ஊற்று

காணொளி: ஊடகவியலாளர் சத்தியமூர்த்திக்கு கண்ணீர் அஞ்சலி

ஸ்ரீ லங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி மரணமடைந்துள்ளார்.

[காணொளி: திரு. சத்தியமூர்த்தியின் ஜனவரி 24ஆம் திகதிய செய்திக் குறிப்பும் ~ கண்ணீர் அஞ்சலியும்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், வியாழக்கிழமை பெப்ரவரி 12ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். மண்டைதீவை பூர்வீகமாகக் கொண்ட இவர், இன்று பொலநறுவைக்குள் இருக்கும் மட்டக்களப்பின் தமிழ் மண்ணான மன்னம்பிட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார்.

திரு. சத்தியமூர்த்தி இவ்விதம் கொல்லப்பட்டது சர்வதேச போர் குற்றம் என எல்லகள் அற்ற ஊடகவியாலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை