ஊற்று

MP3 பாரதி பாடல்: 'சென்றதினி மீளாது'

மாகாவி சுப்பிரமணிய பாரதியார் வடித்த பாடல்:

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

பாடுபவர்: ராஜ்குமார் பாரதி

DSCF1044ootru.JPG

மட்டக்களப்பு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொதுசன நூல் நிலையத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவுருவப் படம்-படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று வினை யாடின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெல்லம் அறிந்துபோம், திரும்பி வாரா.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை