mp3 ~ சந்ததம்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ்
நவம்பர் 6 - 12, 2010 : கந்த சஷ்டி ~ சிறப்புப் பதிப்பு
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. 90 - கந்தர் அலங்காரம்
ஐக்கிய அமெரிக்கா, வாஷிங்டன். டி.சி. தலை நகர் முருகன் முகப்பு
பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதர் திருப்புகழ்
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
பொருள்: சந்ததம் பந்தத் தொடராலே
தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!
கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ (நன்றி: http://thirupugazh.blogspot.com)
ஐக்கிய அமெரிக்கா, வாஷிங்டன். டி.சி. தலை நகர் முருகன் வாசற் கோலம்

