பாரதிதாசன் தேனருவி: குலிங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்...
குலிங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் இங்கு ஊற்றில் ஒலி வடிவம்:
[பாவேந்தர் பாரதிதாசன் பாடல் mp3 ஒலி வடிவம்]
படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
குலிங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே
கொஞ்சிடும் அஞ்சுகமே
ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய்
கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே
குளிருடன் மாலை வேளை
கொள்ளும் நேரம் என்ன சொல்வேன்
மணமும் தென்றல் காற்றும்
ஒன்றை ஒன்று மருவிடுதே
அளாவி வானத்தையே
தாவும் ஒரு மாமுரசை
அன்பால் முல்லை கொடி ஓடித் தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே
ஆதலால் இன்ப வாழ்க்கை
கை கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே காதலால் நாமிருவர்
சேர்ந்தே இன்பமெல்லாம்
வாழ்ந்தே வாழ்ந்திடுவோம்
என் போல் பாக்கியவதி
யாரும் இல்லை உலகினிலே
இன்பம் இன்பம்
இரண்டு மனம் ஒரு மனமே - பாவேந்தர் பாரதிதாசன்

