« November 2010 | Main | January 2011 »

December 18, 2010

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

யூ.கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார்.

'ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால் வரமுடியுமா?' என ஜனாதிபதியின் தூதுவர் கேட்டார்.

இரண்டு பத்திரிகையாளர்களுமே அப்போதுதான் ஜனாதிபதியுடனான ஒரு மணிநேர நேர்முகத்தை முடிந்துவிட்டு வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.

'ரைம்ஸ்' பத்திரிகையை சேர்ந்த இந்த பத்திரிகையாள்ரகள் மேலே போனபோது கொறிடோரில் பொறுமையிழ்ந்த நிலையில் ஜனாதிபதி காத்திருப்பதை கண்டனர். நேர்முகம் அளிக்கும்போது முன்பு காட்டிய நடத்தைக்கு மாறாக இலங்கை ஜனாதிபதி கோபமாகவும் விரக்தியுடனும் காணப்பட்டார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனின் சமூகத் தலைவர் ஜேம்ஸ் கிங்ஸ்ரன், அடுத்தநாள் (டிசெம்பர் 2) நடைபெறவிருந்த தனது உரை இரத்துச் செய்யப்பட்டுவிட்டதாக அப்போதுதான் அறிவித்ததாக பத்திரிகையாளரிடம் ராஜபக்ஷ கூறினார்.

தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆயத்தப்படுத்துவதாகவும் ஒக்ஸ்போட் யூனியனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாதெனவும் காரணம் கூறப்பட்டது. 'இந்த பொடியங்களுக்கு இவர் பயந்துவிட்டார்.' - ஜனாதிபதி சட்டென கூறினார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன்

ஜனாதிபதியின் மனோநிலை விளங்கிக்கொள்ளப்பட கூடியதே. இலங்கையின் தலைவர், ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காக பெருமளவு உதவியாளர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார். இப்போது யூனியன், மிகக்குறுகிய கால அவகாசத்தில் இதை ஒரு தலைப்பட்சமாக இரத்துசெய்துவிட்டது. தமிழீழ விடுதலை புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த ஒரு மனிதருக்கு நிச்சியமாக இது அரசியல் ரீதியான அவமதிப்பே. இப்போது பிரித்தானியாவில் உள்ள புலிகளின் ஆரதவாளர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பை, ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து மீளப்பெற வைத்ததன் மூலம், பதிலடி கொடுத்துவிட்டனர்.

ஒரு தலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டமை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்மையில் அரசியல் ரீதியான சங்கடம்தான். அவர் அண்மைக்காலத்தில் வெற்றிப் பெருமிதத்தில் திளைத்தவர். இவரது உரையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்த ஒக்ஸ்போர்ட் யூனியனால், இவர் இப்போது இழிந்த இலைக்கஞ்சி குடிக்க வைக்கப்பட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காகவே இவ்வளவு தூரம் வந்த இலங்கையில் பிரபலமான அரசுத் தலைவர் கேவலப்படுத்தப்பட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் அவமானப்படுத்தும் நடத்தைக்கு அப்பால் இது மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்த பிரச்சினையாகவும் உள்ளது.

முன்னாள் பிரித்தானிய பிரதம அமைச்சர் ஹரோல்ட் மக்மிலனால் மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் கொத்தளம் என வர்ணிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர், ஜனாதிபதியின் கருத்து சுதந்திரத்தை மறுத்தமை கசப்பான முரண்நகையாகும்.

அறிக்கை

இந்த கவலை தரும் நிலைமைக்கு இட்டுச்சென்ற நிலைமை யாது?

இது தொடர்பில், ஒக்ஸ்போட் யூனியன் சமூகத்தின் ஊடாக அலுவலர் அலஸ்ரெயர் வோக்கரினால் விளக்க அறிக்கை விடுவிக்கப்பட்டது. அது இவ்வாறு கூறியது:

'இந்த வருடத்தின் முன்பகுதியில் எமது அங்கத்தவர் மத்தியில் உரையாற்ற, அவருக்கு வசதியான திகதியொன்றில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒக்ஸ்போட் யூனியன் அழைத்தது. உலகெங்கும் உள்ள பிரபல அரசியல்வாதிகளையும் அரசுத் தலைவர்களையும் அழைக்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனின் கொள்கைக்கு அமையவே ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

'திரு.ராஜபக்ஷவினால் இந்த அழைப்பு ஏற்கப்பட்டதால், ஜனாதிபதியின் விஜயத்துக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் பற்றி எமது யூனியன், தேம்ஸ்வலி பொலிஸுடனும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடனும் விரிவாக பேசியது. பொலிஸாரினால் அண்மையில் எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட ராஜபக்ஷவின் விஜயம் தொடர்பில் காணப்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான பயங்கள் காரணமாக, ஜனாதிபதியின் உரை நடைமுறையில் சாத்தியமற்றதென மனவருத்தத்துடன் உணர்ந்து கொண்டு அந்த உரையை இரத்துசெய்ய வேண்டியிருந்தது.'

'இந்த தீர்மானம் கவனமின்றி எடுக்கப்பட்டதல்ல. ஜனாதிபதியின் உரை இரத்து செய்யப்பட்டதையிட்டு யூனியன் ஆழ்ந்த கவலையடைகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பேச்சாளர்களை அழைக்கின்ற, பேச்சு சுதந்திர கொள்கையை நிலைநிறுத்தும் நீண்டகால பாரம்பரியம் உண்டு. ஆயினும் மிகப்பெரியளவில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதியின் உரை எதிர்பார்த்ததுபோல சமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்க முடியும் என நாம் உணரவில்லை.'

'உரையாற்ற வருவோர் தொடர்பில் யூனியன் அரசியல் ரீதியாக நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எமது இந்த தீர்மானம், திரு.இராஜபக்ஷவின் அரசியல் நிலைப்பாடு, அவரது அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்பவற்றுடன் தொடர்புப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது அல்ல'.

'கடந்த ஐந்து வருடங்களாக இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் திரு.ராஜபக்ஷ, தனது உரையில் பிராந்தியத்தின் அரசியல் நிலைப்பற்றி தனித்துவமான விளக்கத்தை வழங்குவாரென எமது யூனியன் நினைத்தது. இந்த துரதிஷ்டமான இரத்தையிட்டு எமது உறுப்பினர்களிடம் சங்கம் மன்னிப்பு கோருகின்றது.'

டிசெம்பர் 02 ஆம் திகதிக்கு நிரலிக்கப்பட்ட இந்த நிகழ்வு, முதலில் நவம்பர் 8 இல் நடப்பதாக இருந்தது. பின்னர், ஜனாதிபதியே கேட்டுக்கொண்டதற்கு இணங்க டிசெம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு மும்முரமான வேலைகள் மிகுந்த காலமாக இருந்தது. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதிவியேற்ற, புதிய மந்திரி சபை அமைத்தல், வரவு செலவுத்திட்டம் தயாரித்தல், பாகிஸ்தானின் ஆஷிப் சர்தாரி, இந்தியாவின் எஸ்.எம்.கிருஷ்னா போன்ற இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள முக்கியஸ்தர்களை சந்தித்தல் என நெருக்கமாக பல விடயங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

ஒத்திப்போடுதல்

இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ டிசெம்பர் மாதத்துக்கு தனது உரையை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். யுத்தக் குற்றவாளி என கைது செய்யப்படலாம் என்ற பயத்தினாலேயே இலங்கையில் அரசுத் தலைவர் பிரித்தானியாவுக்கு வர தயங்கினார் என்ற ஊகங்கள் பலத்த கருத்துமோதலுக்கு காரணமாயின.

சர்வதேச நியாயாதிக்கத்தின் தத்துவத்தின் உதவியுடன், மே 2009 இல் நடந்த புலிகளுக்கெதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கை ஆயுதப்படைகளினால் செய்யப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்காக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் சில பிரிவுகளில் செய்திகள் காணப்பட்டன.

உலக தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் புலிசார்பான ஆட்கள் ஊடகங்கள் ஊடாக தமது உன்மத்தத்தை வெளிப்படுத்தியதுடன் யுத்தக்குற்றவாளியாக கைது செய்யப்படலாம் என்ற பயம் காரணமாக ராஜபக்ஷ பின்வாங்கியதாக பல செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர் நவம்பர் மாத்தத்தில் முதலில் திட்டமிட்டவாறு வந்திருந்தால் முன்னாள் சிலிநாட்டு சர்வாதிகாரிக்கு ஏற்பட்ட கதி ஏற்பட்டிருக்கும் எனவும் பேசப்பட்டது.

இதன் தாக்கம் இலங்கையிலும் வெளிப்பட்டது. கொழும்பு பத்திரிகைகளில், சர்வதேச நியாயாதிக்க தத்துவம் ஜனாதிபதிக்கு எதிராக பயன்படுத்தப்படும் சாத்தியம், அதன் விளைவுகள் பற்றி பல கட்டுரைகள் வெளியாகின.

இலங்கை ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு போவதனால் 'கைது செய்யப்படும்' ஆபத்துக்கு முகங்கொடுக்கக் கூடாது என சிலவட்டாரங்கள் கருதின.

லண்டனுக்கான தனது பயணத்தை ஒத்திப்போடுவதனால் ராஜபக்ஷ கால அவகாசத்தை பெற்றுக்கொண்டார் என சில ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. விசாரணை நடைபெறாது என்ற பாதுகாப்பு உறுதியை, பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள இந்த கால அவகாசத்தை ஜனாதிபதி பயன்படுத்துவார் எனவும் கூறப்பட்டது. இவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டால் டிசெம்பரில் போவார் என்றும், இல்லாதுவிடின் போகமாட்டார் என்றும் கருதப்பட்டது.

சவால்

பிரித்தானியாவில் கைது செய்யப்படுவார் என்ற மிரட்டலுக்கு பயந்துவிட்டார் எனக் கூறியவர்கள், மெதமுலனவைச் சேர்ந்த ராஜபக்ஷ யார் என விளங்கியிருக்கவில்லை. சவால்களுக்கு பயந்து பின்வாங்குபவர் அல்ல ஜனாதிபதி. அவர், கைது செய்யப்படும் சாத்தியம் கருதி லண்டனுக்கு போகாமல் விடவில்லை.

தனது தனிப்பட்ட, அரசியல் துணிவுக்கு அப்பால் அவர் லண்டனுக்கு போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒக்ஸ்போட் அழைப்பை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. அவர் ஏற்கெனவே 2008 இல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளார். இப்போது அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. ஆட்களின் கூத்துக்கள் காரணமாக ராஜபக்ஷ இந்த சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பவில்லை.

ஒக்ஸ்போர்ட் யூனியன் என அறியப்படும் ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தில் உரையாற்ற கிடைக்கும் அழைப்பு மிகவும் கௌரவமான மதிப்பாக கருதப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம், ஒக்ஸ்போட் யூனியன் மாணவர் யூனியனிலிருந்து (OUSU) வேறுப்பட்டது. இது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பிரதிநிதித்துவ அமைப்பு ஆகும். (OUSU) இல் 20000 வரையிலான அங்கத்தவர்கள் உள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர்களும் பழைய மாணவர்களும் இணைந்த சங்கமாகும். இது பேச்சுத்திறமைக்கும், விவாதத்துக்கும் பேர் போனது. 1823 இல் அமைக்கப்பட்ட இது, பிரித்தானியாவில் உள்ள இரண்டாவது மிகப்பழைய பல்கலைக்கழக யூனியன் ஆகும். (கேம்றிட்ஜ் இதைவிட பழைமையானது).

ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக தெரிவுசெய்யப்படுவது ஒக்ஸ்- பிறிட்ஜ் வட்டாரங்களில் மகத்தான சாதனையாக கருதப்படுகின்றது. சுவாரஷ்யமான விடயமாக, நான்கு இலங்கையர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண்.

தலைவர்கள்

முதலாவது தலைவராக தெரிவு செய்யப்ட்ட இலங்கையர் றோயல் கல்லூரி பழைய மாணவனான லலித் அத்துலத்முதலியாவார். இவர் 1958 இல் தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக கண்டி திரித்துவ கல்லூரி பழைய மாணவனான லக்ஷ்மன் கதிர்காமர் 1959 இல் தெரிவு செய்யப்பட்டார். 1983 இல் தோமஸ் கல்லூரி மாணவர் ஒருவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஹிலாலி நூர்தீன் என்பவராவார். மூன்று வருடங்களின் பின் 1986 இல் முதலாவது இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டார். அவர் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி பழைய மாணவியான ஜயசுந்தரி வில்சன் ஆவார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இலங்கையரில் ஒருவர் சிங்களவர், இருவர் தமிழர், ஒருவர் முஸ்லிம்.

இலங்கை, ஒக்ஸ்போர்ட் யூனியன் ஆகியவை சம்பந்தப்பட்ட சோகமான நிகழ்வு ஒன்று 1959 இல் இடம்பெற்றது. அப்போது பிரதமராகவிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க செம்டெம்பர் 1959 இல் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர், வண. தலாதுவ சோமராம தேரோவினால் சுடப்பட்டு அடுத்த நாள் மரணமானார். லக்ஷ்மன் கதிர்காமர் அவருக்காக உரையாற்றினார்.

பல பிரபலமான முக்கியஸ்தர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளனர். இவ்வாறு உரையாற்றியவர்களில் அல்பேட் ஐன்ஸ்டீன், வின்சன்ட் சேர்ச்சில், தலாய் லாமா, அன்னை திரேஸா, றிச்சரட் நிக்ஸன், ஜிம்மி காட்டர், றொனால்ட் நீகன், ரொபர்ட் கென்னடி, ஹென்றி கீஸிஞ்சர், ஜோன் மக்கெயின் டேவிட் லாஞ்ச், பர்வேஸ் முஷாரப், ஸ்டீபன் ஹோக்கிங், றிச்சர்ட் டோகின், செரி யூத், ஜெரி அடம்ஸ் ஆகியோர் அடங்குவர்.

இந்த பின்புலத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு போக விரும்பியது இயற்கையானதே. சர்வதேச நியாயாதிக்கம் தனக்கெதிராக பயன்படுத்தப்படும் அபாயம், எந்த நேரத்திலும் அறுந்து தன்மேல் விழலாம் என நூலில் கட்டிய வாள்போல பயப்படுத்தும் நிலையிலும் புலம்பெயர்ந்தோருக்கும், தன்நாட்டு பிரஜைகளுக்கும் ஒரு விடயத்தை நிரூபிக்க விரும்பினார்.

இரண்டாவதாக ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவதால் கிடைக்கும் பேரையும் புகழையும் அவர் விரும்பினார்.

பிரச்சாரம்

ஜனாதிபதி ராஜபக்ஷ நவம்பர் 29 இல் லண்டனுக்கு புறப்பட்டுச்சென்று டிசெம்பர் 2 இல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவார் என அறிந்தபோது, வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்கள் திடுக்குற்றன. அவர்கள் தமது பிரச்சாரத்தை தாமே நம்பி, ராஜபக்ஷ பயத்தினால் இனி வரமாட்டார் என நினைத்திருந்தனர். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் புலிகளின் இன்னுமொரு இயல்பு, விடயங்களுக்கு ஒளிப்பாய்ச்சுவதைவிட சூடு கிளப்புவுதில் கெட்டிக்காரராக இருப்பதாகும். இந்தப்பத்தி பல தடவைகளில் இவர்களை 'வாய்ப்பேச்சு வீரர்கள்' என விமர்சித்துள்ளது. இவர்கள் NATO உறுப்பினர்களாவர். இதன் பொருள் NO ACTION TALK ONLY என்பதாகும்.

சர்வதேச நியாயாதிக்கத்தின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தல் என்பதும் வெறும் புசத்தலின் பாற்பட்டதே. இது தொடர்பில் செயற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன என பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், பிரத்தியட்சமான நடவடிக்கைகள் இல்லையென்றே கூறலாம்.

இப்படியான நடவடிக்கைகள் இரகசியமாக மௌனமாக மேற்கொள்ளப்படும் என்பதே யதார்த்தம். ஆனால், இந்த விடயத்தில் பேச்சு பெரிதாக இருந்ததே ஒழிய, விஷயம் ஏதும் நடக்கவில்லை. சலசலப்பே ஒழிய பலகாரம் இல்லை என்ற கதைதான் இது.

மஹிந்த லண்டன் வருகிறார் என்ற செய்தியை அறிந்ததும் எல்.ரீ.ரீ.ஈ. அமுக்கக் குழுவினர், அதிர்ச்சியடைந்ததனர். தகவல் தரவல்ல தமிழ் மூலமொன்றின் அறிக்கைப்படி ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான நடவடிக்கை எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. மேலும் புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஜனாதிபதியின் லண்டன் விஜயம் உண்மையிலேயே வெளிப்படையான சவாலாக இருந்தது.

இப்படியான சூழலில்தான், எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்கள் குறிப்பாக லண்டனில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். சட்ட நடவடிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காலம் கடந்திருந்தது. ஆனால் வெகுஜன நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான தெரிவுகள் இருக்கவே செய்தன.

ஹீத்ரோ

ஒக்ஸ்போர்ட்டில் ஜனாதிபதிக்கு நடக்கக் கூடியது எது என்பதன் அறிகுறியை ஜனாதிபதி தனி விமானத்தில் லண்டன் வந்தபோது காணக்கூடியதாக இருந்தது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுலோக அட்டைகளை தாங்கிய 300-350 தமிழ் ஆர்வலர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

அப்போது நிலவிய வானிலையில் நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்;கள் விமான நிலையத்தில் கூடியமை சாதனையென்றே கூறலாம். எல்.ரீ.ரீ.ஈ. இன் இலச்சினையாகிய உறுமும் புலியுடன் கூடிய கொடிகள், சுலோக அட்டைகளை அவர்கள் வைத்திருந்தனர். புலிசார்பு ஆட்கள் இது தமிழீழத்தின் தேசிய கொடி - என்றும் புலிக்கொடி அல்லவென்றும் கூறுகின்றனர். ஆனால், இதனால் வரலாறு பற்றிய அறிவில்லாத இளம் தலைமுறையினரை தவிர வேறுயாரையும் ஏமாற்ற முடியாது.

இந்த சத்தமிடும் ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்க்கும் வகையில் அதிவிசேட முக்கியஸ்தர்களுக்கான விசேட வழியூடாக ஜனாதிபதி விரைந்து அழைத்துச்செல்லப்பட்டார். ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 நிமிட பிரபல்யத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பரவலான ஊடகங்களின் கவனமும் கிடைத்தது.

பின்னர், பிரித்தானிய தமிழ் ஆர்வலர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற ஒக்ஸ்போர்ட் விடுத்த அழைப்புக்கு எதிராக பரந்தளவிலான இயக்கத்தை தொடக்கினர்.

எதிர்ப்பு இயக்கம்

மேற்கத்தைய நாடுகளில் இருந்த பல தமிழ் நிறுவனங்கள் நிரலிக்கப்பட்டிருந்த உரைக்கு எதிராக கடுமையான இயக்கத்தில் ஈடுபட்டன. பொதுவாக பிரித்தானிய அரசாங்கத்திற்கும், குறிப்பாக ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கும் முறையீடுகள் செய்யப்பட்டன. ஏராளமான கடிதங்களும், விண்ணப்பங்களும், மின்னஞ்சல்களும், தொலைநகல்களும் ஒக்ஸ்போர்ட்டின் உத்தியோகத்தர்களுக்கு பல தொலைபேசி அழைப்புகளும் இடம்பெற்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது உரையை நிகழ்த்தவிருந்த டிசெம்பர் 2 ஆம் திகதி ஒக்ஸ்போட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒக்ஸ்போட்டில் கூடி அன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டது.

மஹிந்தவுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒக்ஸ்போர்ட் சுவர்களில் ஒட்டுவதற்கான திட்டமும் இருந்தது. தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படவிருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ஷ பேசவிருந்த இடத்துக்குப் போகும் சகல பாதைகளையும் தடுக்க திட்டமிட்டிருந்தனர்.

ஒக்ஸ்போர்ட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து செல்வதற்காக பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் விசேட பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நீதியீனமாக நடத்தியதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட சிங்கள செயற்படுநர்களும் அங்கே வரவிருந்தமை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விசேட அம்சமாக அமையவிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் அல்லாத மனித உரிமை நிறுவனங்களும், ஆர்வலர்களும் பங்குகொள்ள இருந்ததாக அறியப்படுகிறது. 2009 இல் உண்ணாவிரதமிருந்த ரிம் மார்ட்டின் தலைமையிலான “Act Now” என்னும் நிறுவனம் இவற்றுள் ஒன்றாகும்.

பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்தை திட்டமிட்டு இணைப்பு செய்தது. இது உலகத் தமிழ் அரங்கத்தின் (WTF) ஒரு கூறாகும். உலக எல்.ரீ.ரீ.ஈ. இளைஞர் பிரிவு அல்லது (TYO) அல்லது இளைஞர் நிறுவனம் தேவையான மனிதவலுவை வழங்கியது.

ஐரோப்பிய பெரு நிலப்பரப்பிலிருந்தும் பலநூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் ஆங்கில கால்வாயை கடந்து ஒக்ஸ்போர்ட் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

நிலை மாறுதல்

பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான ' சனல் -4;' இராணுவ சிப்பாய்கள் குரூரமாக கைதிகளை கொல்வதாக கூறப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியதன் பின், அரசியல் நிலைமை உணர்ச்சி கொந்தளிக்கும் நிலைமைக்கு போயிற்று.

இணையத்தில் பரவலாக காட்டப்பட்ட வீடியோ காட்சியில் நிர்வாணமாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அருவருப்பான, பயங்கர உருவம் காட்டப்பட்டது. இது வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.யினால்; நடத்தப்பட்ட தொலைக்காட்சியின் அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் படமென கூறப்பட்டது. இவர் ஏற்கெனவே யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

குரூரமாக கொலை செய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. தளபதி ' கேணல்' ரமேஷும் ஒருவர் எனக் குற்றம்சாட்டப்பட்டது. ரமேஷ் முன்பு யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என அரசாங்கம் அறிவித்திருந்தபோதும், ரமேஷ் இராணுவத்திடம்; சரணடைந்தார் என தமிழ் செய்தி வழங்குநர்கள் குற்றம் சாட்டினர். இணையத் தளத்தில் காட்டப்பட்ட இன்னொரு வீடியோ காட்சியில் ரமேஷ், சீருடை அணிந்தவர்களுடன் கெஞ்சிப் பேசும் காட்சி காட்டப்பட்டது. இந்த ரீவி படங்களையிட்டு உண்டான கருத்துமுரண்பாடுகளும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளும் கொந்தளிப்பான நிலைமையை ஏற்படுத்தின. அத்துடன் ஒக்ஸ்போர்ட்டில் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைமீதும் தமிழ் வட்டாரங்களில் கசப்புணர்வை தோற்றுவித்தது. முக்கியமான அந்த நாளன்று ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒக்ஸ்போட்டில் குவிந்து பலத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

ஒக்ஸ்போர்ட்

பிரித்தானியாவின் பிரதான தொலைக்காட்சி ஒன்றிலும் பத்திரிகைகளிலும் மேறகொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விடாப்பிடியான பிரச்சாரம் ஒக்ஸ்போர்ட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது ஒக்ஸ்போர்ட் வட்டாரத்திலும் இந்த நிகழ்வுப்பற்றிய விசேட அக்கறை ஏற்பட்டிருந்தது.

ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் மத்தியில் இரண்டு சிந்தனை பள்ளிகள் காணப்பட்டன. ஒரு பள்ளி, ஜனாதிபதி ராஜபஷ யூனியனில் பேசவிருந்ததை முழுமையாக எதிர்த்தது. இந்த பிரிவினர் ராஜபக்ஷ யுத்தக்குற்றம் இழைத்தவர் எனவும் இவருக்கு யூனியனில் உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்ட கூடாதெனவும் திடமாக நம்பினர்.

இவர்கள், யூனியன் உரையை நடத்துமாயின் ராஜபக்ஷவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் அறிகுறிகளை காட்டினர்.

அடுத்த சிந்தனைப்பள்ளியினர் ராஜபக்ஷவுக்கு அவரது பேச்சுரிமை வழங்கப்படவேண்டும் என கருதினர். இந்த கருத்துடையோர் இவர் யூனியனில் உரையாற்றுவதை விரும்பினர். ஆனால், உரையின் முடிவில் வில்லங்கமான கேள்விகளால் துளைத்தெடுக்கும் திட்டங்களை கொண்டிருந்தனர். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி, பல்கலைக்கழக மாணவர் தோழமையின் அடிப்படையில் அவரை விசாரிக்க திட்டமிட்டனர்.

இதிலிருந்து, 'ஒக்ஸ்போர்ட்' அமைப்புக்குள்ளேயே ஜனாதிபதியின் உரைக்கு கணிசமான எதிர்ப்பு உருவாகியிருந்ததை காண முடிந்தது. தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்பில் ஒக்ஸ்போர்ட்டின் உயர்மட்டத்தில் ஆரவாரமில்லாத மாற்றம் ஒன்று உருவானது.

விரோத மனப்பாங்கு பரவலாக காணப்பட்ட நிலையை பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அமைப்புகள், இந்த உரைப்பற்றி, பாதுகாப்பு தொடர்பில் பேரச்சம் கொண்டனர். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும் சில வீதிகளுடாக வாகனங்கள் செல்வதை தடுப்பதும் ஒரு வழியாக யோசிக்கப்பட்டது. ஆனால் இதை பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை. இவர்கள், மதிப்புமிக்க ஒக்ஸ்போர்ட் சூழலில் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்ததாக தாம் குற்றஞ்சாட்டப்படுவதை விரும்பவில்லை.

எதிர்விளைவுகள்

கடந்த கால அநுபவம் பற்றிய கசப்பான நினைவுகளும் இருந்தன. 2009 இல் யுத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தபோது பிரித்தானிய பொலிஸார் தமிழ் இளைஞர்களின் ' ஆர்ப்பாட்ட முனைப்பை' கண்டிருந்தனர்.

நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய ஊடக பிரசாரம் காரணமாக தமிழ் வட்டாரங்களில் உணர்ச்சிகள் கிளறப்பட்ட நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் மட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் முயற்சிகள், வன்முறைகள் உருவாக காரணமாகலாம் என்ற பயம் இருந்தது.

கருத்திலெடுக்கப்பட்ட இன்னொரு வழி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அவரது பாதுகாப்பு கருதி உரையை நிகழ்த்தாமல் விரும்படி கேட்டுக்கொள்வதாகும்.

அவருக்கு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு இது அரசியல் கௌரவம் பொறுத்தவிடயமாக இருந்தது. அவர் பணிந்து போக விரும்பவில்லை. ஆபத்துக்கு முகங்கொடுக்க பயந்து பணிவது மெதமுலன மஹிந்தவின் இயல்புக்கு மாறானது.

எனவே ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியோடு இருந்தார். ஒரு இலங்கை அதிகாரி இது பற்றி கூறியது ' எதிர்ப்புகள் காணப்படினும் உரையாற்றுவதில் ஜனாதிபதி வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை அவர்கள் பாராட்டினர்' அவர் வில்லங்கமான கேள்விகளுக்கும் முகங்கொடுத்து தனது அபிப்பிராயத்தை கூற தயாராக இருந்தார். எந்த கட்டத்திலும் ஜனாதிபதி இந்த விடயத்தில் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. 'கிறவப்பட்டு' வளவுக்காரன்' துணிந்து போராட தயாராகவே இருந்தார்.

பிரித்தானிய உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கை உத்தியோகத்தர்கள் சிலர் ,எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யுமாறு கோரினர். பேச்சு சுதந்திரத்தை மதிக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லையாதலால் இந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது.

எரிபற்று நிலை

இந்த நிலையில், சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கு, ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதே ஒரேயொரு தெரிவாக காணப்பட்டது. யூனியன் உத்தியோகத்தர்களுக்கு கொந்தளிப்பு நிலைவரம் பற்றி விளக்கப்பட்டது. ஜனாதிபதியின் உரை நிகழ்த்தப்படுமாயின் அது பாரதூரமான வன்செயலுக்கு வழிவகுக்கும் என விளக்கபட்டது. யூனியனே இதற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டது.

ராஜபக்ஷவின் உரையை தடைசெய்யுமாறு மாணவர் சமுதாயத்தின் பெரும்பான்மையோர் வற்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் யூனியன், சங்கடமான நிலையில் தவித்துக்கொண்டிருந்தது. யூனியனுக்குள்ளே நடந்த ஆழமான கருத்தாடல்களின் பின் முற்றுகையிடப்பட்ட நிலையிலிருந்த ஒக்ஸ்போட் யூனியன் உத்தியோகத்தர்கள், ஜனாதிபதியின் உரையை இரத்துச்செய்து கொந்தளிப்பு நிலைவரத்தை தவிர்த்துக்கொள்ள தீர்மானித்தனர். இவ்வகையான விடயங்கள் ஒக்ஸ்போட் யூனியனின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது.

இரத்துசெய்தல்

ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடாமல் அவர் உரையை இரத்து செய்யும் வழமைக்கு மாறான, ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்தது, இரத்து பற்றி டிசெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. 'மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தின் பாதுகாப்பு கொத்தளம்' தனக்கு அதே சுதந்திரத்தை எதேச்சதிகாரமாகவும் திடீரெனவும் மறுக்குமென எதிர்பார்த்திருக்காத ஜனாதிபதிக்கு இது எதிர்பாராத அடியாக இருந்தது.

இருப்பினும் ஒக்ஸ்போர்ட் யூனியனால் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. 1998 இல் தீவிர வலதுசாரி தலைவரான ஜோன் ரின்டல் ஒரு விவாதத்துக்காக அழைக்கப்பட்டிருந்தார். இது மாணவர்களின் ஒரு பிரிவினரால் கடுமையாக எதிர்க்கபட்டது. இவர்களின் எதிர்ப்போடு பொலிஸின் ' ஆலோசனையும்' சேர, விவாதம் இரத்து செய்யப்படுவதில் முடிந்தது.

சர்ச்சைக்குரிய சரித்திர ஆசிரியரும் ஹோலோகோஸ்ட் (ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள்) மறுப்பாளருமான டேவிட் இர்விங் 2000 ஆண்டில் ' தனிக்கை' பற்றிய விவாத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். இதற்கு எதிராக இடதுசாரிகள், பாஸிஸ எதிர்ப்பாளர்களால் யூத சமுதாய ஆர்வலர்களால் ஒன்றிணைந்த எதிர்ப்பியக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இது ஒக்ஸ்போட் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த விவாதம் இறுதியில் இரத்துசெய்யப்பட்டது. ஆனால் 2009 இல் இர்விங் வேறொரு விவாதத்தில் உரையாற்றினார்.

'உதவி வழங்கப்படும் தற்கொலை' என்னும் தலைப்பில் விவாதிப்பதற்காக நன்கு அறியப்பட்ட கருணைக்கொலை பிரச்சாரகர் வைத்தியர் பிலிப் நிட்ஸ்ச் அழைக்கப்பட்டார். இதை நிட்ஸ்ச் ஏற்றுக்கொண்ட பின், வழங்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்று இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டது. வைத்தியர் நிட்ஸ்ச்சுடன் கருத்து வேறுபாடு கொண்ட பலமான அமுக்கக்குழு ஒன்று இந்த அழைப்பை இந்த அழைப்பை வாபஸ்பெற யூனியனை வற்புறுத்தியிருக்க வேண்டும். வைத்தியர் நிட்ஸ் இந்த செயலை மாபெரும் தணிக்கை என கூறி இதற்கு எதிராக பல விரிவுரைகளை நிகழ்த்தினார்.

நவம்பர் 2007 இல் ஹோலோகோஸ்ட் மறுக்கும் வரலாற்றாசிரியர் டேவிட் இரவில் மற்றும் பிரித்தானிய தேசிய கட்சி தலைவர் நிக் கிரிஃபின் ஆகிய இருவரையும் பேச்சு சுதந்திரம் என்னும் விடயத்தில் விவாதிப்பதற்கு ஒக்ஸ்போர்ட் யூனியன் அழைத்தது. பாரிய வீதிமறுப்பு அமர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு பேச்சாளர்கள் விவாதத்திற்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டனர். காடைத்தனம் பரவலாக காணப்பட்டது. இறுதியாக இர்வின், கிரிஃபின் ஆகியோர் இருவேறு அறைகளில் தனித்தனியாக உரையாற்றிய இரண்டு சிறிய விவாதங்கள் இடம்பெற்றன.

எனவே மேற்கத்தைய உலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் இறுதிக் கொத்தளத்தினால் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தரப்பங்கள் பல இருந்ததை காண முடிகிறது. மிரட்டல் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்றமை உண்மையில் கவலை தரும் விடயமே.

விரக்தி

விரக்தி காணப்பட்டபோதும் ஜனாதிபதி கலக்கமடையவில்லை. அவர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குறிப்பிட்ட முறையில் ஒரு அறிக்கையை எழுதும்படி கூறினார். ஜனாதிபதியின் அறிக்கை இவ்வாறு கூறியது: 'பாதுகாப்பு காரணங்களுக்காக கௌரவ ஜனாதிபதி ராஜபக்ஷ, பேச்சு சுதந்திரத்தின் தாயகமான ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான செயற்படுநர்களின் அழுத்தம் என அறியப்படும் காரணத்துக்காக ஒக்ஸ்போட் யூனியனால் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார் என அறியப்படுகிறது: 'இது இரத்து செய்யப்பட்டதையிட்டு நான் கவலையடைகின்றேன். ஆனால், இலங்கைக்கான எனது இலட்சியம் பற்றி பேசக்கூடிய களங்களை ஐக்கிய இராச்சியத்திலும் வேறு இடங்களிலும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். இலங்கையில் வாழ்ந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் சரி எங்கள் நாட்டு மக்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் எனது முயற்சியை தொடர்வேன்.

ஐக்கியப்பட்ட நாடு என்றவகையில் எமக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நாம் பிரிவினைகளை ஆதிக்கம் செலுத்த விடுவோமாயின் எமது முழுஅளவிலான ஆற்றலை வெளிப்படுத்த முடியாது போய்விடும். 30 வருட கால பிரிவினையும் மோதலும் எமக்கு பின்னால் உள்ளது. சகல இலங்கையருக்குமாக நாம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும்'

ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்பட்டதையிட்டு எல்.ரீ.ரீ.ஈ.இன் ஆட்கள் பேருவகை அடைந்தனர். ஈழவாதிகளிடையே வெற்றிக்களிப்பு காணப்பட்டது. இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னும், டோச்செஸ்ரர் ஹோட்டலுக்கு எதிரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

புலி மற்றும் புலி ஆதரவு ஆட்களின் நடத்தை எப்படியிருந்த போதும் ஒருதலைப்பட்சமான இரத்தின் பின்னர் பெருந்தலைவருக்கான (Statesman) கண்ணியத்துடன் ஜனாதிபதி நடந்துகொண்டமையை பாராட்ட வேண்டும்.

சாதாரணமான ஒருவராக இருந்தால் சீறி, சினந்து கொதித்து, கிளர்ந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் ஜனாதிபதி அழுத்தம் காணப்பட்ட நிலையிலும் அமைதியாக இருந்தார். அவரது உடனடி அறிக்கை பெருந்தன்மையானதாகவும் பாராட்டும்படியும் இருந்தது.

இந்த ஒருதலைப்பட்சமான இரத்து ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியாக சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரித்தானிய அதிகார வர்க்கத்தினர் சிலர், தமது சொந்த காரணங்களுக்காக ஜனாதிபதியை அவமதிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களை பயன்படுத்தினார்கள் என்ற சந்தேகத்திற்கும் இடமுண்டு.

புலிகளினதும் புலிஆதரவாளர்களினதும் பொறுப்பில்லாத நடவடிக்கை ஆத்திரமூட்டலுக்கு காரணமாகலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இலங்கை தமிழர்களின் பெரும்பகுதியினர், சிதறடிக்கபட்ட தமது வாழ்வை இலங்கையில் மீளக்கட்டியெழுப்பிக்கொண்டு வாழ்க்கையை கொண்டுபோக முயன்றுக்கொண்டுள்ளனர். இதற்கு புலம்பெயர்ந்தோரின் கூத்தடிப்புகள் எவ்வகையிலும் உதவப்போவதில்லை.

வெற்றிபெருமிதம்

ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரையை இரத்துச்செய்ய வைத்ததை புலம் பெயர்ந்த தமிழர்களின் ஊடக அமைப்புகள் பெருவெற்றியென பெருமையடிக்கின்றனர். இந்த வெற்றிப் பெருமிதம் இலங்கையிலுள்ள சிங்கள கடும்போக்காளர்மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரித்த மனங்களும் பலப்பிரயோகமும் நல்லதற்கல்ல.

புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிகள் மற்றும் புலி ஆதரவாளர்களின் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி இதுதான்: ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதால் இலங்கையில் துன்பத்தில் உழலும் தமிழர்கள் அடைந்த இலாபம் என்ன? விளைவுகளை பற்றி கவலைப்படாமல் இதை வெற்றியென நீங்கள் கொண்டாடுகின்றீர்களா? ஏன் நீங்கள் கொண்டாடுகின்றீர்கள்?.

மஹிந்த ராஜபக்ஷ , இலங்கையில் மக்காளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இவருக்கு காட்டப்படும் மரியாதையின்மை இலங்கை மக்களுக்கு அவர்கள் சிங்களவர்களாக அல்லது தமிழர்களாக அல்லது முஸ்லிம்களாக அல்லது பறங்கியர்களாக இருந்தாலும் அவர்களின் மனதை புண்படுத்துவதாகவே அமையும். இப்படியான சமயங்களில் மக்கள் ஜனாதிபதியுடன் அணித்திரள்வர்.

இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பெருந்தலைவராக கண்ணியவானாக விடுத்த அறிக்கையை இந்தப்பத்தி மீண்டும் பாராட்டுகிறது.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனமையால் அவருக்கு உண்டான மனவுளைச்சலிலும், ஏமாற்றத்திலும் இந்தப் பத்தி பங்கு கொள்கின்றது. இந்த விடயத்தை அற்பமானதாக கருதும்படியும் இலங்கை மாதாவின் சகல பிள்ளைகளும் சமாதானத்துடன் வாழும் பொருளாதார செழிப்புமிக்க நாட்டை கட்டியெழுப்பும் வழியை தொடரும்படியும் இந்த பத்தி கேட்டுக்கொள்கிறது.

நன்றி: தமிழ் மிரர்

(டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

எல்.ரீ.ரீ.ஈ. புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்

டி.பி.எஸ். ஜெயராஜ்

விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நபர் தேசத்தின் நியாயாதிக்க எல்லைக்கு அப்பால் தொழிற்படுவதால், விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் செய்ததாக கூறப்படும் பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் 'INTERPOL சிவப்பு அறிவித்தல்' வழங்க, INTERPOL என அழைக்கப்படும் சர்வதேச குற்றச்செயல் பொலிஸ் அமைப்பின் சேவைகளை, இலங்கை அதிகாரிகள் கேட்டுப் பெற்றுள்ளனர்.

'INTERPOL சிவப்பு அறிவித்தல்' என்பது சர்வதேச பிடியாணை அல்ல. இது சம்பந்தப்பட்ட நபர் தேசிய நியாயாதிக்கத்தினால் அல்லது சர்சவதேச குற்றச்செயல் நியாயசபைகளால் தேடப்படும்போது வழங்கப்படுபவதாகும்.

குற்றமிழைத்ததாக கருதப்படுபவர்களை கைது செய்து அவரின் நாட்டுக்கு ஒப்படைக்கும் நோக்கில் குறித்த நாட்டுப் பொலிஸாருக்கு அவர்களை தேடிப்பிடிக்க உதவுவதே 'இன்ரபோலின்' வேலையாகும்.

சொந்த நாட்டுக்கு ஒப்படைப்பதற்காக, தேடப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் பிடியாணையை உலகம் முழுதும் விநியோகிக்க சிவப்பு அறிவித்தல்கள் அனுமதிக்கும்.

இலங்கை அதிகாரிகளால் முன்வைக்கப்டப்ட ஆவணங்களின்படி, விநாயகம் 46 வயதானவர், நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர் ஆவார.; 1.53 மீற்றர் உயரமானவர், ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளை பேசுவார். இவர் கண், தலைமயிர் ஆகியன கறுப்பு.

விநாயகம் என அழைக்கப்படும் இந்த நபரின் முக்கியத்துவத்தின் காரணமாக, இலங்கை இன்ரபோலினதும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை புதிய எல்.ரீ.ரீ.ஈ தலைவரை கைதுசெய்வதற்கு கோரும் என்பதில் சந்தேகம் இல்லை.

விநாயகம் பற்றிய விபரமான ஆவணத்தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அது உலகளாவிய ரீதியில் பொருத்தமான சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் கொழும்பிலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குழப்பம்

விநாயகம் என அறியப்படும் நபரின் உண்மையான ஆளடையாளம் பற்றி காணப்படும் எந்தவொரு குழப்பத்தையும் அகற்ற விசேட கவனம் எடுக்கப்படும். ஐரோப்பாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. இன் ஒரு பகுதியினர் விநாயகத்தை சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்ட முற்படுவதே இதற்கான காரணம் ஆகும். மருதங்கேணியை சேர்ந்த தங்கவேலு விநாயகம் அல்லது 'மைக்போஃர்' முன்னர் பிரதி கடற்புலி தளபதியாக இருந்தவர். படிநிலை அமைப்பில் சூசை, செழியன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தவர்.

இடது பக்க கண்ணில் குறைபாடு உள்ள விநாயகம் பெபர்வரி 4 ,2009 இல் சண்டையின்போது உயிழந்தார். பிரிகேடியர் பிரசன்ன சில்வாவினால் தலைமை தாங்கப்பட்ட 55 படையணி சாளை கடற்புலி தளத்தை தாக்கியபோது தளத்தை பாதுகாக்கும் போரில் விநாயகம் கொல்லப்பட்டார்.

விநாயகத்தின் உடலம் கிடைக்காவிடினும் கெமுனு வோச் துருப்பினர் அவரது அடையாள அட்டையை கண்டெடுத்தனர். 2009 இன் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் வெளிப்பட்ட சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம், தான் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு வட்டாரங்களுக்கும் கூறிக்கொண்டார்.

ஆயினும் தந்திரோபாய ரீதியில் விநாயகம், இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி விநாயகம் தானேதான் என 2010 இல் நடிக்கத் தொடங்கினார். இவர், எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் தான் ஒரு முக்கிய வேலையின் பொருட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தனது மரணம் பற்றிய அறிக்கைகள் தவறானவை எனவும் கூறினார்.

ஐரோப்பாவிலிருந்த சில எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும், இந்த விநாயகம், உண்மையில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி சிரேஷ்ட தளபதிதான் என்ற தவறான கருத்தை பரப்பத் தொடங்கினார். கடற்புலி தளபதிக்கு கண்ணில் குறைபாடு இருந்தமையால் இந்த பாசாங்குக்காரரும், சில சமயங்களில் ,தனது கண்களை மறைக்க கறுப்புக்ககண்ணாடி அணிந்துக்கொண்டார்.

ஐரோப்பாவில் உள்ள தகவல் தரவல்ல தமிழ் வட்டாரங்கள், எல்.ரீ.ரீ.ஈ. இன் சில பிரிவினருக்கும், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சிலருக்கும் ஐரோப்பாவில் வெளிப்பட்டு;ள்ள விநாயகம், சிரேஷ்ட, கடற்புலி தளபதி அல்ல என்றும் அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளவுத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் என்றும் தெரியுமென கூறுகின்றன.

மாறுவேடம்

இருப்பினும் இவர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த மாறுவேட நாடகத்தை அனுமதித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம் 'புலனாய்வு' விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் பற்றி மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதாகும். இவரை 'உயிர்த்தெழுந்த' விநாயகமாக காட்டுவது இந்த நோக்கத்தை அடைய உதவியுள்ளது.

இறந்தாக அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்படுவது உற்சாகம் இழந்துபோன புலி செயற்பாட்டாளர்களின் உற்சாகத்தை தூண்ட உதவியது இன்னொரு பிரதான காரணமாகும். இது இலங்கை அதிகாரிகளை பொய்யர்களாக காட்டி அவர்களை முகத்தில் கரிபூசும்.

இதைவிட முக்கியமாக, எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என்னும் கட்டுக்கதையை பரப்பவும் உதவும். 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட விநாயகம், ஐரோப்பாவில் உயிருடன் தோன்ற முடியுமாயின் மே 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனும் , பொட்டுவும் உயிரோடு இருந்து சரியான தருணத்தில் வெளிப்பட முடியும் என்பதே இந்த தர்க்கமாகும்.

இந்த காரணங்களுக்கு மேலாக, புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவரை, சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்டுவது இன்னுமொரு நடைமுறை நோக்கத்தை நிறைவு செய்கின்றது. வெளிநாட்டு புலிகள் இலங்கை மீதான கடல்வழி தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் ஆயத்தங்கள் நடப்பதாக கதை பரப்பிவருகின்றனர். இது ஏமாளிகளிடமிருந்து நிதிசேகரிப்பதற்கான ஒரு சோடிப்பு ஆகும்.

ஒப்பீட்டளவில் அதிகம் அறியப்படாத புலனாய்வு தொழிற்படுநருக்கு பதிலாக ஓர் அனுபவம் மிக்க கடற்புலி தளபதி, தன் இராணுவ சாதனைகளால் பிரபலமானவர் இந்த கடல்வழி படையெடுப்புக்கு தலைமை தாங்குகிறார் என்று கூறுவதால் இவ்வாறான கடல்வழி படையெடுப்பு சாத்தியமென நம்பவைப்பது இலகுவாக இருந்தது.

இந்த பின்னணியில்தான் விநாயகம் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும் இது முற்றுமுழுதான மாறுவேடம் அல்ல. ஏனெனில் ஐரோப்பாவில் உள்ள பல முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ.யினர் விநாயகத்தின் உண்மையான ஆளடையாளத்தை அறிந்திருந்தனர். எனவே இவரால் சில பிரிவினரை மட்டுமே கடற்;புலி தளபதி விநாயகம் என பிழையாக நம்பவைக்க முடிந்தது.

விநாயகம் நடிக்கின்றார் என்ற விடயம் வெளிக்கொணரப்பட்டபோது சில புலி சார்ந்த இணையத்தளங்கள் அடைந்த குழப்பம் நகைப்புக்கு உரியதாயிற்று. முன்னரே தமக்கு விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் தெரியும் எனக்காட்டும் அவதியில் இந்த இணையத்தளங்கள் ஆள்மாறாட்டத்தை உறுதியாக அம்பலப்படுத்தும் விவரங்களை வழங்கின.

கடற்புலி விநாயகத்தைவிட, புலனாய்வு பிரிவு விநாயகம் குறைவாக அறியப்பட்டவராக இருந்தாலும், பின்னையவரின் முக்கியத்துவத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ இன் புதிய தலைவர், முன்னர் எல்.ரீ.ரீ.ஈ.யின் நாசகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவருக்கு வருங்காலங்களில் அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனால்தான் இலங்கை அதிகாரிகள் இவரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர் போலும்.

தென்மராட்சி

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர். இவரது குடும்பம் தென்மராட்சி பிரதேசத்தின் வரணியில் இடைக்குறிச்சி என்னும் இடத்தை சேர்ந்தது. இருந்தாலும் இவர், குடும்பம் சாவகச்சேரியில் சில காலம் வாழ்ந்தது.

விநாயகமூர்த்தி 1985 இல் தன் இருபதாவது வயதில் எல்.ரீ.ரீ.ஈ. இல் முறையாக இணைந்தார். இதற்கு முன் மாணவனாக இருந்த காலத்தில் இவர் எல்.ரீ.ரீ.ஈ. உதவியாளாக இருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள, மாசார் மற்றும் புலோப்பளை, கிளாலி பகுதியில் தன் உள்ளுர் பயிற்சியை பெற்றதாக கூறப்படுகின்றது.

விநாயகம் முதலில், புலி வட்டாரத்தில் 'லொஸ் ஏன்ஜெல்ஸ்' என குறிப்பிடப்படும் புலிகளின் தென்மராட்சி பிரிவில் நிலைகொண்டார். அப்போது திலீபன் அல்லது கேடில்ஸ் தென்மராட்சி பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்தார்.

சூசையின் கீழிருந்த வடமராட்சி பிரிவு கலிபோர்ணியா எனவும் ஜொனியின் கீழிலிருந்த வலிகாமம் பிரிவு சிக்காக்கோ எனவும் அழைக்கப்பட்டன. சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு, யாழ்ப்பாண மாவட்ட புலிகிள் மீதான ஒட்டுமொத்த பொறுப்பையும் கொண்டிருந்தார்.

விநாயகத்தின் பிரதேச பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ், கைதடி பவுஸர் குண்டு வெடிப்பில் பெப்ரவரி 14 இல் கொல்லப்பட்டார்.

அதன்பின் சிறிது காலத்துக்கு குஞ்சன், பாக்கியராஜ் ஆகியோரின் கூட்டு பொறுப்பில் தென்மராட்சி விடப்பட்டது. பின்னர் புதிய பொறுப்பாளராக நரேன் நியமிக்கப்பட்டார்.

யூலை 29, 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்த யுத்த நிறுத்த காலத்தில் நரேன் மாற்றப்பட்டு அப்துல்லா நியமிக்கப்பட்டார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகிய சிரேஷ்ட புலித் தலைவர்கள் உட்பட 12 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகள் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து குறுகிய ஓய்வைத் தந்த சமாதானம் சிதறிப்போயிற்று.

பலாலியில் சயனைட் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டவர்களுள் தென்மராட்சியின் புதிய தளபதி அப்துல்லாவும் இருந்தார்.

இந்த நிகழ்வின் பின் இந்திய இராணுவத்திற்கும், எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தினேஷ் என அறியப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. அரசியல் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வன் தென்மராட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர், அதே பிரதேசத்தில் மட்டுவில் என்னும்; இடத்தை சேர்ந்தவர். அதே பிரதேசத்து மந்துவிலை சேர்ந்த பாப்பா அவருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டார்.

கேடில்ஸிலிருந்து தமிழ்செல்வன் வரையிலான இந்த மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ. இன் தென்மராட்சி பிரிவிலேயே வேலை செய்தார். இவர் பாப்பாவின் கீழ் நேரடியாக வேலைசெய்ததாகவும், அம்பன் - குடத்தனை வரணி பகுதிகளில் நிலைக்கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

1990 இல் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறிய பின், எல்.ரீ.ரீ.ஈ. யாழ்ப்பாண குடாநாடு உட்பட வட மாகணத்தின் பெரும்பகுதியின் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ. பெற்றுக்கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ நிறுவனம் முற்றுமுழுதாக புனரமைக்கப்பட்டது.

ஐயன்னா

இந்த புதிய மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி, பொட்டு அம்மான் தலைமையிலான புலி நிறுவன பாதுகாப்பு புலனாய்வு சேவை (TOSIS) என்று அழைக்கப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவில் உள்ளீர்க்கபட்டார்.

இவர் இரண்டாம் லெப்டினென்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டு ஐயன்னா என்னும் இயக்கப்பெயர் சூட்டப்பட்டார். (எல்.ரீ.ரீ.ஈ. இன் சர்வதேச ஆயுத கொள்வனவாளரான பொன்னையா ஆனந்தராஜாவின் இயக்கப் பெயரான அய்யன்னா வேறு.)

விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா 1990-1993 காலப்பகுதியில் நேரடியாக பொட்டு அம்மானின் கீழ் வேலை செய்தார். இவர், தனது அடிமைத்தனமான பக்தி மூலம் பொட்டு அம்மானின் நேயத்துக்குரியவர் ஆனார்.

'ஐயன்னா பொட்டுவின் அலுவலகத்தில் 'பீயோன்' ஆகவும் பொட்டுவின் வீட்டில் அவரது மனைவிக்கு வேலையாளராகவும் இருந்தார்.'' - இது ஐயன்னாவின் முகஸ்துதி பற்றி மேற்கத்தைய நாட்டில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் பரிகாசமாக கூறியது.

1994 இல் விநாயகமூர்த்தி லெப்ரினென்ட் ஆக உயர்த்தப்பட்டு, வவுனியா மாவட்டத்துக்கான புலனாய்வு தலைவராக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டார். 1996 இல் இவரிடம் வட, வடமத்திய மாகாண காடுகளில் உளவு பார்த்தல் அல்லது 'றெக்கி' எடுக்கும் பொறுப்பும், அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஊடுருவி காட்டுப்பாதைகளை உருவாக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

பின்னர், 1997 இல் இவர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு தலைவர் சாள்ஸுடன் இணைந்து தொழிற்படுமாறு அனுப்பப்பட்டார். சாள்ஸ், கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு, அல்லாத பிற மாவட்டவங்களில் நாசவேலைகள், அரசியல்வாதிகளின் கொலைகள் என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்தவர். வவுனியாவும் மட்டக்களப்பும் இப்படியான நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதற்கும் கட்டளை வழங்குவதற்கும் உரிய முக்கிய இடமாக காணப்பட்டன.

மட்டக்களப்பு – அம்பாறைக்கான புலனாய்வு தலைவர் ரமணன், வவுனியா மாவட்ட புலனாய்வு தலைவர் விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா ஆகியோர் தமது அந்தங்களிலிருந்து தேவையான பொருட்களை அனுப்பிவைக்கும் வேலைகளை கவனித்தனர். இந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ. ஆல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகள் பலவற்றின் தயாரிப்பு வேலைகளுக்கு இந்த இருவரும் பொறுப்பாக இருந்தனர்.

இவர், 1990 இல் கப்டனாக பதவி உயர்த்தப்பட்டு புதிய கடமைகள் வழங்கப்பட்டு பெரும்பாக கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்டார். இவர் சாள்ஸுடன் இணைந்து வேலை செய்தார்.

இவர் நீர்கொழும்பில் நிலைகொண்டதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இவர் தனது பெயரை விநாயகம் என சுருக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் விநாயகம் என்றே அழைக்கப்பட்டார். 1985 இல் இவர் எல்.ரீ.ரீ.ஈ. இல் சேர்ந்தபோது இவர் விநாயகம் என்றே அறியப்பட்டிருந்தார்.

இவர் நீர்கொழும்பு- கொழும்பில் பணிப்பொறுப்பிலிருந்த காலத்தில் இவரது பிரதான 'சாதனை'யாக ஜுலை 12, 2001 இல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு அடித்தளம் இட்டமையாக அமைகின்றது. இந்த பொறுப்பு வெற்றிகரமாக சாதிக்கப்பட்டதன் பின், இவர் வன்னிக்கு அழைக்கப்பட்டு மேஜர் பதவி வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்.

புலனாய்வு

ஒஸ்லோ ஆதரவு சமாதான செயற்பாடு பெப்ரவரி 23, 2002 இல் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இக்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ., உலகளவில் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே அதிகளிவில் வேலை செய்வதில் கவனத்தை செலுத்தியது. யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலம் பெயர்ந்தோரிடையே புலிகளின் பிடியை வலுவாக்குவதே திட்டமாக இருந்தது.

இராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற புலி உறுப்பினர்களை, புலிகளின் கிளைகளையும், முகப்பு நிறுவனங்களையும் நிர்வகிக்க பல நாடுகளுக்கும் அனுப்புவதே இந்த உத்தியின் பிரதான கூறாக காணப்பட்டது. போர்க்கள அனுபவம் பெற்ற முழுதாக இயக்கத்தில் ஈடுப்பட்ட புலிகள், புலம் பெயர்ந்தோர் மீது கூடிய கட்டுப்பாட்டை கொண்டிருப்பர் என்றும் ஈவிரக்கமற்ற முறையில் விடயங்களை அச்சொட்டாக முன்னெடுப்பர் எனவும் எல்.ரீ.ரீ.ஈ. உயர்பீடம் கருதியது.

இந்த உத்திக்கு இணைந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவி;ன் பாத்திரம் அமைந்தது. பல புலி புலனாய்வு தொழிற்படுநர்கள் இந்தியாவுக்கும் பல மேற்கத்தைய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் எதையும் காணாதவர் போலிருந்து நடப்பவற்றை நன்கு அவதானித்து அறிக்கை அனுப்பும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள்.

மற்றவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்களின் பிரதான தொழிற்படுநர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதே போன்று எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுனர்களை இந்தக் காலத்தில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தனர். இவர்களில் சிலர் தமது தலைமையகத்துடன் தொடர்பிலிருந்தாலும், ஏனையோர், தேவை ஏற்படும்போது மட்டும் தொழிற்பட பணிக்கப்படும் நோக்கில் அடக்கத்தில் இருந்தவர்கள் ஆவர்.

வன்னிக்கு அப்பால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தொழிற்படுவோர் தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்யும் நோக்கில் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளபிரிவு விசேட அலகு ஒன்றை உருவாக்கியது. இந்த விசேட புலனாய்வு அலகு 'வெளிநாட்டு – உள்நாட்டு புலனாய்வு விவகாரங்கள்' என அழைக்கப்பட்டது.

விநாயகமூர்த்தி 2002 இல் இந்த விசேட அலகின் தலைவராக்கப்பட்டார். இந்த புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டபோது இவரது இயக்கப்பெயர் மீண்டும் மாற்றப்பட்டது. இப்போது அவர் அறிவழகன் என அழைக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் மேஜர் அறிவழகன், போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்கு பயணமாகி சில காலம் அங்கு தங்கி ஆதரவு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இவர், போலி கடவுச்சீட்டுடன், சமாதான பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பியாவுக்கு சென்ற எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவோடு பயணமாகி பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அமைதியான முறையில் புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினார்.

இந்தக் காலத்தில் விநாயகத்தின் செல்வாக்கு வளர்ச்சி கண்டது. இவரது சகோதரரான சக்தி, வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.இனால் உருவாக்கப்பட்ட மரசபை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மர சபைக்கு, கட்டுமான வேலை மற்றும்; விறகு தேவைக்காக மரம் வெட்டுதல் தொடர்பான சகல விடயங்களையும் கட்டுப்படுத்தியது. இச்சபை மரம் வெட்டுவோர், மரவியாபாரிகள் ஆகியோரிடமிருந்து வரி அறவிட்டது. சக்தியின் இந்த நியமனத்துக்கு காரணமாக இருந்தது அவரது சகோதரனின் செல்வாக்கே.

தொடர்பாடல்

நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின் நிலைமை தலைகீழாக மாறியது. பலவீனமான சமாதான செயற்பாடு பூரணமாக செயலிழந்தது. விரைவில் முழுவளவிலான யுத்தம் வெடித்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புகளுக்கும் வன்னியிலிருந்த புலி உயர்பீடத்துக்கும் இடையில் தொடர்பாடல் கடினமாயிற்று. இராணுவம் முன்னேறி வர புலிகள் பின்வாங்கி சென்றமையால் வெளிநாட்டு கிளைகளுடனும், முகப்பு நிறுவனங்களுடனுமான தொடர்பு அறுந்து போயிற்று.

வன்னியில் பெரும் சண்டை நடந்தபோது விநாயகத்தின் பாத்திரம் என்னவாக இருந்து என்பது தெளிவாக தெரியவில்லை. இவர் பொட்டு அம்மானுக்கு நெருக்கமாக இருந்தார் எனவும் தேசிய புலனாய்வு நிறுவன தலைவருக்கு நெருங்கிய உள்வட்டத்தில் பத்துப்பேரில் ஒருவராக இருந்தார் எனவும் தெரிகிறது.

ஜனவரி 2, 2009 இல் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை எல்.ரீ.ரீ.ஈ வட்டாரத்தில் பெரும் பதகளிப்புக்கு காரணமாகிற்று. எல்.ரீ.ரீ.ஈ. அச்சுறுத்திக் கொண்டிருந்த தோல்வியை தாமதிக்கும் வகையில் விளைவைப்பற்றி சிந்தியாது, அந்தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதில் ஒன்றாக , கரும்புலி தற்கொலை அணியொன்றை, தெற்கில் வன்முறை தாக்குதல்களையும் அழிவுச்செயல்களையும் மேற்கொள்வதற்காக அனுப்பியமை இருந்தது.

இந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விநாயகம்தான். அவர் இப்போது லெப்.கேணலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் விநாயகமூர்த்தி நேரடியாக தற்கொலை தாக்குதலில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை.

அவர் இந்த தற்கொலைத் தாக்குதல்களை திட்டமிட்டு, இணைப்பு செய்து, மேற்பார்வையும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஜனவரி 2009 இல் எல்.ரீ.ரீ.ஈ. இனால், விநாயகம் தலைமையில் அனுப்பப்பட்ட 15-20 வரையிலான கரும்புலிகள், வவுனியா – அனுராதபுரம் பிரதேசத்திலிருந்த காட்டுப்பாதைகள் ஊடாக வடமத்திய மாகாணத்தினுள் நுழைய முயன்றபோது பேரிடரில் சிக்கினார். ரோந்து சென்ற படையினருடனான சண்டையில் இந்த அணியின் அரைபங்கினராவது கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

தப்பிப்பிழைத்த ஒரு சிலரில் விநாயகமும் ஒருவர். இந்த அணியின் வேறு சில அங்கத்தவர்களும் பின்னர் வந்து சேர்ந்தனர். விநாயகம் எஞ்சியோருடன் தெற்குக்கு சென்றார். எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைபீடம் பெரும் அழிவுச் செய்தியை எதிர்பார்த்திருந்தாலும் அப்படி ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்த மாதிரி விநாயகத்தால் சாதிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கை புஷ்வாணமாயிற்று.

இந்த நடவடிக்கையின் தோல்வி விநாயகத்திற்கு இன்னொரு வகையில் நன்மை ஆயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. நிலைகளை இராணுவம் கைப்பற்றி வந்த நிலயில் விநாயகம் வன்னிக்கு வெளியே தொடர்ந்து இருக்க முடிந்தது. தெற்கில் பாரிய தாக்குதலை மேற்கொள்ள தான் முயன்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தமையால் எதுவும் செய்யமுடியாது இருந்தது என்ற சாட்டு அவருக்கு இருந்தது.

இந்தத் தோல்வி, எல்.ரீ.ரீ.ஈ.இன் உயர்பீடத்தின் நலனுக்கு பாதகமாக இருந்தாலும் விநாயகத்திற்கு நன்மையாயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று உதவி அரசாங்க பிரிவில் முற்றுகைக்கு உள்ளான நிலையில் இறுதிப்போரில் ஈடுபட்டிருந்த போது அவர் ஒப்பீட்டு ரீதியில் வன்னிக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தார். இதனால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின்போது ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. சிரேஷ்;ட தலைவர்கள் போன்று விநாயகம் இறந்துபோகவில்லை. எல்.ரீ.ரீ.ஈ. இன் தோல்விக்கு முன்னரே இவர் இந்தியாவுக்கு போய்விட்டார்.

அறிவழகன்

இந்தியாவுக்கு சென்றவுடன் விநாயகம் மீண்டும் அறிவழகன் என்னும் பெயரை சூடிக்கொண்டார். கதிர்காமத்தம்பி என்பதையும் இதனோடு சேர்த்து ஒரு மரியாதையான தோற்றப்பாட்டை தன்பெயருக்கு ஏற்படுத்திக்கொண்டார். தன் வசமிருந்த நிதிவளத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தி வன்னிக்கு வெளியே பல்வேறு இடங்களில் விடப்பட்டிருந்த பல்வேறு எல்.ரீ.ரீ.ஈ. உளவுப்படையினரின் மீட்புக்கு ஒழுங்கு செய்தார். இவர்களில் பலர் விமானம் மூலம் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கிழக்குக் கரையிலிருந்து ஒரு சில படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பிரபாகரன் இறந்துவிட்டதாக செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. அறிவித்தபோது கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் இயங்கிய விநாயகம் செய்திகளில் இடம்பிடித்தார். அறிவழகன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை மறுத்தார். பின்னர் பிரபாகரன் உண்மையில் இறந்துவிட்டார்தான் என இன்னொரு அறிக்கையை வெளிவிட்டார். முதல் அறிக்கையை விட்டார் முதல் அறிக்கைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

விநாயகம் அல்லது அறிவழகனின் அறிவுறுத்தலின் பேரில் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர்கள் நெருங்கிய உறவை கொண்ட ஒரு அலகில் இணைக்கபட்டனர். அறிவழகன், எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு புலனாய்வுக்கு பொறுப்பாக இருந்தமையாலும் அநேகமான தொழிற்படுநர்களை தனிப்பட்ட முறையிலும் அறிந்திருந்தமையாலும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவது கடினமாக இருக்கவில்லை.

அறிவழகனின் கீழிருந்த புலி புலனாய்வு பிரிவின் பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக தலைமைத்துவம் பற்றிய நெருக்கடியை தீர்ப்பது இருந்தது.

உயிருடன், சுதந்திரமாக காணப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி, எல்.ரீ.ரீ.ஈ. இன் அதி சிரேஷ்ட தலைவராக பொறுப்பேற்றிருந்தர். எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்த பேரின்பநாயகம் அல்லது நெடியவன் இதை எதிர்த்தார். வெளிநாடுகளிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ. பிரிவு அங்கத்தவர்கள், எல்.ரீ.ரீ.ஈ. க்கு தலைமை தாங்க கூடுதலான தகைமையுடையவர் யார் என்பது பற்றி ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ . விசுவாசிகளிடையே நடத்தினர். பேட்டி காணப்பட்டவர்களில் பலர் கேபியை விரும்பினர்.

இதனடிப்படையில் கதிர்காமத்தம்பி அறிவழகனால் தலைமைத்தாங்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவு கே.பி.யுடன் சேர்த்துகொள்ள தீர்மானித்தது. இது நெடியவனுடனான பேச்சுவார்த்தையில் கே.பியின் கையை ஓங்கச் செய்தது. இதனால் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைச் செயலராக கே.பி. தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்திய அதிகாரிகள் ஒரு சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர் இந்திய மண்ணிலிருந்து செயற்படுவதாக சந்தேகிக்க தொடங்கினார். சுருக்கு இருகத் தொடங்கியது. ஆனால் சுருக்கு இறுகியபோது விநாயகம், இந்தியாவைவிட்டு ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டுக்கு போயிருந்தார். அவர் அங்கிருந்து ,தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டனுக்கு சென்றார். இது நடந்தது ஒக்டோபர் அல்லது நவம்பர் 2009 இல் ஆகும்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் சிறிதுகாலம் ஓய்விலிருந்த பின் விநாயகம் கண்டப் பெருநிலப்பரப்புக்கு சென்றார். இவர் ஒரு தாராளவாத ஐரோப்பிய நாடு ஒன்றில், போலி ஆளடையாளத்துடன் அரசியல் அடைக்கலம் கோரியதாகவும் பின்னர் சிறிது காலத்தின் பின் வேறு நாட்டுக்கு சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விநாயகம், புலம்பெயர்ந்த முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு போய்க் கொண்டிருந்தார்.

கே.பி. மலேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பல மாற்றங்கள் விரைந்து ஏற்பட்டன. இந்த நிகழ்வுடன் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. யினரிடையே நெடியவனின் ஆதிக்கம் அதிகரித்தது.

முன்னர் கே.பி.யை ஆதரித்த விநாயகமும் மாறத் தொடங்கினார். ஆவர் நெடியவனுடன் சமாதானமாக தொடங்கி 'உயரமான' மனிதனுடன் ஒரு தந்திரோபாய கூட்டில் சேர்ந்து கொண்டார்.

நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் அதிகாரப்பிரிப்பு வரம்புகள் தெளிவான வரையறைகளை கொண்டதாக தெரிகிறது.

விநாயகம் பல்வேறு புலனாயவ்வு தொழிற்படுநர்களையும் நெருக்கமான அலகொன்றில் இணைத்து அதன் முற்றுமுழுதான பொறுப்பையும் ஏற்றுள்ளார். புலிகளின் புலனாய்வு பிரிவில் நெடியவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. புலனாய்வு பிரிவு ,தனி அமைப்பாக வெளிப்படையாக இயங்குவதில்லை. ஆனால் அதன் அங்கத்தவர்கள், கண்ணில்படாமல் பல்வேறு புலி அமைப்புகளில் வேலை செய்கின்றனர்.

அதேபோல நெடிவன் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்கள் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ளார். விநாயகம் இந்த அமைப்புகளின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஏதாவது ஒரு கிளை அல்லது முகப்பு நிறுவனம் ஒரு காரியத்தை செய்யவேண்டுமென விரும்பினால் அவர் நெடியவனின் தயவையே நாடவேண்டும்.

மூன்று பேர்

மூன்று பேர் விநாயகத்துக்கும் நெடிவயனுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் அரவிந்தன் அல்லது இரும்பொறை. மற்ற இருவரும் நந்தகோபன், அன்புச்செல்வன் ஆவர். இரும்பொறை, எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஒரு முக்கிய தொழிற்படுநர் என கூறப்படுகிறது. இவர் 2008 இல் பின்பகுதியில் கொள்வனவுக்காக லாவோஸுக்கு அனுப்பப்ட்டார். 2009 இல் சண்டை முடிந்தபோது இரும்பொறை ஐரோப்பாவில் நிலைகொண்டார்.

அன்புச்செல்வன், யுத்தத்த நிருந்த காலத்தில் நோர்வேக்கு அனுப்பப்பட்டார். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட இளைய தலைமுறையினால் மேற்கொள்ளப்பட்ட அநேகமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தமிழ் வாலிபர் நிறுவனத்தின் (ரி.வை.ஓ.) பொறுப்பாளராக இவர் இருந்தார்.

நந்தகோபன் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவின் நெருங்கிய சகாவாக உள்ளார். இவர் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமகன் போல இராணுவத்திடம் சரணடைந்தார்.

இவர் அரசாங்கத்துடன் வேலைசெய்யும் ஓர் அரசியல் கட்சிக்கு இலஞ்சம் கொடுத்து அகதி முகாமிலிருந்து வெளியேறினர். இந்த கட்சி நந்தகோபனை கொழும்புக்கு கொண்டுவந்தது. பின் பொய்யான பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்து இவரை தாயலாந்துக்கு அனுப்பியது. கொடுக்கப்பட்ட இலஞ்சம் மில்லியன்கள் கணக்கில் இருந்திருக்கும் எனப்படுகிறது.

இரும்பொறை, அன்புச்செல்வன், நந்தகோபன், ஆகிய மூவரும், நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் இணைப்பு செய்கின்றனர். இவர்கள் இருவரையும் நெருக்கமாகச் செய்து ஒரு தந்திரோபாய கூட்டை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தனர்.

நெடியவன்

நெடியவனைப் பொறுத்தவரையில் எல்.ரீ.ரீ.ஈ. இன் வெளிநாட்டு அமைப்புகள் மீது தனது கட்டுப்பாட்டை தொடர்வதிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு உரித்தான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை சேதமின்றி பேணுவதிலுமே அவரது அக்கறை உள்ளது. அவரது தொழிற்படுநருக்கு 'சம்பளம்' என்ற பெயரில் பெரும் பணம் கொடுக்கப்படுவதால், அவருக்கு தொடர்ச்சியான நிதிசேகரிப்பை உறுதி செய்யவேண்டியுள்ளது.

நெடியவன் பணம் மீதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்ட வீண்பெருமை பேசும் நபர் என்பதை அவரது கடந்தகால செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுக்கதையை இவர் பரப்பிக்கொண்டிருந்தாலும் தலைவரையும் குடும்பத்தினரையும் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி மீட்கும் முயற்சிக்கு தேவையான 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை கேபிக்கு கொடுக்க மறுத்தவரும் இவரே.

தனது இலட்சியம் எனக் கூறிக்கொள்ளும் எதற்காகவும் ஆபத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளவராக நெடியவன் காணப்படவில்லை. இவர் ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்களிடையே காணப்படும் ஆஷாடபூதிகளின் குறியீடாக உள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ. இன் இலட்சியத்தின் மீதான பற்று உறுதியானதாகவும் நேர்மையானதாகவும் உள்ளதென்ற வகையில், விநாயகம், நெடியவனிலிருந்து வேறுபடுகிறார். அவர் தன்செயற்பாட்டில் பற்றும் உறுதியும் உடையவராக தென்படுகிறார். இலங்கையிலிருந்து தப்பி வந்தப்பின் அவரது நடத்தையில ஒழுங்குமுறை, அர்ப்பணிப்பு என்பவற்றுக்கான சான்றுகள் தெரிகின்றன.

விநாயகம்

விநாயகம், புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுள்ளார். சிலரை நேரிலும் சந்திக்கின்றார். 'எல்லாம் முடிந்து போகவில்லை, கெதியாய் ஏதோ நடக்கப்போகுது' என்று சொல்லி அவர்களிடம் மீண்டும் உற்சாகத்தை உருவாக்க முனைகிறார்.

சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இவர் தன்னை 'கேணல்' என அறிமுகம் செய்வதே. ஆனால் இவர் இயக்கத்தினால் 'கேணல்' அந்தஸ்து வழங்கப்பட்டவரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

விநாயகம், ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் பல நாடுகளிடையே சுதந்திரமாக பயணம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியபோது விநாயகம் தனது பயணங்களை மட்டுப்படுத்திக்கொண்டார்.

ஐரோப்பாவில் உள்ள புலிகள், விநாயகம் கனடாவுக்கு சென்றுவிட்டார் என கதை பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. சிலர், விநாயகம் தற்போது ஸ்கண்டிநேவிய நாடொன்றில் இருப்பதாக கூறிவரினும் அவர் ஐரோப்பாவில்தான் தொடர்ந்தும் இருக்கின்றார்.

நீண்ட காலத்தில் நோக்கும்போது பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற கட்டுக்கதையால் இடம்பெயர்ந்தோரிடையே புலிகளை பலமாக நிலைநிறுத்த முடியாது. 12000 போராளிகள் இரகசியமான ஓர் இடத்தில் பயிற்றப்படுகின்றனர், விரைவில் கடல்வழி படையெடுப்பு நடக்கும் என்ற பொய்களிலும் தங்கியிருக்க முடியாது.

வன்முறை

புலிகளின் எச்சசொச்சங்களுக்கு புலம்பெயர்ந்தோரிடையே தம்மை நிலைநிறுத்திகொள்ள தேவையாக இருப்பது இலங்கையில் பாரிய வன்முறை சம்பவம் ஒன்றை அரங்கேற்றுவதே. இது நடந்தால், வெளிநாட்டில் உள்ள தமது ஆட்களுடன் வரிந்துக்கட்டிக் கொண்டு பெரும் நிதிசேகரிப்பு இயக்கத்தை தொடக்க முடியும். கரடியானாறு வெடிப்பு நடந்தபோது புலிகள் வட்டாரத்தின் சந்தோஷப்பரபரப்பைக் காண வேடிக்கையாக இருந்தது.

இப்படியிருக்கும்போது விநாயகம் இலங்கையில் ஒரு 'நிகழ்வை' நடத்தமுடியும். பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலை என்பவற்றை பார்க்கும்போது எந்தவொரு பெரிய தாக்குதலும் எவ்வகையிலும் சாத்தியமற்றது.

ஒரு அரசியல்வாதியின் கொலை அல்லது குண்டுவெடிப்பு போன்ற ஒப்பீட்டளவில் சிறிதான ஒரு நிகழ்ச்சி சாத்தியமாகலாம்.

கருதுகோள் ரீதியாக, வெளிநாட்டு புலிகளால் அவர்கள் வசமுள்ள பணத்தின் வலுவால், இலங்கையில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்து ஒரு கைக்குண்டொன்றை வீசவைக்கவோ அல்லது குண்டொன்றை வெடிக்கவைக்க முடியும். நன்கறியப்பட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்படலாம்.

இவர்களின் பணபலத்துடன், வெளிநாட்டு புலிகள் வறுமைப்பட்ட முன்னாள் புலிபோராளியை அல்லது எல்லைப்படையை சேர்ந்த ஒருவரை இவ்வாறான வன்முறைக்கு பயன்படுத்தலாம். கருதுகோள் ரிதீயாக முன்னாள் படைவீரரை அல்லது ஊர்காவற் படையை சேர்ந்த ஒருவரை கூட பயன்படுத்துவது சாத்தியமே பாதாள உலக கோஷ்டியில் ஒருவரையும் பயன்படுத்தலாம்.

எல்.ரீ.ரீ.ஈ.க்கு தேவையானது ஒரு கைக்குண்டு, ஒரு குண்டு அல்லது ஒரு துப்பாக்கி மட்டுமே.

ஆற்றல்

இப்படியான நிலைவரத்தில், விநாயகமே தனது சாதனை, அநுபவம் என்பவற்றின் காரணமாக கொழும்பிலே அல்லது இலங்கையின் வேறு பாகத்திலோ தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடியவராவார்.

விநாயகம் சாள்ஸுடன் சேர்ந்து தென்பகுதியில் பல வன்முறை செயல்களை திட்டமிட்டு செயற்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். விநாயகம் தற்போதும், வன்செயலில் ஈடுப்படுத்துவதற்கு ஒருவரை அல்லது ஒரு சிலரை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை கொண்டிருக்கலாம் என கருதுவது தர்க்க ரீதியானதே.

நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையிலான தந்திரோபாய கூட்டு ஒருவருக்கொருவர் தேவையானவர் என்ற அடிப்படையிலே உருவானது. வெளிநாட்டு புலி அமைப்புகளை, உற்சாகப்படுத்தவும், நிதிசேகரிப்பை அதிகரிக்கவும் நெடியவனுக்கும் விநாயகம் தேவை. அதைவிடவும் முக்கியமாக விநாயகத்தால் மட்டும்தான் வன்செயல்களை இலங்கையில் ஏற்பாடு செய்யமுடியும் என்பதை நெடியவன் அறிவார்.

விநாயகத்தை பொறுத்தளவில், தனது புலனாய்வு பிரிவை இயக்குவதற்கு நெடியவனின் வசமுள்ள நிதிவளம் அவருக்கு தேவையாகும். அவருக்கு தான் எண்ணியுள்ள 'செயற்றிட்டத்தை' நடைமுறைக்கு கொண்டுவர நிதி தேவை.

இதைவிட முக்கியமாக, தான் நெடியவனை புறம்பு காட்டினால் தன்னால் வினைத்திறனுடன் இயங்க முடியாது என்பதை விநாயகம் அறிவார். கேபியின் நன்னோக்க முயற்சிகளை நெடியவன் எவ்வாறு குழப்பினார் என்பது விநாயகத்துக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.

இவைதான் கூடிய சிரேஷ்டரான விநாயகம், தனது கனிஸ்டரான நெடியவனின் வழியில் செல்லவும், தந்திரோபாய கூட்டில் சேரவும் வைத்த காரணங்களாகும்.

நெடியவன் இப்போதைக்கு எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைப் பொறுப்பை விநாயகத்துக்கு கொடுப்பதில் திருப்தியோடு உள்ளார். விநாயகம் தற்போது எல்.ரீ.ரீ.ஈ. பின்னணியோடு உள்ளவர்களை அணுகுவதிலும், அவர்களை, தன்னால் உருவாக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. மத்திய குழுவில் சேர்க்கவும் அழைத்துவருகிறார். விநாயகத்திக் முயற்சிகள் எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவப்பு அறிவித்தல்

கொழும்பு, விநாயகத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை. ஆகக் குறைந்த அளவில் பிரச்சினைக்குரியவராகவும் ஆகக் கூடியளவில் தொல்லை தருபவராகவும் இருப்பதற்கான வளங்களை எல்.ரீ.ரீ.ஈ. இன் புதிய தலைவர் விநாயகம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு உயர்பீடங்களில் உள்ளோர் கருதுகின்றனர்.

இதனால்தான் 'இன்ரபோல்' சிவப்பு அறிவித்தலை விடுப்பதற்கான விரைவான ஏற்பாடுகள் நடந்தன. இதன்பின், விநாயகம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து கைதுசெய்து இயலுமாயின் இலங்கைக்கு கொண்டுவரவும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களில் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.

எல்.ரீ.ரீ.ஈ. இன் நிறுவுனர் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், மே, 2009 இல் நந்திக்கடல் கடனீரேரியின் கரையில் கொல்லப்பட்டார். அவரின் பின் தலைமையை ஏற்ற செல்வராசா பத்மநாதன் அல்லது கேபி கைதுசெய்யப்பட்டு ஓகஸ்ட் 2009 இல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இவரது புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றுள்ளார்.

சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது 'கேணல்' விநாயகமூர்த்தியின் விதி என்னவாகும்? ~ நன்றி: தமிழ் மிரர் ~

(டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா?

டி.பி.எஸ். ஜெயராஜ்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கிலிமைந்த கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தொடராக நடந்த யுத்தத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 இல் திட்டவட்டமாக நிர்மூலமாக்கப்பட்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சிரேஷ்ட பிரதித்தலைவர்கள், தளபதிகள், ஆகியோருடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இத்தோடு பெருமளவிலான பொதுமக்களும் பலியாகினர்.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளிடம் சரணடடைந்தனர். இவர்கள் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் சில ஆயிரம்பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவர். ஆயிரம் வரையிலான வைரித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மே 29 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பிரதான விளைவு சண்டை முடிவுக்கு வந்துள்ளமையாகும். புலிகளின் பாணியிலான வன்முறைகள் இலங்கையில் அற்றுப்போயுள்ளமை விசேட கவனத்துக்குரியதாகும்.

கடந்த 18 மாதங்களாக இலங்கையின் எந்தப் பக்கத்திலும் எல்.ரீ.ரீ.ஈ. செய்வித்த வன்முறை இடம்பெறவில்லை. புலிகளின் வன்முறை காணப்படாமை, மற்றும் யுத்தத்தின் வடுக்கள், புண்களை ஆற்ற மேற்கொள்ளப்படும் நத்தைவேக நடவடிக்கைகளையிட்டு நாட்டு மக்கள் ஆறுதல் பெருமூச்சு விடும் இவ்வேளையில், தற்போதுள்ள அமைதி நிரந்தரமானதா அல்லது இடைவேளை மட்டும்தானா என்ற கேள்வி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

இன்னும் சிறிது காலத்தில் புலிகளின் மீள் வருகையினால் வன்முறைகள் மீண்டும் தொடங்கக் கூடும் என்ற பயமும், விளக்கமும் இந்த கேள்வியின் ஆதார சுருதியாக உள்ளன.

பொதுவாக நாட்டிலும், குறிப்பாக தமிழர் வாழும் பிரதேசங்களிலும் காணப்படுகின்ற, மெதுவாக, ஆனால், தொடர்ந்து வரும் வழமை நிலை நோக்கிய நகர்வை எல்.ரீ.ரீ.ஈ. வன்முறையின் மீட்சி குழப்பிவிடக் கூடும் என்பது கவலையளிப்பதாக உள்ளது. நிலையான சமாதானம், உண்மையான இணக்கப்பாடு நோக்கிய மட்டுப்படுத்திய முன்னேற்றம் பின்னடைவைக் காணும்.

இப்படி நடக்குமிடத்து இதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பயப்பட வேண்டியதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தசாப்தங்களாக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களை அடித்து நொறுக்கி உருக்குலையாகச் செய்துள்ளது. இவர்கள் சாம்பலிலிருந்தும் தூசியிலிருந்தும் எழுந்து தம்மைத் தாதே மீட்க படும் பாடு பரிதாபகரமானது.

எல்.ரீ.ரீ.ஈ. இனால் முன்னெடுக்கப்படும் அரசியல் வன்முறை மீண்டும் தொடங்குவது நிலைமையை மோசமடைய செய்யலாம். இலங்கை அரசாங்கம் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மீண்டும் இரும்புக்கர ஆட்சிக்கு திரும்பும். வழமைக்கும் திரும்பும் செயற்பாடு பின்னடைவதற்கு, அப்பால், அரசு வடக்கு கிழக்கின் தற்போதைய சனத்தொகையமைப்பை மாற்றும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இருப்பினும் அடிநிலை யதார்த்தம், புலிகளின் மீள்வருகைக்கு எதிராகவே காணப்படுகிறது. வடக்கு, கிழக்கில், பாதுகாப்பு இயந்திரம் சேதாரமின்றி காணப்படுவதும், அந்தப் பகுதிகளில் ஆயுதப்படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்களவுக்கு திருந்தியிருப்பதாலும் புலிகளின் மீள்வருகைக்கான வாய்ப்பு மிக சொற்பமே.

அத்துடன் மக்களின் விருப்புத் தெரிவுகள், வன்முறையை மீண்டும் தொடங்குவதாக அல்லாமல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுதல், என்பனவாகவே உள்ளன. தம்மை அழிவுக்கு இட்டுச்சென்ற ஆயுத போராட்ட தசாப்தங்களுக்குப் பின்பு பலவீனப்பட்டுப்போன தமிழ் மக்கள், சில பொறுப்பற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆவேசப் பேச்சுகளின் மத்தியிலும் வன்முறையை ஏற்கும் மனநிலையில் இல்லை.

புலம்பெயர்ந்தோர் பாத்திரம்

இருப்பினும் புலம்பெயர்ந்தோரின் பாத்திரம் கவலை தருவதாக உள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் மரண அடி வாங்கினாலும் அதன் வெளிநாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. அதன்கிளைகள், முன்னணிகள், தொழில்கள், ஊடக அமைப்புகள் வழமை போல இயங்கின. தமக்குள் சச்சரவுகள் காணப்படினும், புலிகளும் புலிகளுக்கும் சார்பான புலம் பெயர்ந்தோரும் தமிழ் ஈழ இலட்சியத்தை ஆதரிப்பதோடு இயன்ற போதெல்லாம் புலிக்கொடியை பறக்க விடுகின்றனர்.

ஏமாற்றும் முயற்சியாக, புலிக்கொடி எல்.ரீ.ரீ.ஈ யின் கொடியல்ல, அது தமிழ் ஈழத்தின் கொடி என கூறப்படுகின்றது. வெளிநாட்டிலுள்ள பிரதான ஊடகங்களுக்கும், தமிழ் பேசாத தமிழ் இளைஞர் தலைமுறைகளுக்கும், உறுமும் புலி, தமிழ் தேசியக்கொடி என பிழையாகக் கூறப்படுகின்றது.

எல்.ரீ.ரீ.ஈ. யும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சக்திகளும் 2009 இல் புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியின் பின் கணிசமான வலுவையும் செல்வாக்கையும் இழந்துள்ளனர். உட்பூசல்களும், குழுக்களாகப் பிரிந்தமையும் இயக்கத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கண்ணிற்படும் உதாரணமாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம மந்திரி என தனக்குத் தானே பெயர் சூட்டிய விசுவநாதன் ருத்ரகுமாரன் மீது, ஒரு காலத்தில் புலி ஊடகங்களின் தலைமைக் காப்பாளராக இருந்த 'தமிழ்நெற்' வெட்ட வெளிச்சமாக காட்டி வரும் கசப்புணர்வைக் கூறலாம்.

ஆயிரக்கணக்கான கொடிபிடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒரு குறுகியகால அறிவித்தலில் அணித்திரட்ட இப்போது எல்.ரீ.ரீ.ஈ யால் முடியாது. அந்தக் காலம் போய்விட்டது. பெரும் எண்ணிக்கையிலான எல்.ரீ.ரீ.ஈ. ஊடகங்கள் இப்போது இயங்குவதில்லை.

நிதி சேகரிப்பு முற்றாக நின்றுவிடவில்லை. ஆனால், நிச்சயமாக குறைந்து விட்டது. எல்.ரீ.ரீ.ஈ யிற்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை, வர்த்தக முயற்சிகளை வைத்திருப்பது அல்லது முகாமைத்துவம் செய்த பல 'பினாமிகள்' அவற்றை தமது சொந்த தேவைக்குப் பயன்படுத்த அல்லது விற்றுக்கொண்டு பணத்துடன் ஓடத் தொடங்கிவிட்டனர்.

உயர்கல்வித் தகைமை அல்லது வாண்மைத் தகைமையுடன் கூடிய, 'படித்த' எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களின் இரவோடிரவான மாற்றமும் நகைப்புக்குரியதாக உள்ளது. மாற்றுக் கருத்துடையோரை கொலை செய்தல் உட்பட புலிகளின் ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்திய இவர்கள்; இப்போது மனித உரிமைகளின் பாதுகாவலர்களாகிவிட்டனர். இவர்கள் வெட்கமில்லாமல், சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற புகழ்பெற்ற மனித உரிமை நிறுவனங்களுடன், இணைந்துக்கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர்.

இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ இன் மறைவுக்குப் பின்னர். வெளிநாடுகளில் தோற்றம் பெற்றுள்ள இன்னொரு வகைப் புலி 'இணையப் போராளிகள்' ஆவர். பலவகையான இணையம் தளங்களும், ஈமெயில் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணையத்தளங்கள், இலங்கையில் காணப்படும் நிலைமை பற்றி கட்டுக்கதைகளையும் பச்சைப் பொய்களையும் தான் அநேகமாக வெளியிடுகின்றன. ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்;ச்சி, புலிகளின் மீள்வருகை, என்பவற்றையிட்டு நம்பிக்கை கொண்டு அவைக்காக ஏங்கிக்கொண்டு ஈமெயில் போராளிகள் தமக்குள்ளே ஆவேசமான நீண்ட கடிதங்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

இவர்களது வேடிக்கை விளையாட்டுக்கள் போலவே புலிகளின் மீள்வருகை, வன்முறைகள் மீண்டும் தொடங்குதல் என்பவற்றை மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகள் இலேசான விடயனெக் கருதி உதாசீனம் செய்யாமல், புலம் பெயர்ந்தவர்களின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஏதோவொரு விடயம் இருக்கக் கூடும் எனக் கவலைப் படுவதுடன் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் வன்முறையை தொடங்கக் கூடும் எனவும் கவலைப்படுகின்றன.

மீண்டும் தொடங்குதல்

இந்த மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகள் புலி வன்முறைகள் மீண்டும் தொடங்குவதால் எந்த ஒரு பெறுமதியான நோக்கமும் நிறைவேறபோவதில்லை என்றும் அவை இலங்கை அரசால் ஈவிரக்கமின்றி நசுக்கப்படும் என்றும் கருதுகின்றன. இருந்தாலும் அவ்வாறான வன்முறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை. இவ்வாறான வீண்முயற்சிகள் வழமை நிலைக்கு திரும்பும் தொடர்செயற்பாட்டின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம்பற்றிய கவலையும் அவர்களுக்கு இருக்கிறது.

மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகளின் புலிகளின் மீள்வருகைப் பற்றிய கவலையை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கொண்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று சில வாரங்களுக்கு முன் இலங்கை அதிகாரிகளுடன் பேசுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தது. இங்கு பேசப்பட்ட முக்கிய விடயமாக எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் அணித்திரளுதலும், வன்முறை வெடித்தலும் இருந்தன.

இந்திய தூதுக்குழுவினர், கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனுடனும் கொழும்பில் நீண்ட நேரம் பேசினர். முன்னாள் புலிகளின் இராணுவத்தளவாட கொள்வனவாளராக இருந்தவரும், தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான இவரிடம் புலிகளின் மீள்வருகையின் சாத்தியம் பற்றியும் புலிகள் சார்பான புலம்பெயர்ந்தோரின் பாத்திரம் பற்றியும் கேள்விகள் நிறையக் கேட்கப்பட்டன. இந்தியா, இந்திய மண் , இவ்வாறான முயற்சிகளுக்கு பயன்படுத்துவதையிட்டு மிகுந்த கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. கே.பியுடனான இந்த உரையாடலின்போது இலங்கை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீடிப்பது பற்றியதாக தற்போதைய சட்ட நடவடிக்கைகள் உள்ளன. இந்த தடை 1992 இலிருந்து அமுலில் உள்ளது. இது இரண்டு வருடத்துக்கொரு தடைவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த முறை புலி ஆதரவுக் குழுக்கள் தடையை நீடிப்பதற்கு எதிராக நீதிமன்றங்களால் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவில் புலிகள் அணிதிரண்டு மீண்டும் செயற்பாட்டுக்கு வரலாம் என்ற நியாயமான பயத்தைக் கொண்டுள்ள மத்திய, மாநில அரசுகள் புலித் தடையை நீடிக்க வேண்டுமென உறுதியாக வாதாடுகின்றன.

இருப்பினும் எல்.ரீ.ரீ.ஈ இல் மீள்வருகை சாத்தியமாதல் பற்றிய விடயத்தில் மேற்கத்தைய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய ஒரு வேறுபாடு உண்டு.

மேற்கத்தைய நாடுகளும் ஐக்கிய, பிரிபடாத இலங்கை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், தமிழ் புலம்பெயர்ந்தோரின் நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாக, வன்முறையற்றதாக இருக்கும் பட்சத்தில், இவர்களின் தமிழ் ஈழத்துக்கான பரப்புரையை தமது மண்ணில் சகித்துக்கொள்பவையாக இவை உள்ளன. உதாரணமாக, எல்.ரீ.ரீ.ஈ. அமெரிக்காவில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற வகையில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாடு கடந்த தமிழீழ அரசு, பிடடெல்பியா, நியூயோர்க் ஆகிய இடங்களில், பகிரங்க மாநாடுகளை நடத்தியுள்ளது.

ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இது வித்தியாசமானது. கடந்தகால கசப்பான அனுபவங்களின் பின்னணியில், எல்.ரீ.ரீ.ஈ. க்கோ அல்லது அதன் அனுதாபிகளுக்கோ சகிப்புத் தன்மை காண்பிக்கப்படுமென்பது அநேகமாக சாத்தியமற்றதே. சட்டத்தில் எங்காவது ஒரு பலவீனம் காணப்படினும், தமிழ்நாட்டில், உள்ள அரசுக்கெதிரான போக்கை கொண்டுள்ளவர்களும் தீவிரவாத, பிரிவினை ஆதரவுக் குழுக்களும் இழந்துபோன தமது செல்வாக்கை மீட்க இதைப் பயன்படுத்துவர். மேலும் மணிப்பூர் தீவிரவாதிகளுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் முட்டாள்தனமாக புலிகள் வழங்கியமையை இந்தியா கவனத்தில் எடுக்காமல்விட முடியாது. எனவே ஜனநாயக ரீதியாக, வன்முறை சாராத தமிழ் ஈழத்துக்கான ஆதரவைக்கூட குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அனுமதிக்கும் சாத்தியம் இல்லை.

எல்.ரீ.ரீ.ஈ. யின் மீள்வருகை அதனை தொடர்ந்து வரக்கூடிய வன்முறை பற்றி சில மேற்கத்தைய நாடுகளிலும் கவலையும், சந்தோசமும், இப்போதைய நிலைமையில் பொருத்தமானதா இல்லையா என்பது பற்றி எதுவும் உறுதியாக கூறமுடியாது. உலகளவில் இடம்பெயர்ந்த தமிழர்களிடையே எல்.ரீ.ரீ.ஈ எவ்வளவு தூரம் வலுப்பெற்றுள்ளது, இலங்கையில் புலிகள் மீண்டும் வன்முறையை அவிழ்த்துவிடும் வாய்ப்பு எந்தளவு உள்ளது?

வெளிநாடுகளில் உள்ள புலி மற்றும் புலி ஆதரவு அமைப்புகளை, பொதுவில் இரண்டு வகைகளுக்குள் அடக்கலாம். இந்த இரண்டு வகையில் முதல் வகையில், புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள், மற்றும் புலிகளின் வெளிப்படையாக இயங்கும் அமைப்புகள் அடங்குகின்றன. எல்.ரீ.ரீ.ஈ அநேகமான மேற்கத்தைய நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ. நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாலும் இந்த அமைப்புகள் இப்போது எல்.ரீ.ரீ.ஈ. ஐ வெளிப்படையாக ஆதரிப்பதில்லை. சிலர் தாம் புலிகளுடன் இல்லை என்பதுபோல வெளியில் காட்டினாலும் இரகசியமாக புலிகளுக்கு விசுவாசமாக உள்ளனர்.

ருத்ரகுமாரன்

முதலாவது வகைக்குள் அடங்கும் நிறுவனங்களில் மூன்று பிரிவினர் உள்ளனர். இவர்கள் முதலாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் (TGTE) அதன் அமைப்புகளாகும். ஊடகங்களும், தனிநபர்களும், இதனுடன் சேர்ந்துள்ளனர். நியூயோர்க்கில் தொழிற்படும் வழக்குரைஞரான, ருத்ரா என அறியப்படும் விசுவநாதன், ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இயக்குபவராவார். முன்னர் ருத்ரா எல்.ரீ.ரீ.ஈ. யின் சர்வதேச செயலகத்திற்கு சட்ட ஆலோசகராக இருந்தார். இவர் நோர்வே ஒழுங்கு செய்த அரசாங்க – எல்.ரீ.ரீ.ஈ. சமாதான பேச்சுவார்த்தைகளின்போது எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவுக்கு வளவாளராக செயற்பட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) 'பிரதமர்' ஆக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட ருத்ரா, அண்மையில் நாடுகடந்த அமைச்சரவையையும் ஆக்கியுள்ளார். இதில் மூன்று பிரதி பிரதம மந்திரிகளும், ஏழு அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் உள்ளனர். இதில் இரண்டு அமைச்சர்களும், மூன்று பிரதி அமைச்சர்களும் பெண்கள் ஆவர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE)சட்ட சபையில் ஒரு (ஆண்) சபாநாயகரும் (பெண்) பிரதி சபாநாயகரும் உள்ளனர். ருத்ரா (செனட்) மேலவை ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.

'பிரதமர்' ருத்ரகுமாரனும் அவரது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கோமாளித்தனமான மன ஆறுதலை வழங்கிவரும் வேளையில், மேற்கத்தைய நாட்டு சிரேஷ்ட அதிகாரிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ஏற்புடையதாகக் கருதுகின்றனர். இவ்வாறான ஜனநாய செயற்பாடுகள் மனவெழுச்சிக்கு ஆட்படும் புலம்பெயர்ந்தோர் சிலரை வன்முறை நாட்டத்திலிருநது பிரித்தெடுக்கக் கூடுமென இந்த அதிகாரிகள் எண்ணுகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில அங்கத்தவர்கள் தமது முக்கியத்துவம் பற்றியும் அந்தஸ்து பற்றியும் மாயைகளை கொண்டுள்ளனர். ஓர் ' அமைச்சர்' இந்திய வெளிநாட்டு அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சமமாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசவிருத்தினராக கொழும்பு செல்வதற்காக உத்தியோக பூர்வ அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டுள்ளார். ஏனையவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அழைக்கப்படுவர் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

யதார்த்தம் என்னவெனில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனங்காணப்பட்ட சகல அங்கத்தவர்களும் இலங்கை அரசாங்கத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ளவர்கள் என்பதே. இந்த அமைப்பை சமமான பேச்சுவார்த்தைப் பங்காளராக அரசாங்கம் நடத்தும் சாத்தியம் ஏதுமில்லை. இருந்தும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தம்மையும் தமது ஆதரவாளர்களையும் இப்படியான பிரம்மைகள் மூலம் ஏமாற்றிவருகின்றனர்.

மேற்கத்தைய அதிகாரிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிகாரிகளை கௌரவமாக நடத்த விரும்புகின்றனர். ருத்ரகுமாரனின் ஏற்பாட்டை தீங்கற்ற பகிடியாகவும், உள்ளவற்றில் ஆகக் குறைந்தளவில் தீங்கானது எனவும் இவர்கள் கருதுவதனால், குறைந்த மட்டத்திலான உத்தியோகரீதியான பேச்சுவார்த்தைகளை இவர்களுடன் நடத்தவும் கூடும்.

மேற்கத்தைய பாதுகாப்பு என்ற பார்வையில் கூடிய தீங்கான விடயமாகக் காணப்படுவது நெடியவனால் கட்டுப்படுத்தப்பட்டு வழிப்படுத்தபடும் அமைப்புகளே ஆகும். நெடியவனின் செல்வாக்கு மண்டலத்தினுள் உள்ளவையாக, பல எல்.ரீ.ரீ.ஈ. கிளைகளும், உலக தமிழ் அரங்கமும் (றுவுகு) இதற்குள் அடங்கும். பல்வேறு நாடுகளிலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மக்கள் முன்னணிகளும் தேசிய மன்றங்களும் உள்ளன.


உலக தமிழ் அரங்கம் பல்வேறு நாடுகளில் உள்ள 14 நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் முக்கியமானவையாக பிரித்தானிய தமிழ் அரங்கமும் (BTF) கனடாவில் உள்ள கனேடிய தமிழ் காங்கிரஸும் உள்ளன. பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) உற்சாகமாக தொழிற்படுகிறது. அது பல பிரித்தானிய அரசியல்வாதிகளுடனும், ஊடக முக்கியஸ்தர்களுடனும் உயர்மட்ட தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய தமிழ் காங்கிரஸ் நன்றாக இயங்கவில்லை. இந்த அமைப்பின் பேச்சாளரும் வெளியில் அறியப்பட்டவருமான டேவிட் பூபாலபிள்ளையின் அறிவிப்புகளும் பேச்சுக்களும் கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினை (CTC) பலமுறை தர்மசங்கடமான நிலைக்கு தங்கியுள்ளது. பூபாலபிள்ளை புளொட் அமைப்பின் முன்னாள் பிரதி தலைவரான வாசு தேவாவினதும் பத்திரிகையாளரான (தராக்கி) சிவராமினதும் மைத்துனராவார்.

நெடியவன்

உலக தமிழ் அரங்க (GTF) அங்கத்துவ அமைப்புகள் சில தனித்தியங்கும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. முக்கிய பிரச்சினைகளில் முரண்பாடான நிலைப்பாட்டையும் எடுக்கின்றன. அங்கத்துவ அமைப்புகளுக்குள்ளும் பிரிவுகள் உண்டு.

உலக தமிழ் அரங்கத்தின் (GTF) தலைவராக முன்னாள் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் கத்தோலிக்க மாகாண முதல்வராகவிருந்த வண.பிதா. எஸ்.ஜே. இமானுவெல் உள்ளார். இவர் இப்போது ஜேர்மனியில் நிலை கொண்டுள்ளார். இவர் நிதானமாக, மெதுவாக, ஒரு குருவானவருக்குரிய பக்குவத்துடன் பேசுவார். இவர் தமிழ்தேசியம் என்னும் போது இறுக்கமான ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் போக்கை கொண்டவர் என்பதும் நெடியவனுக்கும் அவரது அடியாட்களுக்கும் 'தொட்டப்பா'வாக உள்ளார் என்பதும் நன்கு பிரசித்தமாக விடயம்.

பேரின்பநாயகம் சிவபரன் என்னும் சொந்த பெயர் கொண்ட இவரைப் பற்றி இப்பத்தியில் நிறைய எழுத்தப்பட்டுள்ளது. இவர், புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவிருந்த எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவினால் எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளராக முன்பு நியமிக்கப்பட்டவர்.

கஸ்ட்ரோவின் மரணத்தின் பின் எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் உயரமானவர் எனப்பொருள்ப்படும் இயக்கப் பெயரை வெற்றிக்கொண்டார். சொற்ப காலத்தின் முன் இதை நெடியோன் என மாற்றிக்கொண்டார். இதுவும் உயரமானவர் எனப்பொருள் படினும் செந்தமிழாகவும் மரியாதைக்குரியதாகவும் உள்ளது.

34 வயதான நெடியவன் 18 வயதில் எல்.ரீ.ரீ.ஈ. யில் சேர்ந்தார். இவரை எல்.ரீ.ரீ.ஈ உயர்க்கல்விக்காக ரஷ்யாவுக்கு அனுப்பியது. ஆனால் இவர் அங்கு பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை போல தெரிகிறது.

நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ இன் அரசியல் பிரிவில் வேலைசெய்தார். எல்.ரீ.ரீ.ஈ. யின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் தாய்லாந்தில்; நடந்த நாலாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றார். பின்னர் இவர் ஐரோப்பாவில் நிலைக்கொண்டார்.

2002-2005 காலப்பகுதியில் சமாதான பேச்சு இடம்பெற்ற சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ. பல செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் அநேகமானவர்கள் அரசியல் அல்லது உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். நெடியவன் நோர்வேயுக்குச் சென்று அங்கு வசிக்கலானார்.

நெடியவன், சிவகௌரி சாந்த மோகன் என்னும் பெண்ணை திருமணம் செய்தார். இவருடைய தந்தை சகோதரன் ஞானேந்திர மோகன் அல்லது ரஞ்சன் லாலா ஆவார். ஞானேந்திர மோகன் எல்.ரீ.ரீ.ஈ. இன் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாக இருந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது இராணுவம் இவரை சுட்டுக்கொன்றது.

திருமணபந்தம், எல்.ரீ.ரீ.ஈ. க்குள் நெடியவனின் செல்வாக்கை வலுப்படுத்தியது. கஸ்ட்ரோ வழிவந்த அதிகாரத்தின் மூலம் இவர், கே.பி. உலக புலி பிரதானியாக வருவதற்கு எதிரான செயற்பாடுகளை தொடங்கி முன்னெடுத்தார்.

கடந்த ஆகஸ்டில் கே.பி. மலேஷியாவில் பிடிப்பட்டதன் பின் இவர் எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு கிளைகள் மீது கூடிய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) என்ற எண்ணக்கரு கே.பி.யின் மூளையிலேயே முதலில் உருவாகியது. கே.பி. சுதந்திரமாக இருந்த காலத்திலேயே நாடுகடந்த தமிழீழ அரசு என்ற திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு கே.பி. விசுவாசியான ருத்ரகுமாரனிடம் கொடுக்கப்பட்டது. கே.பி. பிடிப்பட்டதுடன் கேபிக்கும் ருத்ரகுமாரனுக்குமிடையிலான தொடர்புகள் அறுந்து போயின. ருத்ரகுமாரன் இத்திட்டத்தை முழுமையாகப் பொறுப்பேற்று தனது திறமை, நேரம் என்பவற்றை இத் திட்டத்தை செயற்படுத்துவதிலேயே அர்ப்பணித்தார்.

நெடியவனின் சதிக்கூட்டம் ருத்ரகுமாரனையும் நாடுகடந்த தமிழீழ அரசையும் கே.பியின் எறியங்களாகவே பார்த்தனர். இந்தக் கூட்டம் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை பல வகைகளிலும் குழப்ப முயன்றது. அதில் ஒன்றுதான் நாடு கடந்த தமிழ் நிறுவனங்கள் அடுத்தது வண. பிதா இமானுவலின் செல்வாக்கைப் பயன்படுத்தி உலக தமிழ் அரங்கத்தின்மீது நெறிப்படுத்தும் அதிகாரத்தை கைப்பற்றியதாகும்.

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் நாடுகளில் நிறுவனங்களின் வலைமைப்பை நெடியவன் அணி ஏற்படுத்தியது. இவை மக்கள் பேரவை அல்லது தேசிய மன்றங்கள் என அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஜனநாயக ரீதியான தேர்தல்களை நடத்தியது போலவே நெடியவனின் வலையமைப்பும் தேர்தல்களை நடத்தியது.

ஜெயானந்தமூர்த்தி

இவ்வாறான போட்டி முயற்சிகள் காணப்பட்ட போதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கரு பரந்துப்பட்ட மக்களின் மனதைப் பற்றியதுடன் உயர்கணிப்பு பெற்ற முக்கியஸ்தர்களின் உள்ளத்தையும் கவர்ந்தது.

இதனால் நெடியவன் அணி உத்தியை மாற்றிக் கொண்டது. அது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிவுகளுக்குள் ஊடுருவத் தொடங்கியது. முன்னாள் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயானந்தமூர்த்தியை ருத்ரகுமாரனுக்கு போட்டியாளராக கொண்டுவந்து ருத்ரகுமாரனை கவிழ்க்கும் வெளிப்படையான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. ஜெயானந்தமூர்த்தி, ருத்ரகுமானுடன் நின்றுபிடிக்க முடியாதவராகையால் அந்த முயற்சி மோசமான தோல்வியை கண்டது.

ருத்ரகுமாரனை வெல்லமுடியதாதெனக் கண்ட நெடியவன் சதிக்குழு தனது அணுகுமுறையை மீண்டும் மாற்றியமைத்தது. இது பிரதம அமைச்சர் என்ற ரீதியில் ருத்ரகுமாரனின் அதிகாரத்தை குறைக்க அல்லது மட்டுப்படுத்த சதி செய்ததது. இந்த முயற்சியும் இதனால் நெடியவன் அணி இனி என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டுள்ளது.

பரஸ்பரம் அழிவைக் கொண்டுவரக் கூடிய இந்த இரண்டு அணியினருக்கும் இடையிலான பகைமை சிறிது கவலை தருவதாகவும் உள்ளது. மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் இதை பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. பல்வேறு நாடுகளில் இரண்டு அணியினரதும் ஆதரவாளர்கள் மற்றும், தொழிற்படுநர்களிடையிலும் மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல உள்ளன. நியூயோர்க்கில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டமொன்றில் வில்லுக்கத்திகளுடன் இரண்டு வன்குழுக்கள் காணப்பட்டன.

இவ்வாறான வெளிப்பாடுகள் காணப்பட்ட போதும், சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை பற்றிய பயமின்றி உள்ளன. உண்மையில் சில அதிகாரிகள் தமிழ் அணிகளுக்கு இடையிலான இந்த 'போட்டியை' தமிழ் புலம்பெயர்ந்தோரிடையேயான மலர்ந்து வரும் உள் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போட்டியாகக் காண்கின்றனர். உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மரதன் நடைகள், கொடும்பாவி எரிப்புகள் என்பன ஜனநாயக ரீதியான மாற்றுக்கருத்து மற்றும் எதிர்ப்பு என்பவற்றின் சட்டபூர்வமான வடிவங்களாக கருதப்படுவதனால் இவர்கள் இவற்றை வெறுப்போடு பார்ப்பதில்லை.

வெளிப்படையாக இயங்கும், பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் உள்ள தனிச்சிறப்பு அமைப்புகளின் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் பாதகமானவை எனக் கருதப்படாதபோதும், அதிகம் வெளித்தெரியாத, பொறுப்புக் கூறும் நிலையில் இல்லாத சில இரகசிய செயற்பாடுகள் பற்றி அதிக கவலை காணப்படுகிறது. எல்.ரீ.ரீ.ஈ. இன் மீள்வருகை, இலங்கையில் வன்முறைகள் மீண்டும் தொடங்குதல் இவற்றினால் வெளிநாடுகளில் வரக்கூடிய தொடர் நடவடிக்கைகள், மறைமுகமான தாக்கங்கள் என்பவை பற்றியே ஆகக் கூடிய பயம் உள்ளது.

அண்மைக் காலத்தில் மேற்கத்தைய நாடுகளில், தமது மண்ணை, இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் மேற்கொள்ளவுள்ள 'பயங்கரவாதத்துக்கு' நிதி சேகரிக்க பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற பொதுக்கருத்து காணப்படுகிறது.

இந்த கருத்தொற்றுமையின் ஒரு பகுதியாகவே, சில வருடங்களின் முன் எல்.ரீ.ரீ.ஈ. இன் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள், முக்கியமான புலித் தலைவர்கள் மீதும் நிதி சேகரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்தன.

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் அநேகமான மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்ட காரணத்தால் நிதிசேகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சற்று ஓய்ந்திருந்தன.

இலங்கைத் தமிழ் மக்களின் துன்பநிலை பற்றி கவலை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளும் புலிகளும் புலி ஆதரவு அமைப்புகளும் இயன்றளவு உச்ச அளவில் நிதி சேகரித்து, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் போன்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு அதைப் பயன்படுத்துவர் என்பதே எதிர்பார்க்கப்பட்டது.

அது நடக்கவில்லை. பதிலாக புலிகளும் புலி ஆதரவு நிறுவனங்களும் இடம் பெயர்ந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு எதிராக நச்சுத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழ் மக்கள் மீதான அக்கறையின்மையின் அருவருப்பூட்டும் வெளிப்பாடு எனில் பல்வேறு அழிவு நோக்கத்துடன் நிதிதிரட்டுவது பற்றி கவலை தரும் தகவல்களும் தெரியவந்தன.

இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ. நிதி சேகரிப்பாளர்கள் மற்றும் முக்கிய தொழிற்படுநர்கள் மீது நடவடிக்கைகள் அண்மைய மாதங்களில் இடம்பெற்றன. நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலி செயற்படுநர்களை கைது செய்துள்ளது. வேறு நாடுகளிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு நிதி சேகரிப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் சிலர், விரைவில் கைது செய்யப்படலாம் அல்லது தடுத்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மே 2009 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின் எல்.ரீ.ரீ.ஈ.இன் நிதி சேகரிப்பு பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போது வைரித்த எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களிடமிருந்தும் செயற்பாட்டாளர்களிடமிருந்தும்தான் பிரதானமாக நிதி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் நிதியின் அளவு, சில வருடங்களின் முன் சேகரிக்கப்பட்ட நிதியின் 10-15 வீத அளவுக்கு குறைந்துள்ளது. இவ்வளவு பாரிய வீழ்ச்சி காணப்பட்ட போதும் இந்த நிதியில் சில மறைக்கப்படும் காரணங்களுக்காக நிதி சேகரிக்கப்படுவது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிலேசத்தை ஏற்படுத்துகின்றது.

ஒரு மட்டத்தில் ராஜபக்ஷ ஆட்சிக்கும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைக்கு என்று கூறி நிதி சேகரிக்கப்படுகின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை யுத்த குற்றமிழைத்தவர்கள் என குற்றஞ்சாட்டி சர்வதேச விசாரணை மன்றங்களுக்கு இழுக்கப் போவதுபற்றி பெரிதாகப் பேசப்படுகிறது. புரியப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றம், மனித இனத்துக்கு எதிரான குற்றம் என்பவற்றுக்கான சான்றுகளை, சாட்சியங்களை சேகரிப்பது பற்றியும் பேசப்படுகின்றது.

இப்படியான தேவைக்கான நிதி சேகரிப்பு தமிழ் புலம்பெயர்ந்த மக்களுள் ஒப்பீட்டளவில் முன்னேறிய பகுதியினரிடமிருந்து மேற்கொள்ளப்படுகிறது. உயர்கல்வி தகைமையுடன் கூடிய படித்த தமிழர்களுக்கு, ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கம், எவ்வளவுதான் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தப்போதும், ஆசைக்காட்டுவதாக உள்ளது. இது தொடர்பில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய கற்பனைகள் மனதை உருக்குவனவாக இருப்பதனால் கணிசமான புலம்பெயர்ந்த வாண்மையாளர்களும் புத்திஜீவிகளும் தாராளமாக நிதி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில மேற்கத்தைய நிபுணர்களும் வழக்குரைஞர்களும் நம்பிக்கெடும் புலம்பெயர்ந்த இந்த ஏமாளிகளிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை கறந்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு பிரபல வழக்கறிஞர் ஒருவருக்கு முற்பணமாக நாளொன்றுக்கு 1000 அமெரிக்க டொலர்வீதம் , மூன்று மாதங்களுக்கு மேலாக அண்மைக் காலம்பவரை பணம் கொடுக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. 'அறப்படிச்ச பல்லி கூழ் பானையில் விழுந்ததாம்' என பழமொழி உண்டு. இந்த கோமாளிக் கூத்துகள் இந்த பழமொழியை ஞாபகப்படுத்துகிறது.

வடக்கு, கிழக்கிலுள்ள ஆயிரக் கணக்கான வறிதாக்கப்பட்ட மக்கள் துன்பத்தில் வாழும் நிலையில் இப்படியான விடயங்கள் கவலை தருவனவே. இப்படியான நிதிவளங்களை கிடைக்கப் போகாத நீதிக்காக வீணாக்காமல், இந்த மக்களுக்கு உதவப் பயன் படுத்தலாம். தமிழ் மக்களுக்கு உதவப் பயன்படுத்தலாம். தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்களை கொடுத்த போருக்கு நிதி வழங்கி, அதை தூண்டிய புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தார் மீகக் கடமையொன்று உள்ளது.

இவர்கள் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த வேண்டும், பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செத்துப்போய் வாழும் மக்களை புறக்கணித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் பழைய வழியிலேயே செல்கின்றனர். இது எவ்வளவு தூரம் கோமாளித்தனமாக, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டததாக இருப்பினும் சட்ட நடவடிக்கைக்காக நிதி சேகரிப்பதை மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் கணக்கில் எடுக்க மாட்டா.

கவலையளிக்கும் விடயமாக இருப்பது என்னவெனில் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரிடம் இரகசியமாக மேற்கொள்ளப்படும் வேறொரு விதமான நிதி சேகரிக்கப்பாகும். இவை நேரடியாக புலிகளின் மீள்வருகையுடனும், வன்முறைக்கு திரும்புவதுடனும் தொடர்பானவை.

பொதுவான கதை

எல்.ரீ.ரீ.ஈ. நிதிசேகரிப்பாளர்களும், தொழிற்படுநர்களும் பல்வேறு மேற்கத்தைய நாடுகளில் பணம் சேகரிக்கச் செல்கின்றனர். இவர்கள் ஒரே கதையைத்தான் எல்லா இடத்திலும் கூறுகின்றனர். கதை சொல்லும் விதம், கதை கூறுபவர், கேட்பவர்களைப் பொறுத்து மாறுபடும். கதையின் சாராம்சம் இதைப்போலவே இருக்கும்:-

"எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் பிரபாகரனும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் அநுபவம் வாய்ந்த 2000 புலிப்போராளிகளுடன் இரகசியமான ஒரு இடத்தில் பாதுகாப்பாக உள்ளனர். முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு சில நாட்களுக்கு, முன் இவர்கள் இராணுவம், கடற்படை ஆகியவற்றின் முற்றுகை வளையத்தை உடைத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டனர். இவர்கள் நல்ல காரணத்துக்காகவே வெளிப்படாமல் உள்ளனர். ஆனால் வடக்கு, கிழக்கில் நன்கு ஆயத்தம் செய்யப்பட்ட தாக்குதலை தொடக்கி ஆயுதப்படைகளை துரத்தி அல்லது அழித்தொழித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகளை கைப்பற்றும் திட்டங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.

'பல்வேறு தொகுதிகளாக வேறு இரகசிய இடங்களில் 10,000 போராளிகள் பயிற்றப்படுகின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் தலைமையில் ஒரே தடவையில் பெரும் தாக்குதலை தொடக்குவதே திட்டமாக உள்ளது.

'12,000 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளும் இணைந்து தமிழ் ஈழத்தின் நிலப்பரப்பை மீட்டெடுப்பதுடன் தற்போது காணப்படும் இராணுவ நிலைமையை தலைகீழாக மாற்றுவர்

'இந்த இராணுவ தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக, சிங்களப் பெரும்பான்மை கொண்டுள்ள ஏழு மாகாணங்களிலும் நன்கு இணைக்கப்பட்ட நிலக்கண்ணி மற்றும் குண்டுத்தாக்குதல்கள் தொடராக நடத்த நாம் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றோம். இதற்காக நாம், பெருமளவு, இலஞ்சம் கொடுத்து சிங்கள முன்னாள் படை வீரர்களை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம். சரியான நேரத்தில், எமது பிரதான தாக்குதலுடன் இவர்களும் சேர்ந்து செயற்படுவர்.

இந்த திட்டங்கள் நற்பயன்தர எமக்கு பணம் வேண்டும். நாம் கண்ட எல்லோரிடமும் கேட்கமுடியாத எம்மால் இது தொடர்பில் வெளிப்படையான வேண்டுகோளை விடுக்கவும் முடியாது. உங்களைப் போன்ற சில நம்பிக்கைக்கு பாத்திரமான, ஈடுபாடு காட்டிய ஆட்களில்தான் நாம் தங்கியிருக்க முடியும். எனவே உங்களால் முடிந்ததை தாருங்கள்."

இதுதான் பணம் சேகரிப்பதற்கு புலி நிதி சேகரிப்பாளர்கள் கூறிவரும் கதையின் சாரம் - சுருக்கம்.

முதலில் இந்தக் கதையை கேட்டப்போது நான் பெரிதாக சிரித்தேன். இருந்தாலும் இதைச் சொன்னவர், உண்மையாகவே இந்த கதையை நம்புகிறார், அவர் என்னையும் நம்பவைக்க முயற்சிக்கின்றார் என உணர்ந்தப்போது சிரிப்பதை நிறுத்திவிட்டேன். பின்னர் இதே கதை வேறு நபர்களால் வேறு பல நாடுகளிலும் திருப்பித் திருப்பி கூறப்படுவதாக நான் கேள்விப்பட்டேன்.

பின்னர் நான் 'பயங்கரவாதம்' பற்றி நிபுணத்துவம் பெற்றுவருபவரும், பல்வேறு தேசத்து பாதுகாப்பு, உளவு அதிகாரிகளுடன் நிறைய தொடர்புகளை உடையவருமான ஒரு மேற்கத்தைய பத்திரிகையாளருடனும் குறிப்புகளை பரிமாறிக்கொண்டேன். இந்த கதையை முதலில் கேட்டப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அதைக் கணக்கில் எடுக்கவில்லை என்றும் ஆனால் இதை உண்மையென நம்பும் விசுவாசத்தின் தீவிரத்தன்மை அவர்களுக்கு புதிராகக் காணப்படுவதாகவும், கூறினார். குறைந்தப்பட்சம் சிலராவது, இந்த 'சாத்தியமாகாத நோக்கத்திற்கு' நிதி வழங்குகின்றனர் என்பதையிட்டு அவர்களும் கிலேசமடைந்துள்ளனர்.

சாத்தியமின்மை

இந்த பத்தி எழுத்தாளர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டனர் என்றும் எல்.ரீ.ரீ.ஈ. இன் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது எனவும் உறுதியாக நம்புகின்றனர். சரணடைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தொகுதி, தொகுதியாக விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை இலங்கையில் பிடிபடாது தப்பியுள்ள சில எல்.ரீ.ரீ.ஈ செயற்படுநர்களும், ஆதரவு வலையமைப்பின் அங்கத்தவர்களும் இருக்கக் கூடும். ஆனால் இவர்களும் திட்டமிட்ட வகையில் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது காணப்படும் உலக யதார்த்த நிலைமையின்படி 12,000 போராளிகளுக்கு இலங்கையை தாக்குவதற்கு இராணுவ பயிற்சியளிக்க புலிகளை எந்த நாடும் அனுமதிக்கப் போவதில்லை. மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு பின்தளமாக தென்னாசிய அல்லது தென்கிழக்காசிய பிரதேசங்களே இருக்கமுடியும். இந்தியாவின் அமைவிடத்தைப் பார்க்கும்போது இது சாத்தியமற்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட வகையில், முன்னாள் படை வீரர்களுக்கு பணங்கொடுத்து அவர்களைக்கொண்டு நிலக்கண்ணிகளை வைப்பது என்பதும் குண்டுகளை தொடர்ந்து வெடிக்க வைப்பது என்பதும் கற்பனைத் திறனின் உச்சப்பறப்பு ஆகும்.

புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் முன்னர் நாசவேலைகளில் ஈடுபட பாதுகாப்புப் படையை சேர்ந்த பலருக்கு பணங்கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான முயற்சிகள் படுதோல்வியிலேயே முடிந்தன. படைவீரர்கள் அல்லது முன்னாள் படைவீரர்களிடம் உள்ள உண்மையான தேசப்பற்று இந்த முயற்சிகளை முறியடிக்கும். சரத்பொன்சேகா நடத்தப்படும் முறைப்பற்றி கோபங்கொண்டுள்ள எவரேனும் ஒரு முன்னாள் இராணுவ வீரர்கூட இந்த வேலையைச் செய்யமாட்டார்.

இதைவிட முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு நிலை உறுதியான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும். பேரளவிலான நாசவேலை சாத்தியமில்லை. இந்த எச்சசொச்ச எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கற்பனை செய்யப்படும் கடல்வழி ஆக்கிரமிப்பும் சாத்தியமற்றதே. ஒரு சிறு தாக்குதல் படை தரையிரங்கி ஊடுருவினாலும் இது நீண்டகாலம் தப்பிப் பிழைத்திருக்காது. இதுவே தற்போதைய இராணுவ யதார்த்தம்

இந்த பின்னணயில் நோக்கும்போது இலங்கை மீது இராணுவ தாக்குதலை நடத்தவென வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ தொழில்படுநர்கள் பணம் சேகரிக்க முயல்வது, புலம் பெயர்ந்த ஏமாளிகளிடமிருந்து பணத்தை தந்திரமாக பெறும் பெரும் ஏமாற்று வேலையின் ஒரு பகுதியேயாகும். புலம் பெயர்ந்தோரில் ஒரு பகுதியினரிடம் இலங்கை அரசாங்கத்தின் மீது காணப்படும் குருட்டுத்தனமான வெறுப்பும் கோபமும் காணப்படும் பின்னணியில் கற்பனை செய்யப்படும் இந்த திட்டத்துக் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டம் எழுச்சிபெறவோ அல்லது சாத்தியமாகவோ முடியாது.

எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா என்ற கேள்விக்கு பதிலாக இல்லை என்றே அடித்துக் கூறமுடியும்.

இராணுவ தாக்குதல் பற்றிய பிரமாண்ட திட்டம் சாத்தியமில்லாவிடினும் புலிசார்பு புலம்பெயர்ந்தோர் தொடர்ந்தும் தொல்லை கொடுப்பவர்களாகவும் எரிச்சலூட்டுபவர்களாகவும் நிச்சயமாக இருக்க முடியும். எனவே அடுத்து வரவிருக்கும் கட்டுரை புலிகள் இயக்கம், புலிசார்பான புலம்பெயர்ந்தோர் பிரிவினர் பற்றி ஆழமாக பரிசீலனை செய்வது சுவாரஷ்யமாகவும் அறிவூட்டுவதாகவும் இருக்கும். - நன்றி: தமிழ் மிரர் -

(டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

December 04, 2010

mp3: திருவேட்கை: அமரர் போல வாழ்வேன், - என்மேல் அன்பு கொள்வையாயின்

காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:

BharathyO124.jpg

mp3 காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:

திருவேட்கை

ராகம் - நாட்டை ~ தாளம் - சதுஸ்ர ஏகம்

மலரின் மேவு திருவே! - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும், - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்.

கமல மேவும் திருவே! நின்மேல்
காத லாகி நின்றேன்;
குமரி தன்னை இங்கே - பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன், - என்மேல்
அன்பு கொள்வை யாயின்;
இமய வெற்பின் மோத, - நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம் - நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்:
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்.