ஊற்று

காணொலி: பித்துக்குளி முருகதாஸ் ~ அலைபாயுதே கண்ணா: ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி-தெகிவளை

பித்துக்குளி முருகதாஸ் ~ அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே

ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணுமூர்த்தி தேவஸ்தானம் நெடிமால-தெகிவளை
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி - செப்டம்பர் 1, 2010 ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

அலைபாயுதே கண்ணா
அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா........

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா

உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ

கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோகதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ

குழலூதிடும் பொழுதுஆறிடும் குறைகள் போலவே மனதில்
வேதனை மிகவுற

(அலைபாயுதே......)

பாடல்: அலைபாயுதே கண்ணா
வரிகள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: கானடா

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை