« August 2009 | Main | October 2009 »

September 28, 2009

படத் திரட்டு: சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் வித்தியாரம்பம்

கொழும்பு, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் செப்டம்பர் 28ஆம் திகதி, திங்கள் கிழமை விஜயதசமி தினத்தன்று இடம் பெற்ற வித்தியாரம்ப நிகழ்வுகளில் இருந்து:

DSCF1910 - Share on Ovi

DSCF1977 - Share on Ovi

DSCF1972 - Share on Ovi

DSCF1961 - Share on Ovi

DSCF1925 - Share on Ovi

DSCF1950 - Share on Ovi

DSCF1948 - Share on Ovi

DSCF1952 - Share on Ovi

DSCF1896 - Share on Ovi

DSCF1963 - Share on Ovi

DSCF1971 - Share on Ovi

DSCF1941 - Share on Ovi

DSCF1966 - Share on Ovi

DSCF1917 - Share on Ovi

நன்றி ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை~ dushi.pillai@gmail.com

September 27, 2009

படத் திரட்டும் ஒலி வடிவமும்: சரஸ்வதி பூசை, செப் 27

செப் 27, சரஸ்வதி பூசை சிறப்பு பக்கம்:

காயத்திரி மந்திரம் ~ எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

DSCF1851 - Share on Ovi

சுப நேரத்தில் வைக்கப்பட்ட கும்பம்

DSCF1845 - Share on Ovi

வீட்டு வணக்க அறையில் குத்து விளக்கேற்றம்

DSCF1840 - Share on Ovi

நவராத்திரிக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள வீட்டு வணக்க அறை

DSCF1843 - Share on Ovi

DSCF1861 - Share on Ovi

DSCF1867 - Share on Ovi

DSCF1685 - Share on Ovi

DSCF1678 - Share on Ovi

DSCF1653 - Share on Ovi

DSCF1688 - Share on Ovi

இசைக் குயில் பி. சுசீலா வழங்கும் சரஸ்வதி வணக்க பாடல்கள்:

லைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை வழங்கும்
ஸ்ருதியோடு லயபாவஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதாவும் வீணையில் எழும் நாதம்

வீணையில் எழும் நாதம்
தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம்
வாணி உன் சக்ரபாதம்
வானகமும் வையகமும் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட
தருவாய் சங்கீதம்

தாமரைபூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே - செந்

சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன் பாதம் எந் நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே - செந்

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே

மாணிக்க வீணை ஏந்தும்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நன்றி ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை~ dushi.pillai@gmail.com

September 25, 2009

திரைஇசை: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

பாடல்: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
பாடல்: புலமைப்பித்தன்
இசை: இளையராஜா
தொகுப்பு: பாரதி (திரைப்படம்)

DSCF1044ootru.JPG

மட்டக்களப்பு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொதுசன நூல் நிலையத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவுருவப் படம்-படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ள

திலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியா
அடியும் முடியும் அறிய முடியா
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தவத்திரு உளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுதலைக்கு நெருப்பவன் கொற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
குடுக்கலில் சரம் கொடுத்தவன் தலை முடிற்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
கொற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

DSCF1043ootru.JPG

மட்டக்களப்பு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொதுசன நூல் நிலையத்தில்-படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ள

September 24, 2009

தமிழர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 64 ஆவது ஐ.நா. கூட்டத் தொடர்

மிழர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உட்பட பல நாட்டவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் 64 ஆவது பொதுக் கூட்டத் தொடர் செப் 23 ஆம் திகதி தொடங்குகிறது. பல நாடுகளின் தலைவர்களும் இதற்காக நியூயோர்க்கில் கூடுகின்றனர்.    

நியூயோர்க் நகர் கிட்டத்தட்ட மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டத் தொடருக்காக வந்திருக்கக் கூடிய தலைவர்களின் கவனத்தையும் பொதுச் சபையின் கவனத்தையும் கவரும் வகையில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஐ.நா. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.





சீன ஜனநாயகக் குழுக்கள், திபெத் விடுதலை அமைப்பு, கமெரூன் குழு ஆகியன தமது நாடுகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின்பால் ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐ.நா. கட்டடத்தின் முதல் குடியிருப்பு (அவன்யூ) மற்றும் 47 ஆவது வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் செவ்வாய்கிழமை செப் 22 மாலையில் கூடிய தமிழர்கள் பலர், ஐ.நா.வின் செயலின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செயற்திறன் இன்மையை அவர்கள் முக்கியமாகக் கண்டித்தனர்.





கடந்த மே மாதத்தில் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது சிறிலங்காப் படையினரின் கனரக ஆயுதப் பாவனையால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த உயிரிழப்புக்களைத் தடுக்க பொதுச் செயலாளர் தவறிவிட்டார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

அத்துடன், சிறிலங்காப் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் முகாம்களில் சுமார் 3 லட்சம் மக்கள் மிகச் சிறிதளவான நடமாட்டச் சுதந்திரத்துடன் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஐ.நா. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

"நாட்டில் இருந்து தமிழ்ச் சமூகத்தை அடியோடு அழித்து விடுவதற்கு சிறிலங்கா அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்தக் குற்றச் செயல் ஐ.நா.வால் செயற்திறனுடன் தடுத்து நிறுத்தப்படவில்லை" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.





"போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றபோதும், சுயாதீன விசாரணையாளர்களையும் அனைத்துலக ஊடகவியலாளர்களையும் போர்ப் பகுதிகளுக்குச் செல்ல அரசு அனுமதி மறுத்து வருகின்றது" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மற்றொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, "ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி வரிச் சலுகை நிறுத்தப்படப் போவதாகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க் குற்ற விசாரணைப் பிரிவால் சிறப்பு அறிக்கை ஒன்று சிறிலங்கா தொடர்பில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அனைத்துலக சமூகம் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளும் இத்தகைய நகர்வுகள் எவை குறித்தும் நாம் அகமகிழ்வு கொள்ளவதற்கான நேரம் இதுவல்ல. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சிறிலங்காவின் அடங்குமுறைகளை அனைத்துலக சமூகத்திற்கு தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோன்று தமிழ் மக்களின் துயர்துடைக்க ஐ.நா.வும் அனைத்துலக சமூகமும் தவறி விட்டன என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் புதினத்திற்கு தெரிவித்தார்.

அனைத்துலக சமூகத்தால் முன்வைக்கப்படும் தடைகளை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை ஒளிப்படம் எடுத்து சிறிலங்கா அரசுக்கு அனுப்புவதற்கு சிலர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கொழும்பு முற்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.







நன்றி: புதினம்

September 21, 2009

திசநாயகத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பெரும் ஆதரவுக்குரல் எழவில்லை: 'தினமணி' சாடல்

சிறிலங்கா அரசால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திசநாயகத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பெரும் ஆதரவுக்குரல் எழவில்லை என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது.    

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை, செப் 22ஆம் திகதி அந்த நாளேட்டில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் வருமாறு:

இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம்

இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது.

அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நோர்த் ஈஸ்டர்ன் ஹெரால்ட்' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம்.

இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு.

அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதி திரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும்.

இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்?

ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்:

"இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''.

இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி.

இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி.

ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை.

இலங்கை அதிபர் ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே!

இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபக்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: புதினம்

காணொலி: உடப்பூர் மங்களம் - மரவிசை பாடல்

படப் பிடிப்பும் பாடல் பதிவும்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை [நன்றி: humanityashore]

"உடப்பூரில் தீமிதிப்பு" பற்றி கொழும்பில் இருந்து வெளி வரும் தினகரன் பத்திரிகையில், உடப்பூர் வீரசொக்கன் எழுதியுள்ள கட்டுரை:

லைகடல் தவிழும் நெய்தல் மணற் சூழலில் உடப்பூர் அமைந்துள்ளது. இவ்வூரில் முத்தாக அமைந்து அருள்பாலிக்கும் தலமே உடப்பு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீருக்மணி சத்தியபாமா ஸ்ரீ திரெளபதையம்மன் தேவஸ்தானமாகும்.

இவ்வாலயத்தில் வருடா வருடம் ஆடிமாத மூல நட்சத்திரத்தில் நடைபெறும் பெருவிழாவே தீமிதிப்பாகிய பூமிதிப்பாகும்.

இவ்விழா பதினெட்டு நாட்கள் நடைபெற்று இறுதி நாளில் அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ திரெளபதா அனற்குளத்தில் இறங்கி திருநடனம் புரிந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலிப்பாள்.

வரலாற்று சிறப்புப் பெருமைகளைக் கெண்டிருக்கும் இக்கிராமம் முன்னர் ‘உடப்பங்கரை’ என்றே வழங்கி வந்தது. பின்னர் அப்பெயர் மருவி “உடப்பு” என்று வழங்கி வருகின்றது.

ஓர் தனித்துவமான கலை, கலாசார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து வரும் இவ்வூர் மக்கள் சைவர்களாகவும், சைவவாணக்களாகவும், தமிழர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இம்மக்கள் தென்னிந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்தை அண்மித்துள்ள அக்காமடம், தங்கச்சிமடம் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். கி.பி. 1630 ஆம் ஆண்டு உடப்பில் குடியேறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் தாக்கத்தால் பயந்து புலந்து இம்மக்கள் 18 குடும்பங்களுடன் 7 தோணிகளில் வந்து குடியேறியுள்ளனர். இவர்களுக்கு “அம்பலகாரன்” என்பவரே தலைமை தாங்கி வந்துள்ளான். இவர்கள் அம்பலகாரர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.

சக்தி வழிபாட்டை கடைப்பிடித்து ஒழுகிவரும் இவ்வூர் மக்கள் தங்கள் குல தெய்வங்களான ஸ்ரீ திரெளபதாதேவி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், கோவில் அமைத்து முன்னோர் கட்டிக்காத்த தமது பாரம்பரியம், மரபுகளை, சடங்கு சம்பிரதாயங்களை வழுவாமல், பிசகாமல் நேர்த்தியான முறைமைகளில் விழாக்களை நடத்தி வருகின்றார்கள். இதற்கெல்லாம் கட்டியம் கூறி நிற்பதே ஸ்ரீ திரெளபதையம்மன் ஆலய உற்சவ நிகழ்வுகள்.

இயற்கை சீற்றம், கொடிய நோய்கள் அவதியுற்று பீடைகளால் தாக்கப்படும் போதெல்லாம் தங்களின் குலதெய்வங்களுக்கு விழாவெடுத்து, நேத்தி வைத்து தத்தம் குறைகளை தீர்க்க வேண்டி இவ்விழாவை கொண்டாடி வருகின்றார்கள்.

இவ்விழா கொண்டாட இங்குள்ள மூதாதையர்கள் இராமநாதபுரத்தில் இருந்து வழிபட்டு வந்த ஒரு தெய்வத்தையே இங்கு கொண்டு வந்து பூஜித்தார்கள் என்பார் ஒரு சாரார், அதுவல்ல தமது குலதெய்வத்தை நினைவில் நிறுத்தி உருவாக்கிய தெய்வத்தின் திருவுவச் சிலையை வைத்து வழிபட்டு வருவதாக இன்னொரு சாரர் கூறுகிறார்கள்.

ஆனால் இவ்வூர் மக்கள் சக்தி வழிபாட்டை தத்தம் குல தெய்வங்களாக போற்றி வழிபட்டுவருகின்றார்கள் என்பது உண்மையாகும்.

இப்பூமிதிப்பு பெரு விழாவை பாரதக் கதையை அடிப்டையாகக் கொண்டே பதினெட்டு தினங்களாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இதிலும் ஆலயப் பூசகர் தன்னை ஜீவாத்மாவாக பாவனை செய்து பதினெட்டு நாள் உபவாச மிருப்பார். முதல் நாள் அன்று ஜீவாத்மாவாகிய பூசகர் மாலை 6.00 மணிக்கு கரகத்தை தலையில் ஏற்றிக் கொண்டு மாரியம்மன் ஆலயத்தை அடைவார்.

அங்கு தன்னை திரெளபதா தேவியாக உருக்கொண்ட நிலையில் ஆடிக்கொண்டு அன்னை ஆலயத்தை அடைந்த பின்னர் பாரதக்கதையிடம் யுத்த ஆரம்பக் கதையை படிப்பார் பின் சர்ப்பக் கொடியேற்றப்படும். இது துரியோதனனுக்காக ஏற்றுவதாக அமையும்.

அதைத் தொடர்ந்து ஐந்தாவது நாள் பாண்டவர்களுக்காக வேண்டி வெளிக்கொடி யேற்றப்படும். அன்று தொடக்கம் ஒவ்வொரு தினமும் இரவு 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையும் பாரதக்கதை பூரணமாக படித்து முடிக்கப்படும்.

கரகம் பாலிப்பது முக்கிய நிகழ்வாக நடைபெறும்.

கரகம் பாலிக்கும் பூசகரே தன்னை திரெளபதையாக பாவனை செய்வார். அவ்வண்ணம் மரவிசை பாடல்கள் பக்திபூர்வமான முறைமையில் மனமுருகிபாடுவார்கள்.

“மங்களம் பொங்கும் உடப்பு

நகர் தண்ணில்

வாகா உதித்து எழுந்தருள்வீர்

சங்காரம் பெற்றோங்கும்மாகானி

தாயார் மேல் சாத்து கும்பி

உரைப்போமே!

வெற்றி பாக்கு பழந்தேங்காய்

கொண்டு

வேண்டிய அர்ச்சினை

செய்வோர்க்கு

புத்திரபாக்கியம் செல்வம்

பெருமையும்

பூதால வாழ்வையும் தான்

கொடுப்பாள்

பதினெட்டாம் நாள் கொண்டாடப்படும் தீமிதிப்பாகிய பூமிதிப்பு பெருவிழா வெற்றி விழாவாகக் கொண்டாடப்படும். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒமக்குண்டத்தில் இருந்து தீவளர்க்கப்படும்.

இவ்வாலயத்தில் அன்னை திரெளபதா தேவியின் சிலைமுன் தொடர்ந்து சுடர்விட்டு எழும் தூண்டாமணி விளக்கிலிருந்தே தீஎடுக்கும் காட்சி மிக பக்தியுணர்வுகளுடன் அரோகரா கோஷத்துடன் நிகழ்வுறும்.

அதைத்தொடர்ந்து மாலையானதும் செந்தழல் மீட்டும் திடுமிகு அனற்குளத்தில் பக்தர்கள் நடனமிடும் காட்சி இடம்பெறும்.

வடமேல் மாகாணத்தில் இந்துக்களின் இருப்பையும் தமிழர்களின் சிறப்பையும் தாய்தெய்வ வழிபாட்டையும் முன்னுதாரணமாக எடுத்துக் கூறும் உடப்பு ஸ்ரீ திரெளபதையம்மன் தீமிதிப்பாகிய பூமிதிப்பு விழாவின் அற்புதத்தை கண்டு நாமும் அன்னையின் அருள் பெறுவோமாக.

September 11, 2009

திரைப்படம்: பாரதி

சுப்பிரமணிய பாரதியார் (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921):

இயக்கம்: ஞான இராஜசேகரன்

பகுதி I

பகுதி II

பகுதி III