ஊற்று

திரை இசை: 'சந்திரோதயம் ஓரு பெண்ணானதோ'

படம்: சந்திரோதயம்
பாடலாசிரியர்: வாலி
இசை: எம் எஸ் விஸ்வநாதன்

ந்திரோதயம் ஓரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ

குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனம் இல்லையே
ஏன் மேனி உனதன்றி எனதல்லவே!

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ!

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை