« October 2009 | Main | December 2009 »

November 30, 2009

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் பொன்சேகாவை எப்படி ஆதரிக்க முடியும்? - ஆசாத் சாலி

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் தளபதி பொன்சேகாவை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஆசாத் சாலி அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

azathsally1130.jpg

முன்னதாக, “இந்த நாடு பெரும்பான்மையினருக்குச் சொந்தமானது. சிறுபான்மையினர் விருந்தினர்களாக வந்தவர்கள். அவர்கள் எந்த உரிமைகளையும் இந்த நாட்டில் கேட்க முடியாது என்று கூறிய பொன்சேகாவை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் என்ற வகையில் எப்படி மதிப்புடன் ஆதரிக்க முடியும்?” என ஆசாத் சாலி கேள்வி எழுப்பி இருந்தார்.

கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயரான ஆசாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி மிக அண்மையில்தான் அரசு பக்கம் சாய்ந்துள்ளார்.

பொன்சேகாவின் இந்தக் கருத்து கனடாவின் ‘நஷனல் போஸ்ட்’ நாளேட்டில் வெளியாகி இருந்தது. அதனைக் கொழும்பில் வெளிவரும் ‘டெய்லி மிரர்’ நாளேடு மறுபதிப்புச் செய்திருந்தது.

அப்போது அந்தக் கருத்தை ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. ஆனால், தமது அந்த முடிவை அவர்கள் அனைவரும் இன்று வசதியாக மறந்துவிட்டார்கள் என்று ஆசாத் சாலி மேலும் தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மட்டுமல்ல “வெளிநாடுகளினதும் பொது வேட்பாளர்” என்றும் கூறினார். மாதாந்தம் 500,000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடும் 1,000,000 ரூபாய்க்கு அரசியல் அலுவலகமும் முன்னாள் தளபதி தேடி வருகின்றார் என்றும் குற்றஞ்சாட்டினார் ஆசாத் சாலி.

சாலியின் இந்த நிலைப்பாட்டை அடுத்து அவர் கட்சியின் முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான நிறைவேற்றுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார் என ஐ.தே.க. அறிவித்துள்ளது.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆசாத் சாலிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக அவரது சேவை இனித் தேவை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

கட்சியின் அதியுயர் குழுவின் முடிவுகளை தொலைக்காட்சி அலைவரிசையில் விமர்சனம் செய்ததற்காக ஆசாத் சாலிக்கு மன்னிப்பே வழங்கப்படாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [நன்றி: புதினப்பலகை.கொம்]

November 29, 2009

காணொலி: நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைரமுத்து

KKO1129.jpg

ங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

November 28, 2009

நல்வாழ்வுக்காய் ஏங்கும் இளம் தமிழ் சமுதாயம்: வழி செய்ய வேண்டியது சகல தரப்பினதும் கடமை

'வீரகேசரி', ஆசிரியர் தலையங்கம், நவம்பர் 28, 2009:

ல்வி பொதுத் தராதர உயர்தரப் பட்சை 2009 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைக்குத் தோற்றிய ஒரு இலட்சத்து 99 ஆயிரம் பரீட்சார்த்திகளில் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

camp01.jpg

கருக்குளம் பாடசாலைக்கு அருகில் மாணவர்கள்

இதேவேளை, உயிரியல் விஞ்ஞானப் பாடத்தில் தமிழ் மொழி மூலம் தோற்றிய கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூயைச் சேர்ந்த மாணவி மைதிலி சிவபாதசுந்தரம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூயைச் சேர்ந்த அன்டன் ஜோன் நிராஜ் என்ற மாணவன் பௌதிகவியலில் கூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களின் பெறுபேறுகள் தமிழ் மக்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறே சிங்கள மொழி மூல மாணவர்களும் வெவ்வேறு துறைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.

தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களின் நிலையான மூலதனமாக கல்வியே இருந்து வருகின்றது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னரான காலகட்டத்தை எடுத்து நோக்கினால் இலங்கையில் கல்வி வரலாற்றில் தமிழ் மொழி மூல மாணவர்களே அதிகூடிய புள்ளியை பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழகங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டும் வந்தனர்.

அதேவேளை, வட பகுதியில் வீதிக்கு வீதி தனியார் கல்வி நிலையங்கள் நிறைந்து போயிருந்ததுடன் அதிகாலை நான்கு மணி தொடக்கம் நள்ளிரவு வரை மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலேயே தமது ழுமையான கவனத்தையும் செலுத்தி வந்தனர்.

இதன் காரணமாக, வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பொறியியலாளர்கள் என வட பகுதியில் நிறைந்துபோய் இருந்தனர்.

எனினும், துரதிருஷ்டவசமாக நாட்டின் நெருக்கடியும் சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்த சூழலும் தமிழ் மொழி மூல மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பெரிதும் பாதித்தது எனக் கூறலாம்.

இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்றதுடன், படித்த மாணவர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைமையே இன்று தோன்றியுள்ளது.

மேலும், யுத்த நடவடிக்கைகள் மும்முரமடைந்ததையடுத்து வட பகுதி மாணவர்களின் கல்வி முற்று முழுதாக செயலிழந்தது.படித்து பட்டம் பெற வேண்டிய மாணவர்கள் பலர் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தங்கள் கவனத்தை வேறு கோணங்களில் திசைதிருப்பினர்.

இதேவேளை, வடக்கில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளும் மாணவர்களின் கல்வியை மிக மோசமாக சீர்குலைத்தன. சாதாரணமாக, கற்றல் உபகரணங்களையோ, புத்தகங்களையோ கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.

அது மாத்திரமன்றி யுத்தத்தின் தாக்கம் மாணவர்களை உளவியல் ரீதியாகவும் மோசமாகப் பாதித்தது. மாணவர்கள் இடம்பெயர நேரிட்டதுடன் பாடசாலைகள் பலவும் செயலிழந்தன.
அத்துடன், ஆசிரியர்கள் இன்றி பாடசாலைகள் பல தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. இவ்வாறான பின்னணியில் வட பகுதி மாணவர்களின் கல்வி முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக, மாணவர்கள் பலர் தமது கல்வியை சீராக தொடர டியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, இளம் வயதினர் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த ஏக்கங்களுக்கு மத்தியில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் இதர பகுதியிலுள்ள மாணவர்களுடன் ஒப்பிடுகையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பின்னடைந்துள்ளதை காணலாம். இருந்தும்கூட, வட பகுதி மாணவர்கள் எவ்வாறேனும் படித்து முன்னேற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் காணப்படுகின்றனர்.

எனவே, யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் சகஜ நிலை நிலவி வரும் இந்தக் கட்டத்திலேனும் வட பகுதி மாணவர்கள் சுதந்திரமாக தங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்ற சூழலை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது.

விசேடமாக, உயர் வகுப்பு மாணவர்கள் பலர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக கொழும்புக்கு வருவதற்கோ அன்றேல் வெளிமாவட்டங்களில் தங்கியிருந்து கல்வி கற்பதற்கோ அஞ்சியிருந்தனர்.

இதனால், அவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியை மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமை நிலவுகின்றது. அத்துடன், நலன்புரி முகாம்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் மிகுந்த சவால்களை எதிர்நோக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, இவற்றை கவனத்திற் கொண்டு வட பகுதி மாணவர்கள் எதிர்வரும் காலங்களிலேனும், எவ்வித இடையூறுமின்றி கல்வியைத் தொடர சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டுமென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

November 27, 2009

இடதுசாரி சக்திகளின் கைகளைப் பலப்படுத்துவதே தமிழ் மக்களின் விடுதலைக்கான முதற்படியாகும்

முதலாவதாக நடத்தப்படப்போவது பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்றிருந்த சர்ச்சைக்கு முடிவு கட்டி எதிர்வரும் ஜனவரி பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலை ஏன் அவர் 2 வருடங்கள் முன்கூட்டியே நடத்துவதற்கு முன்வந்துள்ளார் என்பதை முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருந்தேன். யுத்த வெற்றியையடுத்து தனது செல்வாக்கு உச்ச நிலையில் உள்ள படியால், காலம் தாழ்த்தினால் அது சரிந்து விடலாம் என எண்ணியே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்பதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ராஜபக்ஷ தீர்மானித்திருந்தார்.

DRVKO1127.JPG

நவம்பர் 23, 2007 இல் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்படதனை கண்டித்து இடம் பெற்ற எதிர்ப்பு நிகழ்வில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன (கறுப்பு உடையுடன்)

இதனிடையில் ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்கப் போவதாக செய்தி வெளியாகியதும் அரச தரப்பினர் சற்று கலக்கமடைந்த நிலையிலேயே எந்தத் தேர்தல் முதலாவதாக நடத்தப்பட வேண்டுமென்று சில நாட்களாகச் சிந்திக்கப்பட்டது. எவ்வாறாயினும் ஏலவே உத்தேசித்திருந்ததற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலைப் பின் தள்ளினால் அதுவே தனக்குப் பிரதிகூலமாகிவிடும் என்பதாலேயே ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னொரு காரணம் என்ன என்பதையும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஜனாதிபதி அளிக்கும் வாய்ப்பு!

அதாவது, 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனபடியால் "இப்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய மக்களோடு சேர்ந்து ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வாய்ப்பளிப்பது எனது கடமை%27 என கடந்த செவ்வாய் அலரிமாளிகையில் வைத்து ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறியுள்ளார். 2005 தேர்தலை வடக்கு, கிழக்கு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென விடுதலைப் புலிகளால் கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்டதாலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு அத்தேர்தலில் வெற்றி கிட்டியது என்பதை யாரும் அறிவர். விடுதலைப் புலிகளுக்குத் தூது அனுப்பி தனக்கு உதவுமாறு கோரி ஆவன செய்ததன் பயனாகவே தேர்தலை வடக்கு, கிழக்கு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று அன்று முடிவு எடுக்கப்பட்டது. அதுவே பகிஷ்கரிப்புக்குப் பிரதான காரணமாய் அமைந்திருந்தது எனலாம்.

பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா

எதிரணியினரின் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா நிறுத்தப்படவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு.) சார்பாகவே பொன்சேகா களமிறங்கவுள்ளாராயினும் இதற்கான இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக இக்கட்டுரை எழுதும் வரை அறிவிக்கப்படவில்லை. இதனிடையில் ஐ.தே.மு.வில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) இருகட்சிகளும் முன்னர் ஐ.தே.மு.வுடன் கூட்டாக ஜெனரல் பொன்சேகாவைச் சந்தித்ததற்கு அப்பால் தனித்தனியாகவும் அவரோடு சந்தித்ததாக அறியக்கிடக்கிறது.

பொன்சேகாவை ஜ.ம.மு.தலைவர் மனோ கணேசன் பா.உ, சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறுபான்மையினரின் உரிமைகள், உறுதிப்படுத்தப்படும் என பொன்சேகா உறுதியளித்ததாகவும் வேறு சில விடயங்கள் மீதும் இருவருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஐ.ம.மு. ஆதரிக்கப்போவது பொன்சேகாவையா அல்லது வேறொரு வேட்பாளரையா என்பதற்கான இறுதி முடிவு நேற்றுக்கூடிய அரசியல் குழுவினால் எடுக்கப்படவிருந்தது. பொன்சேகாவே ஆதரிக்கப்படுவார் போல் தென்படுகிறது.

ஸ்ரீ.ல.மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் பா.உ., கருத்துத் தெரிவித்த போது பொன்சேகாவைத் தாம் வேட்பாளராக ஆமோதிப்பதற்கு முன்னதாக அவரோடு சில விடயங்கள் கலந்துரையாடப்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகிய பழனி திகாம்பரம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரையும் நேற்று மாலை ரவூப் ஹக்கீம் சந்திக்கவிருந்தார். அரசாங்கமாற்றமொன்று அவசியமென சிறுபான்மைக் கட்சிகள் ஆலோசித்து வருவதாகவும் ஹக்கீம் கூறியுள்ளதாக அறிகின்றோம். அண்மையில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்றதாகிய தமிழ் முஸ்லிம் கட்சிகள் சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என எல்லோரும் எச்சரிக்கையாயிருந்தபோதும் இடைவேளைகளில் தேர்தல் தொடர்பாகக் கருத்துப் பரிமாறியதாக அறியக்கிடக்கிறது. தமிழ் தகவல் நிலையத்தினால் (கூச்ட்டிடூ ஐணஞூணிணூட்ச்tடிணிண இஞுணtணூஞு) ஒழுங்கு செய்யப்பட்ட சூரிச் சந்திப்பில் உண்மையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விடயமே இலைமறை காயாக கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச சக்திகளினது உள்நோக்கமும் அதுதான் எனலாம்.

மேலும், நேற்றுச் சந்தித்த ஐ.தே.க. நடவடிக்கைக் குழு பொது வேட்பாளர் தொடர்பான தனது இறுதி முடிவை அறிவிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஜெனரல் பொன்சேகாவை பொது வேட்பாளராய் நிறுத்துவதை ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க எதிர்த்து வந்தாராயினும் பின்னர் அவர் பொன்சேகாவைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடல் நடத்திய பின்பு தனது இணக்கத்தைத் தெரிவித்ததாகவும் தான் அரசாங்கத்தின் பக்கம் சாயமாட்டாரெனவும் தெரியவருகிறது.

ஜே.வி.பி.யின் போக்கு

மறுபுறுத்தில் ஜே.வி.பி.யானது ஏகபோகமான போக்கில் பொன்சேகா தான் தமது பொது வேட்பாளர் என அறிவித்துள்ளது. வேறு எந்தக் கட்சியுடனும் தாம் கலந்துரையாடல்கள் நடத்தப்போவதில்லையென ஜே.வி.பி முக்கியஸ்தர் அநுரகுமார திசாநாயக்க செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார். தம்மை இடதுசாரிகள் எனப் போலி முத்திரை குத்திக் கொண்டு இனவாதத்தில் மூழ்கிக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் எதிரியென இலகுவில் இனங்காணப்படக்கூடிய ஒருவரைத் தமது பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளதை விடத் துரோகத்தனமும் முட்டாள் தனமும் இருக்க முடியாது. மறுபுறத்தில் ஜே.வி.பி.இன்று ஒரு இடதுசாரிக் கட்சியல்ல என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டுள்ள முடிவானது ஆச்சரியத்திற்குரியதும் அல்ல.

இடதுசாரி வேட்பாளர் விக்ரமபாகு

ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளராக இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன களமிறங்கப் போவதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இந்த நாட்டின் ஆரம்பகால இடதுசாரித் தலைவர்கள் ஜாம்பவான்களாய் விளங்கியதோடு,இடதுசாரி இயக்கத்தை அரும்பாடுபட்டுக் கட்டியெழுப்பி நடத்தி வந்த வர்க்கப் போராட்டங்கள் மற்றும் 1953 ஹர்த்தால் போராட்டம் போன்ற நிகழ்வுகள் மூலம் அவ்வப்போதைய அரசாங்கங்களை ஆட்டிப்படைத்து வந்தனராயினும் இனவாத சக்திகள் கையோங்க விடாமற் செயற்பட்டு வந்தாராயினும் 1960களில் அவர்கள் முதலாளித்துவ சக்திகளோடு இணைந்து பயணிக்கத் தலைப்பட்டதோடு, இடதுசாரி இயக்கம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், சற்றும் பிறழாது சற்றும் சலிக்காது இன்றும் தலைநிமிர்ந்து குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் சமத்துவம்,சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி உரிமைக்காகவும் பொதுவாக அடக்கி ஒடுக்கப்படும் அனைத்து மக்கட் பிரிவினருக்காகவும் ஓங்கி ஒலித்துக் கொண்டு முன்னணியில் நிற்பவர் விக்ரமபாகு என்றால் அது மிகையல்ல.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் 4 வருடகாலச் செயற்பாடுகள்

இன்றைய பிரதான வேட்பாளர் ஜனாதிபதி ராஜபக்ஷவை எடுத்துக் கொண்டால் அவர் கடந்த 4 வருட ஆட்சிக் காலத்தில் அரசியல்,பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியாக நாட்டை ஒரு இருள்மயமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார். யுத்தத்தில் வெற்றியீட்டிய பின் தானே இந்த நாட்டு மன்னன் என்று சித்திரிக்கும் அளவுக்குக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதும் கைமேல் பரிசாக அடுத்த ஜனாதிபதி பதவியும் தனதே ஒழிய வேறு எவரும் அதனை எட்டலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பாணியிலேயே காய்கள் நகர்த்தப்பட்டு வந்தன. ஆனால், அவர் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஜெனரல் பொன்சேகா தனது அரசியல் பிரவேசத்தைப் பகிரங்கப்படுத்தியதும் அரச தரப்பினர் அசந்து போய்விட்டனர். மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் 4 வருட ஆட்சிக் காலத்தில் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை ஏமாற்று விதையாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (அககீஇ) அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமையில் 3 வருட காலத்திற்கு மேலாக அமர்வுகளை நடத்தி ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்து ஜனாதிபதி அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டதை விட வேறு ஒன்றும் நடைபெறவில்லை. மாறாக முதலில் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டுமெனக் கங்கணங்கட்டி நின்று அது நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், அடிப்படைப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்கு வேண்டிய பணியைப் புறந்தள்ளிவிட்டு நாடு இப்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சமாதானம் மலர்ந்து விட்டது என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிக்கப்படுகிறது.

தேர்தல் என்று வந்ததும் இடம்பெயர்ந்தோர் (ஐஈககு) மீளக்குடியமர்த்தல் முன்னர் நத்தை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை திடீரென மாற்றம் பெற்று திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக மெனிக்பார்ம் முகாம்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் திடீர் திடீரென அரசாங்கம் மேற்கொள்வதானது தமிழ் மக்களின் வாக்கு வங்கியைக் குறியாக வைத்தே நடைமுறைப்படுத்தப்படுவதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறாக தாம் பல்வேறு வழிகளில் ஏமாற்றப்படுவதற்கு அவர்கள் இடமளிக்கக்கூடாது.

ஜெனரல் பொன்சேகாவின் கடந்த காலச் செயற்பாடுகள்

மறுபுறத்தில் ஜெனரல் பொன்சேகாவைப் பொறுத்தவரை, அவர் அரசியலுக்குப் புதியவர் என்று நோக்கப்பட்டாலும் அவர் இராணுவத் தளபதியாயிருந்த போது தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக "கனேடியன் போஸ்ட்%27 சஞ்சிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்த கருத்துகள் அவர் இனவாத அரசியலில் நாட்டம் கொண்டவர் என்பது தெளிவாகியிருந்தது. அதற்கு முன்பு அவர் யாழ்ப்பாணத் தளபதியாயிருந்தபோது உயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்குப் பாத்திரமாயிருந்தவர். பெருவாரியான விளைநிலங்கள் முடக்கப்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பல வருடங்களாக இடம்பெயர்ந்து அல்லலுற்ற வண்ணமுள்ளனர்.

ஆனால், இன்று அவர் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக வழங்கும் வாக்குறுதிகளை நம்பி தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றப்படுவதற்குத் தமிழ் தலைமைகள் துணை போகக்கூடாது. மக்கள் தமிழ்த் தலைமைகளாலேயே ஏமாற்றப்படாமல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய காலம் இது.

ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமாயின் தேர்தல் வேளையில் ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி என்றவாறாக பரிவாகப் பேசப்படும் வார்த்தைகள் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அப்பட்டமான ஏமாற்று வித்தைகள் என்பதை யாரும் மறந்துவிடுவதுதான் மிக ஆபத்தானதாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இடதுசாரி சக்திகளை மனப்பூர்வமாக ஆதரிப்பதுதான் அவர்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த கைங்கரியமாகும்.தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் குமுறல்களும் இத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் இன்றைய இக்கட்டான காலத்தில் நன்கு தெரிந்த பேரினவாத சக்திகளை அடியோடு நிராகரித்து இடதுசாரி சக்திகளின் கைகளைப் பலப்படுத்துவதுதான் அவர்களின் விடுதலைக்கான முதற்படியாகும். [நன்றி: தினக்குரல்]

தமிழர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு உட்படாதது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறிலங்காவில் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.

HRW1127.jpg

வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு டிசெம்பர் முதலாம் திகதி முதல் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்படும் என சிறிலங்கா அரசு சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கையை “சாதகமான நடவடிக்கை” என வரவேற்றுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

அதேசமயம், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அனைத்துலக சட்டங்களுக்குப் புறம்பாகப் பலரை அதிகாரிகள் எழுந்தமானமாகத் தடுத்து வைத்திருப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது ஆழந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

முகாம்களில் உள்ளவர்களில் அதிகாரிகளால் அவதானிக்கப்படும் சிலர் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக வேறு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள் என்று தனக்குத் தெரிய வந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

அதற்கும் மேலாகத் தற்போது, 11,000க்கும் மேற்பட்டவர்களை எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் அரசு தடுத்து வைத்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கும் கண்காணிப்பகம், “இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துங்கள் அல்லது விடுவியுங்கள்” என அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

“நீண்ட காலத்தின் பின்னராக இருந்தாலும் முகாம்களில் இருந்து மக்களை விடுவிப்பதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல தமிழர்களை அரசு இன்னும் தடுத்து வைத்திருக்கிறது.

சிறிலங்கா அல்லது அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிரட் அடம்ஸ்.

ஆசிய பிராந்திய இயக்குநர் பிரட் அடம்ஸ்

“மக்களை விடுவிப்பதான அறிவிப்பு எழுந்தமாக இடம்பெறும் தடுத்து வைப்புக்களை எந்தவிதத்திலும் மன்னிப்பதாக அமைந்து விடக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்த அறிக்கையின் விபரம்:
:
கண்காணிப்பகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, முகாம்களில் உள்ள மக்களில் சிலர் டிசெம்பர் முதலாம் திகதி விடுவிக்கப்படமாட்டார்கள். அவர்களை அதிகாரிகள் இப்போதே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக மெனிக் பாமில் உள்ள சிறப்பு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட உள்ளார்கள். அந்த சிறப்பு முகாம்கள் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன.

மெனிக் பாம் முகாமில் இருந்து ஆனந்தன் என்பவரும் இன்னும் பத்திற்கும் மேற்பட்டவர்களும் ஒக்டோபர் 5ஆம் திகதி அன்று அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் என ஆனந்தனின் மனைவி மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“ஒக்டோபர் 5ஆம் திகதி அவர்களைப் பிடித்துச் செல்ல வந்தவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் - அவரிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது, அது முடிந்ததும் ஓரிரு நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என்பதுதான்.

“ஆனால் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் நான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக் காவல்துறையினரிடம் சென்றேன். அவரை என்னிடம் திருப்பித் தந்துவிடுமாறு நான் அழுதேன், கெஞ்சினேன். ஆனால், என்னை அங்கிருந்து போகும்படி மட்டுமே அவர்கள் சொன்னார்கள்” என்றார் ஆனந்தனின் மனைவி.

பிடித்துச் செல்லப்பட்டு 15 நாட்களின் பின்னர் ஆனந்தன் எழுதிய கடிதத்தின் மூலமாக அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் அவரது மனைவிக்குத் தெரியவந்தது. அந்த நேரத்தில் ஆனந்தனின் மனைவி மெனிக் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் பம்மைமடு முகாமுக்குச் சென்று ஆனந்தனைப் பார்வையிட்டவும் அவரால் முடிந்தது.

“அவர் அந்த முகாமில் எவ்வளவு காலம் தங்கி இருக்க வேண்டி இருக்கும் என்பது குறித்து ஆனந்தனுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் (அதிகாரிகள்) அவரிடம் எதுவும் சொல்லவில்லை. நான் அங்கு செல்லும் வரையில் அவர் நீதிவான் முன் கொண்டு செல்லப்படவில்லை. அத்துடன் சட்டவாளர் ஒருவரைத் தனக்காக அமர்த்திக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை” என மேலும் கூறினார் ஆனந்தனின் மனைவி.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து பாதுகாப்புடனும் மதிப்புடனும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோருகின்றது.

மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் விரும்பும் இடத்தில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அல்லது திறந்த முகாம்களில் தங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 140,000 மக்கள் அதிகாரிகளால் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் அல்லது நலன் விரும்பிகள் குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் விடுவிக்கப்படும் போது செல்ல வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அவர்களில் சிலர் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கு ஏனையவர்கள் செல்ல அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பாகக் கவலை கொண்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற போதும், அனைத்துலக மனிதார்ந்த நிறுவனங்கள் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

இருப்பிடங்கள், உணவு, தண்ணீர் சுகாதார வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தேவைகள் பெருமளவில் இருந்த போதும் இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

“தமது வீடுகளுக்குத் திரும்பி உள்ள மக்களிடம் செல்வதற்கு அனைத்துலக உதவி அமைப்புக்களுக்குத் தடை விதிப்பதன் மூலம், அந்த மக்களின் நலன்களையும் சுகாதார நிலையையும் அரசு மேலும் ஆபத்திற்குள் தள்ளுகிறது” என்கிறார் அடம்ஸ். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் அவர்.

“மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, மீள்கட்டுமானத்திற்கான உதவிகளை வழங்கும் நிதியாளர்கள் நிராகரித்துள்ளனர் என்பதுடன் சுயாதீனக் கண்காணிப்பாளர்கள் அந்த மக்களை சுதந்திரமாகச் சென்றடைவதையும் வலியுறுத்துகின்றனர்” என்றும் அவர் கூறினார். [நன்றி: புதினப்பலகை.கொம்]

காணொலி: மருதமலை மாமணியே முருகையா

தயாரிப்பு: திரு. சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பத்தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
படம்: தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: வியரசர் கண்ணதாசன்
குரல்: மதுரை சோமு

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ

மருத மலை
மருத மலை
முருகா

மருதமலை மாமணியே முருகய்யா (2)
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா
உனது மனம் பெற மகிழ்ந்திடவே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
அ.அ..அ..அ..ஆ...
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் (2)
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே
வேலய்யா
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ

தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

November 26, 2009

"மாவீரர் நாள் 2009": மகிமை இழக்காதிருக்குமா?

[புதினப்பலகை.கொம்] மிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றன. முன் எப்போதையும் விட இந்த ஆண்டின் மாவீரர் நாள் வெளிப்படையான பல காரணங்களுக்காக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. ஆனாலும் - உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த அண்டின் மாவீரர் நாள் தனது மகிமையையும் புனிதத்தன்மையையும் இழக்காதிருக்குமா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுகின்றது.

VPO1126.jpg

தமிழ் பேசும் மக்களினது அரசியற் சுதந்திரத்திற்காகவும், தமிழர் தாயகத்தினது விடுதலைக்காகவும் கடந்த 35 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடி - தலைவர் வே. பிரபாகரன் உட்பட 35,000-ற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள்.

அதே வேளை - 60 ஆண்டு காலமாக சிறிலங்கா சிங்கள பெளத்த பேரினவாத அரசுகள் தமிழினம் மீது நடாத்திய இன அழிப்புப் போரில் - 150,000-ற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்.

தமிழினத்தின் விடிவிற்காக தமது உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களையும், படுகொலைக்கு உள்ளான தமிழ் குடி மக்களையும் வணங்கி அஞ்சலி செய்வதற்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழீழம் மற்றும் தமிழகம் என தமிழர்கள் முதன்மையாக வாழும் தாயகப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் - பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்த், சுவிட்சலான்ட், ஸ்கோட்லான்ட், பெல்ஜியம், நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்த், தென்னாபிரிக்கா, மொறீஸியஸ், மலேசியா போன்ற தமிழர்கள் வெறிவாக வாழும் உலகின் ஏனைய நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

1989 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மாவீரர் நாள் - இந்த ஆண்டு 20 அவது மாவீரர் நாள் என்ற வகையிலும் சிறப்புப் பெறுகின்றது. இருந்தாலும் - கடந்த 19 அண்டு காலத்தை விட இந்த வருடத்தின் மாவீரர் நினைவு நிகழ்வுகள், அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒரு முற்றிலும் மாறுபட்ட அக மற்றும் புறச்சூழலில் இடம்பெறவுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கதாகும்.

மாவீரர் நாள் - 2009 நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஒரு புறத்தில் பெருமெடு்ப்பில் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் - தமிழ் மக்கள் மத்தியில் வேறு பல முக்கியமான கேள்விகளும் எழாமல் இல்லை.

இந்த ஆண்டு மே மாத இறுதிக் கட்டப் போர் வரை களத்தில் நின்று போராடி வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் தளபதிகள் மற்றும் போராளிகளின் விபரங்கள் உரிய முறையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுமா என்பது தெளிவாக இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி மூத்த தளபதிகளான பொட்டம்மான், தீபன், சூசை, பாணு, விதுஷா, ஜெயம், சொர்ணம், துர்க்கா, கடாபி போன்றவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட உயர் தளபதிகளும், ஆயிரக்கணக்கான போராளிகளும் - கடந்த ஆண்டு மாவீரர் நாளின் பின்னதாக வீரச்சாவு அடைந்து விட்டார்கள்.

இவர்களில் தளபதிகள் தீபன், கடாபி, விதுஷா மற்றும் துர்க்கா அகியோரது வீரச்சாவு அறிவித்தல்கள் மட்டும் - "பிரிகேடியர்' என்ற படையத் தர நிலையுடன் - ஏற்கெனவே அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டிருந்தன. ஏனையோரது வீரச்சாவு அறிவித்தல்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.


இவை எல்லாவற்றையும் விடவும் அதியுயர் விடயமாக - உயர் முக்கியத்துவம் மிக்க விடயமாக - தலைவர் வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் உள்ளது.

தலைவர் வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு பற்றிய அறிவித்தலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரபூர்வமாக விடுக்குமா, அவருக்கு உரிய முறையில் வீரவணக்கம் செலுத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த வருடத்தின் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படுமா போன்ற கேள்விகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் முதன்மையாக நிலவுகின்றன.

வட அமெரிக்காவில் உள்ள தமிழ்-செயற்பாட்டாளர் ஒருவர் புதினப்பலகை-யிடம் கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்:

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உச்சச் சிறப்பம்சம் என்பது மாவீரர்களைப் போற்றிப் பூசிப்பதாகும். மாவீரர் துயிலுமில்லங்களை நிறுவி, அவர்களுக்கு நினைவாலங்களை எழுப்பி அவர்களைக் கடவுளுக்கு நிகராகப் பூசிக்கும் ஒரு வழக்கத்தை அந்த இயக்கத்தின் தலைவராக இருந்து வே. பிரபாகரன் அவர்களே ஏற்படுத்தினார். அதற்கும் மேலாக - ஒட்டு மொத்தமான தமிழ் இனத்தினதும் பாகுபாடுகள் அல்லாத ஒரே புனித நிகழ்வாக மாவீரர் நாளை அவர் உருவாக்கினார்.

இவ்வாறாக - மாவீரர் வணக்கம் என்பதை தமிழரது வரலாற்றில் ஒரு பண்பாட்டு மரபாகவே நிலைப்படுத்திய அந்தத் தலைவன் வீரச்சாவு அடைந்து மாவீரன் ஆகிவிட்ட பின்னர் அவரது படத்தை வைத்து ஒரு பூ இட்டு அஞ்சலி செலுத்த முடியாது இருப்பது ஒரு பெரும் வரலாற்றுத் துயரம்."

இதே வேளை - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் "செயற் குழு" வட்டாரங்களுக்கு நெருக்கமான ஒரு ஐரோப்பியச் செயற்பாட்டாளர் ஒருவர் புதினப்பலகை-யிடம் கருத்துத் தெரிவிக்கும் போது -

"தலைவர் அவர்கள் இன்னும் உயிரோடு வாழ்கின்றார் என திடமாக நம்புகின்றவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் - தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பது உறுதியாகத் தெரிந்திருக்கும் பொறுப்பு வாய்ந்த இடங்களில் இருப்பவர்கள் கூட அவருக்கு அஞ்சலி செய்ய மறுக்கின்றார்கள்" என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, "உலக நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளையும், தொண்டர்களையும், தமிழ்-செயற்பாட்டாளர்களையும் வழி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களே - தலைவர் அவர்கள் உயிர் வாழ்வது போன்றதான தவறான தகவல்களை வழங்கி தமக்குக் கீழ் செயற்படுகின்றவர்களைப் பிழையான திசையில் அழைத்துச் செல்லுகின்றார்கள்" என்று கூறினார்.

சென்னையில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, "தமிழ் நாட்டிலிருக்கும் பெரும் தமிழுணர்வாளர்கள் கூட இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்" என்று குறிப்பிட்டார்.

"உலகத் தமிழ் சமுதாயத்தினது நன்மதிப்பைப் பெற்றிருக்கும் தமிழகத் தலைவர்கள் கூட - தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பது தமக்கு உறுதியாகத் தெரியும் எனவும், அவர் விரைவில் வெளிச்சத்திற்கு வருவார் என்பது போலவும் தொடர்ந்து கூறிவருவது தமிழக மக்களை மட்டுமல்லாமல், அவர்கள் மீது மரியாதை வைத்து அவர்கள் சொல்லுவதை உண்மை என நம்புகின்ற உலகத் தமிழ் மக்களையும் குழுப்பத்தில் ஆழ்த்துகின்றது.

இதேவேளை - கொழும்பில் இருக்கும் முதன்மையான தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்த விடயத்தை வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கினார்:

"தலைவர் பிரபாகரன் அவர்களது உடலையும் கைப்பற்றி, அவரது படங்களையும் வெளியிட்டிருந்தது சிறிலங்கா அரசு. இந்த நிலையில் - தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் வாழ்கின்றார் என நாம் விடாப்பிடியாக வாதிடுவது - தமிழரது அறிவு நிலை பற்றி சிங்களவர்கள் ஏளனம் செய்யவே வழிவகுக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியிலேயே நாளைய "மாவீரர் நாள்" பொழுது தமிழர்களுக்கு விடியப் போகின்றது.

"மாவீரர்கள்" எல்லோரையும் பூசிக்கும் ஒரு புனித நாள் என்ற தனது மகிமையை இழக்காமல் - தலைவர் வே. பிரபாகரன் உட்பட - உண்மையிலேயே மாவீரர்கள் ஆகிவிட்ட எல்லோருக்குமே அஞ்சலி செய்யும் ஒரு உன்னத நாளாக நாளை காலை விடியுமா, அல்லது "மாவீரர் நாள்" என்பது இனிமேல் ஒரு வெறும் சடங்காக மட்டுமே கொண்டாடப்படப்போகின்ற ஒரு நிகழ்வாகத் தனது மகத்துவத்தை இழந்துவிடப் போகி்ன்றதா என்பதை காலம் தான் தெளிவுபடுத்தப் போகின்றது. [நன்றி: புதினப்பலகை.கொம்]

November 23, 2009

அரச சார்பற்ற நிறுவனங்கள் குறைபாடுகளை ஐ.நாவிடம் முறையிடக்கூடாது - சிறிலங்கா

சிறிலங்காவில் உள்ள அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரச்சினைக்குரிய விடயங்கள் குறித்து அரசுடன் மட்டும்தான் இனி பேச வேண்டுமே தவிர ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடக்கூடாது என கொழும்பினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொண்ட அரச தலைவரின் சிறப்புச் செயற் குழுத் தலைவரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச இந்த அறிவுறுத்தலை அண்மையில் வழங்கினார் என ‘இன்னர் சிற்றி பிரஸ்’ தெரிவித்துள்ளது.

BNMNO1124.jpg

2009 ஜனவரியில் பசில் ராஜபக்சவுடன் ஐ.நா. போதுச்செயலர் பான் கீ மூன்

முட்கம்பி வேலிகளுக்கு இடையில் படையினரால் காக்கப்படும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு டிசெம்பர் முதலாம் திகதி முதல் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்படும் என சிறிலங்கா அரசு சில நாட்களின் முன்னர் அறிவித்தது. ஆனால், இந்த நடமாட்ட சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்ட அளவிலேயே இருக்கும் என அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில், தனிமனிதப் பாதுகாப்புத் தவிர்த்து மக்களின் நடமாட்ட சுதந்திரத்திற்கு வேறு எந்தத் தடைகளும் இல்லை என்று கோமஸ் கூறினார்.

அரசு அறிவித்துள்ள நடமாட்ட சுதந்திரம் என்பது வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமானது என்றும் முகாம்களைவிட்டு வெளியே செல்வதற்கு நாளாந்தம் அனுமதிச் சிட்டைகள் பெறப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவில் இயங்கி வரும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனமான ‘ஒக்ஸ்பாம்’ [Oxfam] தெரிவித்திருந்தது.

இது பற்றி கோல்மஸ்சிடம் மத்யூ லீ கேட்டதற்கு, “மக்கள் பகல் நேரங்களில் முகாம்களைவிட்டு வெளியே செல்லலாம்; உலகம் நடமாட்ட சுதந்திரம் என்று எதனை வரையறுக்கிறதோ அதற்கு ஏற்றது போலவே இதுவும் அமைந்திருக்கிறது” என அவர் பதிலளித்தார்.

ஆனால், முட்கம்பி வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள முகாம்களின் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் வரைக்கும் அதனை எப்படி நடமாட்ட சுதந்திரம் என வரையறுக்க முடியும் என ‘இன்னர் சிற்றி பிரஸ்’ செய்தியாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதே போன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐ.நா.விடம் முறையிடக்கூடாது என்ற சிறிலங்கா அரசின் அறிவுறுத்தலும் அப்படி ஒன்றும் சிறிய விடயம் இல்லை என்றும் மத்யூ லீ சுட்டிக்காட்டி உள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து ஐ.நா. வெளியேற்றப்பட்டதன் பின்னர் அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று, தகவல்கள் வெளி உலகுக்குப் போகக் கூடாது என நினைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா. கவனக்குறைவுடனேயே நடந்து கொள்கிறது எனவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார். [நன்றி: புதினப்பலகை.கொம்]

November 22, 2009

ஒரு நேரடி சாட்சி: போரினால் துரத்தப்பட்ட வன்னி மக்களின் மீள்குடியமர்வு

சிறி லங்கா படையினரால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வரும் தமிழ் மக்களின் நிலை இங்கு விபரிக்கப்படுகின்றது.

அந்த மக்களின் நிலையை நேரடிச் சாட்சியாகக் கண்ணுற்ற தொண்டர் நிறுவனப் பணியாளர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த இந்தக் குறிப்பை புதினப்பலகை-ற்காக மொழியாக்கம் செய்தவர் ரி.ரேணுபிரேம்:

camp01.jpg

கருக்குளம் பாடசாலைக்கு அருகில் மாணவர்கள்

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றுக்குச் செல்லும் அரிய சந்தர்ப்பம் கடந்த வாரம் எங்களில் சிலருக்குக் கிடைத்தது.

வெளியாட்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்வது மிக மிகக் கடினம். வவுனியாவில் உள்ள "மெனிக் பாம்" [Menik Farm ](மாணிக்கம் பண்ணை) முகாம்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது.

நாங்கள் வவுனியாவை அடைந்த போது "குடிபெயர்வுக்கான அனைத்துலக அமைப்பு" - ஐ.ஓ.எம். [International Organization for Migration - IOM] சின்னம் பொறித்த வாகனங்கள் (பாரவூர்திகள், பேரூந்துகள்) நீண்ட வரிசையில் நிற்பது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமரும் கிராமங்களுக்கோ, வவுனியா நகரசபை மைதானத்திற்கோ அல்லது மேலதிக விசாரணைகளுக்காக மற்றொரு முகாமுக்கோ மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரேயொரு அரச சார்பற்ற நிறுவனம் ஐ.ஓ.எம்.

சனிக்கிழமை 10.30 மணியளவில் நாங்கள் வவுனியாவை அடைந்தோம். கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மெனிக் பாம் முகாமில் இருந்து மீளக்குடியமர்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த மக்கள் நகரசபை மைதானத்தில் பார்வையாளர் பகுதியில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்து இருந்ததைப் பார்த்தோம்.

ஆனால், அந்த மக்கள் சிறிலங்கா படையினரால் மிக இறுக்கமான காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களைச் சந்தித்துப் பேசுவது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. சில காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டு வவுனியாவில் தமது உறவினர்களுடன் தங்கி இருந்த தமிழ் மக்களை மட்டுமே எம்மால் சந்தித்துப் பேச முடிந்தது.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 13 பேரை நான் சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் அனைவருமே தமது குடும்பத்தில் ஒருவரை அண்மைய போரின் போது இழந்திருந்தனர் அல்லது அதற்குப் பின்னரான பல்வேறு களையெடுப்பு [Screening] நடவடிக்கைகளில் தொலைத்துவிட்டிருந்தனர்.

அவர்களில் இரு பெண்களால் மட்டுமே தமது உறவினர்கள் காணாமல் போனமை குறித்து அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவிடம் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடிந்திருந்தது.

ஒரு பெண், முன்னாள் போராளியான தனது சகோதரியை பம்மைமடு புனர்வாழ்வு முகாமில் கடைசியாக ஒரு தடவை பார்த்திருக்கிறார். இரண்டாவது தடவையாக அவர் அங்கு சென்ற போது அவரது சகோதரி மாற்றப்பட்டு விட்டார் என்றே அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முகாமின் பொறுப்பதிகாரி அது பற்றிய விபரங்கள் எதனையும் அந்தப் பெண்ணுக்குத் தரவில்லை.

மற்றொரு பெண்ணின் கணவர், அவர்கள் "மெனிக் பாம்" நான்காவது மண்டலத்தில் இருந்த போது பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணோ இப்போது ஐந்த மாதக் கர்ப்பிணியாக இருக்கின்றார்.

எங்களுடனான கலந்துரையாடலின் போது தனது சொந்த ஊரான கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சிக்குச் சென்றுவிடுவதற்கு தனக்கிருக்கும் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். ஆனால், தனது சுய விருப்பத்தின் பேரில் வெளியேறி ஏற்கனவே வவுனியாவில் உறவினர்கள் வீட்டுக்கு வந்து விட்டதனால் அரசின் மீள்குடியமர்வுத் திட்டத்தின் கீழ் தான் மீண்டும் தனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். ஏனெனில் அரசின் மீள் குடியேற்றத் திட்டத்திற்கு "மெனிக் பாம்" கூடாரங்களில் உள்ளவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

மக்கள் மீள் குடீயேற்றப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் மக்களுக்குச் சாதகமானதாக இருக்கும் ஒரு விடயத்தை நான் பார்த்தேன். அங்கு வீடுகள் இன்னும் நின்று கொண்டிருக்கின்றன என்பது தான் அது. முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் இருந்து தமது சொந்த வீடுகளுக்குத் தாம் திரும்பி இருப்பதை மீளக்குடியமர்த்தப்பட்ட பெரும்பாலானவர்கள் வரவேற்றனர். எப்படி இருந்தாலும் - அவர்களின் நடமாட்ட சுதந்திரம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

camp02.jpg

மன்னார் பெருநிலப் பரப்பின் வடக்கே, உயிலங்குளம் வீதியில், சேதமடைந்துள்ள ஓர் ஆலயம்

"மெனிக் பாம்" முகாம்களில் இருந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் நடமாட்டம் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

நாங்கள் துணுக்காய்குச் சென்ற போது அங்கு 1,200 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தன. அவர்களுக்கு 5,000 ரூபா பணமும் சில மாதங்களுக்குத் தேவையான உலர் உணவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் வங்கிக் கணக்கில் மாவட்டச் செயலகத்தால் 20,000 ரூபா பின்னர் வைப்பிலிடப்படும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பி இருப்பவர்களுக்கான அரச உதவிகள் பற்றி நாங்கள் மேலும் விசாரித்த போது, எங்களுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

அவர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா பண உதவி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரகத்தின் [United Nations High Commissioner for Refugees - UNHCR] புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழேயே வழங்கப்படுகிறது. ஆனால் அது சிறிலங்கா அரசின் மீள்குடியமர்வு அமைச்சின் ஊடாகக் கொடுக்கப்படுகிறது. அதே போல - உலக உணவுத் திட்டத்தினால் [World Food Program] வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் சிறிலங்கா அரச மாவட்ட செயலகங்கள் ஊடாகக் கொடுக்கப்படுகின்றது.

2001ஆம் ஆண்டு போர் ஓய்வு ஏற்பட்டிருந்த போது நிக்கொட் (மீள் அபிவிருத்திக்கான வடக்கு-கிழக்கு சமூக நிறுவனம்) அமைப்பு மீளக்குடியமர்ந்தவர்களுக்கு வழங்க நிர்ணயித்த 25,000 ரூபா தொகையே 8 வருடங்கள் கழித்து இப்போது மீளக்குடியமர்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கி-யினால் நிக்கொட் திட்டம் அப்போது செயற்படுத்தப்பட்டது. [Resettlement incentive by the North East Community Organization for Restoration Development (NECORD) program funded by Asian Development Bank].

நாங்கள் சேகரித்த தகவல் படி, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு மாவட்ட அரச அலுவலகங்கள் மூலம் கொடுக்கப்படும் உதவிகள் அனைத்தும் ஐ.நா. அமைப்புக்கள் மூலமாக அல்லது ஐ.ஓ.எம். [International Organization for Migration - IOM] மூலமாக மட்டுமே வழங்கப்பட்டவையாகும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று எங்களுக்குக் கூறப்பட்டது. அவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கு சிறிலங்கா அரச தலைவரின் வடக்கு புனர்வாழ்வுக்கான விசேட செயற்குழுவின் சிறப்பு அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். எப்படி இருப்பினும் "மெனிக் முகாம்" மண்டலங்களில் சில உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதை நாங்கள் அவதானித்தோம்.

தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பாத வரைக்கும் தடுப்பு முகாம்களில் இருந்து தாம் வெளியேறப் போவதில்லை என்று "மெனிக் முகாம்" மண்டலங்கள் 4, 6 மற்றும் 7-இல் நாங்கள் சந்தித்த மக்கள் தெரிவித்தனர். ஏனெனில் தமது உறவினர்களுடன் வாழ்வதற்காக வெளியேறிச் சென்றவர்கள் படும் துன்பங்கள் குறித்த பல செய்திகளை அவர்கள் கேள்விப்படுகின்றனர்.

camp03.jpg

அடம்பன் பகுதியில் சேதமடைந்துள்ள ஒரு பாடசாலை

நான் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் "மெனிக் பாம்" கூடாரங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தத் தடவை, கண்காணிப்புப் பலமாக இருந்த போதும், அந்த மக்கள் எங்களை தீரத்துடன் எதிர்கொண்டார்கள் என்று சொல்ல முடியும். அதிலும் பெரும்பாலும் பெண்கள் தமது கதைகளை எம்முடன் துணிந்து பகிர்ந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அவர்கள் மீண்டும் மீண்டும் எம்மிடம் சொல்வதெல்லாம், தாங்கள் மற்றொரு இடைத்தங்கல் முகாமில் அடைக்கப்படாமல் சொந்த இடங்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பது தான்.

முகாம்களில் இருந்து விசாரணைக்கு என கூட்டிச் செல்லப்பட்டவர்கள் (பெரும்பாலும் இளைய வயதினர்) திரும்பி வரவேயில்லை என்பது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவ்வாறு காணாமல் போனவர்களின் பெயர் விபரங்களை அங்கிருந்த பெண்கள் சிலர் எங்களிடம் எழுதிக் கொடுத்ததுடன், சிறிலங்கா அரசு சொல்வதைப் போல - அவர்கள் எல்லோரும் உண்மையிலேயே "புனர்வாழ்வு நிலைய"ங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்து அறியுமாறும் எங்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அத்தகைய 14 "புனர்வாழ்வு நிலையங்கள்" இருப்பதாகத் தாம் அறிவதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால், அந்தப் பெண்கள் குழு கொடுத்த பட்டியலை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் எங்களுக்குச் சொன்னார். அப்படி அதை நாம் எடுத்துச் சென்றால் முகாமை விட்டு வெளியேறும் இடத்திலுள்ள படையினரின் சோதனைச் சாவடியில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவர் விளக்கினார்.

காணாமல் போனவர்கள் மற்றும் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அனைத்துலக அமைப்புக்களிடம் நான் விசாரித்தேன். கடந்த யூலை மாதத்தில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க [International Commiittee of Red Cross - ICRC] "பிரதிநிதிகள் கூட "மெனிக் பாம்" மற்றும் "புனர்வாழ்வு நிலையங்களுக்கு" செல்ல முடியவில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது.

நாங்கள் மன்னாருக்குச் சென்றபோது அங்கு மிகப் பிரத்தியேகமான பாதுகாப்பு நடைமுறை இருந்ததை நான் உணர்ந்தேன். வடக்கு- கிழக்கில் நான் கடந்த 12 வருடங்களாகப் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இதற்கு முன்னர் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைக் கெடுபிடிகளை நான் எங்கும் பார்த்ததில்லை.

நாங்கள் மன்னார் தீவில் எமது தொடர்பாளர்களைச் சென்றடைந்த போது, அங்குள்ள அரச அதிகாரிகள் எவரும் எங்களுடன் பேசமாட்டார்கள் எனக் கூறப்பட்டது. சிறிலங்கா படைகளின் மன்னார் கட்டளை அதிகாரிக்கும் பொது நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட ஒரு பதற்ற நிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

மன்னார் அரச அதிபரால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு (ஐ.நா. உட்பட) அனுப்பி வைக்கப்பட்ட யூலை 28 திகதி இடப்பட்ட அறிக்கை எங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையின் சாரம், “வடக்கில் எந்தவொரு புனர்வாழ்வு மற்றும் உதவிப் பணிகளிலும் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களாயினும் அதற்கு (சிறிலங்கா) அரச தலைவரின் "வடக்கு புனர்வாழ்வுக்கான சிறப்புக் குழு"வின் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தி, மீள்குடியமர்வு தொடர்பான வேலைத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முறையான அனுமதி பெறப்படவேண்டும். அத்துடன் அனுமதி மற்றும் திட்டம் அது தொடர்பான அறிக்கை என்பன அரச அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என்பதாகும்.

இந்த விதிமுறையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமைக்கு சில உள்நோக்கங்கள் இருப்பதாக எமக்குச் சொல்லப்பட்டது. அத்துடன், மன்னாரில் மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் படை அதிகாரி - பொது நிர்வாக அதிகாரிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள் என்று கூறி அவர்களை எச்சரிக்கையும் செய்துள்ளார்.

அரச சார்பற்ற பிரதிநிதிகளை நாம் அங்கு சந்தித்த போது இந்த விளையாட்டு பெரிய பிரச்சினையாக இருந்தது. அவர்கள் முழுமையான தடுமாற்றத்தில் இருந்தார்கள் என்பது தெரிந்தது. அடிப்படை வசதிகள் தேவையாக இருக்கின்ற மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தம்மால் எந்த உதவிகளையும் செய்ய முடியாத நிலை இருப்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மக்களுக்கு உதவி செய்வதற்கான வளங்கள் இருக்கின்ற போதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறிப்பாக - உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன.

எம்மிடம் வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் “நாங்கள் மெனிக் முகாமில் இருந்த போது எங்களுக்கு சப்பிடுவதற்காவது ஏதாவது யாராவது கொடுத்தனர்; ஆனால் இங்கு நாம் பட்டினி கிடக்கிறோம்” என்று சொன்னார். எவ்வளவு காலத்திற்குத்தான் தமது உறவினர்கள் தமக்குச் சாப்பாடு போடுவார்கள் என்றும் ஏன் யாருமே தங்களுக்கு உதவுவதில்லை என்றும் அவர் எங்களிடம் கேள்வி எழுப்பினார்.

camp04.jpg

அடம்பன் வீதியில், மரத்திற்குக் கீழே, மீள் குடியேறியோரின் ஓரு குடிசை

நாங்கள் முசலி (மன்னார் பெருநிலப் பரப்பின் தென்பகுதி) மற்றும் அடம்பன் (மன்னார் பெருநிலப்பரப்பின் வடபகுதி) ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தோம். இப்பகுதிகளிலும் மீள்குடியமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

ஐ.ஓ.எம். வழங்கியிருந்த தற்காலிக கூடாரங்களைப் போட்டுக் கொண்டு அவர்கள் தமது வாழ்க்கையை ஆரம்பித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தடிகளை வெட்டி நட்டு 16 X 12 சதுரஅடிக் கூடாரங்களை அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். இந்தத் தற்காலிகக் கூடாரங்களின் கீழே எந்தச் சுவர்களும் கிடையாது. சேலை, பனையோலை, பழைய துணிகள் என்பவற்றைக் கொண்டு மக்கள் மறைப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

முசலி மீள்குடியமர்வு கடந்த ஏப்ரல் மாதமே உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுவிட்டது. மக்கள் யூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் இந்த தற்காலிக கொட்டகைகளில்தான் வாழ்கிறார்கள். தனியான கழிப்பிட வசதிகளோ மறைவான குளியலறைகளோ இல்லாத காரணத்தால், பாம்பு மற்றும் யானைகளால் தாக்கப்படுகின்ற நிலைமையிலும் இரவு நேரங்களில் காட்டுப்பகுதிக்கு இயற்கைக் கடன் கழிக்கச் செல்ல வேண்டி இருப்பதாகப் பெண்கள் முறையிடுகிறார்கள்.

இந்தக் கிராமங்களுக்கு இடையில் - சிறிலங்கா படையினர் குடியிருப்பதற்குக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கள் மட்டுமே அங்கு நிலையான உறுதியான கட்டங்களாக உள்ளன.

சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு பல மைல் தூரம் நடக்க வேண்டியவர்களாக உள்ளனர். பார்வைக்கு எட்டிய தூரம் வரை எந்த ஒரு மருத்துவமனையையும் எம்மால் பார்க்க முடியவில்லை. நாங்கள் பயணித்த கிராமத்தில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் செல்லக்கூடிய முருங்கன் வைத்தியசாலைக்கே மக்கள் செல்ல வேண்டி இருப்பதாக எமக்குச் சொல்லப்பட்டது.

வீதி மிக மோசமான உள்ளது. பள்ளமும் குழியும் சேறுமாக அந்த வீதி தொடர்கிறது. ஒரு கட்டத்தில் - நாம் எமது முச்சக்கர வாகனத்தை விட்டுவிட்டு நடந்தே சென்றோம். ஏப்ரல் மாதத்தில் மாதிரி மீள்குடியமர்வு செவிரியாபுரத்தில் தொடங்கப்பட்டபோதே இந்த வீதிப் புனரமைப்பும் தொடங்கப்பட்டது.

நாம் மன்னாருக்குத் திரும்பி வரும் வழியில், கள்ளிமோட்டை முகாமில் வைத்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அங்கே முகாமுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்துகளுடன் தொடர்புடைய சிலருடன் பேசும் போது நாம் கேள்விப்பட்டவை அச்சுறுத்தலானவையாக இருந்தன. பொது மக்கள் உடையில் இருக்கும் தமிழ் பேசும் நபர்களே மக்களை சோதனை செய்து வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம்.

அந்தப் பேரூந்துகளிலும் பார ஊர்திகளிலும் ஐ.ஓ.எம். [International Organization for Migration - IOM] சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதால் அந்த அமைப்பைச் சேர்ந்த யாராவது அங்கு இருக்கின்றார்களா என விசாரித்தோம். ஒரு நமுட்டுச் சிரிப்புடன் “இல்லை” என்ற பதில் வந்தது. பின்னர் இளம் பெண் ஒருவர் பேரூந்துக்குத் திரும்பச் செல்ல முடியாது தடுக்கப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். ஏனையவர்கள், அவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

ஒரு இளைஞர் எம்மிடம் வந்து “ஐ.ஓ.எம். அதிகாரிகள் ஏன் இங்கு இல்லை என்பது இப்போது தெரிந்திருக்குமே!” என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தக் கதையை நான் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவரிடம் விபரித்த போது - "மீளக்குடியமர அனுப்பப்படும் மக்கள் பல்வேறு நிலையங்களில் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்தச் சமயங்களில் அவர்களில் சிலர் கடத்தப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.

நிறையக் குடும்பங்கள் தமது செயல்திறன் நிறைந்த ஆண் அல்லது பெண் உறுப்பினரை போரின் போது இழந்து விட்டிருக்கின்றன; அல்லது, அவர்கள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் பெண்கள், குழந்தைகள், வயது மூத்தவர்கள் என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருங்கி இருப்பதை நாங்கள் நேரில் கண்டோம்.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக - விரும்பத்தக்கதாக - மீளக்குடியமரும் இந்த மக்களின் நிலை இருக்கவில்லை. எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி - முறையான குடியிருப்பு இடங்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், பாடசாலைகள், குடி தண்ணீர் ஏற்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக வருமானத்திற்கான வாய்ப்புகள், அதற்கும் மேலாக நடமாட்டச் சுதந்திரம் இன்றி இந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவது குறித்து எப்படி யாரும் மகிழ்ச்சி அடைய முடியும்? [நன்றி: புதினப்பலகை.கொம்]

November 21, 2009

காணொலி: 'இதயத்தில் அசைவுகூட மொழியாகும்'

டம் : மொழி
பாடல் : காற்றின் மொழி
இசை : வித்யாசாகர்
பாடலாக்கம்: வைரமுத்து

mozhio1120.jpg

யற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

பாடியவர்: சுஜாதா

பாடியவர்: பல்ராம்

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

November 18, 2009

சிறிலங்காவில் போருக்குப் பின்னான மீட்சி: அமெரிக்க நிலைப்பாடு

சிறிலங்காவில் இனங்களுக்கு இடையிலான கருத்து இணக்கம் ஏற்பட - தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு, இயல்பாகவும் பாதுகாப்பாகவும் தமது சொந்த இடங்களில் வாழ அவர்களுக்கு வழி செய்யப்படுவது இன்றியமையாதது என அமெரிக்கா அழுத்தமாக நம்புவதாக "வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா" [Voice of America] குறிப்பிட்டுள்ளது.

இந்த மீள் குடியேற்ற விடயத்தில் சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள "வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா" [Voice of America] இணையத் தளத்தின் ஆசிரியர் தலையங்கம் - தமது கருத்து அமெரிக்க அரசாங்கத்தின் கருத்தையே பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரம்:

26 ஆண்டுகளாக நீடித்த சிறிலங்கா உள்நாட்டுப் போர் முடிவடைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நீண்ட காலமாகக் காத்திருக்கிறார்கள்.

சுமார் 30 ஆண்டு காலமாக சிறிலங்கா அரசுக்கு எதிராகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் கடந்த மே மாதம் 17ஆம் நாள் சரணடைந்தார்கள். புலிகள் இயக்கம் அமெரிக்கா உட்பட 31 நாடுகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் படி இந்த உள்நாட்டுப் போரில் ஒரு லட்சம் வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. 247,000 பேர் இடம்பெயர்ந்து அரசு நடத்தும் தடுப்பு முகாம்களில் தங்கி இருக்கின்றனர்.

முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவர் என சிறிலங்கா அரசு உறுதி அளித்திருக்கிறது. ஆனால், அதனைச் செயற்படுத்தும் வேகம் மிக மெதுவானதாகவே இருக்கிறது.

இருந்தாலும் முகாம் மக்களை விடுவிக்கும் வேகம் ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதுவரை மூன்றில் ஒரு பகுதி மக்களே வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
163,000 பேர் இன்னமும் முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அனைத்துலக அபிவிருத்திக்கான முகவரமைப்பு (யுஎஸ்எய்ட்) [ United States Agency for International Development - USAID] - போரின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கைப் புனரமைப்பதற்கும், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவிகளை வழங்கி வருகின்றது. இவ்வாறான உதவிகள் பல அரசுகளாலும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆயிரம் வரையான முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி சிறிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் 2 வருடகால செயற்திட்டம் ஒன்றை யுஎஸ்எய்ட் அண்மையில் ஆரம்பித்தது.

முன்னாள் போராளிகளை அவர்களது சமூகத்தில் மீண்டும் இணைத்து, போருக்குப் பின்னான சமமூகத்தை இயல்பு வாழ்வுக்குக் கொண்டுவருவது இந்தப் பயிற்சிகளின் நோக்கம்.

‘முன்னாள் போராளிகள் சமூகத்திற்குள் திரும்பி தமது வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெறுவதற்குமான சந்தர்ப்பத்தை இந்தப் பயிற்சிகளும் உதவிகளும் வழங்கும்” எனத் தெரிவித்தார் யுஎஸ்எய்ட் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் ரொபேக்கா கோன்.

‘இந்த உதவிகளினால் அந்த ஆண்களும் பெண்களும் தமது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். தமக்கென புதிய லட்சியங்களை உருவாக்கி, புதிய கனவுகளைக் காண முடியும்” என்றார் அவர். [நன்றி: புதினப்பலகை.கொம்]

November 16, 2009

"இடம்பெயர்ந்த மக்கள் விடயத்தை அரசு கையாளும் விதம் எமக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை"

ன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடயத்தை சிறிலங்கா அரசு கையாளும் விதம் எமக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை என செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.

மேலும், இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் நிறுத்தப்படவில்லையானால், அது மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சண்டை டைம்ஸ்” வார ஏட்டுக்கு (நவம்பர் 15) அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்:

ன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடயத்தை சிறிலங்கா அரசு கையாளும் விதம் எமக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அப்படியே அள்ளிச் செல்லும் மக்களை முறையான அடிப்படை வசதிகள் எதனையும் வழங்காது அங்காங்கே உதறித் தள்ளி விடுகிறது.

அவர்களுக்கு வீடுகளும் கிடையாது, வருமானத்திற்கான வழிகளும் கிடையாது. விவசாயத்திலோ மீன்பிடித் தொழிலிலோ ஈடுபடாமல் அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது. பலர் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையில் அவர்களின் சொந்த பூமி வன்னிப் பிரதேசமாகும்.

மீள்குடியமர்த்தப்பட்ட பல குடும்பங்கள் இப்போது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலேயே வாழ்கின்றன. வாழ்க்கையை திரும்ப ஆரம்பிப்பதற்கு வெறும் 5,000 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

சில குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஏனெனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் ஒன்று சேர்க்கப்படவில்லை. தமது குடும்பத்தினர் இருக்கும் இடங்களை அறிய அவர்கள் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

சிங்களக் குடியேற்றம்:

அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் ஒரு சிக்கலான சூழல். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வெளி இடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கான நம்பகமான தகவல்களை நான் வைத்திருக்கிறேன்.

தமிழர்களின் ஆயுதக் கிளர்ச்சி உருவாவதற்கு சிங்களக் குடியேற்றங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் மீண்டும் அவை தொடங்கப்பட்டுள்ளன. இது மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அதிகாரப் பரவலாக்கம்:

துன்பியல் நிகழ்வாக, அதிகாரங்களைப் பகிரும் விடயத்தில் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு பாதகமாகவே இருக்கிறது. ஒரு சரியான தீர்வைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவும் கூடத் தோல்வியே அடைந்துள்ளது. அரசின் தீர்வுத் திட்டத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒன்றை அரசு வைத்திருக்கிறதா என்பதே எங்களுக்குத் தெரியாது.

தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பு:

தமிழ் பேசும் மக்கள் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். குறைந்தபட்ச வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாத் தமிழ்க் கட்சிகளும் பொதுக் காரணதிற்க்காக ஒன்றிணைந்தால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதுடன் நமது நில உரிமையையும் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம்.

நன்றி: [http://www.puthinappalakai.com]


November 15, 2009

அன்பு சிவமென்றால் - ஜெயகாந்தன் கவிதைகள்...

~அன்பு சிவமென்றால்
அன்பினால் பெற்ற
துன்பம் சிவமாவதில்லையா?
பேரின்பம் பெரிய சிவம்;
சிற்றின்பம் சிறிய சிவம்!

JO1115H.jpg

ஜெயகாந்தன்

~நாலு வயதில் இருந்து - நான்
நடந்து வந்திருக்கேன்! - இப்போ
நடத்தை சரியில்லை என்கின்றார் - வயதோ
நாற்பதும் ஆகிறது!

~வேர்விட்டு விட்டது போல்
வேரிடம் போகாமல்
வீற்றிருக்கும் நல்விருட்சம்
பேரிட்டவர் இல்லை
பெற்றுவிட்டவர் இல்லை
ஆரிட்ட விதையோவிது அறியேனே!

~கொள்ளுவன கொள்ளுக
கொண்டபின் கொடுப்பவர் ஆகுக!
தள்ளுவன தள்ளுக
தள்ளியபின் தவமொன்றியறுக!
சொல்லுவன சொல்லுக
சொல்லாலே ஒரு சுடதனை ஏற்றுக!

~புரிந்தேன் என்பதும் புரியவில்லை என்பதும்
போடுகின்ற வெறுங் கூச்சல்!
அறிந்தேன் என்பதும் அறியேன் என்பதும்
அடக்கம் போன்றதோர் அகம்பாவம்!

~எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என வாழ்நாள் எல்லம் திருநாள்
மரணம் எனக்குக் கரிநாள்!

~அட்சய வயிறு படைத்தீரே! - ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! - அந்த
பிச்சையிட் டவனை பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே! - என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?

~வாழ்வதன் முன்னம்நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
சோர்வுக்கு பின்னாலும் சுகித்திருப்பேன்
வித்துக்கு முன்னால் நான் விளைந்திருந்தேன்
விளைவுக்குப் பின்னாலும் வித்தாவேன்
முடிவுக்கு முன்னால்நான் முதலானேன்
முடிந்தாலும் முடிவுக்கோர் முதலாவேன்
அசைவுக்கு முன்னால் நான் அணுவானேன்
அணுபிளந் தாலும் பிளவுக்குள் அசைவானேன்!

- 'ஜெயகாந்தன் கவிதைகள்' புத்தகத்திலிருந்து.....

வெளியீடு: தொடுவானம் 190/அ5 - ஸ்ரீ சாய் நகர், தொழிற்பேட்டை, கோயமுத்தூர்- 641 021

November 13, 2009

காணொலி: வானம் எல்லை இல்லை

லக நாயகன் கமலின் 'உன்னைப்போல் ஒருவன் திரைப் படத்திலிருந்து:

வானம் எல்லை இல்லை
பாடியவர் : சுருதி ஹாசன் மற்றும் ப்ளாஸே

November 01, 2009

காணொலி: மூச்சு விடாமல் 'மண்ணில் இந்த காதல்'-குன்னக்குடி வைத்தியநாதன்

குன்னக்குடி வைத்தியநாதன் (2 மார்ச், 1935 - 8 செப், 2008)

திரைப் படக்காட்சி: ராதிகா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

படம் : கேளடி கண்மணி
பாடலாசியர்: கங்கைஅமரன்
இசை : இளையராஜா

தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு ~ எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

ண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்................

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
என்னைவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ