ஊற்று

காணொலி: காரைதீவு ~ விபுலானந்தா மத்திய கல்லூரி தமிழ்ச் செம்மொழி விழா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 19 ஜூலை, திங்கட்கிழமையன்று காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த விழா முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவாக விபுலானந்தர் அரங்கில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் இடம்பெற்ற தமிழ் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட விருந்தினர்களாக பாண்டிச்சேரி, புதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.அறிவுத்தம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ.வெங்கடேஷன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கே.பிரேம்குமார், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த தமிழ்ச் செம்மொழி விழாவில் கலாசார ஊர்வலம், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், முஸ்லிம் நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் பரிசளிப்புக்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை