ஊற்று

அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார்: "எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!"

காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல், வழங்குபவர் சீர்காழி எஸ். கோவிந்தாரஜன் ~ விநாயகர் நான்மணி மாலையிலிருந்து:

கும்பிளாவளை பிள்ளையார் கோயில், அளவெட்டியிலிருந்து ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

க்தி உடையார் காரியத்திற்
பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்

சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?
வித்தைக் கிறைவா! கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந் திடநீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது;
இவையும் தர நீ கடவாய்!

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை