ஊற்று

சிறிலங்காவில் அனைத்து சமூகமும் ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்: இந்தியா

[ புதினப்பலகை ] மிழ் மக்கள் உட்பட சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியா சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

'இராணுவ போர் நடவடிக்கையின் பின்னால், புதிய ஆரம்பத்திற்கான வாய்ப்பையும், நீண்ட நாட்களாக தொடரும் அரசியல் முரண்பாடுகளை தீர்க்கும் வகையையும், அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் படியான அரசியல் தீர்வு எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சிறிலங்கா அரசு உணர வேண்டும்' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S .M .கிருஷ்ணா ஒரு எழுத்து மூலமான கேள்விக்கு பதிலிலிறுத்துள்ளார்.

அப்பதிலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒன்றுபட்ட சிறிலங்காவில் தமிழ்ச் சமூகம் உட்பட அனைத்து சமூங்களும் ஏற்றுக் கொள்ளும் படியான ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவதே அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும்,

நீடித்துக் கொண்டு வரும் அரசியல் சர்ச்சைகளை தீர்க்கும் படியான பொது முடிவு எட்டப்பட வேண்டியதன் அவசியத்தை தாங்கள் சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்த விரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப்பகுதி மக்களுக்கு 5200 தொன் இருப்பிட கட்டுமான பொருட்கள் 70000 தொன் விவசாயம் தொடங்குவதற்கான உதவிகள் உட்பட மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் அனைத்தையும் இந்திய அரசு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை