« April 2010 | Main | June 2010 »

May 30, 2010

காணொலி: 'கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே'

புன்னகை மன்னன் திரைப்படப் பாடலை பாடும் உன்னிமேனன்:

பாடல் : வாலி்
இசை : இளையராஜா

ன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

ன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன சத்தம் இந்த நேரம்…)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன சத்தம் இந்த நேரம்…)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன சத்தம் இந்த நேரம்…)

May 23, 2010

காணொலி: "கண் திறந்த தேசம் அங்கே ...." - கவிஞர் வைரமுத்து

ன்னத்தில் முத்தமிட்டால் - திரைப்படத்திலிருந்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கவிஞர் வைரமுத்து வரிகள்:

Vidai kodu by Job - Straight from the heart ~ "விடை கொடு எங்கள் நாடே" ஜாப் பாடும் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படப் பாடல் ~

விடைகொடு எங்கள் நாடே.....
கடல் வாசல் தெளிக்கும் வீடே.....
பனைமரக்காடே பறவைகள் கூடே....
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா??....

உதட்டில் புன்னகை புதைத்தோம் .....
உயிரை உடம்புக்குள் புதைத்தோம் ....
வெறுங்கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...

கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒரு சுகம் வருமா?? வருமா??
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் சுதந்திரம் வருமா?? வருமா??...

கண் திறந்த தேசம் அங்கே ....
கண் மூடும் தேசம் எங்கே???

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்.....
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்..
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்.....

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம்...
முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்....

கடல் நீர் பறவையாய் இருந்தால் சந்திப்போம்...
மனமே மலைகளாய் வாழ்ந்தால் சந்திப்போம்...

தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்....

May 19, 2010

mp3: 'எனது பெயரோ ஈழத் தமிழன்!' - மது பாலகிருஷ்ணன்

'களத்திலும் அகதியாய்… புலத்திலும் அகதியாய்…'

KV519.jpg

'குருதி வலி' இறு வெட்டில் இருந்து , கவிதை வரிகள்: வசீகரன், பாடுபவர்: மது பாலகிருஷ்ணன்

MB519H.jpg

மது பாலகிருஷ்ணன்

May 18, 2010

டி பி எஸ் ஜெயராஜ் பேட்டி: “அடிப்படை பிரச்சினை அரசியல் பிரச்சினை இரண்டுமே முக்கியம்தான்”

பி.பி.சி. தமிழோசை

லங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், அங்கு அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக சமூகங்களுக்கு இடையே சீர்குலைந்து போயிருந்த இன உறவுகளை சீரமைக்கின்ற பணி இன்னும் இலங்கையில் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்று ஆய்வாளரும் இலங்கை விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான டி பி எஸ் ஜெயராஜ் கூறுகிறார். [பி.பி.சி. தமிழோசை ~ முழுமையாக ஒலி வடிவில் செவ்வியினை கேட்க இங்கே அழுத்தவும்]

May 08, 2010

திரை இசை: தூய நிலமாய் கிடப்பாள்...தன் தோளில் என்னை சுமப்பாள்

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள் (ஜீவநதியாய்)
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தவறினை)

தாயில்லாமல் நானில்லை

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள் (தூய)
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும் (2)
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் (மேக)
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள் (மலைமுடி)

தாயில்லாமல் நானில்லை

ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான் (ஆதி)

அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

தாயில்லாமல் நானில்லை

திரைப்படம் :அடிமைப்பெண்