பக்தியிசை: 'உன்னை நினைக்காமல் ஒரு செயலும் இல்லை'
'முன்னை முழு முதலே, மூத்த கணபதியே'
பாடியவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
வரிகள்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
« September 2009 | Main | November 2009 »
'முன்னை முழு முதலே, மூத்த கணபதியே'
பாடியவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
வரிகள்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
அக்டோபர் 23ஆம் திகதி, கந்த சஷ்டி - ஆறாவறு தினத்தன்று கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போரின் படக் கோவை, சந்தனம் மணக்கும் செந்தமிழ் குமரன் பாடலுடன்:
பாடியவர்: டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் வரிகள்:
உழுந்தூர் பேட்டை சண்முகம்
படங்கள்:
துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 18 முதல் 24 வரை அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ஊற்று இணயத் தளம் வழங்கும் முருக பக்தி பாடல்கள்:
'உன்னையும் மறப்பதுண்டோ'
ரி.எம். சௌந்தரராஜன் வழங்கும், முருக பக்தி பாடல் - நல்லூர் கந்தசுவாமி கோயில் காட்சிகளை உள்ளடக்கிய படக் கோவையுடன்
'அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்'
ரி.எம். சௌந்தரராஜன் வழங்கும், முருக பக்தி பாடல் - இலங்கையிலிருந்து இயற்கை காட்சிகளை உள்ளடக்கிய படக் கோவையுடன்
கந்த சஷ்டி கவசம்-பாடுபவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
பகுதி I
பகுதி II
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ~ ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே:
பாடுபவர்: சித்திரா
பாவேந்தர் பாரதிதாசன் பாட்டருவியிலிருந்து:
பாடுபவர்: சஞ்சய் சுப்பிரமணியன்
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா? [துன்பம்]
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக்காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக்காட்ட மாட்டாயா?
அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது - யாம்
அருகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?
புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டிஉனை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா? - தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?
பத்மஸ்ரீ கலாநிதி சீர்காழி கோவிந்தராஜன் வழங்கும் கணபதி கானம். அக்டோபர் 17 ஆம் திகதி, தீபாவளி தினத்தன்று பம்பலப்பிட்டி, நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிரேசன் ஆலயத்தினதும், சுற்றுப் புறங்களினதும் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பிள்ளையார் திருவுருவங்களைக் கொண்ட படக் கோவையுடன்:
“ஒரு மணிக்கு ஒரு மணியென, எதிர் எதிர் ஒலித்திட"
படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
திரைப்படம்: அம்பிகாபதி (1957 இல் வெளியானது)
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன்., பானுமதி
பாடலாக்கம்: கே.டி.சந்தானம் ~ இசை: ஜி. இராமநாதன்
மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே! - கண்ணே!
மாநிலம் கொண்டாடுதே!
பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே! - கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே!
சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே!
தீபமாய் ஒளிவீசுதே!
மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம்நீட்டி
மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா!
மௌனமாய் நம்மைவாழ்த்துதே!
(மாசிலா நிலவே)
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
அன்பே
இன்பம்
எங்கே ?
இங்கே!
மாறாத பேரின்ப நீராடுவோம்.
நீரோடு நீர்போல நாம் கூடுவோம்.
அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....
நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே
தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே
உந்தன் நீள்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
ஆணெழில் முகம் வான்மதியென அல்லியும் உனை நாடுதே
அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....