாதான இணக்கப்பாடொன்றை எட்டியிருந்தனர். கொசோவோ ஐக்கிய நாடுகளினால் நிர்வகிக்கப்படும் என இதன் போது இணக்கம் காணப்பட்டது. கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் ஆயுதங்கள் களையப்படவிருந்தன. எனினும், கொசோவோ விடுதலை இராணுவம் சமாதான முன்னெடுப்புக்களில் பங்கேற்கவில்லை. ஆயுதங்களை களைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக கொசோவோ விடுதலை இராணுவத்தினர் சாணக்கியமாக ஆயுதக்களைவிற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவினரால் கொசோவோ படையினர் சமாதான முன்னெடுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 3000 கொவோவே விடுதலைப் போராளிகள், கொசோவோ பாதுகாப்பு வீரர்கள் என்ற பெயரில் நேட்டோவுடன் இணைந்து பணியாற்றினர்.

அனர்த்த நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்புபணிகள், கண்ணிவெடியகற்றல், மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்தல் போன்ற பணிகளில் இந்த மூவாயிரம் படைவீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொசோவோ பாதுகாப்பு வீரர்களின் செயற்பாடுகளும், கொசோவோ விடுதலை இராணுவத்தின் செயற்பாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. இதன் மூலம் இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பினை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். முன்னால் யுகோஸ்லாவிய படைவீரர்களின் விடுதிகளில் கொசோவோ பாதுகாப்பு வீரர்கள் நிலைகொள்ளச் செய்யப்பட்டனர்.

அல்பானிய பிரதிநிதிகளின் தலைவரான ஹசீம் தாசிக்கு இத்தாலிய பரிஸின் ராம்போலியூட்  நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்தைய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட கொசோவோ சுயாட்சி யோசனைகளை தாசி நிராகரித்தார்.

பின்னர் மாற்றுச் சிந்தனையுடைய தாசி இந்த சோசனையை ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு கொசோவோ விடயத்தில் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்தது எனக் குறிப்பிடலாம்.

இதன் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு ஜனநாயக கட்சியாக கொசோவோவில் தோன்றியது. கொசோவோவில் இடைக்கால ஆட்சியொன்றை அமைப்பது குறித்து பிரதான மூன்று கட்சிகளும் கவனம் செலுத்தின. ரொகுவோவின் ஜனநாயக லீக் கட்சி (டுனுமு) , ஐக்கிய ஜனநாயக லீக் (டுடீனு) மற்றும் கொசோவோ விடுதலை இராணுவம் (முடுயு) ஆகியனவே இந்த பிரதான மூன்று கட்சிகளுமாகும். 

இடைக்கால நிர்வாகத்தின் பிரதமராக ஹசீம் தாசி நியமிக்கப்பட்டார்.

இனஒடுக்குமுறை தற்போது தலைகீழாக மாறியது. ஒதுக்கப்பட்ட அல்பானியர்களின் மீள் வருகையினால் சேர்பிய இனத்தவர்கள் மெதுவாக கொசோவோவைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அல்பானியர்கள் சேர்பியர்களுக்கு எதிரான இன வன்முறைகளை சுதந்திரமாக அரங்கேற்றினர். ரோமா மற்றும் ஜிப்சி இனத்தவர்கள் இந்த இனஒடுக்குமுறையினால் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டனர்.

கடும்போக்குடைய தேசியவாதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிர்வாகிகள் பூரண சுதந்திரம் வழங்கியிருந்தனர். சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் கொசோவோவில் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கொலை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை உரிய முறையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொள்ளத் தவறியது என கொசோவோவின் மனிதவியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நேட்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களினால் மூன்றில் இரண்டு பங்கு ரோம இனத்தவரும், அஸ்காலி இனத்தவரும் வேறுவழியின்றி அப்பிரதேசங்களைவிட்டு வெளியேறினர். 

துரதிஷ்டவசமாக பெருமளவிலான ரோம இனத்தவர்கள் கொசோவோவைவிட்டு வெளியேற நேர்ந்ததது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ரோம இனத்தவர்கள் மிக பாரதூரமான அளவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது அழிவடைந்த சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக் கணக்கான சேர்பியர்களும் பலவந்தமாக கொசோவோவைவிட்டு வெளியேற்றப்பட்டனர். 

பிரதமர் தாசி இடைக்கால நிர்வாக ஆட்சியைப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் 348 கொலைகள், 116 கடத்தல்கள், 1070 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் 1106 சொத்துக்களைச் சேதப்படுத்திய சம்பவங்கள் பதிவாகின. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கால நிர்வாக ஆணைக்குழு நிறுவப்பட்டதன் மூலம் தாசியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தாசியின் டி.பி.கே. கட்சி மாநராட்சி தேர்தலில் படுதோல்வியடைந்தது.

ஹசீம் தாசி சேர்பியாவின் வடமேற்கு பள்ளத்தாக்கான டெனிசாவின் புரோஜா மாநகரில் 1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி பிறந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் அல்பெனிய மாணவத் தலைவர்களில் ஒருவராகவும், பிரிஸ்தினா நகரில் அமைந்துள்ள அல்பானிய பல்கலைக்கழகத்தின் முதலாவது மாணவ தலைவராகவும் தாசி கடமையாற்றியுள்ளார். 

1993ம் ஆண்டு ஹாசீம் தாசி சுவிட்ஸர்லாந்திற்குச் சென்றார். அங்கு கொசோவோ விடுதலை இராணுவத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார். விடுதலை இயக்கத்தில் தாசிக்கு “ஜர்பீரி” (பாம்பு) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஹசீம் தாசி அல்பானியாவின் பயிற்சிப் போராளிகளுக்கு பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார். பின்னர் கொசோவோ விடுதலை இராணுவத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.

கொசோவோவின் தற்போதைய ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் உரிமைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

துருக்கியர்கள், பொஸன்ஜன்க்ஸ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களான சேர்பியர்கள், ரோமர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட உள்ளது.

பெப்ரவரி 17ம் திகதி கொசோவோவின் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டதற்கு அதன் ஒத்துழைப்பு நாடுகள் உந்துசக்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகியனவே பிரதான நட்பு நாடுகளாகும். 

இந்த சுதந்திரப் பிரகடனம் நீண்டகாலம் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டது என்பது தெளிவாக புலனாகிறது. 

ஒரு வருடத்திற்கு முன்னதாக பின்லாந்தின் ஜனாதிபதி மாட்டீ அதிஷாரி சுதந்திரத் திட்டமொன்றை முன்வைத்தார். இந்தத் திட்டத்தில் ரஸ்யா மற்றும் சேர்பிய நிபந்தணைகளுக்கு நிகரான கொசோவோவின் நிபந்தணைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

பின்லாந்துத் தலைவரின் திட்டவரைவு நிராகரிக்கப்பட்டது, சுதந்திரத்திற்கான அடிப்படையும், கால அட்டவணையும் இந்தத் திட்டத்தில் காணப்பட்டது. சுதந்திரத்திற்கான ஒவ்வொரு படியையும்;, சுதந்திரத்திற்கான நாளையும் கொசோவோ பிரதமர் தாசியும், ஒத்துழைப்பு குழுவினரும் இணைந்து தீர்மானித்தனர்.

உத்தேசிக்கப்பட்ட முழு சுயாட்சியை சேர்பியா நிராகரித்ததன் மூலமாக, கொசோவோ பூரண சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. நாட்டின் இறைமை என்ற எண்ணக்கருவினை விஞ்சி தேசிய சுயநிர்ணய உரிமை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலைமையாகவே இது கருதப்படுகிறது.

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி கொசோவோவில் தேர்தல்கள் இடம்பெற்றன. கொசோவோ விடுதலை இராணுவத்தின் ஆதரவு கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சி 34 வீதமான (220,000) வாக்குகளையும், 1998ம் ஆண்டு நேட்டோவின் தலையீட்டுன் ஆட்சியில் இருந்த கொசோவோ ஜனநாயக லீக் 22 வீதமான வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. 

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தத் தேர்தலை புறக்கணித்தனர். கொசோவோ யுத்த்தின் பின்னர் 80 வீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதம் சடுதியாக 37 வீதமாக குறைவடைந்தது. 

தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மீது மக்களின் அதிருப்தியும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையின்மையுமே இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் பிரதிபலிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் தலைவர் டொரிஸ் பெக் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தமது கட்சிக்கு கிடைத்த 15 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொள்வதற்கான மக்களின் அங்கீகாரமாக ஹசீம் தாசி பிரடகனம் செய்தார். இந்தத் தேர்தலின் மூலம் கொசோவோ மக்கள் சர்வதேசத்திற்கு ஒரு பலமான செய்தியை கூற முனைந்துள்ளனர். “கொசோவா சுதந்திரத்திற்கு தயார்” என தாசி தெரிவித்தார்.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி கொசோவோ அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு ஹாசீம் தாசிக்கு வழங்கப்படுவதாக கொசோவோ ஜனாதிபதி பெட்மீர் செஜிடு தெரிவித்தார். மேலும் விரைவாக ஆட்சியை அமைக்குமாறு தாசிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தினால் ஹாசீம் தாசி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். தாசிக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பாராளுமன்றத்தில் பதிவாகின.

பிரதமர் பதவியை பொறுப்பேற்ற போது கொசோவாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதே தமது முதன்மையான இலட்சியம் என ஹாசீம் தாசி குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாதம் 16ம் திகதி நாளைய தினம் கொசோவோ மக்களுக்கு மிக முக்கியமான நாள் என பிரதமர் ஹாசீம் தாசி சுதந்திரப் பிரகடனம் செய்தார். 

பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொசோவோ ஒரு தலைப்பட்சமாக சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.

“ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எமது மக்களின் தலைவர்கள் நாமே” கொசோவோ சுதந்திரமானதும், இறைமையானதுமான இராச்சியம் என பிரகடனம் செய்கிறோம். இந்தப் பிரகடனம் எமது மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றது. ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி மர்ட்டீ அஜ்ஸ்தாரியின் பூரண அங்கீகாரத்துடனேயே இந்த சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் ஹாசீம் தாசி தெரிவித்தார்.

மதசார்பற்ற, பல்லின மக்களும் சட்டத்தின் முன் சமனாக கருதப்படக்கூடிய ஜனநாயக நாடாக நாம் கொசோவோவை பிரகடனம் செய்கிறோம். கொசோவோவில் வாழும் அனைத்து சமூகத்தினரதும் உரிமைகளை பாதுகாத்து, அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என ஹாசீம் தாசி பிரதிக்ஞை செய்தார். 

கொசோவோவின் அரசியல் விவகாரங்கள் மற்றும் தீர்மானங்களின் போது பல்லின மக்களது கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்றுவோம் என பிரதமர் மேலும் உறுதிமொழியளித்தார். 

அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடுகள் இந்த புதிய நாட்டை அங்கீகரித்துள்ளன.

கொசோவோ விடுதலை இராணுவம் தமது இலட்சிய சிகரத்தின் உச்சத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று கூறின் அது மிகைப்படாது.

February 25, 2008

2002 ஒப்பந்த முறிவு குறித்த கோட்பாட்டியல் நோக்கு

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்
 
கிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது இலங்கையில் வடக்கு – கிழக்கை உள்ளடக்கியதான நிலப்பரப்பில் தமிழர்களுக்கான தன்னாட்சி கோரிப் போராடிவரும் அரசியல் இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அன்றைய அரசாங்கம் பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திட்டுக் கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அதாவது ரத்துச் செய்வதற்கு எடுத்த தீர்மானமானது, இலங்கை அரசியல் அவதானிகள் பலரையும் ஏனையோரையும் பலத்த ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ள ஒரு விவகாரமாகும். இத்தகையதொரு பின்னணியில் அவர்கள் அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமளவிலான தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டியது எது அல்லது எலை என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இதற்குக் கிரமமான ஒழுங்கிலான அரசியல் சம்பவங்களதும் மற்றும் சூத்திரங்கள், சுலோகங்களதும் அடிப்படையில் ஒருவர் பலவேறான விடைகளையும் விளக்கங்களையும் முன்வைக்க முடியும். இந்த வகையில் இக்கட்டுரை, அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்திருக்கக் கூடிய காரணங்கள் குறித்து ஆராய முற்பட்டுள்ளது. இது குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில கோட்பாட்டு ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கும் ஒரு கட்டுரையாகும்.

கோட்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள்:


கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கையில் எப்போதும் மக்கள் அறிவார்ந்த தளத்தில் செயற்பட நினையாது தமது மனச்சாய்வுகளுக்கு ஏற்ப உணர்வு ரீதியாகவே செயற்பட முனைகிறார்களென்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதொரு உண்மையாகும். ஒரு பதற்றமான அரசியல் சூழ்நிலையில் அல்லது அத்தகையதொரு பின்னணியில் தலைவர்ள் நேரடியாகவே அம் மக்களது உணர்வுகளைக் கிளற முற்பட்டு விடுகிறார்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டியதொரு அம்சமாகும். குறியீட்டு அரசியல் தொடர்பில் ஆராய்கையில், மக்களை மிக இலகுவாக இரையாக்கும் அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆட்டிவைக்கக் கூடிய அடையாளங்கள் என்ற ரீதியில் உணர்வுகளைத் தூண்டும், சூத்திரங்கள் - சுலோகங்களான யுத்தம் சார்ந்த அல்லது சமாதானத்திற்கு எதிரான கோஷங்கள், கொட்டி – பதாகைகள் இன்னும் தேசிய கீதம், இனக்குழும வரலாறுகள்,  நேசத்திற்குரிய தாய் தந்தையர் நாடு குறித்த கற்பிதங்கள் அல்லது பிரமைகள் போன்றனவே பிரதான தோற்றுவாய்களாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். உணர்வு ரீதியாக மக்களை வசப்படுத்தி எழுச்சிக்குத் தூண்டக்கூடிய ஆயதங்களாக சமூக மேலோங்கிகளால் இவையே வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதிகார மையங்களை நிலை நிறுத்தவும் இருப்பினைத’ தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கிருக்கும் ஒரே மார்க்கம் இதைவிட வேறெதுவுமில்லை.

அரசியல் அரங்கில், அடையாளக் குணாம்சங்களை வெளிக் கொணரும் இக் குறியீடுகள், பெரும் பங்கினை வகிக்கின்றன என மானிட பண்பியல் ஆய்வாளரான சிட்சிஸ்லோமாச் கூறுகிறார். அவை மக்களை உணர்ச்சிகளைத் தூண்டி எழுச்சிகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளாக்குவதற்கு நன்கு பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல்வாதிகளோ, அரசியல் இயக்கங்களது தலைவர்களோ மக்களைத் தமது அணிகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதுடன், சடுதியான உணர்வகளுக்கு ஆட்படுத்தி தமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த வகையில், மக்களும் தம்வசமிழந்து அரசியல்வாதிகளின் போக்கிலேயே கட்டுண்டவர்களாகச் செயற்படுகின்றனர். இவ்வாறாக இலகுவாக மக்கள் ஆதரவை மிகப் பரந்தளவில் திரட்;டிக் கொள்ள முடிவதற்கான காரணம் என்னவெனில், மக்கள் அதீத சக்தி வாய்ந்த குறியீடுகளான வீரவரலாறுகள் ஆவேசமான இனப்பற்று மற்றும் தொன்மங்கள், கலாசாரம், மதம், பாரம்பரிய கற்பிதங்கள் போன்ற அடையாளக் கூறுகளினூடாக அவற்றினடியாக தூண்டப்படக் கூடியோராக ஏற்கனவே அவைமீது அதீத பற்றுடையோராய் உள்ளார்ந்த பிடிமானங்கள் கொண்டோராய் இருப்பதாகும்.

படித்த வர்க்கத்தினரை உள்ளடக்கிய மேலோங்கிகள், அரசியல்வாதிகள் அல்லது தேசியத் தலைவர்கள் சூத்திரங்கள், சுலோகங்களின் மூலமாக வரலாற்றுப் பெருமைகளை உன்னதங்களை புகழ்ந்து போற்றும் போதும், இன – மத பிரிவினைகளின் அடிப்படையில் தமது விரோதிகள் மீது போர் தொடுக்கும் போதும், உள்நாட்டு நெருக்கடிகளின் விளைவுகளுக்கு வெளிநாடுகளைத் தூற்றி வசைபாடும் போதும், புராதன மன்னர்கள் கால ஆட்சியினை மீண்டும் கொண்டு வருவதற்கு உறுதி பூணும் போதும், புராணிக வீரர்களது சாகசங்களைப் புகழ்ந்து பரணி பாடும் போதும், கொடிகளை வானளாது உயர்த்தி ஆவேச பிரகடனங்களை உதிர்க்கும் போதும் குறிப்பிட்ட இனக் குழுமத்தின் மொழி, மத பாரம்பரியங்களுக்கு உத்தியோகபூர்வ ரீதியான அந்தஸ்து பாதுகாப்பு மற்றும் சலுகைகளை முன்மொழிந்து ஆரவாரிக்கும் போதும், வருங்கால சந்ததியினரின் இளந்தளிர்களான குழந்தைகளை அரவணைத்து முத்தமிடும் போதும் மக்கள் அளவுகடந்த உணர்ச்சிகளுக்கும் நெகிழ்ச்சிகளுக்கும் ஆட்பட்டு விடுகின்றனர். மக்களுணர்வுகளை இலக்கு வைத்து, அவர்களைத் தூண்டி எழுச்சிகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி வாய்ந்த குறியீடுகளைப் பயன்படுத்துவதே அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு எப்போதும் இடப்படும் அடித்தளமாக இருக்கின்றது.

நாட்டின் குறிப்பிட்டதொரு நிலப்பகுதியில் ஆதிக்கம் பெற்றவர்களாக இன அல்லது மதம் சார்ந்த ஒரு குழுவினர் பெரும்பாண்மையினராக இருக்கும் பட்சத்தில், இக் குறியீட்டு அரசியலின் பிரதான விளைவாக அவர்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த உள்நாட்டு யுத்தம் கூட மூண்டுவிடக் கூடிய அபாயம் நேரலாம். குறிப்பிட்ட இனப்பிரிவினர் பூகோள ரீதியாக தமக்கான பூர்வீக நிலப்பரப்பை தமது தாயகமாகக் கொண்டிருப்பதற்கு உரித்துடையோராகத் தம்மைக் கருத நேரும் பட்சத்தில், அவர்களுக்கு எதிரான பகைமை நியாயப்படுத்தப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது கற்பிதங்களே என்கிறார் எஸ்.ஜே.கொவ்மான்.

உதாரணமாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக வாழுகின்ற தமிழ் மக்கள் தாம் அரசாங்கத்தினாலும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளாலும் கடுமையான பாரபட்சங்களுக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறி, தமது தாயகத்தினை உள்ளடக்கியதாக தமிழர்களுக்கென தமிழீழம் கோரி, தீவிரமான பிரசாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரசியல்வாதிகள் எப்போதும் போல தேர்தல் லாபங்களை முன்னிறுத்தி சிங்கள மக்களது இன உணர்வுகளைத் தூண்டும் கையில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது மாத்திரமன்றி, தமிழர்களது நியாயபூர்வமான பிரச்சினைக்கு சம்ஷ்டி அடிப்படையிலான சுயாட்சிக்கான அரசியல் தீர்வினைக்கூட எட்டமுடியாதவாறும் எதிர்த்து வருகின்றனர். சிங்கள அதிகாரவர்க்கத்தினர் இந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான இன உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழச் செய்யக்கூடிய விதமாக தீர்வு நோக்கில் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஒற்றையாட்சி முறைமை என்ற வரையறைக்கு அப்பால் செல்ல முடியாதவாறு மட்டுப்படுத்துவதன் மூலம் நிலைமைகளை மேலும் மேலும் கடினமடையச் செய்தும் வருகின்றனர்.

ஒப்பந்த ரத்தின் பின்னணியில்…..

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இன அடிப்படையிலான பிளவுகள், குரோதங்களைப் பிரதானப்படுத்தி அத்தகைய அடையாளங்கள் - குறியீடுகள் மூலமாக இலாபமீட்டுவதே மேலோங்கிகளின் அரசியலில்  ஒரு பிரதான போக்காக இருந்து வந்துள்ளது. குறுகிய தேர்தல் - வாக்காளர் மைய தந்திரோபார அரசியலே அன்று தொடக்கம் இலங்கையில் கோலேச்சிவ ந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே சிறுபான்மையினருக்கு எதிராக மிகுந்த வன்மத்துடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த அரசியல் போக்கு கடும் நம்பிக்கையீனங்களையும் பீதியையுமே சிறுபான்மையினர் மத்தியில் தோற்றுவித்திருந்தது. சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இத்தகையதொரு பின்னணி மேலும் முனைப்புடன் இயங்குவதற்கான வாய்ப்பானதொரு சூழ்நிலையை தோற்றுவித்துக் கொடுத்திருந்தது. 

சிங்கள மக்களை பெரும்பாண்மையினராகக் கொண்ட தென்பிராந்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரான ராஜபக்ஷ மிகந்த தீவிரத்துடன் சிங்கள சார்பிலான கொள்கைகளையும் கோஷங்களையும் நவம்பர் 17, 2005 தேர்தலில் முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். தேர்தல் பிரசார காலத்தின் போது தனக்கேயுரியதொரு பாணியில் மிகுந்த தந்திரோபாயத்துடன் சிங்கள மக்களுக்கு தன்னை ஒடுக்கு முறைக்குள்ளானதொரு சிங்கள மக்களின் பிரதிநிதியைப் போல இனங்காட்டியும் கொண்டார். இத்துடன் தென்னிலங்கைச் சிங்கள மக்களது அனுதாபத்தையும் ஆதரவையும் சுவீகரித்துக் கொள்ளும் வகையில், குறியீட்டு அரசியல் சார்ந்த கோஷங்களை மிகத் தாராளமாகவே பயன்படுத்தியும் கொண்டார். எல்.ரி.ரி.ஈ யினருக்கு எதிராக மிகக் கடுமையான நிர்ப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள், ஜனாதிபதி குமாரதுங்க எல்.ரி.ரி.ஈ யினருடன் செய்து கொண்ட சுனாமி ஒப்பந்தத்தை ரத்தச் செய்வதற்கான வாக்குறுதி, நோர்வே அனுசரணையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மாற்றுவது, நாட்டின் நெருக்கடிக்கு மேற்கு நாடுகள், குறிப்பக நோர்வே மீதான  வசைபாடல் போன்றவற்றுடன் தேசியக் கொடி, குழந்தைகளை அரவணைத்தல் ஆகிய உத்திகளும் இவற்றிலடங்கும். இவையெல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் வகையில், சிங்கள தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான ஒப்பந்தங்கள் ராஜபக்ஷவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாய் இருந்தன. எல்.ரி.ரி.ஈ யை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் இவை, ராஜபக்ஷ பதவிக்கு வரும் போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என முன் நிபந்தனையையும் விதித்தன.

மக்களைக் கவரும் குறியீட்டு அரசியல் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலின் மூலம் பதவியினைக் கைப்பற்றும் அரசியல்வாதிகள் தாம் உணர்ச்சிபூர்வமாக அளித்த வாக்குறுதிகளை, மறந்து செயற்படுவது என்பது சற்றுக் கடினமானது. உதாரணமாக, இலங்கை அரசியலில் முதல் முதலாக நிறுவன மயப்பட்ட சிங்கள பேரினவாதத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவினால் அவர் கட்டவிழ்த்து விட்ட உணர்ச்சி கொந்தளிப்புக்களை அடக்க முடியாத நிலையே ஏற்பட்டது. சிங்கள மக்களது நலன்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தமிழ் மக்களுக்கு சலுகைகளை பண்டாரநாயக்கா அள்ளி வழங்கிவிட்டதாகக் கருதிய தீவிரவாத பிக்கு ஒருவரால், 1959இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். சமஷ்டிக்கு எதிரான அல்லது சமாதானத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து, தேர்தலில் வெற்றியீட்டிய ராஜபக்ஷ மிகக் கவனமாக, தந்திரோபாயத்துடன் தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயற்பட்டார். சிங்கள மக்களது ஆதரவுப் பலத்தைத் திரட்எ, அவர்களது நம்பிக்கையினை வென்றெடுப்பதே அவரது குறிக்கோளாகும். இதில் கடும் போக்காளர்களுள் பிரதான சக்தியாகிய பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களைக் கொண்ட ஜே.வி.பியினரின் ஆதரவினை எந்த விதத்திலும் இழப்பதற்கு அவர் தயாரில்லை.

ஜே.வி.பி யிடமிருந்து கிளம்பிய அழுத்தமும் நிர்ப்பந்தமும், ராஜபக்ஷ நிருவாகத்தை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுக்கத் தூண்டிய விவகாரத்தில் பெரும் பங்கினையாற்றியிருந்ததென்பது பரவலானதொரு அபிப்பிராயமாகும். சிங்கள சார்பிலான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததன் மூலம், பதவிக்கு வந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் காலத்தில் அவரது உணர்ச்சிக் கோஷங்களையும் வாக்குறுதிகளையும் உண்மையென்று விழுங்கிய ஏழை மக்களுக்கு பொருளாதார விடுதலையை மற்றும் நல மேம்பாடுகளை எவ்வாறு அளிப்பதென்பது பாரியதொரு சவாலாக உருவெடுத்துள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியினரின் முன்நிலையில் இப்போது இரு தெரிவுகள் மாத்திரமே உள்ளன:

(1) தொடரும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரக் கூடியவாறு அரசியல் தீர்விகை; காணுதல்.

(2) இன அடிப்படையிலான குறியீட்டு அரசியலை மேலும் தொடர்வது. ஜே.வி.பியினரின் சமாதான எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்சியினர் இணங்கியிருப்பதைப் பார்க்கையில், அவர்கள் இரண்டாவது தெரிவினையே தழுவியிருக்கின்றனர் எனத் தோன்றுகின்றது. சிங்கள மக்களிடமிருந்து வரும் அதிருப்தி அலையினைத் திசை திருப்புவதற்கும் அவர்களுக்கிருக்கும் உபாயம் இதுவேயாகும்.

உண்மையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய ராஜபக்ஷ எடுத்திருக்கும் தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அரசாங்கமும் அதன் நிறுவனங்களும், சிங்களவர்கள் சார்பிலானவையென்றே இலங்கைத் தமிழர்கள் நம்புகின்றனர். சிங்களத் தரப்பிலிருந்து நீதியான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணமே அவர்கள் மனதில் மேலோங்கியுள்ளது. நூற்றாண்டுக்கும் பழைமை வாய்ந்த ஒற்றையாட்சி கட்டமைப்பிலிருந்து விலகும் விதத்தில் எத்தகையதொரு அரசியல் தீர்வினையும் முன்வைக்கும் திராணியற்றனவாகவே சிங்கள அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன. சிங்களவர்களின் பிரிக்க முடியாத ஒரு அடையாளமாகவே நாட்டில் ஒற்றையாட்சி அமைப்பானது தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது.

அரசியல் அரங்கில் இடையறாது மேலும் மேலும் அரசியல்வாதிகளால் குறியீட்டு அடிப்படையிலான அரசியல் கொள்கைகளும் கோஷங்களும் முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில் ராஜபக்ஷ நிருவாகதடதழனரழனட நடவடிக்கையால், நாடு மீட்சியற்றதொரு நிலைக்கே அதள பாதாளத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருவதாகவே காட்சியளிக்கிறது. இத்தகையதொரு நிலைமை தொடரும் பட்சத்தில் பேரழிவான விளைவுகள் எக் கணமும் எற்பட்டு விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. குறியீட்டுக் கொள்கைகளின் மூலம் சிறுபாண்மையினரது கலாசார அடையாளங்களை முன்நிறுத்தி அவர்கள் மீது இலக்கு வைக்கும் போது ஓரங்கட்டப்படும் அல்லது ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபாண்மையினர் முழு அளவில் அரசிற்கு எதிராக திரண்டெழுவது எதிர்பார்க்கப்பட வேண்டிய இயல்பானதொரு வெளிப்பாடேயாகும். அரசிடமிருந்தும் அதனுடைய நிறுவனங்களிடமிருந்தும் நம்பிக்கையிழக்கும், ஒரங்கட்டப்படும் சிறுபாண்மையினர் தமது போராட்டத்தைத் தொடர்வது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது. ஆட்சியிலிருக்கும் அதிகார வர்க்க மேலோங்கிகளாலும் எதிர்கட்சி அணியிலுள்ள மேலோங்கிகளாலும் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்ற விடாப்பிடியான, பகைமையும் வன்மமும் சார்ந்த குறியீட்டு அரசியல் கொள்கைகளினாலும் நடவடிக்கைகளினாலும் அவர்கள் தமிழர்களுக்கென தனிநாடு கோரி போராடி வரும் அரசியல் - இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினையே ஆதரிக்க முற்படுவர். வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சுதந்திரமும், தன்னாட்சி இறைமையும் கொண்ட தனிநாட்டுக்கான அவர்களது போராட்டமும் ஒருவகையில் இத்தகையதொரு நிலைமையின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாடு, நவீனத்துவம் சார்ந்த முன்னேற்றங்களையும் அபிவிருத்தி இலக்குகளையும் எட்ட மடியாத நிலையில் பாரிய சவால்களை எதிர்நோக்கியவாறு முடங்கிப் போயுள்ளது. இலங்கை உரியவாறு முன்னேற்றங்களையம் எற்ற அபிவிருத்திகளையும் எய்த வேண்டுமாயின் அரசியல்வாதிகளும் தலைவர்களும் காலாதி காலமாக பின்பற்றி வரும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளையும் குறுகிய தேர்தல் அபிலாஷைகளுக்கான தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளை முற்றாக ஒதுக்கி, நவீனத்துவப் பாங்கும் விரிந்த பார்வையும் கொண்டதொரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

இலங்கை அரசியலில் பகைமைகளும் எதிர்ப்புணர்வு வன்மங்கள் சார்ந்த கொள்கைகளுமே தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துமாயின், குறியீட்டு அரசியலின் விகாரமான, பாதகமான விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து ஆராயும், பகுப்பாய்வு செய்யும் ஆய்வாரள்களுக்கு இலங்கையே ஒரு அசலான ஆய்வுக் களமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

[கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ், பென்சில்வேனியா-ரெம்பிள் பல்கலை கழகத்தினை சார்ந்த அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர்] - தமிழாக்கம்: ஜி.ரி.கே

February 20, 2008

யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம்

கொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்க வழிகோலும்.

ஜயதேவ உயங்கொட

யுத்தத்தின் கோர விளைவுகள் குறித்து நாடு அவ்வளவு கரிசனை காட்டுவதாக விளங்கவில்லை. உண்மையில் இந்த மோசமான யுத்தத்தின் பாதக விளைவுகள் குறித்து இலங்கையர்களை விட வெளிநாட்டவர்கள் அதிகம் அக்கரை செலுத்துவதாகவே தோன்றுகின்றது. இனப்பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது எனவும், யுத்தத்தின் மூலம் இறுதியில் யாரும் வெற்றி பெறப் போவதில்லை எனவும் நாட்டிற்கு புறத்தே உள்ள அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மாறாக இந்தப் போரினால் ஆழமான மனித உரிமைப் பிரச்சினைகள் தோன்றக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அரசாங்கம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கையில் வாழும் அனேகர் போரை ஒரு தவிர்க்க முடியாத யதார்த்த நிலையாகவே நோக்குகின்றனர். இந்தப் புரியாத புதிரை எவ்வாறு விளக்குவது?

[பேராசிரியர் ஜயதேவ உயங்கொட]

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தோல்வியடைந்த சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் பரிமாணங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்டுக்கூறக்கூடிய இடமுண்டு. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புக்களுக்கான முதல்கட்டமாக போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்த அனைத்து சமாதான பேச்சுவார்த்தைகளுக்கும் நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வழங்கினர். சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக தொடர்ச்சியாக நோர்வே அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்கி வந்தது. போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவை அனைத்தும் இலங்கைக்கு வெளியே இடம்பெற்றவை என்பது நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய  கட்டத்தை எட்டியது எனக் குறிப்பிடலாம். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து ஆராயப்பட்டது. எனினும், ஒஸ்லோவில் காணப்பட்ட புரிந்துணர்வு தொடர்ச்சியாக நீடிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஒஸ்லோ புரிந்துணர்வை நிராகரித்தனர். 2003ம் ஆண்டளவில் சமாதான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் இணங்கியவற்றை அமுல்படுத்தவில்லை எனக்கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினாலும், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவினாலும் தடைப்பட்டிருந்த இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்களுடன் படிப்படியாக பழைய மோசமான நிலைமைக்கு இந்தப் பிரச்சினை மீண்டும் திரும்பியது. அனேகமான சந்தர்ப்பங்களில் நேரடியான யுத்த நிறுத்த மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈடுபட்டதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக ஆயுதக் கடத்தல்கள் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுபுறத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் காணப்பட்ட இணக்கபாடுகளின் அடிப்படையில் கொழும்பு அரசாங்கம் செயற்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்பட்ட கிராமங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றுவது தொடர்பில் கொழும்பு அரசாங்கத்தின் நிலைப்பாடு யுத்த நிறுத்த மீறல்களில் பிரதான சர்ச்சையாகக் கருதப்படுகிறது.

போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் இந்த ஆடு புலியாட்டத்தில் யார் குற்றவாளிகள் என்பதை ஆராய்வதைவிட, போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய இணக்கப்பாடுகளின் உண்மை நிலைமையை வெளியிலிருந்து அவதானிப்போருக்கு இலங்கையின் இனப்பிரச்சினையின்  தெளிவான பரிமாணங்களை நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான அனுகுமுறையை தொடங்குவதற்கான அடித்தளமாகவே உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகார பரவலாக்கலின் மூலம் அரசியல் சாசனத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க அப்போதைய கொழும்பு அரசாங்கம் தயாராக இருந்தது. தனிநாட்டு கோரிக்கையினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தமது தீர்வுத் திட்டங்களைத் தேட தமிழீழ விடுதலைப் புலிகள் விளைந்தனர்.

இந்த இரு வேறுபட்ட நோக்கங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தமே 2002ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களின் பிரதான சவாலாகக் காணப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் காணப்படும் இணக்கப்பாட்டுத் திறனின் அடிப்படையில் சாதாரண அதிகாரப் பகிர்வொன்றை நோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், மறுபுறத்தில் அது பிரிவினையாக மாறக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. சர்வதேச மத்தியஸ்தர்களின் ஒத்துழைப்புடன் 2002-2003ம் ஆண்டு காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பாக நிலவிய இணக்கப்பாட்டு நிலைமை இதுவரையில் எட்டப்படவில்லை என்றே குறிப்பிடலாம்.

போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முன்னெடுப்புக்களின் போது இலங்கை அரச தரப்பு இரண்டு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது என்பது ஒரு முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டும். 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கையின்போது காணப்பட்ட நிலைமையை ஒத்த ஒரு சந்தர்ப்பமாகவே இது காணப்பட்டது. ஆழமாக பிளவுபட்டு காணப்பட்ட அரசாங்கமாகவே காணப்பட்டது. இந்த நிலை ஏற்கனவே பிளவுபட்டிருந்த நிலைமையை மேலும் வலுப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

இந்த பிளவு நிலை சிங்கள அரசாங்கத்தில் மிக அழுத்தமாக வெளிபடத் தொடங்கியது. உண்மையில் அரசாங்க அதிகாரம் இரண்டு மாறுபட்ட எதிரணிகளைக் கொண்டமைந்ததாக காணப்பட்டது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றொரு அணியாகவும் இரண்டு பிளவுகளாகக் காணப்பட்டன. ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சமதான முன்னெடுப்புக்களினூடாக எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கப் பெறாமை என்பவற்றை பொதுஜன ஐக்கிய முன்னணி உபாயமாகப் பயன்படுத்திக் கொண்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகபட்ச சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும், நாட்டின் இறைமைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படக்கூடும் எனவும் பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட சிங்கள தேசியவாதக் கட்சிகள் தர்க்கித்தன.

இறுதியாக, போர்நிறுத்த உடன்படிக்கைக்கான தடைகள் மிகவும் வலுவானவை. அரைகுறை அர்ப்பணிப்புடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைவத்துவத்தினால் சமாதான முன்னெடுப்புக்களின் சரியான வெளியீட்டினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. சுயநலவாத, நெகிழ்வுப் போக்கற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியமை, பொருளாதார சுதந்திரத்துடன் கூடிய எளிமையான ஜனநாயக முறைமையை நிலைநாட்ட முனைந்த சர்வதேச மத்தியஸ்தர்களின் தூரநோக்கற்ற கொள்கைகள் என்பவற்றின் காரணமாக இறுதியில் சமாதான முன்னெடுப்புக்களுக்கு அரசியல் தீர்வொன்றின் அவசியப்பாடு மிக மிக குறைந்தளவான சாத்தியப்பாடுடைய ஒன்றாக மாறியது. பூர்த்தி செய்யப்படாத சமாதான முன்னெடுப்புக்கள் மேலும் மேலும் பிளவுகளையே ஏற்படுத்தி நிற்கும் என்பது தெளிவாக இதன் மூலம் புலனாகின்றது. தீட்டிய கைகளைப் பதம்பார்த்த நிலைமையாகவே நாம் இதனை உணர்கின்றோம். 

இந்தப் பூரணப்படுத்தப்படாத புரட்சியின் மூலம், இலங்கையின் இனப்பிரச்சினை விசித்திரமான ஒரு கட்டத்தை எட்டியது. சமாதானத்தை நிலைநிறுத்த இராணுவமல்லா முறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் இறுதியில் யுத்த வன்முறைகளின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. வேறு விதத்தில் கூறினால், இனப்பிரச்சினையின் தன்மை மேலும் பாரதூரமான வகையில் வளர்ச்சிப்பெற்று தொடர்ந்தது. இது இலங்கையில் சமாதான முன்னெடுப்புத் திட்டங்கள் காணப்படவில்லை என்பதைவிட, சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட தரப்புக்கள் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அரசியல் தீர்வுவொன்றைப் பெற்றுக்கொடுக்க தவறியமையையே விளக்கி நிற்கின்றன. உண்மையில் கடும் சிக்கல் மிகுந்த இலங்கையின் தேசியப் பிரச்சினை நிறைவுசெய்யப்படாத சமாதான முயற்சிகளாகவே காணப்படுகின்றன. 

யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் ஆரம்பம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தேவையற்ற அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையும், இந்தியாவும் பலமாக குற்றஞ்சாட்டி வந்தன. ஏனென்றால் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சம இராணுவ அதிகாரம் வழங்கப்பட்டது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளால் ஆட்சி செய்யப்படும் நிலப்பரப்புக்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள ஏனைய அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டின. 

பேச்சுவார்த்தைக்கான ஒரு அடித்தளம் என்ற நோக்கிலேயே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டனர். போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இராணுவ படையினருக்கு நிகரான அங்கீகாரம் தமக்கு கிடைக்கும் என்ற தந்திரோபயமே புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையைக் கைச்சாத்திடத் தூண்டியது. எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அந்த சமவலுவை வழங்கவில்லை. இராணுவ பலத்தைக் கொண்ட தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவே கொழும்பு தரப்பினரது நோக்கம். எனினும், இந்த தந்திரோபாயம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை. இதனால் 2002-2003ம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையையும், சமாதான முன்னெடுப்புக்களையும் எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் தெற்கின் பல அரசியல் சக்திகளுக்கு ஏற்பட்டது. 

கொழும்பில் ஆளும் வகுப்பினருக்கு இடையே காணப்பட்ட பிரிவினை மற்றும் முரண்பாடுகளின் காரணமாக முக்கிய பிரச்சினைகளின் போது ஒன்றுபட்டு செயற்பட முடியாது போயுள்ளது. பிரதான கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட இடைவெளியின் காரணமாக போர்நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்கத் தேவைப்பட்ட அவகாசம் அற்றுப்போனது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது அவர், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஏனைய பிரதான கட்சிகளிடம் அபிப்பிராயம் கேட்வில்லை என்பதை ஞாபகப்படுத்துவது இந்த இடத்தில் உசிதமானதாக அமையும். இரண்டு தரப்பினரது இணக்கப்பாட்டினால் மட்டும் விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரோபயமாக காணப்பட்டது. அதாவது ரணில் விக்ரமசிங்கவின் ஆளுங்கட்சிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான இணக்கப்பாட்டின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதே அவரது நோக்கம். எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரைவாசிப் பகுதி சிங்கள மக்களையே பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏற்கனவே நடந்தது போன்று சமாதான முன்னெடுப்புக்களை பலவீனப்படுத்த மற்றைய தரப்பு தருணம் பார்த்து காத்திருந்தது.

சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இடையே காணப்படும் பிளவுகள், முரண்பாடுகள் எந்தளவு தேசிய இனப்பிரச்சினையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டுமொருமுறை பறைசாற்றியது. சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகளின் உந்துதலினால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை 2003ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கலைத்தார். போர்நிறுத்த உடன்படிக்கையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இடைக்கால சுய நிர்ணய அதிகாரசபை உள்ளிட்ட தீர்வுத் திட்டங்களும் தேசிய பாதுகாப்பிற்கும், நாட்டின் இறைமைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதனாலேயே ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, சமாதான முன்னெடுப்புக்கள் மற்றும் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஏற்பட்ட இரண்டாவது பாரிய இடையூறாக இந்த ஆட்சி கவிழ்ப்பு கருதப்படுகிறது.

2004ம் ஆண்டு நடுப்பகுதியில் பாராளுமன்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பு அரசாங்கம் மெதுவாக போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டன. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் குறிப்பாக நோர்வே அரசாங்கம் முன்னெடுத்த சமாதான முயற்சிகளை ரத்து செய்வதற்கு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிங்கள தேசியவாத அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டன. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் பற்றி குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீறல்கள் குறித்து சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகள் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என அழுத்தங்கொடுக்கத் தொடங்கினர்.

2005ம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்”; என்று பிரச்சாரம் செய்து, விடுதலைப் புலிகள் அமைப்பை சில நாடுகள் தடை செய்வதற்கும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்வது தொடர்பான பிரச்சாரங்களிலும் கதிர்காமர் முக்கிய பங்காற்றியுள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான தமது நிலைப்பாட்டினால் தமது அரசாங்கத்திற்கு சிக்கல்கள் தோன்றியதை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உணர்ந்தார். சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதற்கு திரும்புமாறு விடுதலைப் புலிகளுக்கு சந்திரிக்கா அழைப்பு விடுத்தார், மறுபுறம் சர்வதேச சமூகம் (ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான்) எச்சரிக்கை விடுப்பதன் மூலமும், ஜனநாயக ரீதியிலும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பச் செய்ய முயற்சித்தன. எனினும், இவை அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிவுற்றன. 2004ம் ஆண்டு இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் போரைத் தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகின. தமது இராணுவ பலத்தை வெளிக்காட்டி புதிய நிலையிலிருந்து சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடர தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகினர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை இலங்கையின் இனப்பிரச்சினையை மாற்றியமைத்தது. அதற்கு முந்தைய ஒரு வருட காலமாக இலங்கையில் போர் மேகங்கள் சூழ்திருந்தன. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உயிர்களை மிக மோசமான முறையில் சுனாமி அனர்த்தம் காவுகொண்டது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் மிகப் பாரியளவிலான அழிவுகள் ஏற்பட்டன. இந்தக் கோரமான இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மனித அவலங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்ட உத்தியை கைவிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இந்த அனர்த்த சூழ்நிலை புதிய சமாதான பாதைகளை திறந்ததாகவே கூறலாம். இரு தரப்பினரும் இணைந்து அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியதுடன் அதன் மூலம் சமாதான முன்னெடுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்பும் காணப்பட்டது.

இதன்படி, இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்தனர். 2005ம் ஆண்டு ஜூலை மாதம் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான ஒப்பந்தமொன்றை இரு தரப்பினரும் கைச்சாத்திடுமளவிற்கு இந்த சுமூகமான சூழ்நிலை வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் புதிதாக உருப்பெற்ற சிங்களத் தேசியவாதிகளின் செயற்பாடுகளினால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித அரசியல் தொடர்புகளும் பேணப்படக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலம்வாய்ந்த அங்கத்தினரான மக்கள் விடுதலை முன்னணியினர் சுனாமி நிவாரணப் பணிகளைத் தொடரும் பொருட்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். இதன்படி அரசாங்கத்திற்கும், விடுதலை; புலிகளுக்கும் இடையே மிகவும் இன்றியமையாத மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது. இதேபோன்று இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் ஆச் கெரில்லா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கான ஒப்பந்தம் இன்றும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களைத் தொடருவதற்கான தவறவிடப்பட்ட சந்தர்ப்பமாக கருதினால், 2006ம் ஆண்டு யுத்தபாதையை நோக்கி முன்னகர்ந்த ஆண்டாகக் குறிப்பிட முடியும். 2005ம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தப் பிரச்சினையின் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு காரணிகளின் அடிப்படையில் தேர்தலில் வெற்றிபெற்றார். கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதிகளின் ஒத்துழைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்குத் தமிழ் வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலை பகிஷகரித்தமை என்பனவே இந்த இரண்டு பிரதான காரணிகளாகும். இரண்டு கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ நிர்ப்பந்திக்கப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் அவர் கூட்டணி வைத்துக்கொண்டார். சிங்கள பௌத்த தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். தேசிய பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வோன்று முன்வைக்கப்பட வேண்டும் என தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை சிறியளவு வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் தேர்தலில் வெற்றிகொண்டார். 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளும், புதிதாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் யுத்தத்தை ஆரம்பித்தன.

மஹிந்த ராஜபக்ஷவை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் மறைமுகமாக தேர்தலில் வெற்றிபெறச் செய்தனர்? தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்காமல் இருந்தால் தேர்தல் முடிவுகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்திருக்கும். இந்தப் பிரச்சினையை புதியதொரு கோணத்திற்கு கொண்டு செல்ல விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தேவையேற்பட்டது. துரதிஷ்டவசமாக 2006, 2007ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தந்திரோபயங்கள் குறிப்பிடத்தக்களவு வெற்றி பெற்றன என்றே கூறலாம். 

2006ம் ஆண்டின் முதல் பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளை தொடரத் தீர்மானித்தனர். இதன்படி இரண்டு தடவைகள் ஜெனீவாவில் இரு தரப்பும் சந்திப்புக்களை மேற்கொண்டன. பெ;பரவரி மாதம் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது போர்நிறுத்த உடன்படிக்கையை பூரணமாக அமுல்படுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் அதிலிருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களினால் கிழக்கில் பதற்றம் நிலவியது. 2005, 2006ம் ஆண்டு காலப்பகுதியில் அனேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் உட்கட்சி பூசல் காரணமாகவே போர்நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பான சம்பங்கள் அதிகமாக பதிவாகின. போர்நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களின் அடிப்படையில் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை களைய கொழும்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா குழுவினர் பிரிந்து சென்ற சம்பவம் போர்நிறுத்த உடன்படிக்கை சர்ச்சையில் மிக முக்கியமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை இராணுவம் கருணா குழுவினருக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியது. இறுதியாக ஜெனீவா பேச்சுவார்த்தைகள் உண்மையில் இருதரப்பினரின் யுத்த ஆயத்தமாகவே அமைந்தது என்பது தெளிவாகிறது.

அரசியல் காரணங்களுக்காக இரண்டு தரப்பினரும் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ய விரும்பவில்லை. எவ்வாறெனினும், 2007ம் ஆண்டு யுத்த ஆண்டாகவே கருதப்படுகிறது. பிரகடனப்படுத்தப்படாத போராகவே இந்த நிலைமை கருதப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் 4.4 சரத்திற்கு அமைய எந்தவொரு தரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் அது தொடர்பாக நோர்வே அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். 2007ம் ஆண்டின் ஆரம்பகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டுப்பாட்டுப் பிரதேசமொன்றை இராணுவத்தினர் கைப்பற்றியதுடன் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்தது. சில மாதங்களாக தொடர்ந்த யுத்தம் காரணமாக பாரியளவிலான மக்கள் இடம்பெயர்ந்தனர். இரண்டு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. மேலும் மனிதாபிமான உதவியாளர்கள் கொல்லப்பட்டதுடன், மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களும் பதிவாகின. யுத்தம் உக்கிரமடைந்ததன் காரணமாக மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமான உதவிகள் என்ற விடயங்கள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் மிகக் குறைந்தளவு மரியாதையையே பேணிவந்தனர். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்தது தொடர்பாக அனேகமான தெற்கின் அரசியல் சக்திகள் தமது வரவேற்பை தெரிவித்தன. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது. சிலர் இந்த முடிவை வரவேற்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை என்ற நடைபிணம் கடைசியில் தகனம் செய்யப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர். சிலருக்கு அது ஒரு சுவையில்லாத நாவல், இன்னும் சிலருக்கோ போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை தேசத்தின் கௌரவம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு வழிகோலும் என சிங்கள மக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஒரு சாரார் தெரிவித்தனர். இதனால்தான் விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கை பூரணமாக செயற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். எனினும் தெற்கின் அரசியல் சக்திகள் இதனை நிராகரித்தன. உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை மீதான விடுதலைப் புலிகளின் காதல் ஒரு யுத்த தந்திரோபாயமாகவே நோக்க வேண்டும்.

இந்த ஏதுக்கள் ஒருபுறமிருக்க, போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இல்லாத இலங்கை மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே காணப்படும் என்பது தின்னம். ஆளும் தரப்பினரும், விடுதலைப் புலிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்ட போதிலும், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரின் பிரசன்னத்தினால் போராட்டக்களத்தில் இடம்பெறக்கூடிய உக்கிர மோதல்களையேனும் கட்டுப்படுத்தக் கூடிய உத்தரவாதம் காணப்பட்டது. எனினும், போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து யுத்த நிலவரங்களைக் கண்காணிப்பதற்கோ அல்லது அது தொடர்பான எச்சரிக்கைகளை விடுப்பதற்கோ எந்தத் தரப்பும் இல்லை.

இந்த நிலைமை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு தனித்துவமான போக்கையே விளக்கி நிற்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களுடைய நியாயங்களை மிக தெளிவாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில்  விளக்கியிருந்தனர். இனப்பிரச்சினை மற்றும் தீர்வுத் திட்டங்களில் முன்னொருபோதும் இல்லாதவகையில் 2002ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்கள் சர்வதேச ரீதியில் ஆழமான தாக்கத்தை செலுத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்த நிலைமையை அளவுக்கு மீறிய வகையில் சர்வதேச மயப்படுத்தினர் என்றே கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் இனமுரண்பாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான வலுவான பிணைப்பாகக் காணப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் மூலம், தமக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக யுத்தத்தில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் உதயமாகியுள்ளன. மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான ஏதுக்கள் தொடர்பான எவ்வித அழுத்தங்களுமின்றி மோதல்களில் ஈடுபட வாய்ப்பு கிட்டியுள்ளது. எதிர்வரும் மாதங்களில், எவ்வித தங்குதடையுமின்றி உக்கிர மோதல்கள் இடம்பெறும் என்பதனையே இந்த நிலைமைகள் எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. 
 
 

 

February 19, 2008

யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் முதலாவது முஸ்லிம் எம்.பி.ஆர்.எம்.இமாம்

டீ.பீ.எஸ்.ஜெயராஜ்

யாழ்ப்பாண நகரின் மூர் வீதியைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய சட்டத்தரணி ரசீன் எம். இமாம், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து முதன்முதலாக வருகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவார். எம்.கனகேந்திரன் அல்லது ஈழவேந்தன் என்பவரின் இடத்திற்கு தேசிய பட்டியல் உறுப்பினராக ஆர்.எம்.இமாம் என எல்லோராலும் அறியப்பட்ட இமாம் தெரிவாகியுள்ளார். கடந்த தேர்தலின் போது த.தே.கூ. க்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் உரித்தாயின. மட்டக்களப்பிலிருந்து ஜோசப் பரராஜசிங்கமும் யாழ்ப்பாணத்திலிருந்து எம்.கே.ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கு மேலாக விடுமுறையின்றி பாராளுமன்றத்திற்கு சமுகம் தராதிருந்ததன் காரணமாக ஈழவேந்தன் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார்.

சிறந்த பொது நல்லுறவு செயல்பாடு

ஆர்.எம்.இமாம் 2004 ஆம் ஆண்டில் த.தே.கூ. தேசிய பட்டியலில் இருந்தவர். அவர் தன் இளமைப் பருவத்திலிருந்தே நேர்மையான சமஷ்டி வாதியாகவிருந்து பின் த.ஐ.வி.மு. வின் அங்கத்தவராய் இருந்தவர். விடுதலைப் புலிகளினால் அநீதி இழைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் ஒருவர் பா.உ. ஆக தெரிவு செய்யப்பட்டது நிச்சயமாக ஒரு நல்ல பொது நல்லுறவு செயல்பாடாகும்.

நான் இமாமை முதன் முதலாக 1981 இல் சந்தித்தேன். அப்போது அவர் த.ஐ.வி.மு. பட்டியலில் யாழ்ப்பாண மாநகர சபை அங்கத்தவராக இருந்தார். யாழ்ப்பாண மாநகர சபை பகுதி குடியிருப்பாளர்களான முஸ்லிம்கள் 'சோனகத்தெரு' அல்லது மூர் வீதி மற்றும் பொம்மைவெளியில் செறிவாக வாழ்பவர்கள். இமாம் மூர் வீதியைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை அப்பகுதியில் விதானையாக இருந்து இளமையிலேயே காலமானார். இமாம் தமிழ் சமூகத்தோடு மிக நெருக்கமானவராக இருந்ததோடு, அவர்களுடன் நெருக்கமான நட்புறவை பேணி வருபவர்.

யாழ்ப்பாண நகர முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக காணப்பட்ட பொழுதிலும் பொது மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னால் அங்கே மிக முக்கிய செல்வாக்கைச் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அங்கிருந்த முஸ்லிம்கள் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல், மாநகர சபை தேர்தல்களில் ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்களாகவிருந்தனர்.

அல்பிரட் துரையப்பா முஸ்லிம்களின் ஏகமனதான ஆதரவைப் பெற்றே அரசியல் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். ஒரு முறை யாழ்ப்பாண மாநகரபை உறுப்பினரான சுல்தான் மாநகர சபை முதல்வராக இருந்தார். இன்னொரு முறை மாநகர சபை உறுப்பினரான பஸீர் காதர் போன்றோர் உதவி மாநகர சபை முதல்வராக இருந்தனர்.

பொது வாழ்க்கையில் அதி முக்கிய பங்கு வகித்த குறிப்பிடத்தக்க யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஷ்ரீலங்காவில் முதல் முஸ்லிம் சிவில் சேவையாளரான ஏ.எம்.ஏ. அஸீஸ் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பிறகு அவர் ஸாஹிரா கல்லூரியின் அதிபரானார். நீதிபதியான அப்துல் காதர் ஆகியோரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. அவ்வாறே கல்வி இலாகா அத்தியட்சர் மன்சூருமாவார். இப்போது இமாம் யாழ்ப்பாணத்து முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

இமாம் 1977 இல் யாழ்ப்பாண த.ஐ.வி.மு. வேட்பாளரான வெற்றிவேலு யோகேஸ்வரனை ஆதரித்து முக்கிய பங்காற்றினார். 1979 இல் இமாம் த.ஐ.வி.மு. வில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக தெரிவானார். அப்போது அங்கே மூன்று முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தனர். இ.ராஜா விஸ்வநாதன் மாநகர சபை முதல்வராகவிருந்தார்.

அப்போது அங்கு நற்பண்பாளர்களின் ஒப்பந்தமொன்று இருந்தது. அதன்படி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் இரண்டாண்டுகளின் பின் பட்டியலிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்களாவதற்காக இடமளித்து பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்பதாகும். சிலர் பதவியை இராஜிநாமா செய்ய மறுத்த போதிலும், இமாம் ஒருவர் தான் அவரின் உத்தரவாதத்தை மதித்து உடனடியாக பதவியை இராஜிநாமா செய்தவராவார். அப்போதைய த.ஐ.வி.மு. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இமாமினால் ஈர்க்கப்பட்டவராயிருந்தார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்ட பொழுதிலும் அங்கிருந்த பலர் தமிழர்களோடு நட்புறவையும் நல்லுணர்வுகளையும் தொடர்ந்தும் பேணி வந்தனர். அவ்வாறான யாழ்ப்பாண முஸ்லிம்களில் இமாமும் ஒருவர். அவர் தனது த.ஐ.வி.மு. உடனான அங்கத்துவத்தை தொடர்ந்தார். 1994 இல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு சக யாழ்ப்பாண முஸ்லிம்களை இணங்கச் செய்வதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராவார்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பெருந்தொகையான தமிழர்கள் வாக்களிக்க முடியாமல் போனமையால் புத்தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் மாபெரும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக பெருமளவில் தேர்தலை பகிஷ்கரித்தனர்.

த.ஐ.வி.மு. இனர் த.தே.கூ. யோடு ஒன்றிணைந்திருந்ததால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இமாம் கட்சிக்காக போட்டியிட்டார். அவர் தேசிய பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஈழவேந்தனின் செல்வாக்கு சரிந்தபொழுது இமாம் அவரின் இடத்திற்கு நிரப்பப்படலாம் என்பது தெளிவாகியது.

கருத்து முரண்பாடுகள்

இமாம் பாராளுமன்ற உறுப்பினராகும் சாத்தியப்பாடு முன் வைக்கப்பட்ட பொழுது பெரும் வாக்குவாதங்கள் எழுந்தன. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மத்தியில் சீற்றமும் எதிர்ப்பும் பலமான கருத்து முரண்பாடுகளும் எதிரொலித்தன. த.தே.கூ. யினர் தற்போது விடுதலைப் புலிகளின் ஏவலாளர்களாயிருப்பது இவற்றிற்கான காரணங்களை விளக்கி நிற்கின்றது.

விடுதலைப் புலிகளோடு உறவு வைத்துக்கொள்ளும் எந்தவொரு கட்சியினரோடும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என சிலர் கருதினர். ஏனையோர் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண ஏற்பாடுகள் முதலில் சரியாக அளவீடு செய்யப்பட வேண்டும் எனக் கருதினர்.

இமாம் தானே கல்வியியலாளர்கள், சமயப் பிரமுகர்கள் உட்பட முக்கிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் முதலானவர்களோடு கலந்து ஆலோசனை நடத்தினார். அவர்களில் பலர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் நன்மை கருதியும் தீர்வுக்கான முன்னெடுப்புகளில் உதவுவதற்காகவும் இமாம் அந்தப் பதவியை ஏற்க வேண்டுமென கருதினர். இமாமும் ஜனவரி 20 ஆம் திகதி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்தித்தார். இது தமிழ் - முஸ்லிம் இணக்கத்திற்கான நல்லெண்ண முன்னெடுப்பு எனவும் அது ஒரு குறுக்கு வழியான சூழ்ச்சித் திட்டமில்லை எனவும் அவர் தெரிந்து கொண்டார். அதன்பின் அவர் கொழும்பு திரும்பி வந்து வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

சத்தியப் பிரமாணம்

இமாம் சத்தியப் பிரமாணம் எடுக்கும்பொழுது அதைக் காண்பதற்கு புத்தளத்திலிருந்து 30 - 35 யாழ்ப்பாண முஸ்லிம்கள் வருகை தந்திருந்தனர். மற்றும் கொழும்பிலிருந்து 50 - 60 எண்ணிக்கையானோர் வருகை தந்திருந்தனர்.

இமாம் சுருக்கமான தனது கன்னி உரையை பாராளுமன்றத்தில் மரபு முறையாக நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தான் அந்தப் பதவியை ஏற்பது தனது மக்கள் கூட்டத்திற்கு உதவவும் அவர்கள் நிலைமையை உயர்த்தவுமே என குறிப்பிட்டபோது அது மனதை நெகிழ வைத்தது.

அவருடைய இலக்கு எல்லா மக்களிடையேயும் நல்லிணக்கத்தை வளர்ப்பதும் தமது இடம் பெயர்ந்திருக்கும் சகோதரர்களின் தேவைகளுக்கு ஆவன செய்வதுமாகும். அவருடைய நீண்ட கால திட்டமானது யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரிய இருப்பிடங்களுக்கு திரும்பிவர உதவுவதாகும்.

காலமொன்றிருந்தது, அநேகமான முஸ்லிம்கள், காரியப்பர், முஸ்தபா, அஹமட், மொஹமட் அலி போன்றவர்கள் கிழக்குத் தேர்தல் தொகுதியிலே சமஷ்டி கட்சியின் சீட்டிலே போட்டியிட்டு வென்றார்கள்.

மற்றவர்கள் அதாவது மசூர் மௌலானா, உதுமா லெவ்வை போன்றவர்கள் சமஷ்டி கட்சியின் சீட்டிலே போடியிட்டனர்.

அயூப் மற்றும் பஸீர் சேகுதாவுத் போன்றவர்கள் ஈரோஸ் அனுசரணையுடன் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள்.

இமாமின் நியமனம் தமிழ், முஸ்லிம்களின் உறவில் புதிய வளர்ச்சிப் படிகளின் ஆரம்பமாக அமையலாம். முஸ்லிம் காங்கிரஸின் ஹஸன் அலி எம்.பி. இமாமின் நியமனத்தை வரவேற்றதோடு, அதை மீள் இணக்கப்பாட்டின் அடையாளமாக கருதுகிறார்.

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தமிழ் - முஸ்லிம் உறவுகளிலே மிகவும் துன்பகரமான அத்தியாயமாகும். சிங்களவர்களின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறையைப் பற்றி முறையிடும் தமிழர்கள், அவர்கள் மத்தியில் வாழ்ந்த அதி சிறுபான்மையான முஸ்லிம்களுக்கு அவர்களால் இழைக்கப்பட்டவைகளுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் மணலாறு/வெலிஓயா பகுதிகளில் இன ஒழிப்பு செய்கிறார்கள் என முறையிடும் தமிழர்கள், வடக்கிலிருந்து முழுமையாக முஸ்லிம்களை வெளியேற்றியதும் இன ஒழிப்பிற்கு சமமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதலை என்ற பெயரால் சிறு தொகையினரான முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் மனிதத் தன்மையற்ற செயல்களுக்கு தமிழர்கள் முஸ்லிம்களிடம் கட்டாயம் மன்னிப்புக் கோர வேண்டும்.

நட்புக் கரங்கள்

இவ்வளவு நடந்த பிறகும் வடக்கு, முஸ்லிம்கள் நட்புறவையும் நல்லிணக்கத்தையும் வேண்டி நிற்பதானது அவர்களின்பால் நன்மதிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அவர்கள் வடக்கு எங்களின் தாயகம் என்பதிலே தொடர்ந்தும் ஊன்றி நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழ்மொழி பேசுகின்ற அவர்களின் முஸ்லிம் சகோதரர்களுக்கு நட்புக் கரங்கள் நீட்ட வேண்டும்.

இவ்வாறான குறைபாடுகளை களைந்தெறிய இமாமை தேர்ந்தெடுத்திருப்பதானது ஒரு நல்ல சமிக்ஞையாகும். இது ஒரு முதல் படி மட்டுமே என்றாலும் அது மகிழ்ச்சிகரமான நீண்ட பயணத்தின் ஆரம்பமாகக் கொள்ளலாம்.

இமாம் பெரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகிறார். இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய கடமை அவர் முன் நிற்கிறது. தமிழர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் சிங்களவர்கள் மத்தியில் நம்பிக்கையை முன்னெடுக்க வேண்டிய கடமை அவர் முன் நிற்கிறது. அவர் முஸ்லிம்களை மீண்டும் அவர்களின் பாரம்பரிய இருப்பிடங்களை நோக்கி திரும்பிவர அவர்களுக்கு தைரியமூட்டும் கடமையும் அவர்களின் அகதி முகாம் வாழ்க்கை நிலைமையை சீர்படுத்தும் கடமையும் அவர் முன் நிற்கிறது.

இவ்வாறான சிக்கலான செயல்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஆர்.எம்.இமாம் தனது கடமையில் பின்னிற்க மாட்டார் என நம்பலாம். [நன்றி: தினக்குரல்]

த நேஷன், 10.02.2008

 

January 27, 2008

அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியது ஏன்?

* கவனிக்க வேண்டிய பல அம்சங்கள்

டீ.பீ.எஸ்.ஜெயராஜ்

னாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா) இறுதியாக மேற்கொண்ட தீர்மானம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு சென்ற 14ஆம் திகதி நடந்த வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்போடு பெரிதும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது.

இதில் ஓரளவு உண்மையிருந்த போதி லும், ஸ்ரீ.ல.மு.கா.வின் முடிவை இத்தகைய கண்ணோட்டத்தோடு மட்டும் நோக்குவது தவறாகும். அவ்வாறு செயல்படுவதற்கு ஸ்ரீ.ல.மு. கா.வை தூண்டிய அரசியல் நிர்ப்பந்தங்கள் சிக்கலானவையும், பிரச்சினைக்குரியனவுமா கும்.

ராஜபக்ஷ அரசு, பேரினவாத மனப்போக் கைக் கைவிட்டு சிறுபான்மையினரின் விவகாரங்களில் நியாயமான கரிசனை காட்ட முன்வராது போனால், இவ்வாறான அழுத்தங்களும், அதிர்வுகளும் தவிர்க்கவொண்ணாதவையாகிவிடும்.

ஸ்ரீ.ல.மு.கா.வின் இத் தீர்மானத்திற்கு வழிகோலிய காரணிகளை உற்று நோக்குவதற்கு முன்னர், அரசாங்கத்தோடு இணைவதற்கு அக் கட்சியை உந்திய அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது சாலச் சிறந்ததாகும். கட்சியின் கடந்த கால வரலாற்றை ஆராய்வதும் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

[ஸ்ரீ.ல.மு.கா. "தாருஸ்லாம்" செயலகத்தில் நடாத்திய பத்திரிகையளர் மாநாட்டில் ரவுப் ஹக்கீம்-டீசம்பர் 13, 2007 படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை][ஸ்ரீ.ல.மு.கா. "தாருஸ்லாம்" செயலகத்தில் நடாத்திய பத்திரிகையளர் மாநாட்டில் ரவுப் ஹக்கீம்-டீசம்பர் 13, 2007 படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]

ஸ்ரீ.ல.மு.கா.இன் தோற்றம்:

ஸ்ரீ.ல.மு.கா. இன் தோற்றம் இந் நாட்டு அரசியல் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. கவர்ச்சியும், ஆகர் சக்தியும் வாய்க்கப்பெற்றிருந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தமக்கேயுரிய தீட்சண்யமான பார்வையாலும், அரசியல் ஞானத்தாலும் புவியியல் ரீதியாக சிதறிப்போயிருந்த இந் நாட்டு முஸ் லிம் சமூகத்தை ஓர் உயிரோட்டமுள்ள சக்தியாகப் பின்னிப் பிணைத்தார்.

இக் கட்சியின் அரசியல் அடித்தளம் பொதுவாகக் கிழக்கு மாகாணமும், குறிப்பாக அம்பாறை மாவட்டமுமாகும்.

மேலாதிக்க சிங்கள மேட்டுக் குடியினர் காலாதிகாலமாகப் பச்சைத் தரப்பில், அல் லது நீலத் தரப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கையாண்டு வந்தனர். அஷ்ரப் இத்தகையோருக்கு அப்பாற்பட்டவர்; அவர் சுதந்திரமாகச் செயற்பட்டவர்; அவ்வாறாயினும் அவர் தாம் கொண்ட கொள்கை, சுய கௌர வம் என்பவற்றின் அடிப்படையில் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருந்தவர்.

1994 ஆம் ஆண்டில் அஷ்ரப், ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சந்திரிகா பண்டாரநாயக்காவோடு கூட்டுச் சேர்ந்தார். சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் பிரதான பங்காளியாக இருந்து அரசியல் பலத்தை ஸ்ரீ.ல.மு.கா. பரிசீலித்தது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு அநேக விடயங்களில் வாக்காளர்களைத் திருப்திப்படுத்துதற்கு ஸ்ரீ.ல. மு.கா.வினால் முடிந்தது.

அஷ்ரப் தாம் அதிகாரம் மிக்க தலைவரொருவராக இருந்தபடியால் உட்கட்சிப் பூசல் தலைதூக்க விடாது தடுத்து வந்தார். ஆயினும், அந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் யூ.எல்.எம்.(தொப்பி) மொஹிதீன், எம்.எம்.சுஹைர், எஸ்.எம்.அபூபக்கர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், டாக்டர் எம்.இல்யாஸ் ஆகிய ஐந்து எம்.பி.க்கள் அவரோடு முரண்பட்டனர்.

அஷ்ரப்பினுடைய சகாக்களுள் ரவூப் ஹக்கீம் ஆகக்கூடிய நம்பிக்கைக்கு உரியவராகவும், பலம் வாய்ந்தவராகவும் விளங்கினார். அவர் கட்சியின் விடிவெள்ளியாகப் பிரகாசித்தார். அஷ்ரப்பின் துக்ககரமான மறைவின் பின்னர், ஹக்கீம் அந்த இடத்தை நிரப்பினார். ஆனால், அவருக்கு எதிராக சில சக்திகள் செயல்பட்டன. அவர்களில் சிலர் பேரியல் அஷ்ரப்பை சூழ்ந்து கொண்டு குடும்ப அரசியலை நிலை நாட்ட விழைந்தனர்.

தனித்துவமான முஸ்லிம் காங்கிரஸில் வெடிப்புகள் விழ ஆரம்பித்த போதிலும், அந்த ஆதிக்கம் பொருந்திய அரசியல் இயக்கம் அதற்கு இடந்தரவில்லை. ஒரு பலம் வாய்ந்த கட்சியின் கீழ் முஸ்லிம்கள் ஐக்கியப்படுவதைப் பலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சந்திரிகா குமாரதுங்கவோடு அஷ்ரப் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்த போதிலும், ஹக்கீம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அஷ்ரப்பின் விதவை மனைவி பேரியலுக்கும், அவரது அரசியல் வாரிசு ஹக்கீமுக்கும் இடையிலிருந்த முரண்பாடும் துரதிர்ஷ்டவசமாக நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர், ஸ்ரீ.ல.மு.கா.விற்குள் ஆழமான பிளவு தென்பட்டது.

துண்டாடல்

அஷ்ரப், ஸ்ரீ.ல.மு.கா.வை முஸ்லிம்களுக் கான ஒரு கட்சியாக வளர்த்து வந்த போதும், கிழக்கின் பல்லினத் தன்மையைப் பொறுத்து அரசியல் ரீதியான பரந்தளவிலான கூட்டு ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தை அவர் உணரத் தலைப்பட்டார். தம்மை இன நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பக்கூடிய தேசியத் தலைவராக அஷ்ரப் இனம் காட்ட முற்பட்டார்.

அதன் பெறுபேறாக தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) தோற்றம் பெற்றது. தமது புதிய அரசியல் சித்தாந்தத்தை வடிவமைப்பதற்குள் துயர்மிக்க வான்வெளி விபத்து காரணமாக அவர் மரணித்தார்.

அஷ்ரப்பை இழந்த நிலையில் ஸ்ரீ.ல.மு.கா.துண்டாடப்பட ஆரம்பித்தது. அப்போதைய நிலையில் அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கிளம்பிய சவால்களை எதிர்நோக்குவதற்கு இளவல் ஹக்கீம் போதிய அனுபவம் இன்றிக்காணப்பட்டார். கட்சி, அஷ்ரப்பை ஏற்றுக்கொண்டது போன்றே தம்மையும் தலைவராக அங்கீகரிக்கும் எனக் கருதியது ஹக்கீம் விட்ட தவறுகளில் ஒன்றாகும்.

இதைவிட அஷ்ரப் கிழக்கு மாகாணத்தினதும், அம்பாறை மாவட்டத்தினதும் மண் ணின் மைந்தன். ஹக்கீம் கலகெதரயைச் சேர்ந்தவர். அவர் கிழக்கு முஸ்லிம் அல்லர்.

ஆகையால், தமது தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஹக்கீம் உள்ளுர் அரசியல்வாதிகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் கண்டி மாவட்டத்தில் அதிகார அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அதாவுல்லாஹ், அன்வர் இஸ்மாயில் ஆகியோர் அப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா.இன் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளாகப் பரிணமித்தனர். தனிநபர் சுயபிரபல்யத்துவமும் குண இயல்பு முரண்பாடுகளும் மேலும் பிளவுக்கு வழிவகுத்தன. அதிகாரத்திலிருந்தோரால் உந்தப்பட்டு அதாவுல்லாஹ் பிரிந்து சென்று தேசிய காங்கிரஸை ஆரம்பித்தார்.

ஸ்ரீ.ல.மு.கா. துண்டாடப்படும் படலம் தொடர்ந்தது. 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா., ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க) உடன் சேர்ந்து போட்டியிட்டது. ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி. கூட்டு அத் தேர்தலில் வெற்றியீட்டியதால் ஸ்ரீ.ல.மு.கா., ஐ.தே.கட்சியுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

சிங்கள, பௌத்த மேலாதிக்க சித்தாந்தத்தோடு அத் தேர்தலில் போட்டியிட்ட ஜாதிக ஹெல உறுமய பல ஆசனங்களை வென்றெடுத்தது. அக் கட்சியின் அநேக கொள்கைகள் முஸ்லிம் எதிர்ப்புத் தன்மை வாய்ந்தவையாகும்.

மீண்டும் ஸ்ரீ.ல.மு.கா. பிளவு தூண்டப்பட்டது. அமைச்சுப் பதவிகள் வாரி வழங்கப்பட்டன. அதன் பெறுபேறாக எம்.பி.க்களான றிசாத் பதியுதீன், நஜீப் அப்துல் மஜீத், அமீர் அலி, ஹுசைன் பைலா ஆகியோர் அரசாங்கத்திற்குத் தாவினர்.

அவர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தனர். இது ஸ்ரீ.ல.மு.கா. ஐ பாராளுமன்றத்தில் ஆறு ஆசனங்களாகக் குறைத்தது. ஆயினும், ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் அமோக வெற்றிபெற்றார்.

இவ்வாறான விசித்திரங்கள் அரங்கேறிய வேளையில் முஸ்லிம்களின் அரசியலில் ஓர் உண்மை உறுதியாக வெளிப்பட்டது. ஸ்ரீ.ல.மு.கா. மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த எம்.பி.க்களில் சிலர் கட்சி விசுவாசம் இன்றி நம்பிக்கையீனமாக நடந்து கொண்ட போதிலும், ஸ்ரீ.ல.மு.கா. இன் சராசரி வாக்காளர் எவரும் அவ்வாறு நடக்கவில்லை. ஸ்ரீ.ல.மு.கா., கட்சிக்கு உரிய ஆசனங்களை தொடர்ந்தும் அதிக அளவில் வென்றெடுத்ததோடு, அது தனித்த, பெரிய முஸ்லிம் கட்சியாகவும் திகழ்ந்தது.

அது முஸ்லிம்களின் அதி நம்பிக்கைக்குரிய அரசியல் குரலாக ஒலித்ததோடு, முஸ்லிம்கள் அதனை தங்களது கட்சியென இனங்காட்டிக் கொண்டனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கில் 13 முஸ்லிம் பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களில் 11 மன்றங்களின் அதிகாரத்தை அது கைப்பற்றியது.

நிச்சயமற்ற தன்மை

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது. சிறுபான்மையினர் எனக் குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரின் அதிக பட்ச ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்தது.

ராஜபக்ஷ, தம்மமை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட கூடுதலான சிங்கள வாக்குகளைப் பெற்றார். புலிகள் அரசியல் மடமையாகவும், நம்பிக்கைத் துரோகமாவும் ஒரு பகிஷ் கரிப்பை நடத்தினர். அதன் விளைவாக வட கிழக்கு தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க முடியவில்லை. சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷ மயிரிழையில் வெற்றி பெற்றார்.

இவ்வாறிருக்க, பேரியல், அதாவுல்லாஹ், றிசாத் போன்றோர் அமைச்சு அதிகாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த போது, ஸ்ரீ.ல.மு.கா. ஐச் சேர்ந்த ஒரு சாரார், கட்சி அரசாங்கத்தோடு இணைய வேண்டுமென அழுத்தம் கொடுக்கலாயினர்.

எவ்வாறாயினும், ஹக்கீம், கொள்கை ரீதியாக அதனைச் செய்ய வேண்டுமென முயற்சித்தார். அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர், சில குறிப்பிட்ட நிபந்தனைகளோடு பேச்சுவார்த்தை நடாத்த ஆரம்பித்தார்.

இதேவேளையில், ராஜபக்ஷ அரசும், எதிர்க்கட்சி எம்.பிக்களை காவு கொள்ளும் காரியத்தை அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கித் தீவிரப்படுத்தியது. ஷ்ரீ.ல.மு.கா. எம்.பிக்கள் சிலருடன் ஹக்கீமின் முதுகுக்குப் பின்னால் பேச்சுகள் நடந்தன. ஒரு கௌரவமான புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் அளவிற்கு அந்த எம்.பி.க்களிடம் பொறுமையும், சுய கட்டுப்பாடும் இருக்கவில்லை.

ஸ்ரீ.ல.மு.கா.இல் எஞ்சியிருந்த ஆறு எம்.பி.க்களில் குறைந்த பட்சம் மூவர் ஹக்கீமை கைவிட்டு விட்டு அரசுக்குத் தாவி விடுவார்கள் என்பது விரைவிலேயே தெரியவந்தது. அவ்வாறான சூழ்நிலையில் போதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்யப்படாத நிலையில் அரசாங்கத்தோடு இணைவதென கட்சிப் பிரமுகர்கள் தீர்மானித்தனர்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்னொரு பிளவை ஸ்ரீ.ல.மு.கா. இனால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை தோன்றியது. ஆகையால் இணைவது என்று கட்சி கூட்டாகத் தீர்மானத்தை மேற்கொண்டது. கிளர்ச்சி செய்த எம்.பி.க்கள் முடிவு எடுத்தனர்; தலைவர்கள் பின்தொடர்ந்தனர்.

இது சுய விருப்பத்தின் பேரில் நடந்த ஒரு திருமணம் அல்ல, கணவன் - மனைவி ஆகியோரின் உள்ளங்களைத் தொடாத துப்பாக்கி முனைத் திருமணம். இந்த தாம்பத்தியம் நீடிக்குமா என்பது சந்தேகத்திற்கு இடமாகவேயிருந்தது.

கசப்பான விதியின் நியதி

எத்தகைய பிளவைத் தவிர்ப்பதற்காக ஸ்ரீ.ல.மு.கா., அரசாங்கத்திற்குள் பிரவேசித்ததோ, அதைவிட அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போதும் இன்னொரு பிளவைச் சந்திக்க நேர்ந்தமை எதிர்பார்த்ததை விட கசப்பான ஏமாற்றமாகும். ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹசனலி, பைசல் காசிம் ஆகிய எம்.பி.க்கள் மட்டுமே தம் பதவிகளைத் துறந்து எதிர்க்கட்சிக்குச் சென்றனர்.

நிஜாமுதீன், கே.ஏ.பாயிஸ் ஆகியோர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. ஓர் ஆடம்பர ஹோட்டலில் நன்கு உபசரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் காணாமல் போனதாக செய்தி பரவியது.

ஸ்ரீ.ல.மு.கா. இன் பிளவைப் பார்க்கும் போது அண்மைய வரலாறு மீண்டும் மீட்டப்படுவதாகத் தோன்றுகின்றது. கட்சி மேலும் பிளவுபடும். ஆபத்தைக் கூடப் பொருட்படுத்தாது ஷ்ரீ.ல.மு.கா.ஏன் எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றது என்பது இங்கு எழும் கேள்வியாகும். அரச சுகபோகங்களைத் துறந்து, வெறுமை படர்ந்த எதிர்த் தரப்புக்குச் செல்வதற்குக் கட்சியை நிர்ப்பந்தித்தது என்ன? கட்சியின் அடிமட்டத்திலிருந்து மூலை, முடுக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அழுத்தம் என்பதே இதற்கான இலகுவான விடையாகும்.

கிழக்கில் முஸ்லிம் சமூகம் பொதுவாகவும், குறிப்பாகவும் அநேக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது என் பதை மறுப்பதற்கு இல்லை. இயன்ற வரை அவற்றை நிவர்த்திப்பதற்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லிம் எம்.பி.க்கள் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அல்லது அதற்கு விரும்பாவிட் டால் அவர்கள் அதற்குத் தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் வருவார்கள். அப்படியானால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும்.

ஸ்ரீ.ல.மு.கா.இன் அடித்தளம் கிழக்கு மாகாணமாகும். கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. ஆதிக்கசக்தியாக இருந்த போது புலிகளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் முறுகல் இருந்து வந்தது. அதைவிட ஏனைய பிரச்சினைகள் பெரிதாகத் தோன்றவில்லை.

ஆனால், எல்.ரி.ரி.ஈ. இப்பொழுது கிழக் கில் முக்கியமான சக்தியாக இல்லை. அந்த முரண்பாடு அகன்றுவிட, முஸ்லிம்களைப் பொறுத்தவரை வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற ஆரம்பித்துவிட்டன.

II

ஆனால், எல்.ரி.ரி.ஈ. இப்பொழுது கிழக் கில் முக்கியமான சக்தியாக இல்லை. அந்த முரண்பாடு அகன்றுவிட, முஸ்லிம்களைப் பொறுத்தவரை வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற ஆரம்பித்துவிட்டன.

இலங்கையில் சிங்களவர் அல்லாத ஏனைய இனத்தவர்களின் சட்டபூர்வமான முறைப்பாடுகளில் பிரதானமானது பேரினவாத சிங்கள அரசு சிறுபான்மையினர் மீது செலுத்தும் மேலாதிக்கமாகும். இதுவே பெரிய பிரச்சினையாகும். சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இதைவிடக் குறைந்தவையே.

தீமையான திட்டங்கள்

எல்.ரி.ரி.ஈ.இனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கிழக்கின் வெற்றி நம்பிக்கையூட்டவதாக அமைந்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை விரைவில் பொய் ஆகிவிட்டது.

ராஜபக்‌ஷ சகோதர்களாலும், இனவாத பாசிச காவி உடை தரித்தோராலும் நடாத்தப்படும் இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணத்திற்கான தீய உள் நோக்கம் கொண்ட திட்டத்தை வெளிக்காட்டியது. தமிழரினதும், முஸ்லிம்களினதும் முதுகின் மீது சவாரி செய்து கிழக்கை சிங்களமயப்படுத்துவதே அதுவாகும்.

கிழக்கின்பிரதானமான பிரச்சினை எதுவென அங்கு வசிக்கும் தமிழரிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ எவராவது வினவினால், அதற்கான பதில் பெரும்பாலும் காணிப் பிரச்சினை என்பதேயாகும்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் புலிகளால் தவறாகக் கையாளப்பட்டன. எவ்வாறாயினும், அந்தக் காணிகள் முஸ்லிம்களுக்கு மீளக் கொடுக்கப்படவில்லை. மாறாக, அக் காணிகளில் சிங்கள மக்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேற்றப்படுகின்றார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் கட்டைப்பறிச்சானிலிருந்து, இலங்கைத் துறைமுகத்துவாரம் வரை முஸ்லிம்கள் மீன்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜபல் மலையில் அகழ்வது தடை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் முஸ்லிம் விவசாயிகள் தமது காணிகளில் மீளக் குடியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களுக்கான குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின் றன.

மட்டக்களப்பில் குடும்பிமலை(தொப்பிகல) பிரதேசங்களையும், அத்துடன் செங்கலடி, மஹா ஓயா பாதையூடாக விஸ்தரித்து புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஒன்றை ஏற்படுத்த சதி செய்யப்படுகின்றது.

இங்குள்ள காணிகளில் அநேகமானவை உண்மையிலேயே தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தமானவை. தமிழ், முஸ்லிம் பாற்பண்ணை விவசாயிகளுக்கும், கால் நடை உரிமையாளர்களுக்கும் சொந்தமான மேய்ச்சல் நிலங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், இப்பொழுது என்ன நடக்கின்றது என்றால், இவற்றின் உரிமையாளர்கள் இருக்கத்தக்கதாக வெளியார் (சிங்களவர்) அந் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்.

காணிப்பிரச்சினையின் தாக்கத்தை அம்பாறை முஸ்லிம்கள் மிக அதிகமாக உணர்கின்றார்கள். முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராக் கொண்ட ஒரே மாவட்டம் அதுதான். ஆனால் ராஜபக் அரசாங்கத்தில் அங்கு முஸ்லிம்களின் பரம்பல் வரைபடம் வேகமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இதனைத் தொடர்ந்தும் செய்யுமாக இருந்தால், அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களை விட சிங்களவரின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.

எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தால் போல, மாவட்டக் கொடியின் குறியீடுகள் காணப்படுகின்றன. அந்தக் கொடியில் திருகோணமலை மாவட்டம் கழுகு, மட்டக்களப் மாவட்டம் மீன் ஆகிய சின்னங்களால் (இலச்சினை) சித்தரிக்கப்படும் போது முஸ்லிம் பெரும்பான்மை அம்பாறை மாவட்டம் சிங்களவரின் பூர்வீகத்தைக் குறிக்கும் சிங்கம் இலச்சினையால் சுட்டப்படுவது இப்பொழுது பெரும் சிக்கலையும், சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.

காணிப் பிரச்சினை

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஷ்ரீ.ல.மு.கா. வட்டாரம், மூன்று வெவ்வேறு இடங்களைச் சுட்டிக் காட்டகின்றது. இதில் முதலாவது பொத்துவில்லுக்கும், உல்லைக்கும் இடைப்பட்ட 500 ஏக்கர் பரப்பைக் கொண்ட கரங்கோவா பிரதேசமாகும். இரண்டாவது, சம்மாந்துறைப் பிரிவில் உள்ள 400 ஏக்கர் விஸ்தீரணமான பள்ளக்காடு பரதேசமாகும். மூன்றாவது அட்டாளைச்சேனைப் பிரிவில் உள்ள 175 ஏக்கர் வரையிலான வெள்ளைக்கால் - பொன்னாவெளிப் பிரதேசமாகும்.

இந்தக் காணிகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க மீது ஸ்ரீ.ல.மு.கா.வட்டாரம் குற்றஞ்சாட்டுகின்றது.

கரங்கோவாவில் தமது காணிகளைப் பண்படுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கு அத்துமீறி நுழைந்தவர்கள் எனக் கூறி வெளியேற்றப்பட்டார்கள். சம்பக்க ரணவக்க அதனை வன பாதுகாப்பு பிரதேசம் என்கிறார்.

பள்ளக்காடு காணிகளுக்கும் இதே கதிதான். வெள்ளைக்கால் பொன்னாளி காணிகள் தீகவாப தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட பிரதேசம் என்கிறார்கள்.

இவை பற்றி தீர்வு காணப்பட வேண்டுமென்று அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தார்கள். ஆனால், உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை. அத்துடன் விவசாயக் கால்வாய்களை நிரப்பியதால் நிவர்த்திக்க முடியாத பாதிப்பு ஏற்பட்டது.

இவற்றில் சில காணிகள் கல் ஓயாத் திட்டத்திற்கு முன்பே முஸ்லிம்களால் செய்கை பண்ணப்பட்டவை. ஆனால், இப்பொழுது பௌத்த புதைபொருள் (தொல்பொருள்)ஆய்வு, வன சுற்றாடல் பாதுகாப்பு என்ற போர்வையில் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலவுடமை மறுக்கப்படுகின்றது.

இந்த நிலப்பிரச்சினை பாரதூரமானதாக மாறிவிட்டது. இதனை தீர்த்து வைக்குமாறு ஸ்ரீ.ல.மு.கா. மீது அதிகமான அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. மீண்டும், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதிகாரம் மிக்கவர்கள் எதனையும் சாதிக்கவில்லை. இது தொடர்பான சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தை வாபஸ் பெறுமாறு சம்பிக்க ரணவக்க மீது உரிய அழுத்தம் செலுத்தப்படவில்லை.

காணி கபளீகரம் தொடர்கின்றது..

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ராஜபக்‌ஷ அரசாங்கம் பெரும் சிக்கலை எதிர்நோக்கிய போது ஸ்ரீ.ல.மு.கா.வுக்கும், ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, பசில் ஆகியோருக்கும் இடையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ.ல.மு.கா.இந்தப் பிரச்சினைகளை கிளப்பியபோது, பசில் ராஜபக்‌ஷ அனுதாபம் காட்டியதோடு, வருத்தமும் தெரிவித்தார். ஸ்ரீ.ல.மு.கா.முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பசில் பேசியதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பணித்தார்.

சிறிது காலத்திற்கு எல்லாம் சரி போன்று இருந்து அம்பாறையில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓய்ந்திருந்தன் ஸ்ரீ.ல.மு.கா. நம்பிக்கையோடு இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால், பிறகு நிலைமை மாறியது. காணி கபளீகரம் மிண்டும் தலைதூக்கியது. சுற்றாடல் அமைச்சர் அதனைத் தடுக்கவில்லை.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ம் திகதி நடக்கவிருந்த போது ஷ்ரீ.ல.மு.கா. அரசிலிருந்து விலகிக் கொள்ளும் நிலை ஏற்பட்ட போது மீண்டும் பேச்சுக்கள் நடந்தன.

ஸ்ரீ.ல.மு.கா. தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருந்தால் டிசம்பர் 14ம் திகதிக்குப் பிறகு தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், ஸ்ரீ.ல.மு.கா.தனது முடிவில் உறுதியாக இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகி வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.

இந்த முடிவு கட்சியின் மேலிடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டதல்ல, இந்த முடிவு கட்சித் தொண்டர்களினால் தூண்டப்பட்டது. கிழக்கு மாகாணக் காணிப் பிரச்சினையும், சமூகம் சார்ந்த ஏனைய பிரச்சினைகளும் கட்சி உறுப்பினர்களை கவலையும், ஆத்திரமும் அடை யச் செய்திருந்தன.

இத்தகைய கட்சித் தொண்டர்களை மறைந்த தலைவர் அஷ்ரப் போராளிகள் என விளித் தார். இப்பொழுது இந்தப் போராளிகள் கட்சிக்குள் அரசியல் போராட்டம் நடாத்துகின்றனர்.

விலகுவதற்குத் தீர்மானம்

ஸ்ரீ.ல.மு.கா. கட்சிக்குள் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கிழக்கு மாகாணப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடும், ஜும்இய்யதுல் உலமா அமைப்போடும் ஆலோசனைகள் நடந்தன. அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென உறுதியாக உணரப்பட்டது.

27 உறுப்பினர்களைக் கொண்ட அதியுயர் பீடம், 57 உறுப்பினர்களைக்கொண்ட அரசியல் பீடம், 214 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு என்பன தனித்தனியே கூடி அரசாங்கத்திலிருந்து விலகுவதென்று ஏகமனதாக முடிவெடுத்தன. அஃது ஒரு மும்முனைத் தீர்மானமாகும்.

ஸ்ரீ.ல.மு.கா. இன் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்ட குழுக்கள் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. நாடெங்கிலுமுள்ள கட்சி உறுப்பினர்கள் கொண்ட பீடங்களே ஒருமித்து இந்த முடிவுக்கு வந்தன. சமூகத்தின் பாதுகாப்பு இன்மையும் புறக்கணிப்புமே இதற்குக் காரணமாகும்.

முஸ்லிம்கள் எதிர்நோக்கிய ஒரு பிரச்சினை ஓசை (சப்தம்) காரணமாக சூழல் மாசடைதல் சட்டமாகும். பள்ளிவாசல்களில் தொழுகைக்காக பாங்கு சொல்லி அழைப் பது வழக்கமாகும். இந்த பாங்கு ஒலி பெரும்பாலும் மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. அதனை செவியுறுவது நன்மையாகக் கருதப்படுகின்றது.

முஸ்லிம்கள் ஐவேளை தொழுகையில் ஈடுபடுவர். புதிய சட்டத்தின்படி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணிவரை ஓசை எழுப்புவது தடை செய்யப்பட்டிருப்பதால் சுபஹ் தொழுகைக்கு பாங்கு ஓசை எழுப்பமுடியாது. அத்துடன், ஏனைய நான்கு தொழுகைகளுக்கும் எழுப்பப்டும் பாங்கோசை பள்ளிவாசல் கட்டிடத்திற்கு அப்பால் பரவக்கூடாது. என தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஓசை காரணமாக கூழல் மாசடையும் சட்டம் சம்பிக்க ரணவக்கவின் சுற்றாடல் அமைச்சினாலேயே இயற்றப்பட்டது.

இறைச்சி வியாபார கட்டுப்பாடு

முஸ்லிம்களைப் பாதிக்கும் மற்றொரு பிரச்சினை மிருகங்களையும், கோழிபோன்ற பறவைகளையும் உணவுக்காக அறுப்பதாகும். மிருகவதை எனக் கூறி இதனைத் தடுப்பதற்கான சட்டவிதிகளை ஹெல உறுமய அமைச்சர் அறிமுகப்படுத்தினார். மிருகங்களை அறுப்பதும், இறைச்சியை இடத்திற்கு இடம் கொண்டு செல்வதும் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது.

இறைச்சிக் கடைக்காரர்களின் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பதும், அந்தச் சமூகத்தினரே அதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதிகமாக இறைச்சி உட்கொள்வோரும் முஸ்லிம்களேயாவர். ஆகையால் இந்த சட்டவிதிகளால் அச் சமூகத்தினரே மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.

ஹஜ் பெருநாளின் நிமித்தம் ஆடு, மாடுகளை அறுத்து குர்பான் கொடுக்கும் சமயக் கிரியையையும் புதிய சட்டங்கள் பாதித்தன.

முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் மேற்சொன்ன மூன்று வியங்களோடும் ஜாதிக ஹெல உறுமய தொடர்புபட்டிருந்தது. தாம் தெரிவு செய்யப்படடால் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைப்புவிடுப்பதை (பாங்கு) தடுப்பதாக ஜே.எச்.யு (ஜாதிக ஹெல உறுமய) தேர்தல் பிரசாரத்தின் போது கூறிவந்தது. அத்துடன் அக் கட்சியின் தத்துவாசிரியரும், பாராளுமன்ற உறுப்பனருமான சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர் முஸ்லிம்களின் மீதான தமது கட்சியின் வெறுப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அரசியல்வாதியான அந்தப் பிக்கு, கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் வரலாறு பூர்வமான வசிப்பிடம் என்பதை மறுத்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இன ரீதியான பீதி மனப்பான்மை

இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாறு இருக்கும் போது, இன ரீதியான பீதி மனப்பான்மையினால் உந்தப்பட்டு, இந்த மஞ்சள் உடை தரித்த சிங்கள மேலாண்மை மிக்கவர் முஸ்லிம்களை அவர்களது தாயகம் சவூதி அரேபியா எனக் குறிப்பட்டு அவர்கள் மீண்டும் அங்கு சென்றுவிட வேண்டும் என்கிறார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்கான காரணங்களை பாராளுமன்றத்திலும், பின்னர் ஊடக மாநாட்டிலும் ஹக்கீம் தெளிவுபடுத்தினார். அரசாங்கம் சிறுபான்மை இனத்தவருடன் சிநேகபூர்வமாக நடந்து கொள்ளவில்லை என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

ஹக்கீமின் கூற்று எத்துணை பெறுமதி வாய்ந்தது என்பதில் எவருக்காவது சந்தேகமிருக்குமானால், அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு சங்கைக்குரிய மேதானந்த தேரர் கக்கிய இனவாத விம் ஒன்றே போதும். பிக்குவின் கூற்றை ஸ்ரீ.ல.மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி பாராளுமன்றததில் காரசாரமாக மறுத்துரைத்தார்.

III

தாம் தெரிவு செய்யப்பட்டால் பள்ளி வாசல்களில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதை (பாங்கு) தடுப்பதாக ஜே.எச்.யு (ஜாதிக ஹெல உறுமய) தேர்தல் பிரசாரத்தின் போது கூறிவந்தது. அத்துடன் அக் கட்சியின் தத்துவாசிரியரும், பாராளுமன்ற உறுப்பினருமான சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர் முஸ்லிம்களின் மீதான தமது கட்சியின் வெறுப்பை வெளிப்பiயாகவே தெரிவித்தார்.

ஆரசியல்வாதியான அந்தப் பிக்கு, கிழக்குமாகாணம் முஸ்லிம்களின் வரலாறு பூர்வமான வசிப்பிடம் எனபதை மறுத்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இன ரீதியான பீதி மனப்பான்மை

இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாறு இருக்கும் போது, இன ரீதியான பீதி மனப்பான்மையினால் உந்தப்பட்டு, இந்த மஞ்சள் உடை தரித்த சிங்கள மேலாண்மை மிக்கவர் முஸ்லிம்களை அவர்களது தாயகம் சவூதி அரேபியா எனக் குறிப்பிட்டு அவர்கள் மீண்டும் அங்கு சென்றுவிட வேண்டும் என்கிறார்.

ஆரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்கான காரணங்களை பாராளுமன்றத்திலும், பின்னர் ஊடக மாநாட்டிலும் ஹக்கீம் தெளிவுபடுத்தினார் அரசாங்கம் சிறு பான்மை இனத்தவருடன் சிநேகபூர்வமாக நடந்து கொள்ளவில்லை என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

ஹக்கீமின் கூற்று எத்தனை பெறுமதி வாய்ந்தது என்பதில் எவருக்காவது சந்தேகமிருக்குமானால், அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு சங்கைக்குரிய மேதானந்த தேரர்க்கிய இனவாத வி~ம் ஒன்றே போதும். பிக்குவின் கூற்றை ஸ்ரீ.ல.மு.கா. செயலாளார் நாயகம் ஹசனலி பாராளுமன்றத்தில் காரசாரமாக மறுத்துரைத்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக முஸ்லிம் சமகம் எதிர்நோக்கும் வேறு விடயங்களும் உள்ளன.முஸ்லிம் பாடசாலைகளில் 2500 ஆசிரியர் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமலிருக்கின்றன.மௌலவி (அரபு ஆவிரியர் )பதவிகளும் காலியாக இருக்கின்றன.பல்கலைக்கழகங்களுககு குறைவான முஸ்லிம் மாணவர்களே அனுமதிக்கப்படுது இன்னொரு பிரச்சினையாகும்.

ஆரச ஆதரவு கருணா குழுவினரின் தமிழிழ மக்கள் விடுதலை புலிகளின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையிட்டும் ஸ்ரீ.ல.மு.கா.அதிக கரிசனை காட்டி வருகின்றது. அரசாங்கம் முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிந்சியளித்து, அவர்களை ஆயுதமேந்தனள வைப்பது மற்றொரு பாரதுரமான பிரச்சனையாகும். இந்த குழுக்கள வௌ;வேறு பெயர்களில் அக்கலைப்பற்று காத்தான்குடி,ஒட்டமாவடி,முதூர் பிரதேசற்களில் காணப்படுகின்றன.

குறுகிய காலத்தில் இக்குழுக்கள் கருணாகுழுவினரோடு இணைந்து தமிழ்- முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கப் பயன்படுத்தப்படும்.காலப்போக்கில் இவை,ஸ்ரீ.ல.மு.கா.போன்ற சட்டபுர்வமான சாத்வீகக்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வன்முறையைக் கையாளக்கூடும்.

ஆதிகாரம் இல்லை

அரசாங்கத்தில் இருந்த போதும் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரம் அற்றதாகவே இருந்தது.பதவிகளை வகித்ததைத்தவிர,சமூகத்திற்கு தற்களால் உருப்படியாக எதையுசெய்ய முடியதிருந்தாக கிழக்கு மாகாண பாராளுன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மொத்தம் 23 முஸ்லிம் எம்.பி.க்கள்ல் 18பேர் அரசாங்கத்தி;ல் அமைச்சர்களாகவும்,பிரதியமைச்சர்களாகவும் பதவிகள் வகித்த போதிலும் அவர்களில் எவருமே சமூகத்திற்காக பெரிதாக் எதையும் செய்ய முடியாதிருந்தனர். இந் நிலைமை நுஆ, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிற்கும் பொருந்தினாலும் கூட ஸ்ரீ.ல.மு.கா இற்கே அது சாலப் பொருந்தும் என்றார் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர். எமது மக்கள் ஸ்ரீ.ல.மு.கா ஐந்தான தங்களது கட்சியாக மதிக்கின்றனர். அவர்களது தேவைகளை எங்களால் தான் நிறைவேற்றமுடியும் என அவர்கள் நம்புகிண்றனர் என்றார் அவர்.

கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினாலேயே ஸ்ரீ.ல.மு.கா பெரிதும் உந்தப்பட்டது. இந்தச் சம்மேளனம் ஜனாதிபதிக்கு ஒரு மகஜரை அனுப்பியது. அது கிடைக்கப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதேதவிர, மேற்கொண்டு எதுவுமே நடக்கவில்லை.

டீசம்பர் 14ஆம் திகதி வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது ஒருமித்து கூட்டான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்தச் சம்மேளனத்தின் தலைவர் அய்க்ஹனிபா (மதனி) எல்லா முஸ்லிம் எம்.பி.க்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு ஸ்ரீ.ல.மு.கா மட்டும்தான் சாதகமாக நடந்து கொண்டது. ஆரசாங்கத்திலிருந்து விலகுவது என்ற தீர்மனத்தை அது எடுத்தது.

ஸ்ரீ.ல.மு.கா இன் இந்த வெளியேற்றம் அக் கட்சியின் செல்வாக்கதை அதிகரித்திருப்பதாக சில பிரதான ஊடகங்களில் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களில் சிலர் இப்பத்திக்குத் தெரிவித்தனர். இந்த அரசின் முஸ்லிம் விரோதப் போக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முஸ்லிம் எம்.பி.க்களுக்கு இருந்த சிக்கல்களும் மொத்தத்தில் சமூகத்தைப் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

ஸ்ரீ.ல.மு.கா அதன் அரசியல் பாரிச வாதத்திலிருந்து மீண்டு, மறுபடியும் இலங்கை முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சக்தியாகப் பரிணமித்திருப்பதனால் சமூகம் இப்பொழுது அதனைச் சுற்றி அணி திரள்கின்றது.

விரும்பியாக வேண்டிய மாற்று வழிகள

இது, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு விரும்பியாக வேண்டிய மாற்று வழிகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று,அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து,முஸ்லிம்களின் பிரச்சினைகளிலி சலவற்றையாவது தீர்ப்பதன் மூலம் ஸ்ரீ.ல.மு.கா.சிறடறை எதிராக அதிக விழுக்காடு (புள்ளி)களைப் பெறல். ஆனால்,ஆட்சியில் ஒன்றித்துப்போயுள்ள செல்வாக்கு மிக்க முஸ்லிம் விரோத இனவாத சக்திகள் காரணமாக இது பெரும்பாலும் சாத்தியமில்லை.

மற்றது.அரசாங்கத்திலிருந்து விலகி,முட்டி மோதும் தன்மையுள்ள அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுதல்.

அடுத்தத,ஸ்ரீ.ல.மு.கா. உடன் ஒன்றிணைதல் பள்ளிவாசல்கள் சம்மேளனம்,ஜம்இய்யதுல் உலமா,முஸ்லிம் கவுன்சில் என்பன ஒரு நடைமுறைச்சாத்தியமான பங்களிபபைச் செய்ய முன்வருமானால் அந்த இலக்கை அடைவதில் சிரமம் இராது.

ஹக்கீமின் தலைமைத்துவுத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வெளிப்பாடாகவே ஸ்ரீ.ல.மு.கா.இன் தi;லவர்,கடந்த கால அனுபவங்களின் ஊடாக பெற்றுள்ள முதிர்ச்சியின் கரணமாக,சிங்கள,தமிழ் சக்திகளுடன் இணையாகப் போட்டியிட்டுகட்சியின் சமநிலையைச் சரிவரப் பேண முயற்சித்துள்ளார்.

தம்மீது தொடுக்கப்பட்ட மோசமான தனிப்பட்ட தாக்குதல்களும்,ஸ்ரீ.ல.மு.கா.தலைவரை மனவலிமை குன்றச் செய்தது. சிலவேளைகளில் அவரது செயல்பாடுகள் பலவீனமானவையாகவும் காணப்பட்டன.

ஆனால்,அண்மைக் காலங்களில் பல்வேறு அம்சங்களில் ஹக்கீம் துணிச்சலான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.பொதுக்கணக்குக் குழுவில் தவிசாளர் என்ற முறையில்,பாரளமன்றத்தில் உறுதியாக நின்றார்.கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து,புத்தளத்தில் பலசாலி எனக் கருதப்பட்ட அப்துல் பாயிஸை கட்சியிலிருந்து இடைநிறுத்த அவர் துணிச்சலுடன் முன்வந்தார். கொழும்பில் நடைபெற்ற கிழக்கின் வெற்றி கொண்டாட்டத்தை அவர் கண்டித்தார். அத்துடன் அவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார் இப்பொழுது அரசாங்கத்தை விட்டு வெளியேறியதன் மூலம் தமக்கு அநீதியிழைக்கப்படக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகிறார்.

மீள்குடியேற்றப் பிரச்சினை

ஜனாதிபதியை எதிர்த்தும் ஹக்கீம் புத்தளத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுத்தார். அமைச்சரவையில் ரிசாத் பதியுதீன், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பான பத்திரமொன்றைச் சமர்ப்பித்த போது இந்தச்சம்பவம் இடம்பெற்றது.

ஜனாதிபதி தனது நிதானத்தை இழந்தார். அந்த அமைச்சரவைப் பத்திரத்தை வீசி எறிந்து ரிசாத் பதியுதீனை கடிந்து கொண்டார். வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்தில் மிக நீண்டகாலமாக தங்கியிருப்பதாகவும் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் வடக்கில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ரிசாத் பதியுதீன் அமைதியாக இருந்த போது, ஹக்கீம் ஜனாதிபதியோடு முரண்பட்டார்;. பின்விளைவு பற்றிச் சிந்திக்காது அவசரப்பட்டு அவ்வாறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்றார் அவர். அப்பொழுது ஜனாதிபதி, வாகரையில் இடம்பெயர்ந்தோர் அவசரமாக மீள்குடியேற்றப்பட்டதைச் சுட்டிக் காட்டியபோது, ஹக்கீம் வாகரையின் நிலைமை வேறுபட்டது என்றும், இரண்டையும் தொடர்பு படுத்தி நோக்கக்கூடாது என்று பொறுமையாக வாதிட்டார்.

ஹக்கீம் அடிபணியாததைக் கண்ட அவரது அமைச்சரவைச் சகாக்கள் பலர் ஆச்சரியப்பட்டனர். பின்னர், பேரியல்  ஹக்கீமிடம் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும்; என்றார்.

எம்.எச்.எம். அஷ்ரப், தமது தூரதிருஷ்டியாலும், துணிச்சலான தலைமைத்துவத்தாலும் ஸ்ரீ.ல.மு.கா. ஐ அஷ்ரப் தம்வசப்படுத்தியிருந்தார். ஹக்கீம் அதற்கு ஒப்பிடக் கூடிய நிலையை எட்ட வேண்டியிருந்தது. தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவதைப் பார்த்தால் அதற் கான காலம் கனிந்திருக்கிறது. அஷ்ரப் பின் பாத்திரத்தை வகிக்க ஹக்கீமுக்கு உரிமையிருக்கிறது.

இதே வேளை, ஸ்ரீ.ல.மு.கா. இன் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வற்புறுத்தல்களை சரிவர விளங்கி, அவற்றை உள்வாங்க ஜனாதிபதி முன்வர வேண்டும். முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது. இலங்கை முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியின் கரிசனையைக் கருத்திலெடுத்து அவற்றை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதிக்கு இதுவே உகந்த தருணமாகும். [djeyaraj@federalidea.com]

 நன்றி: த நேசன் (ஆங்கில வார இதழ்)