mp3 ஒலிப்பதிவு: 7 வயது லோஜினி இராஜேந்திரம் நவ 29 இடம்பெற்ற விமானத் தாக்குதல் பற்றி தெரிவிப்பது
தருமபுரத்தில் உள்ள கல்லாறில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட குடியிருப்புக்கள் மீது சனிக்கிழமை, நவம்பர் 29 அதிகாலை 1:55 நிமிடமளவில் ஸ்ரீ லங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.
ஞானத்தைத் தரும் குரு என்ற முறையில் குரு பெயர்ச்சி காலங்களில் தெட்சணாமூர்த்திக்கு பூஜை செய்யப்படுகிறது. குருபெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் விஷேடமாக தெட்சணாமூர்த்தியை தரிசிப்பர்.
[திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் தெட்சணாமூர்த்தி~படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை~மேலும் படங்கள்]
இசைஞானி இளையராஜா வழங்கும் கோத்தும்பி பதிகம்-திருக்கோணேஸ்வர ஆலய படக்கோவையுடன்:
மாணிக்கவாசகர் இறைவனை நாயகனாகவும், குருவை சகியாகவும் உருவகித்துப் பாடியுள்ளார். நாயகனான இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட நாயகி சோலையில் பறந்து திரியும் இராச வண்டிடம், "நீ ரீங்காரம் செய்து பாடும் போது இறைவனுடைய தொன்மைக் கோலத்தையும், பெருமைகளையும் பாடு" எனக் கூறுவது போல் பாடப் பட்ட திருவாசகப் பாடலே கோத்தும்பி ஆகும்.
கோத்தும்பி என்றால் வண்டுகளுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இராச வண்டைக் குறிக்கும்.
கொழும்பிலிருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி சோதிடப் பக்கம், பன்னிரு ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்களை வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு வருமாறு:
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரங்கள்)
மேன்மையான நற்குணங்கள் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். படபடவென எதையும் முகத்திற்கு நேரே பேசி விடுவீர்கள். யாருக்காகவும் உங்களின் தார்மீக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். எல்லா விடயங்களிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவீர்கள்.
அன்புக்கு என்றுமே வசமாகும் உங்களின் ராசிக்கு குரு பகவான் 06.12.08 அன்று ஜீவனஸ்தான 10 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு பாக்கிய, விரயஸ்தான ஆதி பத்தியம் பெறுகின்ற குரு பகவான் பத்தாம் இடம் அமைகின்றார். பொதுவாகவே பத்தாம் இடம் குருவிற்கு உகந்த இடமல்ல என்பது ஜோதிட கூற்று.
தொழில் நிலைகளிலே சற்று பிரச்சினைகள், தொழில் சார்ந்த இடமாற்றம், பதவி மாற்றம் போன்ற பலா பலன்கள் எதிர்பாராத வகையிலே அமையும் நிலைகள் உண்டு. கடந்த ஒரு வருட காலமாக உங்களுக்கு குருவின் சஞ்சாரம் பாக்கியஸ்தானம் அமைந்து எல்லாவிதமான சிறப்பு நிலைகளையும் கொடுத்தது. முக்கியமாக பண விடயங்களில் நல்லதொரு சேமிப்பு நிலை உருவாகியிருக்கும். அதற்கு மாறாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பண விடயங்களில் சற்று இழுபறி நிலைகளைக் கொடுக்கும்.
எனவே, கொடுக்கல் வாங்கல் விடயங்களில் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நீங்கள் செயற்பட வேண்டும். வெளிநாட்டு பிரயாண ஆர்வம் உடையவர்களுக்கு எப்படியும் இந்தக் குருப் பெயர்ச்சி மூலமாக அனுகூலமான பலாபலன்கள் கிடைக்கும் நிலையுண்டு. பொதுவாகவே மற்றவர்களின் கஷ்டங்களில் கவலை கொள்ளும் மனமும் உதவி செய்கின்ற மனப் பக்குவமும் கொண்ட உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி தேவையற்ற வீண் அலைச்சல் நிலைகளை அதிகம் கொடுக்கும். எதிர்பாராத வகையில் பண விடயங்களில் தொழில் விடயங்களில், திடீர் வீழ்ச்சி நிலைகள் அமையும் பலன் உண்டு.
எனவே, மிகவும் நிதான செயல் வேண்டும். குடும்ப நிலையில் சிறு சிறு மனச் சஞ்சலம், செலவினங்கள் என்பன இடையிடையே ஏற்பட்டு மறையும். தொழில் வாய்ப்பை எதிர்கொள்வோருக்கு அனுகூல பலன்கள் அமையும். பெண்களுக்கு மன நிலை சஞ்சலம் அதிகமாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலைகளில் சற்றுக் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
உங்களின் ராசிக்கு சனி பகவானும் நான்காம் இடம் சஞ்சரிப்பது சற்று சுமாரான நிலைகளையே கொடுக்கும். எனவே, குருப்பெயர்ச்சி மூலமாக பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. பிரதி வியாழக்கிழமை தோறும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் பூவினால் அர்ச்சனை செய்யவும். அத்தோடு உங்களின் அதிபதித் தெய்வம் அம்பாளுக்கும் அர்ச்சனை வழிபாடு செய்யவும். இதன் மூலமாக ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் பெறலாம்.
___________________________________
ரிஷபம்: (கார்த்திகை 2 ஆம்,3ஆம், 4 ஆம் பாதம், ரோகிணி, மிருக சீரிடம் 1 ஆம் 2 ஆம் பாதம்)
இங்கிதமான பேச்சாற்றல் கொண்டு எவரையும் வசப்படுத்துகின்ற குண இயல்பும் எதையும் மனதிற்கு உள்ளே வைத்து சிந்திக்கின்ற நிலையும் கோபத்தை வெளிக்காட்டாது இடம், பொருள், ஏவல், பார்த்து செயற்படுகின்ற தன்மையும் தன் காரியத்திலே கண்ணும் கருத்துமாக இருக்கின்ற குண இயல்பும் கொண்ட உங்களின் ராசிக்கு 06.12.2008 அன்று குருபகவான், பாக்கியஸ்தானம் எனப்படுகின்ற ஒன்பதாம் இடம் அமைகின்றார். எல்லா வகையிலும் பாக்கியங்களை வாரி வழங்குவார் என்பதில் ஐயமில்லை எனலாம்.
உங்களின் ராசிக்கு அட்டம, லாபஸ்தான, ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது தொழில் ரீதியிலே மிகவும் சிறப்பான நிலைகளைக் கொடுக்கும். தொழில் சார்ந்த பதவி உயர்வுகள் தொழில் நிலை வருமானங்கள் என்பன மிகவும் சிறப்பாக அமையும் நிலையுண்டு.
புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் ஏற்படும். சொத்துக்கள் சேரக்கூடிய பலா பலன்கள் உண்டு. குடும்பத்திலே சிறப்பான மகிழ்வும், சுப காரிய நிலைகளும் அமையக் கூடிய பலா பலன்கள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய பலா பலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன்கள், பூரணமாக அமையக் கூடிய நிலை இருக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக நீங்கிவிடக் கூடிய பலன் உண்டு. பண வரவும், பண நிலுவையும் மிகவும் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு.
லாட்டரி அதிர்ஷ்டங்களும் உங்களின் வீட்டுக் கதவை தட்டிப் பார்க்கின்ற நிலை உண்டு. எதிரிகளும் உங்களை தேடி வந்து பணிகின்ற நிலைகள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வமாக உள்ளவர்களுக்கு அப்பலன் பூரணமாக சேரும் நிலையுண்டு. சென்ற ஆண்டு அட்டமஸ்தானமாகிய 8 ஆம் இடம் அமைந்த குருபகவான் பல வகையிலும் உங்களை ஆட்டிப் படைத்து விட்டிருப்பார். அதற்கெல்லாம் சேர்த்து இந்த ஆண்டு குருவின் பெயர்ச்சிப் பலன்கள் உங்களை மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்த்தும்.
மாணவர்களுக்கு கல்வி நிலையிலே சிறப்பான முன்னேற்றங்கள் அமைகின்ற நிலையுண்டு. குடும்பஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையிலே தலயாத்திரை, பயணங்கள் அமையும். சமூகத்திலே உயர்வும் கௌரவமும் ஏற்படுகின்ற நிலையுண்டு. தான, தர்மம் செய்யக்கூடிய வாய்ப்புகளும் அமையும். எனவே, எல்லா நிலைகளிலும் குரு பகவானின் சிறப்புப் பலன் உங்களை நாடி வரும். நன்மை வரும் என்று குருபகவானை மறந்து விடாமல் இடையிடையே அர்ச்சனை வழிபாடுகள் செய்வித்து, இரட்டிப்பு அதிர்ஷ்டம் பெறுங்கள்.
___________________________________
மிதுனம்: (மிருக சீரிடம் 3 ஆம் 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)
மிருதுவான தோற்றம் கொண்டவர்கள், பார்வைக்கு அமைதியானவராகவும் மிக அப்பாவித்தனமுமுடையவராகவும் இருப்பீர்கள். ஆனால் செயற்பாட்டில் ஆகாய சூரர்களாக இருப்பீர்கள். உங்களின் தனிப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் எளிதாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள்.
இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்கின்ற சுபாவமாகவே இருந்து உங்கள் காரியங்களில் ஜெயித்து விடுவீர்கள். நீங்கள் எøதயும் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள். உங்களின் ராசிக்கு குருபகவான் 06.12.2008 அன்று அட்டமஸ்தானமாகிய 8 ஆம் இடம் அமைகின்றார். உங்கள் ராசிக்கு, களத்திர, ஜீவன, ஸ்தான ஆதி பத்தியம் பெறுகின்ற குருபகவான் 8 ஆம் இடத்திலே நீச பங்கமாக சஞ்சரிப்பது பெரும் நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எந்த விடயமாக இருப்பினும் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும்.
தொழில் ரீதியில் சற்று அலைச்சல், வேலைப்பளு, மேலதிகாரிகளுடன் மனச் சஞ்சலம், தேவையற்ற வீண் பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் ஏற்படும் நிலையுண்டு. திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவு, சத்திர சிகிச்சை போன்ற நிலைகளும் ஏற்படலாம். எனவே, எல்லா விடயங்களிலும் நிதானமான செயற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
பண வரவு விடயங்களிலும் சற்று மந்த நிலைகள் இருக்கும். எதிர்பார்க்கும் லாபங்கள், தொழில் ரீதியில் அமைவது மிகவும் சிரமமாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே மனச் சஞ்சலங்கள், தேவையற்ற பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் ஏற்படும். நீங்கள் உண்டு, உங்கள் பாடு உண்டு என்ற போக்கிலே இருந்து கொள்ளுங்கள். அப்படியில்லையென்று செயற்பட்டீர்கள் என்றால் பிரச்சினை உங்கள் வீட்டுக் கதவை தட்டும்.
திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு சிறு தடைகள், தாமத நிலைகள் என்பன ஏற்பட்டு மறையும். வெளிநாட்டு பயண ஆயத்தங்களில் ஈடுபாடு கொள்பவர்கள் சற்று அவதானத்துடன் செயற்பட வேண்டும். மாணவர்கள் தங்களின் கல்வி நிலையிலே கூடுதலான ஊக்கமும் முயற்சியும் எடுக்க வேண்டும். உங்களின் ராசிக்கு சனி பகவான் சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூலமானதாக அமைவதினாலே சற்று ஆறுதல் தருகின்ற பலா பலன்கள் இடையிடையே அமையும்.
கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலைகளும் தேவையற்ற அலைச்சல், மனச் சஞ்சலங்களும் ஏற்படுகின்ற நிலை இருக்கும். நண்பனும் எதிரியாகின்ற நிலைகள் இருக்கும். பிரதி வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் புஷ்பத்தினால் அர்ச்சனை வழிபாடு செய்து வரவும், அத்தோடு உங்களின் ராசி நாத தெய்வமான விஷ்ணு பகவானுக்கும் துளசி வில்வ இலையால் அர்ச்சனை வழிபாடு செய்யவும். எந்த விடயத்தையும் சாதுரியமாக சமாளிக்கின்ற நீங்கள் இந்தக் குருப் பெயர்ச்சியின் பலாபலன் அறிந்து அதற்குத் தக செயற்பாடு கொண்டு வெற்றி காண்க.
___________________________________
கடகம்: (புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயிலியம்)
கலகலப்பான சுபாவமும் எவரையும் எளிதிலே நட்புறவு கொள்கின்ற ஆற்றலும் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் அதிகமான நட்புறவுகளினாலேயே ஆபத்துக்களையும் எதிர்ப்புக்களையும் சந்திக்கின்ற நிலையும் சற்று சுய நலம் கலந்த செயற்பாடும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற தன்மையும், நிறைந்த நல் மனமும் கொண்ட உங்களின் ராசிக்கு 06.12.08 அன்று குரு பகவான் களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு ரோக, பாக்கியஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் 7 ஆம் இடம் அமைவது, அனுகூலமான நற் பலாபலன்கள் அமையும்.
பொதுவாகவே, சந்தோஷத்தையும் நட்புறவையும் விரும்புகின்ற உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி சிறப்பான பலாபலன்களை கொடுக்கும். குடும்பத்திலே கணவன், மனைவியிடையே நல்ல நட்புறவு இருக்கும். சுப காரிய நிகழ்வுகளும் சுபச் செலவுகளும் அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற பலன் உண்டு. தொழில் ரீதியிலே நல்ல சிறப்பான முன்னேற்றங்கள் அமைகின்ற நிலையுண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமான முறையிலே உங்களுக்கு வந்து சேருகின்ற பலன் உண்டு.
புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படுகின்ற பலாபலன் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்கொள்ளுகின்ற அன்பர்களுக்கு அப்பலன் பூரணமாக அமையும் நிலையுண்டு. வெளியூர் பிரயாணங்களுக்கு முயற்சி செய்பவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் சிறப்பான நல்ல முன்னேற்றங்கள் அமையும் பலன் உண்டு.
எனவே இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்புøடய நல்ல பலாபலன்களையே பெரும்பாலும் தருகின்ற நிலையுண்டு. உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. கடைக்கூற்று சஞ்சார நிலை அமைகின்றது. 2009 ஆம் ஆண்டு நடுப் பகுதியோடு ஏழரைச் சனி நிறைவு பெறும். எனவே இந்த ஏழரைச் சனி சிறு சிறு அலைச்சல் நிலைகளை இடையிடையே கொடுக்கும். சற்று நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது.
களத்திரஸ்தான நிலையில் அமைகின்ற இந்தக் குருப்பெயர்ச்சி மனைவி வழியால் எதிர்பாராத வகை நன்மைகளை கொடுக்கின்ற பலாபலன் உண்டு. குழந்தைப் பேறு எதிர்பார்க்கின்றவர்களுக்கும் அனுகூலமான நற்பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. எனவே சென்ற வருடத்திலே குரு பகவானின் ரோகஸ்தான சஞ்சாரம் பல வகையிலும் உங்களுக்கு மனச் சஞ்சலம், பிரச்சினைகள், உடல் நிலை சுகயீனங்கள் என பலாபலன்களை கொடுத்திருக்கும்.
தற்போது அமைகின்ற இந்தக் குருப் பெயர்ச்சியானது எல்லா வகையிலும் நன்மைகளும் சிறப்புகளும் தருவதாய் அமைகின்றது. எந்த விடயமாக இருப்பினும் அதை சாணக்கியத்துடன் செயற்படுத்தும் ஆற்றலும் அறிவும் கொண்ட நீங்கள் இந்தக் குருப் பெயர்சியின் மூலமாக சாதுரியத்துடன் செயற்பட்டு அதிகமான நன்மைகளை பெறலாம். கடகராசி அன்பர்களுக்கு குருப்பெயர்ச்சி குதூகலமானதாக அமையும்.
___________________________________
சிம்மம்:(மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம்)
சிந்தித்து செயல்படும் ஆற்றலும் சாதுரியத்துடன் செயல் ஆற்றுகின்ற தன்மையும் அதிகமாக கொண்டவர்கள் நீங்கள். எந்த விடயத்தை எப்படி எந்த முறையில் செய்ய வேண்டும் என்கின்ற மதிநுட்பம் உங்களுக்கு கை வந்த கலையாகும்.
சுய நலமும் சாதிக்க வேண்டும் என்கின்ற துடிப்பும் மிகவும் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். உங்களின் மன எண்ணங்களை அறிந்து கொள்வது மிக மிகக் கடினமாகும். எதையும் உள் மனதினிலே வைத்து திட்டம் தீட்டுகின்ற உங்களுக்கு 06.12.08 அன்று குருப்பெயர்ச்சி மூலமாக குருபகவான் ரோகஸ்தானமாகிய 6 ஆம் இடம் அமைகின்றார்.
உங்களின் ராசிக்கு பஞ்சம, அட்டம, ஸ்தான நிலைபெறுகின்ற குருவின் சஞ்சாரம் ஆறாம் இடத்தினிலே அமைவது சிறப்பான நிலை இல்லை. மிகவும் பொறுமை நிதõனத்துடன் செயற்பட வேண்டும். தொழில் நிலைகளிலே தேவையற்ற வீண் பிரச்சினைகள், மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம், நண்பர்களும் பகைவர்களாக மாறுகின்ற நிலை போன்ற பலா பலன்கள் இருக்கும். குடும்பத்திலே மனச் சஞ்சலமும் கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு மன நிலையில் சந்தோஷ நிலை குறையும். பண வரவு சற்று மந்தமான நிலையிலேயே அமைகின்ற பலன் உண்டு.
கடன் பிரச்சினைகளில் இறுக்கமான நிலைகள் ஏற்பட்டு மறையும் பலன்கள் உண்டு. கொடுக்கல், வாங்கல் விடயங்களிலே மிகவும் நிதானமான செயற்பாடு வேண்டும். உடல் நிலையில் கூடிய கவனம் இருக்க வேண்டும். திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் என்பன எதிர்பாராத வகையில் ஏற்படும். எனவே எல்லா வகையிலும் நிதானமான செயற்பாடு வேண்டும். உங்களின் ராசிக்கு சனீஸ்வர சஞ்சாரமும் ""ஏழரைச் சனி நடுக்கூற்று'' சஞ்சாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு சிறு சிறு தடை தாமத நிலைகள் தொடருகின்ற பலன் இருக்கும். வெளிநாட்டு பிரயாண முயற்சிகள் மேற்கொள்பவர்களும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொள்ள இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது.
எல்லா வகை நிலைகளிலும் குருவின் சஞ்சாரம் உங்களுக்கு சுமாரானதாகவும் மத்திமமானதாகவும் அமைகின்றது. ""சத்தியமாமுனி யாறிலே யிருகாலிலே தலை பூண்டதும்'' என்கின்றது ஜோதிடப் பாடல். எனவே, இந்தக் குருப்பெயர்ச்சியானது உங்களின் ராசிக்கு சத்திய சோதனையாக அமைகின்றது. பிரதி வியாழக்கிழமை தோறும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்யவும். நிதானத்துடன் செயற்பாடுகள் புரிந்து கொள்ளுங்கள்.
___________________________________
கன்னி: (உத்தரம் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1 ஆம், 2 ஆம் பாதம்)
கனிவு நிறைந்த உள்ளமும் கபடம் அற்ற செயற்பாடும் கொண்ட கன்னிராசி அன்பர்களே! எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்கின்ற எண்ணமும் யார் அறிவுரை சொன்னாலும் அதை பவ்வியமாக கேட்டு பின்பு தமது இஷ்டப்படி நடக்கின்ற குணமும் இதனாலேயே பல கஷ்டங்களையும் எதிர்கொள்ளுகின்ற நிலையும் அதிகமான சிந்தனையை எப்பொழுதும் கொண்டவராய் இருக்கும் உங்களுக்கு 06.12.08 அன்று நடைபெறுகின்ற குருப்பெயர்ச்சி மூலமாக குருவின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5 ஆம் இடம் அமைகின்றது.
உங்களின் ராசிக்கு சுக, களத்திர ஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் பஞ்சமஸ்தானமாகிய ஐந்தாம் இடம் அமைவது மிகவும் சிறப்பான நிலையாகும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும் நிலையுண்டு.
தொழில் ரீதியில் சிறப்பான முன்னேற்றங்களும் தொழில் சார்ந்த பதவி உயர்வுகளும் லாபகரமான பண வரவுகளும் அமையும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும், சுப காரிய அனுகூல பலா பலன்களும் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல சிறப்பான வெற்றிகள் ஏற்படும்.
திருமணம் போன்ற சுப காரிய நிலைகளை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு அப் பலன் பூரணமாக கிடைக்கின்ற நிலை உண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு பயணம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் அனுகூலமான பலன்கள் அமையக் கூடிய நிலைகள் உண்டு.
குரு பார்த்தால் கோடி நன்மை என்பதற்கு அமைய பாக்கியஸ்தான பார்வையாக உங்களின் ராசியை நோக்கி இருக்கும் குரு பகவான் பார்வையால் லாட்டரி அதிர்ஷ்டங்களும் உங்களை நாடி வருகின்ற நிலையுண்டு. அதே நேரம் உங்களின் கடன் பிரச்சினைகளும் சுமுகமாக தீர்ந்து விடுகின்ற நிலை உண்டு.
எந்த விடயமாக இருந்தாலும் வெற்றிகளும் சிறப்புகளும் தரும் பலன் இந்தக் குருப்பெயர்ச்சி மூலமாக அமைகின்றது. உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரத்தின் முதற் கூற்றுப்பலன் நடைபெறுகின்றது. இப்பலன் இடையிடையே சிறு சிறு மந்த நிலைகளைக் கொடுக்கும். இருப்பினும் குருவின் பஞ்சமஸ்தான பலன் மிகவும் மேன்மையான நற்பலன்கள் உங்களுக்குத் தரும். மாணவர்களின் கல்வி நிலையில் அனுகூலமான நல்ல சிறப்புகள் ஏற்படும் நிலையுண்டு.
பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் அமையும் பலன் உண்டு. எல்லா வகையிலும் இந்தக் குருப்பெயர்ச்சி சிறப்புகள் பலவும் தருவதாய் அமைகின்றது. உங்களின் ராசி நாத தெய்வம், விஷ்ணு வழிபாடும், இடையிடையே குருக் கிரக வழிபாடும். இரட்டிப்பு அதிர்ஷ்டம் தரும். எனவே இந்தக் குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு குதூகலம்தான் என்பதில் ஐயமில்லை.
___________________________________
துலாம்: (சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் பாதம்)
துவளாத மனமும் தூய்மையான எண்ணமும் கொண்ட துலாராசி அன்பு உள்ளங்களே! எதைச் செய்யினும் அதிலே ஒரு நேர்மையை விசுவாசத்தன்மையை உங்களிடம் காண முடியும். திறமை என்பது உங்களின் ராசிக்கு உடன் பிறந்த தன்மையானது. அனைவரையும் நேசிக்கின்ற பாங்கும் அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையும் உங்களின் உயர்ந்த சிந்தனையும் நல்ல நிலைகளின் தன்மையாளர்களாக்கும்.
உங்கள் ராசிக்கு பிரகஸ்பதி எனப்படுகின்ற குரு பகவான் 06.12.08 அன்று சுகஸ்தானமாகிய 4 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு ஜெய, ரோகஸ்தான, ஆதிபத்தியம் பெறுகின்ற வியாழ பகவான் நான்காம் இடம் அமையப் பெறுவது பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. எடுக்கின்ற விடயங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். தொழில் முயற்சிகளிலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும்.
தொழில் ரீதியிலே சிறு சிறு பிரச்சினைகள், மனச் சஞ்சலங்கள் என்பன ஏற்பட்டு மறையும் நிலையுண்டு. குடும்பத்தில் சுமாரான மத்திமமான பலன்களே அமையும். பண வரவு விடயங்களில் சிறு மந்த நிலை இருக்கும்.
எதிர்பாராத வகையில் உடற் சுகயீனங்களும் மருத்துவ செலவும் ஏற்படுகின்ற நிலை இருக்கும். தொழில் நிலையில் திடீர் இடமாற்றம், தாயார் வழியில் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் என்பன இருக்கும். எனவே, எந்த விடயமாக இருப்பினும் சற்று பொறுமை நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது. நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும் நிலையுண்டு. பொதுவாகவே தேவையற்ற விடயங்களில் தலையீடுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
திருமணம் போன்ற சுபகாரிய நிலைகள் ஓரளவிற்கு அமையக் கூடிய பலன் இருக்கும். கடன் பிரச்சினைகளில் சற்று இழுபறி தாமத நிலைகள் இருக்கும். குடும்ப நிலையில் தேவையற்ற பிரச்சினைகள் இடையிடையே ஏற்படலாம்.
எனவே, பொறுமையான செயல் வேண்டும். ""தர்மபுத்திரர் நாலிலே வனவாசம்படி போனதும்'' என்கின்றது ஜோதிடப் பாடல். எனவே அதற்கு தகுந்தாற்போல செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு. உங்களின் ராசிக்கு சனீஸ்வர பகவான், லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைவது, திடீர் நன்மைகள்.
அதிர்ஷ்டங்கள் அமையக் கூடிய நிலைகள் உண்டு. பிரதி வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கடலை மாலை அணிவித்து அர்ச்சனை வழிபாடு செய்யவும். அத்தோடு அம்பாள் வழிபாடும் மேற்கொள்ளவும். உளத் தூய்மையான உங்களின் செயற்பாடு பெரும் கஷ்டம் கொடுக்காது.
___________________________________
விருச்சிகம்: (விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
விவேகம் நிறைந்த செயற்பாடும், ஆழ்ந்த நுண்ணறிவும், எந்த விடயமாக இருப்பினும் அதை சரியாக கற்றுத்தெரிய வேண்டும். என்கிற மனநிலையும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற மன நிலையும், எந்த விடயம் என்றாலும் அதில் முதன்மையாக இருக்கின்ற செயற்றிறனும் கொண்ட உங்களுக்கு 06.12.08 அன்று நடைபெறுகின்ற குருப் பெயர்ச்சியின் மூலமாக உங்களின் ராசிக்கு ஜெயஸ்தானமாகிய மூன்றாம் இடம் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.
உங்கள் ராசிக்கு தன, பஞ்சமஸ்தான நிலை ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் 3 ஆம் இடம் அமைவது, சற்று மத்திம சுமாரான பலா பலன்களையே கொடுக்கும். எடுக்கின்ற விடயங்களிலே நிதானமாக செயற்பாடு வேண்டும். தொழில் ரீதியிலே அலைச்சல், இழுபறி நிலைகள் இருக்கும். எந்த விடயம் எடுத்தாலும் சிறு சிறு தடைகள் தாமத நிலைகள் ஏற்பட்டு மறையும் பலன் உண்டு. குடும்பத்தில் சற்று அனுகூலமான பலாபலன்கள் அமைய இடமுண்டு.
இருப்பினும் திடீர் செலவினங்கள், உடல் நிலை சுகயீனங்கள் போன்ற பலா பலன் இருக்கும். சகோதரர் வழியில் மனச் சஞ்சலங்கள், தேவையற்ற வீண் பிரச்சினைகள் இடையிடையே ஏற்பட்டு மறையும் பலன் உண்டு. பண வரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும் பலன் உண்டு.
கடன் பிரச்சினை, இழுபறி தாமத நிலைகளைக் கொடுக்கும். வர வேண்டிய பணங்கள் வருமான இலாபங்கள் சற்று தாமதமாக வந்து சேரும் நிலையுண்டு. கொடுக்கல், வாங்கல் விடயங்களில் அவதானமாக செயற்பட வேண்டும்.
திருமணம் போன்ற சுப காரிய பலாபலன்களை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு அப்பலன் ஓரளவிற்கு நன்மை தருவதாய் இருக்கும். வெளிநாட்டு பிரயாணங்களை எதிர்கொள்வோருக்கு சிறு சிறு தாமத நிலைகள் கொடுக்கும். எந்த விடயமாக இருந்தாலும் சற்று பொறுமை, நிதானத்துடன் செயற்படவும். தேவையற்ற வீண் விடயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய ராசிக்கு சனீஸ்வர பகவான் சஞ்சாரம்,
ஜீவன ஸ்தானமாகிய 10 ஆம் இடம் அமையப் பெறுவது தொழில் நிலைகளில் பதவி மாற்றம் இடமாற்றம் என்பன ஏற்படலாம். சிறந்த ஆளுமைத் திறன் உடைய உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி உகந்ததல்ல. எனவே அதற்கு ஏற்ப செயற்பாடு கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும். அத்தோடு உங்களின் ராசிநாத தெய்வம் அம்பாளுக்கும் அர்ச்சனை வழிபாடு செய்யவும்.
___________________________________
தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம்)
தன்னம்பிக்கையும் தளர்விலா மனமும் எதையும் எதிர்த்து போராடக் கூடிய வலிமையும் தான் நினைக்கும் விடயங்களை சாதிக்கின்ற பிடிவாத குணமும் எத்தனை பேர் அறிவுரை சொன்னாலும் தன் முடிவின்படியே காரியம் செய்கின்ற குண இயல்பும், மற்றவர்களை எப்போதும் சந்தேக கண்ணோடு பார்க்கின்ற தன்மையும் செய் நன்றி மறவாத நற்பண்பும் கொண்டுள்ள உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியானது தனஸ்தானமாகிய 2 ஆம் இடம் 06.12.08 அன்று சஞ்சரிக்கின்றார்.
உங்களின் ராசிக்கு குரு பகவான் ஜென்ம, சுகஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்றார். பொதுவாக சென்ற ஆண்டு ஜென்மஸ்தானமாகிய 1 ஆம் இடம் அமையப்பெற்று பல வகையிலும் பிரச்சினைகளை கொடுத்த குரு பகவான் தற்போது அமைகின்ற தனஸ்தானமாகிய 2 ஆம் இட சஞ்சாரம் மூலமாக பல வகையிலும் நன்மைகளும் சிறப்புகளும் தரக்கூடியவராக அமையப் பெறுகின்றார்.
எடுக்கின்ற முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும் நிலை உண்டு. தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றங்களும் பதவி உயர்வுகளும் அமையும் நிலையுண்டு. பண வரவு மிகவும் சிறப்பான நிலையிலே அமையும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும் சுப காரிய பலாபலன்களும் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும் பலன் உண்டு. எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டங்கள் ஏற்படக்கூடிய நிலைகள் உண்டு.
வெளிநாட்டு அதிர்ஷ்டங்கள் ஏற்படக்கூடிய நிலைகள் உண்டு. வெளிநாட்டு பிரயாணங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அப்பலன் பூரணமாக அமையக்கூடிய நிலைகள் இருக்கும். புதிய முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் அமையும் பலன் உண்டு. உங்களின் ராசிக்கு சனீஸ்வரனின் சஞ்சார பலனும் சாதகமான நிலையில் பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது அனுகூலமான நல்ல பலாபலன்களை கொடுக்கும் நிலையுண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் சிறப்பான பலாபலன் அமையும் நிலையுண்டு.
பரீட்சைகளில் சிறப்பான சித்திகள் ஏற்படும். எல்லா வகையிலும் சிறப்புகள் பலவும் தரக்கூடியதாக இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு அமைகின்றது. உங்களின் ராசி நாதனாக அமைகின்ற குரு பகவான் தனஸ்தான சஞ்சாரமாக அமைந்து அதி சிறப்பான பலன்களைக் கொடுப்பார். எதையும் எதிர்கொள்கின்ற மன வலிமையுடைய உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி குதூகலமும் சாதனையும் தருகின்றதாக அமையப் பெறுகின்றது. அதற்கு தகுந்தபடி செயல்கள் புரிந்து நல்ல வெற்றிகள் பெறுக.
___________________________________
மகரம்: (உத்தராடம் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1 ஆம், 2 ஆம் பாதம்)
மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்லும் தைரியம் உடையவர்கள் நீங்கள். எந்த விடயமாக இருந்தாலும் சாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள். பொது விடயங்களிலே அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டு செயல் ஆற்றும் குண இயல்புடையவர்கள்.
முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனம் கொண்டவர்கள். எதிரியாக ஒருவன் அமைந்துவிட்டால் அந்த எதிரிக்கு துன்பம் கொடுப்பதில் பின் நிற்கமாட்டீர்கள். இப்படியான குண இயல்புகள் உடைய உங்களின் ராசிக்கு குருப் பெயர்ச்சி 06.12.08 அன்று உங்களின் ஜென்ம ராசிக்கு சஞ்சரிக்கின்றார். பொதுவாகவே மகர ராசி அன்பர்களுக்கு ஜெய விரயஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் ஜென்ம ஸ்தானமாகிய 1 ஆம் இடம் அமைவது சிறப்பான நிலையாக இருக்காது.
எந்த விடயம் எடுத்தாலும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் வேலைப்பளு, திடீர் பிரச்சினைகள், மேலதிகாரிகளுடன் மனச் சஞ்சலம் போன்ற நிலைகள் இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு மனச் சஞ்சலங்கள், மனைவி, பிள்ளைகள் மூலமாக பிரச்சினைகள் என்பன ஏற்படும். பண வரவு விடயங்களிலும் எதிர்பார்க்கின்ற நிலைகள் இருக்காது.
கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலைகள் தொடரும். திருமணம் போன்ற சுப காரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு தடை, தாமத நிலைகள் இருக்கும். வெளிநாட்டு பயண முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் இழுபறி நிலைகள் இருக்கும். ""ஜென்மராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்'' என்கின்றது ஜோதிடப் பாடல். குருவின் பலன் மட்டுமின்றி உங்களின் ராசிக்கு சனீஸ்வரனும், ""அட்டமத்து சனியாக'' சஞ்சரித்துக் கொண்டு அமைகின்றார்.
எனவே கஷ்ட நிலைகளும் பிரச்சினைகளும் உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டும் நிலையுண்டு. நீங்கள் உண்டு உங்கள் பாடு உண்டு என அமைதியாக செயற்படுங்கள். எந்த விடயம் என்றாலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயற்படுங்கள்.
முக்கியமாக கொடுக்கல் வாங்கல் விடயங்களிலும் பொது விடயங்களிலும் நிதானமாக செயற்படுங்கள். உங்களின் ராசி நாத தெய்வம் விநாயகர், சிவன் வழிபாடும், பிரதி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் முறையே குரு, சனீஸ்வர வழிபாடு நன்மை தரும். எந்த விடயத்தையும் ஆளுமையோடு செய்கின்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சுமாரானதே. அதற்கு அமைய செயல் கொண்டு வெற்றிகள் காண நிதானமாக முயற்சி செய்யுங்கள்.
___________________________________
குன்றாத மனமும், நிறைந்த குண இயல்பும் கொண்டவர்கள் நீங்கள் ""அதிர்ஷ்டம் கதவை தட்டும்'' எனும் வாக்கியம் உங்களின் ராசிக்கே சாலப் பொருத்தமாகும். வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட பலன்கள் உங்களை அடிக்கடி நாடி வருவது உண்டு.
இருப்பினும் உங்கள் காரியங்களை சாதிப்பதற்காக எதையும் செய்ய தயங்கமாட்டீர்கள். தனக்கு உரிய மரியாதை கிடைக்க முன்னின்று செயற்படுவீர்கள். எல்லா வகையிலும் ""காரியக்காரர்'' நீங்கள். உங்கள் ராசிக்கு 06.12.08 அன்று அமைகின்ற குருப்பெயர்ச்சி விரயஸ்தானமாகிய 12 ஆம் இடம் அமைகின்றது. உங்களின் ராசிக்கு தன லாபஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் விரயஸ்தானமாகிய 12 ஆம் இடம் அமைவது சற்று நன்மையான பலாபலன் கொடுக்கின்ற நிலையுண்டு. பொதுவாக இந்தக் குருப்பெயர்ச்சி பெரும் நன்மைகள் தரக்கூடியது அல்ல.
இருப்பினும் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும். எதிர்பாராத வகையில் திடீர்ச் செலவுகள் ஏற்படுகின்ற நிலை இருக்கும். இருப்பினும் அமைகின்ற செலவுகள், சுபகாரியச் செலவு, தர்மகாரியச் செலவு என்கின்ற நிலையிலே அமைகின்ற பலன் உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் சற்றுக் கூடிய கவனம் வேண்டும். தொழில் ரீதியில் சிறு சிறு பிரச்சினைகள், அலைச்சல் நிலைகள் என்பன இருக்கும். குடும்பத்திலே ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன் அமையும். இடையிடையே சிறு சிறு மனச் சஞ்சலம் ஏற்படும்.
உடல் நிலையில் திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் அமையும். தேவையற்ற விடயங்களில் தலையீடு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு சற்று இழுபறி தாமத நிலையின் பின்னர் அனுகூலமான பலன் கொடுக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முயற்சியும் கூடிய கவனமும் எடுப்பது மிகவும் நல்லது. உங்களின் ராசிக்கு சனீஸ்வர சஞ்சாரம், களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைவது, சுமாரான பலன்களையே கொடுக்கும் நிலையுண்டு.
எனவே இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பெரும் சிறப்பான நிலைகள் கொடுக்காது அதற்கமைய நீங்கள் செயற்பட வேண்டும். வியாழக்கிழமைகளில் கடலை மாலை அணிவித்து குருபகவானுக்கு மஞ்சள் புஷ்பத்தால் அர்ச்சனை வழிபாடு செய்யவும். உங்களின் ராசி நாத தெய்வம் விநாயகர் வழிபாடும் செய்யவும். எடுக்கின்ற விடயங்களிலே மிகவும் நிதானத்தோடு செயல் புரிந்து அனுகூலமான பலாபலன்கள் பெற முயற்சி செய்யுங்கள்.
___________________________________
மீனம்:(பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)
மிடுக்கான பேச்சும், தோற்றமும் மற்றவர்கள் திருப்பி பேச முடியாத நிலையிலே வாதங்கள் செய்கின்ற திறமையும் தாம் நினைக்கின்ற விடயங்களை சாதிக்கின்ற தன்மையும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற நல்ல மனமும் தனது சுய நலம் அதிகம் பார்க்கின்ற குண இயல்பும் சமூகத்திலே முன்னிலை வகிக்க நினைக்கும் எண்ணங்களும் கொண்ட உங்களுக்கு 06.12.08 அன்று அமைகின்ற குருப்பெயர்ச்சி லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைகின்றது.
உங்கள் ராசி நாதனாகவும் ஜீவனஸ்தான அதிபதியாகவும் அமைகின்ற குருபகவான் 11 ஆம் இடம் அமையப் பெறுவது மிகவும் சிறப்பான நற்பலாபலன்கள் கொடுக்கின்ற நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும்.
தொழில் ரீதியில் முன்னேற்றகரமான பலாபலன்கள் அமைகின்ற நிலை உண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும் பலன் உண்டு. குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியும் சுப காரிய அனுகூலங்களும் அமையும் நிலையுண்டு.
எதிர்பாராத வகை அதிர்ஷ்டங்கள் ஏற்படுகின்ற நிலையுண்டு. வர வேண்டிய வரவுகள் தானாக வந்து சேரக்கூடிய நிலைகள் இருக்கும். லாட்டரி அதிர்ஷ்டங்கள் அமையும் பலன் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் பூரணமாக கிடைக்கும் நிலையுண்டு.
காணொளி: மாவீரர் 'நடுகல் வழிபாடு' சங்க காலம் தொட்டது
1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி 'வீரச் சாவு' அடைந்த சத்தியநாதன் சங்கர் நினைவில் முதலாவது 'மாவீரர் தினம்' 1989 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் நித்திக்குளம் பகுதியில் இடம் பெற்றது.
['கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம்' என்று தொடங்கும் பாடல்]
1990ம் ஆண்டு நடுப் பகுதியில் இருந்துதான் மாவீரர் நிகழ்வுகள் வைபவ ரீதியிலான அனுட்டானத்தை இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் பெற ஆரம்பித்தன.
போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டி வழிபடும் 'நடுகல் வழிபாடு' சங்ககாலத்தில் (கி.மு 300) பரவலாக இருந்தது. ஆரிய - பார்ப்பனிய செல்வாக்கின் பின் இவை நின்று போயின.
'நடுகல் வழிபாடு' - நாட்டப்பட்டுள்ள கல்லினை வழிபடுவதனையே குறிக்கின்றது.
வீர மறவர் மரபு பேணிய தமிழ் பேரரசுகள் முகலாய, நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்களினால் காலோட்டதில் நலிந்து போயின. மேலும் யுத்தமற்ற பல பரம்பரைகளூடாக தமிழ் மறவர் வணக்கம் அருகிப்போயிற்று.
தமிழீழ விடுதலை புலிகள், வீரச் சாவடைந்த தமது மாவீரர்களது வித்துடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில், கல்லறைகளில் விதைத்து, நடுகல் நாட்டி வழிபாடு இயற்றப்படும் வகை செய்துள்ளனர்.
மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர்.
'இந்த நாட்டிலே வாழக்கூடிய நல் எதிர்காலத்தினையே தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர்'
பாதுகாப்பாகவும், சுயநிர்ணய உரிமையுடனும், இந்த நாட்டிலே வாழக்கூடிய நல் எதிர்காலத்தினையே தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன், அண்மையில் இடம் பெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.
[இரா. சம்பந்தன் பா.உ]
இரா. சம்பந்தன் அவர்கள் நவம்பர் 17ஆம் திகதி ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்:
ஆயுதக் குழுக்களுடன் இணைந்து கொண்டு வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கூறுவது நகைப்புக்கிடமானது. தமிழ் மக்களின் அபிலாஷைகள், அரசியல் ஜனநாயக உரிமைகள் போன்ற விடயங்கள் பல தசாப்தங்களாக பல பிரச்சினைகளைக் கொண்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும்.
இரு தசாப்தங்களின் பின்னர் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்த எமது மக்கள், எந்தத் தயக்கமும் இன்றி தமிழரசுக் கட்சியை தெளிவாக தெரிவு செய்தார்கள். எனினும், அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வெட்கக் கேடானதொரு தேர்தலை கிழக்கில் நடத்திவிட்டு, இந்த நிலையில் வெட்கமின்றி இலங்கை தமிழரசுக் கட்சி பற்றி பேசுகிறார்கள்.
தமிழ் மக்களை படையினரின் பலத்தை பயன்படுத்தி அடிமைப்படுத்திவிடலாமென நினைக்காதீர்கள். தமிழ் மக்கள் அரசாங்கம் கொடுக்கும் கச்சான் கொட்டைகளில் திருப்தி அடைந்துவிட முடியாது. எமது வரலாற்று உரிமைமிக்க நிலத்தில் நிர்வாக அதிகாரம் எமக்குத் தேவை. எனவே, சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில், சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி மக்களுக்கு தேவையானதை அவர்களிடமே கேளுங்கள். அது தான் தற்போது செய்ய வேண்டியது. அதை நாம் ஏற்றுக்கொள்வோம். கிழக்கில் மக்கள், அவர்களது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாழவே விரும்புகின்றனர்.
புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதென உறுதியளித்திருந்தார். ஆனால், இங்கோ வன்னியில் மக்களின் இருப்பிடங்கள் மீதும், கிளிநொச்சி வைத்தியசாலை மீதும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுதான் உறுதியளித்த போது ஏற்பட்ட நிலைமை.
இதேபோல், அரசாங்கத்தின் கிழக்கு மீட்பு நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட 127 பேர் பற்றிய விபரங்களை சமர்ப்பித்தும் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில், இந்த இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என இலங்கை வாழ் சகல இன மக்களுக்கும் உரிமை இருப்பதாக ஜனாதிபதி இந்து பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். அது அவரது கொள்கையா என்பது தெரியாது. கடந்த காலங்களில் அவரது நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் உண்மை விளங்கும்.
இதேநேரம், இலங்கை என்பது சிங்கள மக்களுக்குரிய நாடென்றும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடன் இணைந்து வாழ முடிந்த போதிலும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்க முடியாதென இராணுவத் தளபதி ஊடகமொன்றுக்கு தெரிவித்திருக்கிறார். இதேபோல் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே சோபித்த தேரரோ, இது சிங்கள மக்களின் நாடென கூறியுள்ளார். மறுபுறம் அக்கட்சியின் கொள்கை வகுப்பாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவோ விடுதலைப்புலிகள் வந்த பிறகே இந்த பிரச்சினைகள் உருவெடுத்ததாகக் கூறுகிறார். அதாவது, 50, 70 காலப்பகுதிகளில் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பது போல அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் மக்களின் தாய்நாடு இலங்கையல்ல இந்தியாவின் தமிழ் நாடே என்று கூறும் ஹெல உறுமயவினர், இங்குள்ள தமிழர்களுக்கு பிரச்சினையென்று ஒன்று வரும்போது, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வர வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
விஜயன் இலங்கைக்கு வரும் முன்னரே, திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற சிவன் கோயில்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்துள்ளன. இதுவே தமிழ் மக்களின் வரலாறு. ஆனால், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும், முஸ்லிம்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள் என்றும் கூறுபவர்களே இன்று அரசாங்கத்திற்கு ஆலோசகர்களாக இருக்கின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றை காண அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் இங்கு வேறு யாரும் கிடையாது. அதனாலேயே புலிகளை அழித்துவிட வேண்டுமென நிற்கிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என முழுச் சர்வதேசமுமே அரசியல் தீர்வொன்றை காணுமாறே வலியுறுத்துகின்றன.
வன்னியில் விமானத் தாக்குதல்களையும், குண்டுத் தாக்குதல்களையும் நடத்தி உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்தி வரும் அரசாங்கம், துணை இராணுவ குழுக்களை அரவணைத்துக் கொண்டு ஜனநாயகத்தை வழங்கிவிட்டதாக வெளி உலகுக்கு காட்டிக் கொள்கிறது.
நாம் புலிகளல்ல. எப்போதும் புலிகளாகவும் மாட்டோம். இது தான் நீங்கள் எமது மக்களுக்கும் கொடுக்கும் அங்கீகாரம்.
நாம் எப்போதுமே எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதற்காகவே செயற்பட்டுள்ளோம். அதைத்தான் இன்றும் செய்து வருகிறோம். எதற்காகவும் எமது சுயநிர்ணய உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர்களின் வரலாற்று உரிமை பூமியில், அம்மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும்
தமிழீழ விடுதலைப் புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று, நவம்பர் 27 ம் திகதி வியாழக்கிழமை ஆற்றிய 'மாவீரர் நாள்' உரை:
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.
ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.
எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.
மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
எனது அன்பான மக்களே!
என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.
சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.
இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.
சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.
எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.
பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.
இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.
இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.
சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.
அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.
அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.
எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.
பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.
போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.
இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.
உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.
புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.
பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.
பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.
இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.
எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.
தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.
இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.
சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.
மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.
இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.
தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.
இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.
இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.
பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.
சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.
எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.
இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.
எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.
உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.
எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.
இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.
எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
எனது அன்பான மக்களே!
சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.
அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.
போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.
எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.
சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.
மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.
சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?
தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.
புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.
சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.
பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.
இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
யுத்தத்தின் பிடியில் வாழும் மக்கள் அவலம், இயற்கை அனர்த்தங்கள் மத்தியில் மேலும் அதிகரிப்பு
வட பகுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடப் பெயர்வுகளுக்குள்ளாயிருப்போர் இன்று இயற்கை அனர்த்தங்களுக்கும் மத்தியில் பாரிய மனித அவலத்தினை எதிர்நோக்குவதாக கொழும்பிலிருந்து வெளி வரும் வீரகேசரி நாளேடு நவம்பர் 27ம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரப்பகுதி உட்பட பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் வீடுகளில் மார்பளவுக்கு கூட மழைநீர் புகுந்துள்ளது.
யாழ் குடாநாடு மற்றும் வன்னியில் இடம் பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதில் இன்னும் நிலவும் ஸ்ரீ லங்கா அரச தடைகள், தாமதங்கள் களையப்படவும் வீரகேசரி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:
வடபகுதியில் தொடரும் பருவமழை காரணமாகவும் கடுங்காற்றினாலும் மக்கள் சொல்லொணா கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். குடாநாட்டைப் பொறுத்தமட்டில் தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதுடன் மக்கள் அங்கிருந்தும் இடம்பெயரும் நிலைமையும் உருவாகியுள்ளது.
குறிப்பாக யாழ். பிரதேச செயலகப்பிரிவில் 8000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து தங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் சில வீடுகள், குடிசைகள் என்பன முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வெளியேறியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மழை, வெள்ளம் காரணமாக யாழ்.குடாநாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் மரக்கறிப்பயிர்கள், வாழைத்தோட்டங்கள் எங்கும் நீர்நிறைந்து காணப்படுவதுடன் குளங்கள் வாய்க்கால்கள் என்பனவும் நிரம்பிவழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குடாநாட்டில் வீதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதற்கு பிரதான காரணம். வீதியின் இரு மருங்கிலும் இருந்த வாய்க் கால்கள் தூர்ந்துபோயுள்ளதுடன் நிலத்திற்கு அடியிலான நிர்மாணப்பணிகளின் பொருட்டு தோண்டியுள்ள கிடங்குகள் மூடப்படாதிருப்பதும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொருட்டு ஆங்காங்கே வாய்க்கால்களை மூடி பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலைமை உருவாகியிருப்பதாக வடபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 50 வருடங்களுக்கு பின்னர் வடபகுதியில் இவ்வாறான மோசமானதோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கும் மக்கள் அடைமழை தொடருமானால் நிலைமை மேலும் மோசமடைவதாகவே இருக்குமென விசனம் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, வன்னிப்பகுதியில் வெள்ளம் காட்டாறுபோல் பாய்வதால் போர் நடவடிக்கைகள் காரணமாக ஏலவே இடம் பெயர்ந்த மக்கள் மேலும் அங்கிருந்து இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக மிகுந்த விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனித அவலங்களே பல்கிப்பெருகிப்போயுள்ளன.
போர் நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் வெகுவாக நொந்துபோயிருந்தனர்.
இந்நிலையில் வன்னிப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை பாதிக்கப்பட்ட மக்களை மோசமாக வாட்டிவருவதுடன் போக்கிடமின்றி அல்லல்படும் நிலைக்கும் தள்ளியுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் என சகல தரப்பினரும் தங்கள் விதியை நொந்தவாறு மூட்டை முடிச்சுகளோடு இயற்கை மற்றும் செயற்கை தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு தேடி நாடோடிகளாக அலைந்துதிரிகின்றனர்.
இவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் மற்றும் தொண்டர் அமைப்புக்கள் இருந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதனிடையே வன்னிப்பகுதியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை நிவாரணங்களை அனுப்பிவைப்பதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவினால் வன்னி மக்களுக்கென அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் இதுவரை அவர்களை சென்றடையவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
"மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது" போன்ற நிலைமையே இன்று வடபகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் யுத்தம், மறுபுறம் காலநிலை சீரின்மை காரணமாக மக்கள் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மனிதாபிமான ரீதியில் அவர்களின் துயரைத் துடைக்க சம்பந்தப்பட்டவர்கள் சாத்தியமான நடவடிக்கை எடுப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.
காணொளி: இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட்- ம.தி.மு.க. மறியல்
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதனை கண்டித்தும் அங்கு உடனடியாக போரை நிறுத்த இந்திய மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று நவம்பர் 25ம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீதி மறியல் போராட்டம் நடத்தியுள்ளது.
சென்னையில் மத்திய தொடருந்து நிலையம் முன்பாக இந்த வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
கலைஞர் தலைமையில் பிரதமருடன் சந்திப்பு : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்று அனைத்து கட்சி கூட்டமொன்றினை நடாத்தியுள்ளார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள்:
“இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்திட, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்தியப் பேரரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறிலங்கா அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சகவாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க்குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 23.04.08 அன்றும், 12.11.08 அன்றும் இரண்டு முறை தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பி வைத்திருக்கின்றோம்.
14.10.08 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.
இதுவரை எங்கும் நடைபெறாத அளவுக்கு 24.10.08 அன்று வரலாறு காணாத மனித சங்கிலி ஒன்றினை நடத்தி காட்டியிருக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் - அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் - ஆர்ப்பாட்டங்களையும் மறியல்களையும் தொடருந்து நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கின்றன.
திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத்திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாநிலை நடத்தி இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றனர்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டும் என்றும் அவர்களை சிறிலங்கா கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அவதியுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதியுதவி கோரி தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒரு மாத காலத்திற்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக்கொண்ட அக்கறையின் காரணமாகவும் போரினால் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இடர் உதவி பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புக்களின் மூலமாகவும் சிறிலங்காவில் உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கின்றது.
அது போலவே மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு சிறிலங்கா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக்கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் உலகத் தமிழர்களும் நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையில் இதுவரையில் கைகூடவில்லை. நாம் கேட்டுக்கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்கு தயார் என்று ஒரு தரப்பினர் அறிவித்த பிறகும் சிறிலங்கா அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம்பிடிப்பதோடு இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களை எல்லாம் கொன்றொழிப்பேன் என்று கண்ணை மூடிக்கொண்டு வெறித்தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தமிழர்கள் பெரும் பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாக பிடிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று சிறிலங்கா சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில் பெருமளவில் அப்பாவி தமிழர்களும் அவர்தம் குழந்தைகளும் தான் கொல்லப்படுகின்றனர் என்றும் பெரும்பாலோனோர் அகதிகளாக்கப்பட்டு அல்லற்படுகின்றனர் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
பள்ளிகளுக்கு செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்விக்கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் அடைக்கலம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று திரிந்து கொண்டிருக்கின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்க விடாத நிலையில் இனி என்ன செய்வது என்று யோசித்ததில் மத்திய அரசு, சிறிலங்கா அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.
மத்திய அரசு தன்னால் இயன்றளவிற்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும் சிறிலங்கா அரசு அதனை மதிக்காத நிலையில் இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்கள் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் டிசம்பர் 4 ஆம் நாள் டெல்லியில் பிரதமர் அவர்களை சந்திப்பது என்றும் அதற்கிடையே நவம்பர் 28 ஆம் நாள் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது”.
தி.மு.க.வின் சார்பில் அமைச்சர்களான பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் டி.சுதர்சனம், துணைத் தலைவர் டி.யசோதா, பா.ம.க. சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், புரட்சி பாரதம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
காணொளி: 'மண்ணை இன்னும் நேசிப்பவன்...அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்... '
'என் இனமே....என் சனமே' என்று தொடங்கும் பாடல் ~ நேரடி இசை நிகழ்வொன்றில் இருந்து:
மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொல்லப்போவது என்ன ?
அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சியடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வு அவலம் என்று முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தவாறு எதிர்வரும் 27ஆம் திகதி புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறார்.
புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நிலையையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது. [இக் கட்டுரையை முழுமையாக வாசிக்க ~வீரகேசரி இணையத்தளத்தில்~ இங்கு அழுத்தவும்]
"பெரும் சாதனையாகக் கருதுவது இலங்கைத் தமிழர் பிரச்சனைய சுமுகமாக தீர்க்க முடிவதையே"
"எனது எல்லா சாதனைகளையும் விட, இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அமைதியான வாழ்வினை ஏற்படுத்தித் தர முடிந்தால் அதையே எனது பெரும் சாதனையாகக் கருதுவேன்என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "வாழ்நாள் சாதனையாளர்'' விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 23ம் திகதி நடைபெற்றது.
கலை, இலக்கியம், சினிமா, பத்திரிகை ஆகிய ஊடகங்களின் வழியாக அவர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக்கொண்டு தமிழக முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை:
"இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் தினம் தினம் கொல்லப்படுவது தொடர்கிறது. அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த இயலாத பரிதாப நிலையில் உள்ளோம்.
இந்தச் சூழலில் நான் இந்த விருதினைப் பெறுவது மகிழ்ச்சிக்குரியது அல்ல. எனது சாதனைகளைப் பாராட்டி இந்த விருது வழங்குவதாகக் கூறுகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அமைதியான வாழ்வினை ஏற்படுத்தித் தர முடிந்தால் அதையே எனது பெரும் சாதனையாகக் கருதுவேன். எல்லா தமிழர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும், அணிவகுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் இங்கே வழங்குகின்ற வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பெருமை, சிறப்பு, பொருத்தம் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.
விழாவுக்கு அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஸ்தனிஸ்லாஸ் ஃபெர்னாண்டோ தலைமை வகித்து, விருதினை வழங்கினார்.
விழாவில், பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, திருச்சி ஆயர் டோனிடிவோட்டா, சாந்தோம் கலைத்தொடர்பு நிலைய இயக்குநர் வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் முதல்வரிடம் வழங்கப்பட்டது.
காணொளி: கவிஞர் தாமரையின் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்" 10 ஆண்டுகளுக்கு முன்பாக கவிஞர் தமாரை தமிழ் இணைய சஞ்சிகையான ஆறாம் திணைக்கு வழங்கிய பேட்டியொன்றில் இப்படி தெரிவித்திருந்தார்.
கவிஞர் தமாரை
சூரியாவின் நடிப்பில் தற்போது உலகெங்கும் வெற்றி நடை போடும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தாமரை, இன்று தமிழகத்தின் முன்னணி திரை கவிஞர்களில் ஒருவர்.
கவிஞர் தாமரை தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் பொறியாளராகத் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் .
"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்தின் 'மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே' பாடலின் மூலம் கவிஞர் தாமரை பிரபல்யம் பெற்றுக்கோண்டிருந்த சமயத்தில், ஆறாம் திணை தமிழ் இணைய சஞ்சிகையில் கவிஞர் தாமரையுடனான இப் பேட்டி பிரசுரிக்கப்பட்டது:
கே: திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றியது?
ப: பள்ளிநாட்களிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த செயல் புத்தகங்கள்வாசிப்பது தான். உண்பது, சுவாசிப்பது போல் வாசிப்பதும் ஆகிவிட்டது. அப்புறம் திரைப்படங்கள் பார்ப்பதும், திரைப்பாடல்கள் கேட்பதும் மகிழ்ச்சியான விஷயங்களாக இருந்தன. புத்தக வாசிப்பின் வெளிப்பாடுதான் நான் எழுத்தாளரானது. பாடல்கள் கேட்டதன் எதிரொலி திரைப்படப் பாடலாசிரியரானது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சில பாடல்களை நான் மெய்ம்மறந்து ரசித்த போது, '' நான் ரசிப்பது போல் மற்றவர்கள் என் பாடல்களை ரசிக்க வேண்டும்" என்ற ஆசை விதை மனதிற்குள் விழுந்தது. பிற்பாடு அது வளர்ந்து மரமானது.
கே: திரைப் படத்துறை இரும்புக் கோட்டைகள் கொண்டது. உள்ளே நுழைவது கடினம். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிந்து தான் வந்தீர்கள் என்றால் என்ன தைரியத்தில் வந்தீர்கள்?
ப: 'கடினம்' என்பதால் விரும்பிய விஷயத்தை அடைய முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்றெல்லாம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டால் வாழ்க்கையில் முயற்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. 'முயல்தல்' என்பது வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.
கே:ஆரம்ப நாள்களில் வாய்ப்பு கேட்டு என்னென்ன விதங்களில் முயற்சி செய்தீர்கள்? முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ப: அப்போது திரைத் துறையைப் பற்றி எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. பத்திரிகைத் தகவல்கள் தான் நான் அறிந்த திறையுலகம்.சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வாய்ப்புத் தேடி கோவையிலிருந்து முதல் முறையாக சென்னை வந்தேன்.சில பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் முகவரிகள் கையில் இருந்தன.ஒவ்வொருவர் வீடு, அலுவலகமாக சென்று சந்திக்க முயன்றேன். சிலரை சந்திக்கவும் செய்தேன். சொல்லி வைத்தாற் போல் எனக்குக் கிடைத்த பதில் 'பிறகு சொல்லி அனுப்புகிறோம்' என்பது தான்.
ஆனால் அறிமுகம் இல்லாத இந்த சென்னை நகரில் தனியாக ஹோட்டலில் தங்கிக் கொண்டு, ஒவ்வொருவராகச் சென்று பார்ப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. சென்னையிலேயே தங்கினாலொழிய வாய்ப்பு கிடைக்காது என்பதை, கோவை-சென்னை பயணக் காட்சி சில முறைகள் நிகழ்ந்த பிறகே நான்அறிந்து கொண்டேன். பொருளாதார சூழ்நிலையும், குடும்பச் சூழ்நிலையும் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் என் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு ஏமாற்றத்தோடு கோவைக்குத் திரும்பி விட்டேன். அதன் பிறகு இலக்கியத் துறையில் முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நிறைய எழுதினேன்.இவை நிறைய இலக்கியப் பரிசுகளை பெற்றுத் தந்தன.பத்திரிகை உலகில் என் பெயர் பிரபலமானது. இந்தக் கால கட்டத்தில் தான் நான் வென்ற பரிசுகள் வாங்க அடிக்கடி சென்னை வந்து போனதில் பல அறிமுகங்கள் கிடைத்தன.இப்போது முன்பு போல் சென்னைப் பயணம் மலைப்பாக இல்லை.
ஒரு முறை இசையமைப்பாளர் ஆதித்யனை சந்தித்த பொழுது அவருடைய 'தமிழ் பாப் பாடல்' ஒலி நாடாவிற்கு ஒரு பாடல் ஏழுத வாய்ப்புத் தந்தார். சந்தர்ப்பம் வரும் போது திரைப்படத்தில் எழுத வாய்ப்புத் தருவதாக சொல்லி இருந்தார்.
இந்த சமயத்தில் என் வாசக நண்பர் ஒருவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு எனக்குக் கடிதம் எழுதி நட்பைப் புதுப்பித்தார். அவரைக் கல்லூரி நாள்களிலிருந்தே கடிதம் மூலம் அறிவேன். என் படைப்புகளை விமர்சனம் செய்து எழுதுவார். அவர் வேலைநிமித்தம் இந்தியாவெங்கும் சுற்றி கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். மனோகர் என்ற அந்த நண்பரை பத்துவருடங்களாக அறிந்திருந்தும் நேரில் சந்தித்ததில்லை. அவர் தன்னுடைய திரைப்பட நண்பரான மோகனை சந்திக்குமாறு சொன்னார். நண்பர் மோகனை நான் சந்தித்த போது அவர் இயக்குநர் சீமானை எனக்கு அறிமுகம் செய்தார். சீமான் என் கவிதைகளைப் படித்து என்னைப் பெயரளவில் அறிந்திருந்தார். அப்போது 'இனியவளே' படம் ஆரம்பித்திருந்த நேரம். ஐந்து பாடல்கள் முடிந்து ஆறாவதாக ஒரு பாடல் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். மூன்று நாள்கள் கழித்து திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது. ''இந்தப் பாடலை நீங்கள் எழுதுங்கள்" என்று திடீரென்று அவர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை.
'தென்றல் எந்தன் நடையைக் கேட்டது
தத்தோம் தகதோம்' என்ற பாடலின் மூலம் இப்படித்தான் அறிமுகமானேன்.
கே:பொதுவாக சினிமாவின் எந்தத் துறையிலும் நுழைவதே கடினமானது. பெண்ணாய் இருந்து நுழைந்ததில் கூடுதல் சிரமம் இருந்ததா?
ப: பெண்ணாக இருப்பதால் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் எனக்கும் இருந்தது. பொதுவாக சினிமாவில் சேர வேண்டுமென்றால் ஆண்கள் அடுத்த இரயிலைப் பிடித்து சென்னை வந்து இறங்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை சென்னையிலேயே இருந்து முயற்சி செய்வார்கள். அப்படியெல்லாம் 'ஓடிவர' என்னால் இயலவில்லை. அவகாசம் கிடைக்கிற போதெல்லாம் சென்னை வந்து முயற்சி செய்வதும், திரும்பி செல்வதுமாக இருந்தேன். எனவே தான் என்னுடைய அறிமுகம் தாமதமானது. சென்னையிலேயே இருந்திருந்தேன் என்றால் நான்கு வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருப்பேன்.
கே:உங்கள் வீட்டில் யாரும் உங்கள் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
பொதுவான எதிர்ப்பு இருந்தது. காரணம் அச்சம் தான். கோவையை விட்டு தனித்து எங்கும் சென்று பழக்கமில்லாதவள் நான். சென்னைப் பயணம் என்பதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள் - இரயிலில் என் பெட்டியைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் எனக்கு இமயமலை சிகரத்தைத் தொட்ட களைப்பு ஏற்பட்டு விடும். என்னை சென்னை அழைத்து வரவோ, என்னுடன் தெருத்தெருவாக அலையவோ வீட்டில் யாரும் தயாராக இல்லை. ஆனால் எனக்கு வீட்டில் சிந்தனை சுதந்தரம் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நண்பர்களின் உதவி பெற்றே என் காரியத்தை சாதித்தேன். ஆக என் பிடிவாதம் தான் என் இன்றைய நிலைக்கு முதல் காரணம்.
கே:திரைப்படப் பாடலாசிரியராக இருக்க விசேஷ பயிற்சிகள் ஏதும் மேற்கொள்கிறீர்களா?
என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுக்கு என் சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடிப்பார்க்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுதான் நான் செய்த ஒரே பயிற்சி. பின்பு 'எழுச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு சட்டநிறுவனத்திற்காக ஆறு பாடல்கள் எழுதிய அனுபவம் பாடல்பதிவுத் தொழில் நுட்பத்தையும், நடைமுறையையும் அறிந்து கொள்ள உதவி செய்தது. திரு. ஆதித்யனிடம் எழுதிய போது என்னால் உடனுக்குடன் மெட்டுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அவ்வளவு தான். மற்றபடி விசேஷ பயிற்சி எதுவும் இல்லை.
கே:இங்கிருக்கிற மற்ற பாடலாசிரியர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?
ப: பெரும்பாலும் எல்லோரையும் எனக்கு அறிமுகம் உண்டு. 'நல்ல நட்பு' என்று சொல்கிற அளவிற்கு யாரோடும் பழக்கமில்லை. கவிஞர் அறிவுமதியோடு மட்டும் நல்ல தொடர்பு உண்டு. இனிமையான, நல்ல சுபாவமுடைய அவரது நட்பு எனக்கு திரைத்துறையில் காலூன்ற நல்ல ஊக்கம் கொடுத்திருக்கிறது.
உங்கள் பாடலாசிரியர் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம்...
பொதுவான நிகழ்ச்சிகள் தாம்! குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த அசாதாரண நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
கே:உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
ப: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது குறைந்த பட்ச ஆசை! -லக்கியத் துறையில் என் பெயர் நிலைக்கும்படி நல்ல படைப்புகள் தர வேண்டும். திரைத் துறையைப் பொறுத்தவரை, 'வந்தார், போனார்' என்றில்லாமல் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் என் பெயரும் சேர வேண்டும்.
ஆனால் என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்.
கணவருக்கு மனைவியாகவும், திரைத்துறைக்கு பாடலாசிரியராகவும் ஒரே நேரத்தில் இருப்பது கடினமாயிற்றே.. எப்படி சமாளிக்கிறீர்கள்...
இப்படியும் சொல்லலாம் தன் குடும்பத்திற்காக கணவன்மார்கள் பல வருடங்கள் வெளிநாடு சென்று பணிபுரிவதில்லையா? அப்போதெல்லாம் மனைவிகள் கேள்வி கேட்காமல் அந்தப் பிரிவினைத் தாங்கிக் கொள்கிறார்களே! ஓர் ஆணிடம், ''ஒரே நேரத்தில் மனைவிக்குக் கணவனாகவும், பணியில் சிறந்த ஊழியராகவும் எப்படி இருக்க முடிகிறது?" என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவதொன்று வேண்டுமென்றால் இன்னொன்றை இழக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் - எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து சென்னையில் பாடல் எழுத வேண்டுமென்றால் அது எனக்கு ஒருவிதமான இழப்பு தான். ஆனால என் சிறு வயது கனவு நிறைவேறுகிறதே! 'Professional' பெண்கள் என்றால் கூடுதலாக இந்தச் சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
கவிஞர் தமாரை
கே:உங்களுக்குப் பிடித்த உங்களுடைய ஒரு கவிதை சொல்லுங்களேன்?
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...
கசப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?
விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...
வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?
குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும், கடந்த
காலத்தையும், வந்து
அழைத்துப் போய் கலையும்...
திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
''அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..." - தாமரை
"வாரணம் ஆயிரம்" திரைப்படத்திற்கு கவிஞர் தாமரை எழுதிய, "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
சுப்ரமணியபுரம் படத்தில் "கண்கள் இரண்டால்" பாடலை எழுதியவர் கவிஞர் தாமரை
ஜனவரி 1, 2008 இல் கொழும்பில் இந்துக் கோயில் ஒன்றில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்த, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் இனது திதி, இன்று நவம்பர் 21ம் திகதி.
தியாகராஜா மகேஸ்வரன் (ஜூன் 18 1960 - ஜனவரி 1, 2008)
அமரர் மகேஸ்வரன் ஞாபகார்த்தமாக, 2006 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பாக 2006 - மே9ம் திகதி ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தில், அவர் நிகழ்த்திய உரை இங்கே முழுவதுமாக:
சபையிலே நாங்கள் இன்று கூறிக்கொள்ள வேண்டியது யாதெனில், சிங்களத் தலைவர்களாக இருக்கலாம், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். இந்த நாட்டிலே சிறுபான்மை இனத்தவர்களாகிய தமிழர்கள் தாக்கப்படுகின்ற பொழுது, அவர்களுக்கு ஓர் அநீதி ஏற்படுகின்ற பொழுது அவர்கள் அதற்காகக் குரல் கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
இருக்கின்ற ஏனைய இனத்தவர்களுடன் நாங்கள் சகோதரத்துவத்துடன் பழகுகின்றோம். ஆனால், நீங்கள் கட்டளையிடுகின்ற பொழுது, பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் எதைச் சாதிக்கின்றார்கள்? தமிழர்களைக் கைது செய்யும்படிதான் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைக் கின்றது. இன்று கொழும்பிலே நடைபெறுகின்ற கடத்தல்களைப் பார்க்கின்ற பொழுது, கடத்தப்படுகின்றவர்கள் அனைவரும் தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கடத்தப்பட்டு எங்கு எங்கு தடுத்து வைக்கப்பட்டிக்கிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கூட எங்களுக்கு அறிய முடியாமல் இருக்கின்றது.
நேற்று மாலை நான்கு மணியளவிலே நுகேகொடைப் பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கிருக்கின்ற தமிழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மிரிஹானைப் பொலிஸ் நிலையத்திலே தடுத்து வைக்கப்பட்டார்கள். இன்று அதிகாலை மூன்று மணிவரை நான் அந்தப் பொலிஸ் நிலையத்திலே தங்கி நின்றேன்.
இன்று கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழர்களை விடுதலை செய்வதற்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகச் சட்டத்தரணிகள் பெருவாரியான பணத்தை அவர்களிடமிருந்து அறவிடுகின்றார்கள். பொலிஸ் நிலையங்களிலே அவர்களுக்குப் பல்வேறு நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுகின்றன. மிரிஹானை பொலிஸ் நிலையத்திலே, இன்று அதிகாலை மூன்று மணிவரை தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. மாற்று உடுப்புக்கள் வழங்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இராணுவமும் பொலிஸாரும் கூட்டுச் சேர்ந்து நடத்துகின்ற சோதனையின் போது கைது செய்யப்படுகின்றவர்கள் பற்றிய விபரங்கள் அவர்களுடைய வீடுகளுக்குத் தெரியப்படுத்தப்படாமலேயே அவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களுக்கும் அவர்களைச் சென்று பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், நான் இந்தச் சபையிலே ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது, இந்த நாட்டிலே செயற்படுகின்ற அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் தங்களுடைய சேவைகளைச் சரியாகச் செய்யவில்லை என்று நான் குற்றஞ்சாட்ட விரும்புகின்றேன்.
இதற்கும் மேலாக, இந்த நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரச பயங்கரவாதத்திலிருந்து சிறுபான்மைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு மத்தியஸ்த நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இன்று நான் இந்த அரசாங்கத்தைப் பார்த்து ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். கொழும்பிலே கடத்தப்படுகின்ற அனைத்து தமிழர்களும் விடுவிக்கப்பட வேண்டும். கொழும்பிலே கடத்தப்பட்டு கழுத்து வெட்டப்பட்டு முண்டங்களாக்கப்பட்ட ஆறு உடல்கள் அவிசாவளைப் பிரதேசத்திலே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களின் நான்கு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரில் ஒருவர் வத்தளையைச் சேர்ந்தவர். ஒருவர் கொழும்பைச் சேர்ந்தவர். இவர்களுடைய பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கான பூரண ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொண்டு தர வேண்டும். இதேவேளை, இன்னும் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் அரசாங்கம் உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டிலே வாழ்கின்ற ஏனைய இன மக்களையும் மதிப்பதற்கு ஏற்ற மனோ பக்குவத்தை அவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த உயர்ந்த சபையிலே நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் தமிழர்கள். தெய்வம் நின்று கொல்லும் என்ற அடிப்படையில் மக்களுக்கு நீதி தாமதித்துக் கிடைக்கும் என்றுதான் நாங்கள் நம்புகின்றோம். இந்த நாட்டிலே கடந்த ஐந்து மாத காலமாக கொடுங்கோல் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு எதிராகத்தான் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், இந்த அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு என்னுடைய முழுமைமயான எதிர்ப்பைத் தமிழ்ச் சமூகத்தின் சார்பிலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். தமிழர்களுக்கு இந்த அரசாங்கத்தினால் ஒரு குண்டூசி முனை அளவுக்குக்கூட சலுகைகள் வழங்கப்படவில்லை.
மாறாக, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களைச் சிறையிலும் அடைத்து வருகின்றது. இவ்வாறு கொடுமைப்படுத்துவதன் ஊடாக இந்த நாட்டினுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வு மிக விரைவிலே வெகு தூரத்திற்குத் தள்ளப்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகின்றேன்.
அத்தோடு, இன்று காலை இந்த சபையிலே நடந்த சம்பவத்தையும் நான் நினைவுகூர விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டி இச்சபையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழர்களுடைய அவலங்களைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் இனியாவது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சமாதானப் பேச்சுவார்த்தை மேசையிலும் நீங்கள் விவாதங்களிலே ஈடுபடுகின்றீர்கள். இரண்டு தரப்புக்களிலும் தவறுகள் இருக்கலாம். விட்டுக்கொடுப்புடன் கூடிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. ஆகையினால், அதற்கேற்ற வகையில் உரிய நடவடிக்கைகளை, போரை நிறுத்துவதற்காக, கொலைகளை நிறுத்துவதற்காக, தமிழர்கள் சம்பந்தமாகப் பேசுவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து நாட்டு மக்களுக்கு ஒரு சகஜ வாழ்வை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி வணக்கம்.
காணோளி: பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்
பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. கடந்த பல நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அவர் சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிசிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணியளவில் அவர் காலமானார்.
[எம்.என். நம்பியார் எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில்]
1919 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 7 ஆம் தேதி பிறந்த எம்.என். நம்பியார், தனது, 13 வயது முதலே நாடக கம்பெனிகளில் நடித்து வந்தார். பின்னர், 1935 ஆம் ஆண்டு, முதன் முதலாக, பக்தராமதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். கல்யாணி மற்றும் கவிதா ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார்.
பின்னர், பிரபல நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் சிவந்த மண், மற்றும் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார்.
தமிழ் திரையுலகில் வில்லன் நடிகர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் நம்பியார். அவரது வில்லத்தனமான பார்வை, நமுட்டுச் சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள் என வில்லன் நடிப்பில் தனக்கென முத்திரை பதித்தவர் எம்.என். நம்பியார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கசீலராக வாழ்ந்த அவர், ஆன்மீகத்திலும் அதிக நாட்டவம் கொண்டவராவார். ஆண்டுதோறும், சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
[ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, மக்களை பெற்ற மகராசி படத்தில் எம்.என்.நம்பியாருக்காக பாடுபவர்...P.B. ஸ்ரீனிவாஸ், உடன் சேர்ந்து, U.சரோஜினி]
இலங்கைத் தமிழர் பற்றி ஒருமித்த தமிழக கட்சிகளின் அணுகுமுறைக்கு தினமணி கோரிக்கை
இலங்கைப் பிரச்னையில் வெறும் கபடநாடகம்தான் தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளேயே நடக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டால், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தான் பாதிக்கப்படப் போகின்றனர்; தமிழக கட்சிகள் ஒன்றாகக் கூடி நின்றால் மட்டுமே நன்மை பிறக்கும் என தமிழக நாளேடு தினமணி, நவம்பர் 18ம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
[வன்னியில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்துள்ள தமிழ் குடும்பம் தங்குமிடம் அமைக்கும் காட்சி - படம்: ஐ.நா]
தினமணி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:
குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதியவர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிகளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரியவில்லை.
இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக்டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று தீர்மானிக்கப்பட்டபோதும் அனைவரும் அதற்கு மறுப்புச் சொல்லவே இல்லை.
இந்தத் தீர்மானத்தின்படி காங்கிரஸ் எம்பிக்கள் பதவியைத் துறப்பார்களா என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தலைமையின் கருத்தைக் கேட்காமல் இத்தகைய முடிவை மேற்கொள்ள இயலுமா என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டது.
இருந்தாலும்கூட, பொது நாகரிகம் கருதி, மற்ற கட்சியினர் இத்தகைய கருத்து உரசல்களுக்கு இடம் தராமலும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலும் மெüனம் காத்தனர். திமுக-வின் மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பின்தேதியிட்ட பதவி விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தபோதும்கூட, இந்த விவகாரம் பற்றி அதிகம் பேசாமல் மெüனம் காத்தன மற்ற கட்சிகள்.
இந்தப் பிரச்னையில், மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், மத்திய அரசு நடவடிக்கை திருப்தி தருவதாக முதல்வர் கருத்து தெரிவித்த பிறகுதான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்த விமர்சனங்களை பிற கட்சிகள் முன்வைத்தன. அந்த அளவுக்கு ஒரு நாகரிகமான அரசியலை இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கடைப்பிடித்தன என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஏனென்றால், இலங்கைத் தமிழர் பிரச்னையும் மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது.
நியாயமாகப் பார்த்தால், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்து சென்ற பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மத்திய அமைச்சர் விளக்கியதை எடுத்துச்சொல்லிய பிறகுதான், தனது திருப்தியை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் செய்யத் தயார் என்று சொல்லியும் இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்யத் தயாராக இல்லை. இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷ அதை தெளிவாகவே சொல்லிச் சென்றுவிட்டார். மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்தது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தங்களை அவமானப்படுத்துவதற்காக என்று திமுக தலைமை நினைத்திருந்தால், இந்தக் கூட்டத்தை "நானே மீண்டும் நடத்துகிறேன்' என்று மெüனம் கலைந்திருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை. அல்லது தங்கள் பிரதிநிதி ஒருவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
முன்பு திமுக தலைமை நடத்திய கூட்டம் என்பதால் பங்குகொள்வதைத் தவிர்த்த அதிமுக, தேமுதிக இப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். இவர்களும் பங்குகொள்ளவில்லை. பாஜக, விடுதலை சிறுத்தைகள் என யாருமே பங்கேற்கவில்லை என்பதைப் பார்க்கும்போது தமிழக அரசியல் ஆரோக்கியமாக இல்லை என்பது தெளிவாகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றும் தேசவிரோதச் செயலுக்காக கூட்டப்பட்டதல்ல. அது வெறும் ஆலோசனைக் கூட்டம். கருத்து உடன்பாடு இல்லை என்றால், இந்தக் கூட்டத்தின் தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று சொல்லி, வெளியேறலாம். யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. ஆனால் கூட்டத்துக்கு ஒரு பிரதிநிதியைக்கூட அனுப்ப முடியாது என்றால்....
தமிழக கட்சிகள் ஒன்றாகக் கூடி நின்றால், மத்திய அரசுக்கு ஏற்படும் நெருக்கடி நமக்கும் ஏற்படும் என்று இலங்கை அரசு உணர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கும்.
தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இலங்கைப் பிரச்னையில் வெறும் கபடநாடகம்தான் நடக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டால், இலங்கைக்குக் கொண்டாட்டம். பாவம், அப்பாவி இலங்கைத் தமிழர்கள்!. நமது அரசியல் கட்சிகளின் நீலிக் கண்ணீரால் நிறைகிறது வங்கக் கடல்!
சவால்களுக்கு மத்தியில் வன்னியில் தொடரும் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிகள்
"எமது பணியைப் பொறுத்தவரை பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. மக்களுக்கு உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கையை பருவமழையானது மேலும் சிக்கலாக்கிவிட் டுள்ளது. சில வீதிகள் இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலைகாணப்படுகின்றமையால் உதவிப்பொருட்களை கொண்டுவருவது கடினமாகியுள்ளது. இருந்தபோதிலும் மிகவும் அவசியமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்ற எம்மால் முடிந்துள்ளது," என என வன்னிப் பகுதியில் இடம் பெயர்ந்தோருக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவின் பேச்சாளர் அலெக்சாண்ட்ரா மெடியேவிக் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அலெக்சாண்ட்ரா மெடியேவிக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
[அலெக்சாண்ட்ரா மெடியேவிக்]
வீரகேசரியின் ஆ.அருண், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளரினை பேட்டி கண்டுள்ளார்.
பேட்டி விபரம் வருமாறு:
கேள்வி: ஓமந்தை சோதனைச்சாவடியை ஒட்டுசுட்டானுக்கு நகர்த்துமாறு பாதுகாப்புச் செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: இதனை என்னால் உறுதிப்படுத்தவோ அன்றேல் நிராகரிக்கவோ முடியாது. ஏனெனில் அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளுடனான எமது இரகசிய கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக அமைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.
கேள்வி: வன்னியில் இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்களுக்காக தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் மூலமாக மக்களிடம் கையளிக்கப்படும் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், இலங்கை அரசாங்கமே இதனை நேரில் கையளிக்கும் என ஜனாதிபதி புதுடில்லியில் வைத்துத் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதன் உண்மையான நிலை யாது ?
பதில்: வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காகவும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்காகவும் நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதற்காக இந்திய அதிகாரிகள் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவை அண்மையில் அணுகியிருந்தனர். இலங்கையை வந்தடையும் இந்திய நிவாரணப் பொருட்கள் இலங்கையிலுள்ள செஞ்சிலுவை சர்வதேசக்குழு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படும் என நாம் நினைக்கின்றோம். இந்தப் பொருட்கள் பின்னர் வன்னியில் விநியோகிக்கப்படும். நிவாரணப்பொருட்கள் தமிழ்நாட்டில் பொதியிடப்படுவதற்கு முன்னதாக செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் பிரதிநிதிகள் அதனைப் பார்வையிட்டுள்ளனர். அந்தப்பொருட்கள் நல்ல தரமானவையென்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதையும் நாம் உறுதி செய்துள்ளோம்.
மிக முக்கியமாக அந்தப்பொருட்கள் வன்னியிலுள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்புடையதாக இருப்பதை நாம் உறுதி செய்துள்ளோம்.
அந்தவகையில் எமது பணியாளர்கள் தேவையுடைய பொதுமக்களுக்கு நேரடியாக இந்த பொருட்களைக் கையளிப்பார்கள். மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கும் வன்னியிலுள்ள குடியிருப்பாளர்களுக்கும் இந்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
கேள்வி: வன்னியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியுள்ள ஒரே அமைப்பாக செஞ் சிலுவை சர்வதேசக்குழு காணப்படுகின்றது. வன் னியில் தற்போதைய நிலையில் நீங்கள் ஆற்றி வருகின்ற பங்குபணி பற்றிக் குறிப்பிடுங்கள் ?
பதில்: செஞ்சிலுவை சர்வதேச குழுவே தற்போது வன்னியில் நிரந்தரமாக நிலைகொண் டுள்ள ஒரேயொரு சர்வதேச மனிதாபிமான நிறு வனமாகும். வன்னியில் நாம் கடந்த பல ஆண்டு காலமாக பணியாற்றி வருகின்றோம். தற்போது எமது நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பி லிருந்து முன்னெடுத்து வருகின்றோம். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் நெருக்கமாக இருந்து மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்க ளுக்குத் துணைபுரிவது எமது நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகவுள்ளது. மக்களின் அடிப் படைத் தேவைகளை ஈடுசெய்வதற்கு உதவிசெய் வதுடன் நெருக்கடியான நிலையின் போது மக்களுக்கு போஷாக்குப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் நுளம்பு வலைகள் போன்றவற்றை விநியோகித்து அவர் களின் இடம்பெயர்வின் கஷ்டமான காலப்பகுதி யில் உதவிசெய்து வருகின்றோம்.
அத்தோடு, குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தல், நீர் கழிப்பட வசதிகள் என்பன தொடர்பாகவும் நாம் உதவிபுரிந்து வருகின்றோம்.
இலங்கையின் ஏனைய பாகங்களில் செயற்படுவதைப் போன்றே நாம் தொடர்ந்தும் பாதுகாப்புநல விடயங்களிலும் பணி யாற்றி வருகின்றோம். ஏனெனில், பாதுகாப்பு விடயமும் ஆயுத மோதல்களில் பாதிக் கப்பட்டோருக்கான உதவிகளை வழங்குவதும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் ஆணையில் அடங்கியுள்ளது.
கேள்வி: வன்னியில் பருவமழை ஆரம்பித்து விட்டதாக சுட்டிக் காட்டப்படும் நிலையில் அங்குள்ள மக்கள் எவ்வாறான இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் ?
பதில்: வன்னியில் பருவமழை காரணமாக குடியிருப்புக்களுக்கான தேவை பெருமளவாக அதிக?த்திருப்பதை நாம் கண்ணுற்றுள்ளோம்.
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 750 ற்கும் அதிக மான அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான தற்காலிக குடியிருப்புக்கான பொருட்களை நாம் வழங்கியுள்ளோம். அதற்கு மேலதிகமாக ஏறத் தாழ 18,000 தாழ்வார விரிப்புக்கள் விநியோகித் துள்ளோம். இவற்றை பல்வேறுவகைகளில் பாவனைக்குட்படுத்த முடியும்.
கேள்வி: தாழ்வார விரிப்புகளை வன்னிக்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தாக ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வந்தன.
அப்படி தடையுள்ளதா ?
பதில்: இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான எமது உதவி நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு போதுமான கையிருப்புக்கள் தற்போது வன்னியில் உள்ளன.
கேள்வி: வன்னியில் சுகாதார சேவை எவ்வாறு காணப்படுகின்றது? செஞ்சிலுவை சர்வதேசக்குழு இந்த விடயத்தில் எத்தகைய பங்களிப்பை ஆற்றுகின்றது ?
பதில்: வன்னியில் தற்போது மக்கள் மட்டும் இடம்பெயர்ந்திருக்கவில்லை. மாறாக மக்களுடன் பல சுகாதாரக் கட்டமைப்புக்களுமே இடம்பெயர்க்கப்பட்டுள்ளன. கடினமான சூழ்நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அங்குள்ளவர்கள் பணியாற்றுதற்கு ஏற்புடைய ஆற்றலைக் கொண்டுள்ளனர். வன்னியில் இயங்கும் சுகாதாரக் கட்டமைப்புடன் இணைந்து செஞ்சிலுவை சர்வதேசக்குழுவானது தற்போது அங்குள்ள நிலைமைகளை அவதானித்து வருகின்றது. ஒக்டோபர் மாதத்தில் 15 மலேரியா நோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்த வகையில் பருவ மழையின் வருகையுடன் நுளம்புடன் தொடர்புடைய நோய்களின் பரவுகை தொடர்பாக நாம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றோம். அதுமட்டுமன்றி, சுகாதாரப் பிரிவினருடன் நாம் தினந்தோறும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு உதவுவதற்கு நாம் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளோம். அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நாம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
[ஒமந்தை சோதனை சாவடி அருகாமையில்- படம்: ஐ.நா]
கேள்வி: இவ்வருடத்தில் ஓமந்தைச் சோதனைச் சாவடியை பயன்படுத்திய மக்கள் தொடர்பான தரவுகள் ஏதேனும் உள்ளதா?
பதில்: இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 270,000க்கும் அதிகமான பொதுமக்கள் இருபக்கங்களிலிருந்துமாக ஓமந்தை சோதனைச் சாவடியை பயன்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் பணியின் நிமித்தமாகவோ அன்றேல் மருத்துவ தேவைகளின் நிமித்தமாகவோ அன்றேல் குடும்ப அங்கத்தவர்களைக் காண்பதற்காகவோ ஓமந்தை சோதனைச்சாவடியை பயன்படுத்தியுள்ளனர்.
ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஓமந்தைக் கடவையை பயன்படுத்தியுள்ளனர். இதில் வன்னியிலிருந்து அர கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு 80ற்கு மேற்பட்ட அம்புலன்ஸ்களில் வந்த 530ற்குமேற்பட்ட நோயாளர்களும் அடங்குவர்.
கேள்வி: ஓமந்தை சோதனைச் சாவடி கடந்த வாரத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் திறக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதே எதற்காக இப்படி அறிவிப்புக்கள் வந்தன ?
பதில்: ஆயுதமோதல் காரணமாக நிலவுகின்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நவம்பர் 14ஆம் திகதி எமது அலுவலர்கள் ஓமந்தைக்கடவையில் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓமந்தை கடவையைப் பயன்படுத்துவதானது பொதுமக்களுக்கும் எமது அலுவலர்களுக்கும் பாதுகாப்பானது என்ற உத்தரவாதங்களை அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து பெற்றுக்கொண்ட நிலையிலேயே இது சாத்தியமாகியுள்ளது.
ஓமந்தை சோதனைச் சாவடியை திறக்கவோ அன்றேல் மூடுவதற்கோ உரித்தான ஆணையை செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்வது பிரதானமானது. மாறாக, இரு தரப்பினரும் இணக்கம் கண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஓமந்தை சோதனைச் சாவடி திறக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் இணக்கப்பாட்டைப் பொறுத்தவரையில் இரு தரப்பினருக்குமிடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஓமந்தை சோதனைச் சாவடி, 4 மணித்தியாலங்கள் திறக்கப்படும்.
[வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் - படம்: ஐ.நா]
கேள்வி: இந்தக் கஷ்டமான காலகட்டத்தில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதன் பணிகளை ?ன்னெடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் யாவை?
பதில்: எமது பணியைப் பொறுத்தவரை பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. மக்களுக்கு உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கையை பருவமழையானது மேலும் சிக்கலாக்கிவிட் டுள்ளது. சில வீதிகள் இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலைகாணப்படுகின்றமையால் உதவிப்பொருட்களை கொண்டுவருவது கடினமாகியுள்ளது. இருந்தபோதிலும் மிகவும் அவசியமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்ற எம்மால் முடிந்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றே திருப்தி தரும், என்கிறார் தமிழக முதல்வர்
"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி அடைவோம்" என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நவ. 16, ஞாயிற்றுக்கிழமை கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தது:
[கோவையில் பேட்டி அளிக்கும் முதல்வர் கருணாநிதி. உடன், நிதி அமைச்சர் க.அன்பழகன்-படம்: தினமணி.கொம்]
"இலங்கை பிரச்னை தொடர்பாக பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை ஏற்கெனவே சந்தித்துப் பேசியுள்ளேன்.
கடிதம் மூலமாகவும் கருத்துகளைத் தெரிவித்துள்ளோம். தில்லியில் உள்ள திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் மூலம் தொடர்பு கொண்டு அடிக்கடி கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
திமுகவின் செயற்குழுக் கூட்டத்திலும், தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்தான் திமுகவின் அணுகுமுறை அரசு சார்பாக இப் பிரச்னையைக் கையாண்டு வருவதால் பிரதமரிடம் பேசி வரு கிறோம். கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தி ருந்தால், சோனியா காந்தியிடம் பேசியிருப் போம். போர் நிறுத்தம் என்பதுதான் எங்களது அனைத்துத் தீர்மானங்களின் பொழிப்புரை, அதுதான் மையக் கருத்து. அது ஏற்படாத வரையில் எங்களுக்கு திருப்தி ஏற்படாது.
தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தமிழர்கள் பெரும் பாதிப்பையும், அழிவையும் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் திமுகவின் கருத்து.
இலங்கைப் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதை இன்றுதான் படித்தேன். சென்னை சென்ற பிறகு இதுகுறித்த விவரங்களை அவரிடம் இருந்து தெரிந்து கொள்ளவும், செயல்படு வதற்கான முயற்சியிலும் ஈடுபட முடியும் எனவும் முதல்வர் கருணநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காணொளி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் விஜய் சென்னையில் உண்ணாவிரதம்
''இலங்கையில் தற்போது நடைபெறும் போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் உயிரிழக்கின்றனர். எனவே, அங்கு போர் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது எனது ரசிகர்கள் சார்பாக இப்போராட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் நமது உணர்வுகளை உலகுக்கு வெளிப்படுத்துகிறோம்'' - நடிகர் விஜய்
சென்னை, நவ.16: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் விஜய் இன்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே அவரது தலைமையில் ஏராளமான ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
'தென்னிலங்கை மனித நேயத்தை புரிந்து கொள்ளாமல் சலசலக்கிறது'
வடக்கே வன்னிப் பகுதியில் பொது மக்கள் சொல்லொணாத் துன்பங்களை யுத்தம் காரணமாக அனுபவித்து வருகையில், ஸ்ரீ லங்காவின் தெற்கே அது குறித்த புரிந்துணர்வின்றி அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் யுத்த நிறுத்தத்திற்கு எதிர் மறையான கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்து, இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி, நவம்பர் 16 ம் திகதிய ஆசிரியத்தலையங்கத்தில் விசனம் தெரிவித்துள்ளது.
[பரந்தன் பகுதியில், நவம்பர் 6ம் திகதி ஸ்ரீ லங்கா விமானப் படையின் தாக்குதலில் வேளாண்மை கால்நடைகளும் பலியாகின]
"வன்னி மக்களின் துயர்துடைக்க, பசிப்பிணி போக்க தமிழகமே திரண்டு உணவுப் பொதிகளை கப்பலேற்றி அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இந்த உணர்வை, எழுச்சியை அருகருகே வாழ்ந்த எம்மவரிடமிருந்து காணமுடியவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்," என வீரகேசரி சுட்டிக்காட்டியுள்ளது.
வீரகேசரி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:
இன்றைய தேவை போர் நிறுத்தம்:
இன விவகார தீர்வை நோக்கிய பயணத்தில் போர் மூலமான வெற்றி என்பது எந்தவொரு பகுதிக்கும் கிடைக்கக்கூடியதொன்றல்ல என்பதை கடந்த 25 வருடகால போர் அனுபவம் காட்டி நிற்கின்றது.
இன்று மாத்திரமல்ல, கடந்த காலங்களிலும் பொது மக்களே போருக்கென அதிகவிலையை கொடுத்துள்ளனர். அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் அளப்பரியன. இழப்புக்கள் எனும்போது சொத்தழிவுகள் மாத்திரமன்றி, உயிரிழப்புக்களும் கணக்கில் அடங்காதவை.
தற்போதைய போர் நடவடிக்கையின் காரணமாக, "3 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் கூடுதலாக கண்டாவளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, தர்மபுரம் போன்ற பகுதிகளில் தங்கியுள்ளனர். அவர்கள் கஷ்டமான நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு இன்னும் இருப்பிட வசதி முழுமையாக அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அந்த மக்கள் மரநிழல்களில், சிறுகுடிசைகள் கொட்டில்கள் அமைத்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் கூடுதலாக மழைவந்தால் நீர் நிரம்பக்கூடிய வயல்கள், பயிர்ச்செய்கைக் காணிகள் போன்றவற்றிலேயே தமது குடிசைகளை அமைத்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மிகவும் கஷ்டமான நிலைமையிலேயே உள்ளது'' என்று வன்னி சென்று திரும்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
"பெரும்பாலோனோர் ஒரு நேர உணவையே உட்கொள்கின்றனர். அதிகமானோர் நிவாரணத்தையே நம்பியிருக்கின்றனர். ஏனெனில் இவர்களின் தொழில்வாய்ப்புகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளன. தொழில்செய்யமுடியாத சூழல் காணப்படுகிறது'' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எறிகணை வீச்சுகளுக்குள்ளும் விமான குண்டுத்தாக்குதலுக்குள்ளும் மழைக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமது சின்னஞ்சிறுசுகளுடன் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வன்னியிலுள்ள வைத்தியசாலைகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் போதிய மருத்துவ வசதிகள் இன்றியும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான ஒட்சிசன் இன்றியும் அவைபெயரளவிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஒரு புறம் போர் அனர்த்தம் மறுபுறம் இயற்கை என்பன இந்த மக்களை வாட்டி வதைக்கின்றன. அதேவேளையில் விலங்குகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் அகதிகளாகி அடைக்கலம் தேடியுள்ள நிலையில் பாம்பு போன்ற ஜீவராசிகள் போக்கிடமின்றி மக்களுடன் மக்களாக பற்றைக்குள்ளிருந்து மனிதர்களை தீண்டுகின்றன.
பாம்புக் கடியிலிருந்து தப்ப முடியாத நிலையில் மக்கள் இருக்கும் அதேவேளை பாம்புக்கடிக்கான சிகிச்சையின்றிஅநியாயமாக மக்கள் தமது உயிரைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு மக்கள் அல்லல்பட போரே காரணமாக அமைந்துள்ளது.
போரினால் துயருறும் மக்கள் குறித்து தென்னிலங்கை பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே, மனிதத்துவம் சாகவில்லை என்பதற்கு அடையாளமாக தென்னிலங்கையிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க அவை வழிவகுத்ததாகத் தெரியவில்லை.
ஆனால், போரினால் துயருறும் மக்களுக்காக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்பாவிகளின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அநியாயமாக போருக்கு மக்கள் பலியாகுவது தடுக்கப்பட வேண்டும் என தமிழகம் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது.
வன்னி மக்களின் துயர்துடைக்க, பசிப்பிணி போக்க தமிழகமே திரண்டு உணவுப் பொதிகளை கப்பலேற்றி அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இந்த உணர்வை, எழுச்சியை அருகருகே வாழ்ந்த எம்மவரிடமிருந்து காணமுடியவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தமிழகம் இதற்கும் ஒருபடி மேல் போய் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென குரல் எழுப்பியுள்ளதுடன் அந்த குரல்கள் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த எழுச்சிகளின் நியாயத்தை, அதில் பொதிந்துள்ள மனித நேயத்தை புரிந்து கொள்ள முடியாது தென்னிலங்கையில் அதற்கு எதிரான சலசலப்புகளும் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இந்திய மத்திய அரசு, அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுங்கள், போர் நடவடிக்கையின்போது அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதிமொழியை இலங்கை அரசிடம் பெற்றுக் கொண்டதுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு அது இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தப்படுமாயின் இன்னுமொரு போர் இலங்கை மண்ணில் வெடிப்பதற்கு இடமிருக்காது.
ஆனால், இலங்கை அரசாங்கம் தீர்வுகாண எவ்வித திட்டங்களுமின்றி போர் ஒன்றையே இறுதித்தீர்வாக திட்டமாக கொண்டு செயற்படுகின்றது என்பதே பலரின் கருத்தாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு தமிழக முதல்வர் கருணாநிதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவில் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா ஏமாந்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளதுடன், தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்றும் அறிவித்துள்ளார்.
மொத்தத்தில் வன்னியில் அகதிகளாகி துயருறும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் நலனைக் கருத்திற்கொண்டாவது, இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்துக்கு முன் வர வேண்டும்.
"இந்தக் குளத்தின் கீழ் பெரும்போகத்தில் இருபதினாயிரத்து எண்ணூற்றி எண்பத்திரெண்டு ஏக்கர் நெல்லும், ஆயிரத்து மூன்று ஏக்கர் மேட்டு நிலப்ப் பயிர் உப உணவு பயிர் செய்கையும் செய்யக்க்கூடிய வகையில் திட்டமிடப்படுள்ளது.
மொத்தம், இருபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்து ஏக்கர் பயிர் செய்கைக்குரிய நிலங்கள் இருப்பினும் தற்போது ஏற்று நீர்ப்பாசனத்திற்குரிய பம்பிகள் இயங்க மின்சாரம் இல்லாத காரணத்தினால் ஆயிரத்து மூன்று ஏக்கரில் மேட்டு நிலப் பயிர் செய்கை நடைபெறவில்லை.
பரவல் பாசனம் செய்யும் கால்வாய்களும் மற்றும் கட்டுமானங்களும் தற்போதய நாட்டு நிலைமை காரணமாக பழுதடைந்துள்ளது.
இதற்கு சீமெந்து, இரும்புக்கம்பிகள் இல்லாததும் நிதி ஒதுக்கீட்டின் பற்றாக்குறையுமே காரணமாகும்."
அடுத்த ஆண்டையும் ஒரு யுத்த ஆண்டாகவே தொடர ஸ்ரீ லங்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது
ஸ்ரீ லங்காவின் 2009 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பற்றிய விவாதத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் ஆற்றிய உரை:
அரசு போரை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வை காண முன்வர வேண்டும்
கிழக்கின் உதயத்தைப்போன்று வடக்கில் வசந்தம் வரப்போகின்றது என்று இந்த நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த அரசாங்கம், இந்த நாட்டில் என்றுமில்லாதவாறு வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்படும் யுத்தத்திற்கு 177 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டையும் ஒரு யுத்த ஆண்டாகவே தொடர திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பது வெளிப்படை.
போர் சூழல், சுனாமி அனர்த்தம், தொடர்ந்து நடைபெற்ற இராணுவ நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும், காலா காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த மலையக மக்களுடைய அபிவிருத்திக்கும், இவ்வரவு செலவுத்திட்டத்தில் போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடக்கம் உப்பு வரி வரை அனைத்திற்கும் வரிகளை விதித்து வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் துன்பப்படுகின்ற மக்களை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கியுள்ளது. யுத்தத்தை காரணமாக காட்டி இந்த நாட்டு மக்கள் சகலரையும் வஞ்சிக்கின்ற ஒரு வரவு செலவுத்திட்டமாகவே இதனை நாம் பார்க்கிறோம்.
மட்டக்களப்பு படுவான்கரை, வாகரை, கதிரவெளி, வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் விமானத்தாக்குதல், பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி 350 பேருக்கு மேற்பட்டோர் குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் உட்பட உடல் சிதறி இறந்துள்ளார்கள். 500 பேருக்கு மேல் அங்கவீனமுற்றும், 1500 பேருக்கு மேல் காயப்பட்டும் உள்ளனர்.
இவர்களின் வீடு வாசல்கள், உடமைகள், கால்நடைகள், வயல் நிலங்கள், தோட்டநிலங்கள், பாடசாலைகள், கோயில்கள், வைத்தியசாலைகள், பொது கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்கள் இடம்பெயர்ந்த பிற்பாடு தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாதுகாப்பு படையினர் மக்களின் பெறுமதியான உடமைகளை பாதுகாத்துக் கொடுக்கவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் இருக்கின்றது. மூதூர் கிழக்குப் பிரதேசத்திலும் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்திலும் மின்சார விநியோகத்தில் இருந்த பாரிய மின்கம்பங்களும்,கேபிள்களும் முற்றாக அகற்றப்பட்டதை அரசாங்கம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மூதூர் கிழக்கு, கட்டைபறிச்சான், சேனையூர் ஆகிய கிராமங்களில் 1,912 குடும்பங்களைச் சேர்ந்த 6,138 அங்கத்தவர்கள் இறுதியாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இடம்பெயர்ந்து 3 வருடங்களுக்கு மேலாகியும், மீள்குடியேற்ற போதியளவு கால அவகாசம் இருந்தும், அடை மழை பெய்யும் நேரத்தில் மக்களின் அடிப்படை வசதிகளைச் செய்யாது மீள்குடியேற்றுவது ஒரு திட்டமிடப்படாத செயலாகவே கருத வேண்டியுள்ளது.
இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்த பெரும்பாலான வீடுகளும், பாடசாலை போன்ற பொதுக்கட்டிடங்களும் எறிகணைத் தாக்குதல்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்யும் பெரும் மழையில் ஒதுங்குவதற்கு கூட இடவசதி இன்றி மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மின்சார வசதிகள், போக்குவரத்து, வைத்திய வசதிகள் செய்து கொடுக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாடசாலைகளும் மாணவர்கள் கற்க கூடிய வசதி வளங்கள் இன்றி நடைபெறுகின்றன.
திருக்கோணேஸ்வர ஆலயத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய சம்பூர் பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களின் வீடுவாசல்களை முற்றாக அழித்தது மட்டுமல்லாமல், தாம் விரும்பியபடி அவர்களின் பயன்தருகாணிகளுக்கு ஊடாக பாரிய வீதிகளை அமைத்து உயர் பாதுகாப்பு வலயமாக்கியுள்ளது. இந்த வலயத்துக்குள் வாழ்ந்த 1637 குடும்பங்களைச் சேர்ந்த 6529 உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இப்பிரதேசத்தில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு மக்கள் குடியிருப்புகள் அல்லாத நிலவசதிகள் இருந்தும், மக்கள் பூர்வீகமாக குடியிருந்த உறுதிக்காணிகளில் அனல் மின் நிலையம் அமைக்க அரசாங்கம் விடாப்பிடியாக எடுக்கும் முயற்சி, தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்தினால் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் ஒரு செயலாகவே மக்கள் கருதுகின்றனர்.
கட்டுநாயக்க, கொலன்னாவ, களனிதிஸ்ஸ போன்ற உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகில் மக்கள் செறிவாக வாழும் பொழுது சம்பூர் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தமது கிராமங்களைக் கூட சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுமல்லாமல் பொருத்தமற்ற இடங்களில் அவர்களை கட்டாயப்படுத்தி குடியமர்த்தி குடியமர்த்த எடுக்கும் முயற்சி எந்த வகையில் நியாயமானது எனக் கேட்கிறேன்.
கொட்டியாரக்குடா கடல் சுற்றாடலில் அமைந்திருக்கும் சேனையூர், கட்டைபறிச்சான், மூதூர், கிண்ணியா, சீனன்குடா, திருகோணமலை ஆகிய இடங்களில் செறிவாக வாழும் மக்கள் கடற்றொழில் ரீதியாகவும், சூழல் சுற்றாடல் மாசடைவதன் மூலமாகவும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.
அனல் மின் நிலையம் அமைய தெரிவு செய்திருக்கும் உத்தேச இடம் இப்பிரதேவாழ் மக்களிடத்திலோ அல்லது அம்மக்க ளின் பிரதிநிதிகளிடமோ ஆலோசனை பெறப்படாமல் அரசாங்கம் தன்னிச்சையாக தெரிவு செய்திருக்கின்றது. இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையும், மீன்பிடியையும் தமது முக்கிய தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் எதிர்காலம் சூனியமாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவ நடவடிக்கையின் போது மூதூர் கிழக்கைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். தற்போது மூதூர் கிழக்கு மீள்குடியேற்றம் நடைபெறும் பொழுது சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா ஆகிய கிராம மக்களும் மீள்குடியேற விரும்புவது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மறுக்கப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறும் செயலாகும். இவ்விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான முறையில் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென இவ் உயரிய சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆதிவாசிகளின் கிராமங்களைப் பாதுகாத்தல் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கி செம்மையாகச் செயற்படுத்த எண்ணிய அரசாங்கம், திருகோணமலை மாவட்டத்தில் நல்லூர், பாட்டாளிபுரம், வீரமாநகர், மலை முந்தல் ஆகிய இடங்களில் வாழ்ந்த ஆதிக் குடிகளின் வீடு வாசல்கள், உடைமைகள், வயல் நிலங்கள், தோட்ட நிலங்கள், கால்நடைகள் இராணுவ நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டு அப்பகுதியில் மீள் குடியேற்றம் நடைபெறும் பொழுது ஒரு குடும்பத்திற்கு 10 அல்லது 20 பேர்ச் காணிகள் சரியாக அளந்து வழங்கப்படுகின்றது.
பாரம்பரியமாக வாழ்ந்த இம்மக்களுக்கு ஆரம்பத்தில் வீட்டுத் திட்டங்களையோ, பொருளாதார வசதிகளையோ அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை. இம்மக்களைப் பொறுத்த வரையில் கிராமிய பொருளாதாரத்தை நம்பி வாழ்ந்தவர்கள் 23 ஏக்கர் காணியில் சேனைப் பயிர்ச்செய்கையுடன் ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகளை வளர்த்து கிராமிய பொருளாதாரத்தில் சீவித்து வந்தவர்கள்.
நாட்டின் வேறு பிரதேசங்களில் குடியேற்றங்களிள் நடைபெறும் பொழுது 23 ஏக்கர் வயல் நிலம் 1, ஏக்கர் மேட்டு நிலம், வசதியான வீடு, மின்சாரம், போக்குவரத்து போன்ற சகல வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கம் நல்லூர், பாட்டாளிபுரம், வீரமாநகர், மலைமுந்தல் ஆகிய கிராமங்களில் தங்களது கடின உழைப்பால் வாழ்ந்த ஆதிக் குடிகளை 10 அல்லது 20 பேர்ச் காணிக்குள் முடக்கி அவர்களின் கிராமிய பொருளாதாரத்தை சீரழிப்பது எந்த வகையில் நியாயமென கேட்க விரும்புகின்றேன்.
ஈச்சிலம்பற்று கிராம மக்களின் குடிமனைப் பிரதேசத்தில் இன்று இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்த 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு உரிமை மறுக்கப்பட்டு 2 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள உப்புக்கேணி, சின்னக்குளம் என்ற இடங்களில் வசதி குறைந்த தற்காலிக கொட்டில்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிறிய மழைக்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய நிரந்தர வீட்டுத்திட்ட வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன் வந்த பொழுதும், வீடு கட்டுவதற்கு சொந்த காணி இல்லாமல், வீட்டு வசதியினை இழக்கும் நிலை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு என்று பெருமையுடன் கூறும் அரசாங்கம், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அறியாதிருப்பது வேதனையாக விருக்கின்றது.
மக்கள் தொழில் வாய்ப்பின்றி அரை குறையாக வழங்கப்படும் நிவாரணங்களை நம்பிவாழும் நிலை தொடர்கின்றது. கிராம வீதிகள் குன்றும் குழியுமாக மக்களின் போக்குவரத்திற்கு உதவாத நிலையில் இருக்கும் பொழுது கிழக்கின் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சேருவிலயிலிருந்து பொலநறுவைக்கு பாரிய வீதியும், வாகரையிலிருந்து பொலனறுவைக்கு பாரிய வீதியும் அமைக்கப்பட்டு இவ்வீதிகள் இணைக்கப்படுகின்றன.
இதே போன்று மூதூர் கிழக்குப் பிரதேசத்திலும் வீதிகள் அமைக்கப்படுகின்றன.
அமைக்கப்படும் இப்புதிய வீதிகள் வாழ்வு இழந்த இப்பிரதேச மக்களுக்கு எவ்வித பிரயோசனத்தையும் தரப்போவதில்லை இந்த வீதி அமைப்பு பின்னணியில் புதிய குடியேற்றங்கள் நடைபெறவிருப்பதாக அறிய முடிகிறது.
பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது மக்களின் நன்மைக்காகவே இந்த இராணுவ நடவடிக்கை என ஜனாதிபதி கூறியிருந்தார். 3 வருடங்களுக்கு மேலாகியும், கிழக்கு வாழ் மக்களுக்கு குறிப்பிடக் கூடிய எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. இது தான் கிழக்கின் உதயம். இதேபோன்று தான் வடக்கிலும் வசந்தம் ஏற்படப்போகின்றது.
வன்னிப் பகுதியில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டுள்ளன. இது நாட்டு மக்களும் சர்வதேசமும் அறிந்த உண்மை.
புலிகளுடன் யுத்தம் செய்து கொண்டு தாங்கள் வன்னிக்கு கடந்த 3 மாதங்களில் மூவாயிரம் மெற்றிக்தொன் உணவினை அனுப்பியுள்ளதாக கூறும் அரசாங்கம், வன்னியில் தினமும் மக்கள் மீது வான் தாக்குதல், எறிகணைத் தாக்குதல்கள் நடத்தி தொடர்ந்தும் மக்களை இடம்பெயர வைக்கின்றது. இதனால் வழங்கப்படும் நிவாரணங்களை உரிய வேளையில் பெற முடியாத சூழ்நிலையும் பெற்ற உணவுகளை நிம்மதியாக உண்ணமுடியாத அவல நிலையும் தொடர்கின்றது.
மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றுதான் உணவு.
உணவை உண்பதற்காக மனிதன் உயிர் வாழ்வதில்லை என்பதை அரசாங்கம் மனிதாபிமான முறையில் புரிந்து கொள்ளவேண்டும். எனவே அரசாங்கம் அம்மக்களின் உயிர் பாதுகாப்பிற்கு முதலில் உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
வன்னிப்பிரதேசத்திற்கு வேண்டிய மருந்து வகைகள், ஒட்சிசன் சிலிண்டர்களும் ஏனைய அத்தியாவசிய பொருட்களும் அனுப்புவதில் பல தடைகள். சுகாதார சீர்கேடுகளினால் மிக வேகமாக பரவிவரும் தொற்று நோய்களினாலும், பாம்புக்கடியினாலும் உயிர் ஆபத்தை தினமும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். 190பாடசாலைகளைச் சேர்ந்த 55,000 மாணவர்கள் தங்களுடைய கல்வியை தொடர முடியாதிருக்கின்றனர். இந்நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியும் மூடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், சகோதரருமான பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ புதுடெல்லி சென்று பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்த பிற்பாடும் விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் குழந்தைகள், மாணவர்கள் உட்பட 8 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர். 42 வீடுகளுக்கு மேல் முற்றாகவும், 20 வீடுகள் பகுதியளவிலும் 18 கடைகள் முற்றாகவும் சேதமடைந்திருக்கின்றன. அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலை, கிளிநொச்சி மத்திய கல்லூரி, குமாரபுரம் முருகன் ஆலயம் ஆகியனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
போருக்கு முடிவு போராக ஒரு நாளும் இருக்க முடியாது. சமாதானமே முடிவாக அமையும். இதனை அடைய கௌரவம் பாராது விட்டுக்கொடுப்புகளுடன், உளசுத்தியுடன் செயற்படவேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலமே தீர்வுகாண முடியுமென தீர்க்க தரிசனம் உள்ள அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும் சர்வதேச சமூகமும் வலியுறுத்திவரும் இவ்வேளையில் வகை கூற வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் இவைகளை உதாசீனம் செய்யாமல் போரை உடன் நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காண முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.
[நவம்பர் 6 ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பற்றி, ஸ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் ஆற்றிய உரையின் முழு வடிவம்]
காணோளி: இலங்கைத் தமிழர் பற்றிய ஓவியக் கண்காட்சி, கனிமொழி எம்.பி தொடக்கி வைப்பு
சென்னையில் இலங்கைத் தமிழர் பற்றிய 250 தமிழக ஓவிய கலைஞர்களின் படைப்புக்களைக் கொண்ட ஓவிய கண்காட்சி ராஜ்ய சபை உறுப்பினர் கனிமொழியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நவம்பர் 14 முதல் 16 வரை, காலை 11முதல் மாலை 7 மணி வரை சென்னை, லலித கலா அகதமி மண்டபத்தில் இக் கண்காட்சி இடம்பெறுகிறது.
இக் கண்காட்சியின் மூலம் சேகரிக்கப்படும் நிதி, இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கு வழகங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி: தமிழக சட்ட சபையின் இலங்கை யுத்த நிறுத்தத் தீர்மான நிகழ்வு
தமிழக சட்ட சபையில் இலங்கை யுத்த நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தின் போது, அனைத்து தமிழக கட்சிகளிலிருந்தும் சட்ட சபை உறுப்பினர்கள் உரையாற்றியது தொடர்பான மக்கள் தொலைகாட்சி சேவையின் செய்திக் குறிப்பு:
விடுதலைப்புலிகள் - ஸ்ரீ லங்கா அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நவம்பர் 12 ம் திகதி முதல்வர் கருணாநிதி தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார். விவாதத்திற்குப் பின்னர் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடனடி போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏக மனதாக தீர்மானம்
விடுதலைப்புலிகள் - ஸ்ரீ லங்கா அரசு உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் ஏக மனதாக தீர்மானம்:
விடுதலைப்புலிகள் - ஸ்ரீ லங்கா அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் கருணாநிதி தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார். விவாதத்திற்குப் பின்னர் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[தமிழக சட்டசபை - படப்பிடிப்பு: மீடியா ராமு-சென்னை]
சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்து ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம்:
"ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடிவுக்கு வராமல், அந்த மண்ணின் மைந்தர்களாம் தமிழின மக்களின் உயிர், உடமைகள் எதற்கும் உத்தரவாதமில்லாமல், அவர்களின் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் என லட்சக்கணக்கானோர் அகதிகளாக அயல் நாடுகளுக்கு ஓடியவர்கள் போக எஞ்சியிருப்போர், எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்துத் துடித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலை குறித்து முடிவெடுக்க ஒக்ரோபர் 14 ஆம் நாள் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு இணங்க, கடலில் எல்லை வகுக்கப்பட்டு ஓர் உடன்பாட்டின் மூலம் தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டாலும் நமது பக்கத்து நாட்டிலேயே நமது உடன்பிறந்த தமிழ் மக்கள், நித்த நித்தம் சிந்தும் இரத்தமும் வடிக்கும் கண்ணீரும் நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சிகளாகி விட்ட கொடுமைக்கிடையே, இந்தியப் பேரரசின் உதவியுடன் இலங்கைத் தமிழர்களுக்கான உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை, தமிழகத்திலிருந்து, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அனைத்துலக அமைப்புக்களின் வாயிலாக அனுப்பி வைக்கிறோம். எனினும், அவர்களுக்கு இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல.
அவர்களின் உயிர், உடைமை ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு, இலங்கையில் அமைய வேண்டிய அமைதி நிறைந்த சம நிலை வாழ்வு, இவை அங்குள்ள தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தமான நடவடிக்கையை நமது இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலை உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் ஒன்றாக உள்ள ஏழு கோடி இந்தியத் தமிழர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் விளைவாகத் தமிழகத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும், அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி, சிறிலங்கா அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. மாணவர்கள், வணிகர்கள், திரைப்படக்கலைஞர்கள், திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், தொழிலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என எல்லாத் தரப்பினரும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் வரலாறு படைத்த மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாபெரும் நிகழ்ச்சி மறக்கவொண்ணாதது.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீங்க வேண்டுமானால் அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும்.
போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என தமிழக முதலமைச்சர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு நாங்கள் தயார் என்று மற்றொரு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிறிலங்கா அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும்.
அத்துடன், தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துகிறது. இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்றார் அவர்.
அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை மேசையை தட்டி வரவேற்றனர். இதையடுத்து இந்த தீர்மானம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[வன்னி யுத்தக் கள முனை மற்றும் பொதுமக்கள் இடப்பெயர்வு - அவலத்தின் செய்திப் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள காணோளி ~ "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற பாடலையும் உள்ளடக்கியது]
இந்த மண் எங்களின் சொந்த மண்
இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்
நீர் வளம் உண்டு நில வளம் உண்டு
நிம்மதி ஒன்றுதான் இல்லை...
இலைகள் தளர்ந்து
தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா
உந்தன் கலைகள் அளிந்து
கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா
வரிப் புலிகள் எழுந்து
புயலை கடந்து
போர்க் களம் ஆடுது தமிழா
இன்னும் உயிரை நினந்து
உடலை சுமந்து
ஓடவா பொகிறாய் தமிழா
இந்த மண் எங்களின் சொந்த மண்
இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்
நீர் வளம் உண்டு நில வளம் உண்டு
நிம்மதி ஒன்றுதான் இல்லை...
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்
உடன் வா வா புலியுடன்
சேர் சேர் எனும் குரல்
வரையப் பிளக்குது தமிழா
நீ ஆகா அழைப்பிது
ஒகோ என ஒரு
மகவை அனுப்பிடு தமிழா
நீ பூவாய் இலை தரும்
புயலாய் எழுந்துமே
புறப்பட்டு வந்திடு தமிழா
இந்த மண் எங்களின் சொந்த மண்
இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்
நீர் வளம் உண்டு நில வளம் உண்டு
நிம்மதி ஒன்றுதான் இல்லை...
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்....
போர் நிறுத்தத்திற்கு வழியமைக்குமாறு இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிககள் - ஸ்ரீ லங்கா அரசு யுத்த நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங்கை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் இன்று திங்கள்கிழமை, நவம்பர் 10ம் திகதி வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
"இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிட முடியும். இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்'' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம்தான் அரசியல் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இனப் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ்ச் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் கடந்த 22-ம் தேதி கூறியுள்ளார்.
இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்து, பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தியே தமிழக அரசின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் கருத்துகள் அந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளன.
அந்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத பொறுப்பும், கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது. அதனை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உணர்த்தி, செயல்படச் செய்வது அவசர, அவசியத் தேவையாகும்'.
பசியை நீக்கும் உணவாகிய மருந்தைத் தருபவன் பசிப்பிணி மருத்துவன் ஆகிறான். சங்ககால வள்ளல் பெரு மக்கள் அனைவரும் பசிப்பிணி மருத்துவர்களாக விளங்கினர். இன்றும் பசி என்று வருவோர்க்கு இல்லையெனாது மனமுவந்து உணவு வழங்கும் அனைவரும் பசிப்பிணி மருத்துவரே.
இந்த வகையில் உலகநாடுகள் ஒன்றுக்கொன்று உதவவேண்டும். வளத்தாலும் நலத்தாலும் வளர்ந்த நாடுகள் வறுமையுடன் போராடும் நாடுகளுக்கு உதவ வேண்டும், என்று வலியுறுத்தி - தமிழ் இலக்கிய சான்றுகள் பல பகிர்ந்து, முனைவர் ப. பத்மநாபன் தமிழகத்திலிருருந்து வெளிவரும் தினமணி நாளிதளில் "ஈத்துவக்கும் இன்பம்" என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்:
[இலங்கை, யாழ்ப்பாணம் - நல்லூரில் சுப்பிரமணிய பாரதியார் சிலை ~ படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]
ஈத்துவக்கும் இன்பம்
முனைவர் ப. பத்மநாபன்
"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்'' என் றான் தேசியக்கவி பாரதி. பசியால் ஒரு தனிமனி தன் கூட வாடக்கூடாது என்பது அவனது கொள்கை. பசியைப் பிணியாக உருவகப் படுத்தி யிருக்கிறான் தமிழ்ப்புலவன்.
எனவே உணவு, பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாகிறது. பசியைப் பற்றிக் கூறவரும் மணிமேகலை,
"குடிபிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புனை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னுமோர் பாவி''
என்று கூறுகிறது.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் குமரகுருபரர்,
எனவே பசி ஒருவனுடைய அனைத்து நல்ல குணங்களையும் இழக்கச் செய்துவிடும். எனவே தான் மணிமேகலை "ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை'' என்றும் "மண்திணி ஞாலத்து வாழ் வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே'' என்றும் கூறுகிறது.
சங்ககாலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. ஒரு புலவனின் இல்லத்தில் வறுமை தாண்டவமாடு கிறது. புலவனைப் பெற்ற தாய் "பசியால் வாடுகி றேனே, என்னுயிர் இன்னும் போகவில்லையே'' என்று நோகிறாள். புலவனுக்கு நிறைய பிள்ளை கள். மனைவியின் மெலிந்த உடல், உணவின்றி வாடும் ஒட்டிப்போன வயிறு. தாய்ப்பாலுக்கு ஏங்கும் கைக்குழந்தை. அடுப்பில் பூனை தூங்கு கிறது. குழந்தைகளுக்கு ஏதோதோ கதைகளைக் கூறி அவைகளின் கவனத்தைத் திருப்ப முனைகி றாள் தாய். ஆனால் குழந்தைகள் பசியால் வாடி வதங்குகின்றன. உணவு கேட்டு அடம்பிடிக்கின் றன.
இப்பிள்ளைகளின் பசியைத் தீர்க்க வேறு வழி யில்லாத சூழலில் குப்பைக் கீரையைப் பறித்து உப்புக்குக் கூட வழியில்லாமல் உப்பில்லாமல் குப்பைக் கீரையைச் சமைத்துத் தருகிறாள். இக் காட்சிகளைக் காணும் குடும்பத்தலைவனான புலவனின் உள்ளம் வருந்துகிறது. தனது நல்குர வைப் போக்குபவர் யார் எனச் சிந்திக்கிறான். விடையும் காண்கிறான். அந்தப் பசிப்பிணி மருத்துவனை நோக்கிப் புறப்படுகிறான்.
"குமண வள்ளலே, பாரி முதலாகிய ஏழுவள்ளல் கள் மறைந்த பின்னர் எல்லோர்க்கும் கொடுக் கின்ற வள்ளல் நீ என எல்லோரும் உன்னை நாடி வருகின்றனர். யானும் பசிப்பிணிக் கொடு மையால் வறுமை துரத்த உன்னை நாடி வந்துள் ளேன். உன் வள்ளண்மை வாழ்க'' என்று வாழ்த் துகிறான். வறுமையையும் எடுத்துக் கூறுகிறான்.
புலவனின் வறுமையைக் கேட்ட புரவலனின் நெஞ்சம் பதறுகிறது. "ஐயோ! என்ன கொடுமை இது? இவ்வளவு வறுமை உங்களை வாட்டி இருக்கிறதே, நீங்கள் முன்பே என்னிடம் கூறியி ருக்கலாமே'' என வருந்திக் குமண வள்ளல் நிறைய செல்வத்தையும் பொருளையும் வண்டிக ளில் புலவனுக்குக் கொடுத்தனுப்புகிறான். புலவன் பெருஞ்செல்வத்தோடு வீடு வந்து சேர்கி றான்
அதன்பின் நடக்கின்ற நிகழ்ச்சியில்தான் ஒரு தமிழ்ப்புலவனின் தமிழ்ப்பண்பைக் காண்கி றோம். பொருட்குவியலோடு வந்த புலவன் தன் மனைவியை அழைத்துப் பின்வருமாறு கூறுகிறான்.
"என் இனிய மனையாளே! குமண வள்ளல் கொடுத்த இந்தச் செல்வத்தை உன்னை விரும்பி வருபவர்க்கும், நீ யாரை விரும்புகி றாயோ அவர்களுக்கும், உன்னுடைய சுற்றத்தார் யாவர்க்கும், வறுமையால் வாடி உன்னை நாடி வரும் அனைவருக்கும் யார் எவர் எனப் பார்க் காது என்னையும் கேட்காமல் உன் விருப்பம் போல் எல்லோருக்கும் கொடுத்துதவுவாய். நமக் கென்று எதையும் ஒதுக்காதே'' என்று கூறுகி றான். கணவனின் குறிப்பறிந்த மனைவி எல் லோர்க்கும் அச்செல்வத்தை வாரி வரையாது வழங்குகிறாள்.
பெருஞ்சித்திரனார் குமணனிடம் பெற்று வந்த செல்வத்தைத் தானும் தன்குடும்பத்தார் மட்டுமே பயன்துய்க்க வேண்டும் என்று எண் ணவில்லை. அச்செல்வத்தை இல்லை என வந்தோர் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னது மட்டுமில்லாது அவ்வாறு கொடுக்க மனைவி தன்னுடைய அனுமதியையும் பெற வேண்டிய தில்லை என்று கூறுகிறார்.
உலகில் பல இடங்களில் வறுமையும் பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடுகின்றன. தனக்கு மிஞ்சித் தான் தருமம் என்கின்றனர் சிலர். வள்ளுவன் "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'' என்றும் "ஈத்துவக்கும் இன் பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக் கும் வண்கண வர்'' என்றும் கூறுகிறார்
குமணன் முதலான வள்ளல் பெருமக்கள் பசிப் பிணியை நீக்க உணவென்னும் மருந்தை வரையாது வாரி வழங்கியவர். ஆனால் அவ் வாறு வழங்காது அவ்வுணவென்னும் மருந்தைத் தம்கண் வைத்திருந்து தாமே தேவைக்கு மேல் அனுபவிக்க எண்ணுபவரைத்தாம் "வண்கணவர்'' என வள்ளுவர் சாடுகிறார்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் வள்ளலார் கூட பசிப்பிணியைப் போக்குவதையே தலைமை அறமாக வற்புறுத்துகிறார்.
அளவுக்கு மீறிச் சேர்த்து வைக்கப்படும் மருந்துகூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் கெட் டுப்போகும். எனவே பசி, பிணியாக மாறினால் உணவு மருந்தாக வேண்டும். அந்தப்பசியை நீக் கும் உணவாகிய மருந்தைத் தருபவன் பசிப்பிணி மருத்துவன் ஆகிறான். சங்ககால வள்ளல் பெரு மக்கள் அனைவரும் பசிப்பிணி மருத்துவர்களாக விளங்கினர்.
இன்றும் பசி என்று வருவோர்க்கு இல்லையெனாது மனமுவந்து உணவு வழங்கும் அனைவ ரும் பசிப்பிணி மருத்துவரே. இந்த வகையில் உலகநாடுகள் ஒன்றுக்கொன்று உதவவேண்டும். வளத்தாலும் நலத்தாலும் வளர்ந்த நாடுகள் வறுமையுடன் போராடும் நாடுகளுக்கு உதவ வேண்டும்.
ஓளவையார் "கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை'' என்றார். கொடிய வறுமையைச் சந் தித்த புலவர் பெருஞ்சித்திரனார் புரவலராகவே உயர்ந்து நின்றார். இதுதான் அன்றைய தமிழ்புலவனின் பேருள்ளம்.
ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்
வே. மதிமாறன்
சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம். ‘எங்க சமூகத்தை எவன் எவனோ ஏமாத்தினான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?
தமிழக முதல்வர்: என்னால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது
இலங்கைத் தமிழர் சுதந்திரமாக செயல்பட வீரமிகு தமிழர்க்கு கலைஞர் அழைப்பு:
இலங்கை தமிழர் பிரச்சினையில் தன்னால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் எவை எவை சட்ட விரோதமான செயல்களோ அவற்றிலே சிலர் ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக நவம்பர் 6ம் திகதி முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டு கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல் சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத்தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.
அதிர்ச்சி தரத் தக்கதும் ஆறாத் துயரம் அடையத் தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் "திருவிழா'க்கள் ஆகி இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றைய சோக நிலை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ஆகும்.
இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக் கூடியதல்ல! இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள் அல்லது தவறாகக் கூறுகிறார்கள்.
"இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக எதுவும் பேசுவோம், எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்' என்கிற அவர்களின் பேச்சும், எழுத்தும் எனக்குப் புரிகிறது.
ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு சிந்தித்துச் செயற்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.
சட்ட ரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால், "கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக் கெதிராக நடந்து கொள்கிறார்' என்று என் மீது "பெரும் பழி' சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயற்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந்தாலும் எனக்கும், என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து எவையெவை சட்ட விரோதமான செயல்களோ அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.
இந்தப் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்று விடாமல் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி என்னுடனிருந்து துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
இந்திய அரசு என் வேண்டுகோளையும், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்கு சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும், இலங்கை தமிழர்களுக்கு மருந்து, உணவு, உடை ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் ஆகியவற்றின் மூலம் வழங்க இதுவரை 8 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கிய தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வழங்கிட வேண்டுகிறேன். நான் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள்; இலங்கை தமிழர்களின் காயத்திற்கும், இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் தக்க சிகிச்சைக்கான மருந்தாகட்டும். அவர்களின் நலிவு தீர்த்திட ஒரு வகையில் நாம் பயன்படுகிறோம் என்கிற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த் தொண்டு, தமிழினத் தொண்டு தொடர்வோம் என முதலமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்காக பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல்
ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில் தன்னுடைய பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 7ஆம் திகதியை என் பிறந்த நாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரிழப்புடன் பலரும் பிறந்த நாட்டையே இழந்து வரும் இவ்வேளையில் தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.
10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாசாரம் இன்னும் முழுமை பெறாத நிர்மாணப் பணி. அதற்குப் பேருதாரணமே உலகெங்கிலும் நிகழும் போர்கள்தாம். மத, ஜாதி, இன, மொழி, நிற வேறுபாடுகளைக் கூறி நம் இனத்தையே கூறு போட்டு விற்கும் வியாபாரம் கலந்த அரசியலுடன் எனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது வேரூன்றி நிலைத்து விட்டது.
அத்தகைய வியாபார அரசியல் நடத்தியதால் நிகழ்ந்த அவலம் தான் ஈழப் போரும் கூட. இலங்கை நமது அண்டை வீடு என்ற சமீபம் போக ஈழப் போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்தக் கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது. இதை ஓர் அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை. மனிதனே மனிதனைக் கொல்லும் இந்தப் போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது.
இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல் சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன். மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன. இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லா விடினும் அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில் நம் வீட்டில் குதூகலக் கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இராது.
வழக்கமாக நான் பிறந்ததைக் கொண்டாடும் இத்தினத்தை நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் சொல்லும் நாளாகச் செலவிடுங்கள். நான் பிறந்ததற்கான பயன்களில் ஒன்று இதுவாகவும் இருப்பின் பெருமை கொள்வேன்
பராக் ஒபாமாவின் வெற்றி, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மானுடம் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் கடந்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சரித்திரச் சான்று பகர்ந்திருக்கிறது என்பது 21-ம் நூற்றாண்டுக்கே கிடைத்திருக்கும் வெற்றி, என தமிழக நாளேடு தினமணி நவம்பர் 6ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
பெருவாரியாக உள்ள அமெரிக்க வெள்ளையர்கள் வாக்களித்து ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, எனவும் தினமணி சுட்டிக்காட்டியுள்ளது.
[பராக் ஒபாமா: அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி]
தினமணி ஆசிரியத்தலையங்கம் முழுமையாக:
1964-ம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியர் இர்விங் வேலஸ் எழுதிய "தி மேன்' என்கிற புத்தகம் வெளிவந்தபோது, அவரது கற்பனை அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்குள் நனவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் டக்ளஸ் தில்மன் என்கிற கறுப்பர் இன அமெரிக்க செனட்டின் தலைவரை, அதிபராக்கி வெள்ளை மாளிகையில் கோலோச்ச வைப்பதும், தில்மன் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதமும்தான் இர்விங் வேலஸ் நாவலின் கரு.
"தி மேன்' நாவலின் நாயகன் டக்ளஸ் தில்மனுக்கும், அமெரிக்காவின் 44-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கும், இருவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தவித ஒற்றுமையும் கிடையாது. ஆனால், "தி மேன்' நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்த பல லட்சம் வாசகர்களின் கனவு இன்று நனவாகி இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்கிய பெருமை பராக் ஒபாமாவைச் சாரும்.
பராக் ஒபாமாவின் வெற்றியும், ஒரு கறுப்பர் இனத்தவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இன்னொரு நாள். பராக் ஒபாமாவின் வெற்றி, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மானுடம் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் கடந்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சரித்திரச் சான்று பகர்ந்திருக்கிறது என்பது 21-ம் நூற்றாண்டுக்கே கிடைத்திருக்கும் வெற்றி இது!
பராக் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது, அவர் நிறவெறிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய குடியரசுக் கட்சியின் பிரதிநிதி அல்லர். மாறாக, அடிமைத்தனத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். முதலாளிகளின் கட்சி என்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட ஜனநாயகக் கட்சி, தனது வேட்பாளராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியைத் தேர்ந்தெடுக்காமல், கறுப்பர் இனத்தவரான பராக் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது என்பதே மிகப்பெரிய சமுதாயப் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.
இரண்டாவதாக, கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் அல்லாதவரின் வாக்குகளை மட்டும் பராக் ஒபாமா பெற்றிருந்தால், வெற்றிக்கு அருகில்கூட போயிருக்க முடியாது. பெருவாரியாக உள்ள அமெரிக்க வெள்ளையர்கள் வாக்களித்து ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
""கறுப்பர் என்பதால் தகுதியில்லாத ஒருவரை ஆதரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்று சொன்ன மார்டின் லூதர்கிங்கின் அறிவுரையை அமெரிக்க வெள்ளையர்கள் பின்பற்றி இருக்கிறார்கள் என்றால், பராக் ஒபாமாவின் தகுதி நிர்ணாயகமான பங்கு வகித்திருக்கிறது. இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட உலகத்தை, அதை நடத்திக்காட்டி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்க வாக்காளர்கள். மக்களாட்சித் தத்துவத்துக்கு தாங்கள்தான் முன்னோடிகள் என்பதையும், சமுதாய மாற்றங்களுக்கும் அமெரிக்கா முன்னுதாரணமாக இருக்கும் என்பதையும் பராக் ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்து நிரூபித்திருக்கும் அமெரிக்கக் குடிமக்களை உலகமே தலைவணங்கிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் அணுகுமுறையிலும், உலகளாவிய கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுமா என்றால் சந்தேகம்தான். பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிவிவகாரக் கொள்கையிலும் சரி, ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மேலும், 1929-க்குப் பிறகு, அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் பொறுப்பை அதிபர் பராக் ஒபாமா ஏற்றிருக்கும் வேளை இது. இந்தச் சூழலில் முந்தைய ஜார்ஜ் புஷ் அரசின் நடவடிக்கைகளிலும், கொள்கைகளிலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த அவரால் நிச்சயம் முடியாது.
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த அமெரிக்காவுக்கும் இன்றைய அமெரிக்காவுக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றமுண்டு. உலகின் பல பகுதியைச் சேர்ந்த இனத்தவர்களும் அமெரிக்காவில் குடியேறி அதை ஓர் உலகக் கலாசாரங்களின் கலவையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கறுப்பர் இனத்தவர் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது தார்மிக ரீதியாக, அந்த நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள உத்வேகத்தையும், நெஞ்சுரத்தையும் அளிக்கும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் சாதுர்யம் இருப்பவர்தான் புத்திசாலி. நல்ல தலைவர். வெள்ளை மாளிகையில் உதித்திருக்கும் கறுப்பு நிலாவான பராக் ஹுசைன் ஒபாமா தன்னை ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
இலங்கைத் தமிழர் விடயத்தில் ஒருமித்த குரலுக்கு முதல்வர் வலியுறுத்துகிறார்
முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழருக்காக திரட்டும் நிவாரண நிதி குறித்து ஏனைய கட்சிகள் பல்வேறு விதமாக விமர்சித்துள்ளதையடுத்து, கட்சிகளிடையே ஒருமித்த குரல் ஒலிக்காவிட்டால் இது தான் இலங்கைத் தமிழனின் தலைவிதி என எண்ணி கண்ணீர் விட வேண் டியது தான் என முதலமைச்சர் கருணாநிதி தெரி வித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நிதி திரட்டு வதையே மோசடி நாடகம், கபட நாடகம் என்கிறார்.
ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், வைகோ, நிவாரணப் பொருட்கள் வழங்குவோம் என்று கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை என்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், திரட்டப்படும் நிவாரண நிதி அப்பாவி தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கிறார். தே.மு.தி.க.
தலைவர் விஜயகாந்த், நிவாரண உதவிகள் உண்மையில் மரணப்படுக்கையில் உள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேருமா என்பதே சந்தேகம் என்கிறார்.
[இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் கொடுத்த ரூ. 32 லட்சத்துக்கான காசோலையை சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கருணாநிதியிடம் வழங்குகிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன்.]
இத்தனை குரல்களும் வேறுபட்டு, மாறுபட்டு ஒலிக்காமல் ஒன்றுபட்டு ஒலித்திட்டால் மத்திய அரசின் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்திட உதவியாக அது அமையும் என்பது தான் என்னுடைய கருத்து.
இல்லையேல் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி இப்படித்தான் அமையும் போலும் என்று கடந்த கால நிகழ்வுகளையும், இக்கால நிகழ்வுகளையும் எண்ணி ஏங்கி எதிர்கால விடியல் வருமா என்று கண்ணீர் விட வேண்டியதுதான்!
அமைதிச் சூழலை உருவாக்க இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆக்கபூர்வமான வழியில் முன்வர வேண்டும்
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், இரு தரப்பினர் மத்தியிலும் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கக் கூடிய அமைதிச் சூழலை உருவாக்கவும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆக்கபூர்வமான வழியில் முன்வர வேண்டும், இவ்வாறு இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி, நவம்பர் 3ம் திகதிய ஆசிரியத்தலையங்கத்தில் வேண்டுகோள் விடுத்திள்ளது.
நாட்டின் சகல மக்களுக்கும் நன்மை தரக்கூடிய விடயம் இதுவொன்றே என வீரகேசரி சுட்டிக்காட்டியுள்ளது. சமாதானம் குறித்தும் யுத்த நிறுத்தம் குறித்தும் ஒரே பல்லவியைப் பாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
வீரகேசரி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாண வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி, தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியதுடன், மனித சங்கிலிப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக வணிகர் சங்கத்தின் கடையடைப்புப் போராட்டமும் நடிகர், நடிகைகளின் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றுள்ளது. அத்துடன், இலங்கை அகதிகளுக்கு உதவும் பொருட்டு பெருந்தொகை நிதியும் திரட்டப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட வன்னி அகதிகளுக்கு உணவு மற்றும் மருந்து வகைகளை இந்திய மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில், தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அகதிகளுக்கான கூடாரங்கள் என்பவற்றை இந்தியா விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை யாவும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் உறுதியாக இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. எவ்வாறெனினும், நாட்டில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணப்படுவது மிகவும் அவசியமாகும். இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இதனையே ஒரே பல்லவியாக வலியுறுத்தி வருகின்றன.
நாட்டில் நிலையான அமைதி ஏற்பட்டால் மாத்திரமே, மக்கள் தத்தமது பிரதேசங்களில் மீண்டும் சென்று குடியேறக் கூடியதாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் அகதிகளான மக்கள் சொல்லொணாக் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
உண்மையில் அகதிகளின் தேவைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் என்பன ஆறப்போடக் கூடியவை அல்ல. எனவே, அவர்கள் மீண்டும் தத்தமது பிரதேசங்களுக்கு செல்ல ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். இந்தப் பின்னணியிலேயே மோதல்கள் முடிவுக்கு வரவேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களிலும் இவ்வாறே மேற்கொள்ளப்பட்ட போர் நடவடிக்கைகள் கார ணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர நேரிட்டது. இவர்கள் தங்கள் வசமுள்ள அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களே தஞ்சமென வாழ்ந்தனர். மக்கள் அகதிகளாகி நிர்க்கதியாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உட்பட சர்வதேச சமூகம் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. இந்நிலையில், நோர்வேயின் அனுசரணையுடன் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட போர் நிறுத்தம் காரணமாகவே, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தத்தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியதுடன், பல்வேறு நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தனர். சுமார் நான்கு ஆண்டு காலம் நீடித்த போர் நிறுத்தம் காரணமாக, வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவியதுடன் மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் துரிதமாக ஆரம்பித்தனர். எனினும், மீண்டும் மோதல்கள் ஆரம்பித்ததுடன், "பழைய குருடி கதவைத் திறவடி' என்ற நிலைமைகளே உருவாகியுள்ளன. அது மாத்திரமன்றி, முன்னர் எப்போதுமில்லாத அளவு துயரங்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். நான்காண்டு கால யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவது பாரிய அனர்த்தங்களுக்கு வழிவகுக்கும் என்று சமாதான விரும்பிகளும், அரசியல் ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் அவை கணக்கில் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், ஒரு சில அரசியற் கட்சிகளும், கடும் போக்காளர்களும் போரைத் தொடரவேண்டுமென வலியுறுத்தினர்.
சர்வதேச சமூகமும் இந்தக் கட்டத்தில் வாய்மூடி மௌனித்த போக்கையே கடைப்பிடித்தது.
இன்றைய சூழலில்கூட போர் நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எந்தளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையை எவரும் கவனத்திற் கொள்வதாகத் தெ?யவில்லை.
இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் பேச்சுக்கள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது.
இந்தக் கட்டத்திலேனும் கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு, தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண இரு தரப்பினரும் முன்வருவார்களேயானால், மேலும் அழிவுகளைத் தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதே யதார்த்தம். யுத்தம் காரணமாக பெருந்தொகை நிதி வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுவதால் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் புறந்தள்ளப்படுகின்றன. எனவே, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், இரு தரப்பினர் மத்தியிலும் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கக் கூடிய அமைதிச் சூழலை உருவாக்கவும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆக்கபூர்வமான வழியில் முன்வர வேண்டும். மாறாக, சமாதானம் குறித்தும் யுத்த நிறுத்தம் குறித்தும் ஒரே பல்லவியைப் பாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
இன்றைய யுத்த சூழலில் மனித உயிர்கள் ஒரு செப்பு சல்லிக்கும் மதிப்பின்றிப் போயுள்ளதுடன், பரஸ்பரம் உயிரிழப்புக்கள் வெறுமனே கிரிக்கெட் ஆட்டம் போன்று கணக்கிடப்படுகின்றன.
இந்த துயரகரமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உட்பட சர்வதேச சமூகம் முன்வருமானால் அதுவே நாட்டின் துயர் நீங்கி அமைதி பிறக்க வழிவகுப்பதாக இருக்கும்.
உண்ணாவிரதத்தில் திரை நட்சத்திதிரங்களின் உரை: கமல்ஹாசன், சத்தியராஜ், மனோரமா
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, தமிழக நடசத்திரங்கள் ஆற்றிய உரையின் MP3 வடிவம் இங்கே ஊற்று.கொம் வாசகர்களுக்காக:
[பத்மஸ்ரீ திரு கமல்ஹாசன்]
"நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர். வாஞ்சிநாதன் உட்பட பலரும் அந்த வரிசையில் சேர்ந்தவர்கள்தான். அதனால் போராடுபவர்கள் யார் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்"
முதல்வர் கருணாநிதி: இலங்கைப் பிரச்னையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும்
"இலங்கைப் பிரச்னையில் தலையிடுவதில் மத்திய அரசின் நிலையையும், அதிகார எல்லையையும் உணர வேண்டும்; இன்னொரு நாட்டுப் பிரச்னையில் பக்கத்து நாடு ஓரளவுக்குத்தான் நேரடியாகத் தலையிட முடியும்' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று, 'இலங்கைத் தமிழர் பிரச்னையில் அரசின் வேகம் குறையத் தொடங்கி விட்டது' என்று தெரிவித்து வெள்ளியிட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி இன்றுஅறிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரின் பதில் குறித்து, தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு பின்வருமாறு தெரிவித்துள்ளது:
"அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே, அதில் கூறப்பட்ட கருத்துக்கு மாறாக நடந்துகொண்டுவிட்டு தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறுவது என்ன நியாயம்?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அன்றைக்கே அவை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, இலங்கைத் தூதுவரை அழைத்து மத்திய அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சு, பிரணாப் முகர்ஜி சென்னை வருகை, மனிதச் சங்கிலி அணிவகுப்பு போன்றவை நிகழ்ந்தன.
அந்த அணிவகுப்பில் கூட, ராமதாஸýம் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். திரைப்படத் துறையினர் ராமேசுவரத்தில் பேரணியும், சென்னையில் உண்ணாவிரதமும் இருந்தனர். ரூ. 45 லட்சத்துக்கு மேல் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இவை, ""இலங்கைத் தமிழர்களுக்கான நடவடிக்கைகள் கிடப்பிலே போடப்பட்டுவிட்டன'' என்பதற்கான சம்பவங்களா? இல்லை.
என்ன நியாயம்? "இரண்டு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய நேரிடும்' என தீர்மானத்தில் கூறப்பட்டது.
அதன்பின், தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் 22 பேர் ராஜிநாமா கடிதம் கொடுத்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் என்னிடமும் தரவில்லை-அவர்களின் கட்சித் தலைமையிடமும் தரவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களே அந்தக் கருத்துக்கு மாறாக இருந்த நேரத்தில்-நாமே தீர்மானம் தோல்வி அடைந்து விட்டது; திசை திருப்பப்பட்டு விட்டது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
வலியுறுத்தும் பொறுப்பு... மத்திய அரசில் எப்படி தி.மு.க. ஓர் அங்கமோ, அதுபோலத்தான் பாமகவும். அவருடைய புதல்வரே அதில் முக்கிய அமைச்சராகத்தான் இருக்கிறார். எனவே, மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு என்னைப் போல அவருக்கும் உண்டு.
மத்திய அரசிடம் என்னை விளக்கம் கேட்குமாறு ராமதாஸ் கூறுகிறார். நான் விளக்கம் கேட்டதால்தான் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிலையும், அதிகார எல்லையும்... மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில்தான் அவர்களும் இயங்க வேண்டியுள்ளது. இன்னொரு நாட்டுப் பிரச்னையில் பக்கத்து நாடு ஓரளவுக்குத்தான் நேரடியாகத் தலையிட முடியும்.
அனைத்துக் கட்சித் தீர்மானத்தில் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முன்வராவிட்டால் தமிழக எம்.பி.க்கள் பதவி விலக நேரிடும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், மத்திய அரசு முன்வராமல் இல்லை. அவர்கள் முன்வரவில்லை என்று கூறி, தமிழக திமுக எம்.பி.,க்கள் மட்டும் பதவி விலகி மற்றவர்கள் விலகாவிட்டால், அப்போது மட்டும் தீர்மானம் தோல்வி இல்லை என்றாகி விடுமா? மத்திய அரசின் நிலையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா?
இந்த அளவுக்கு தீர்மானம் நிறைவேற்றியதால்தான் மத்திய அரசு அதன் சக்திக்கேற்றவாறு உதவி வருகிறது. தீர்மானத்தில் கூறியவாறு தமிழக எம்.பி.க்கள் பதவி விலகி மத்திய அரசும் கவிழ்ந்து விடுமேயானால் அப்போது நிலைமை என்னவாகும்? இலங்கை அரசை இந்த அளவுக்குக் கூடத் தட்டிக் கேட்டு தமிழர்களுக்கு உதவ முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது?
எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் திசை திருப்பப்பட்டு விட்டது, தோற்று விட்டது என்று நமக்கு நாமே ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பது சரியாகாது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நோக்கம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஒற்றுமையைக் கட்டிக் காப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்' என்று தமது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் வேகம் குறையத் தொடங்கி விட்டது
"இலங்கைத் தமிழர் பிரச்னையில் அரசின் வேகம் குறையத் தொடங்கி விட்டது. பொங்கி எழுந்த வேகத்திலேயே அந்த உணர்வு அடங்கிப் போய் விடுகிறது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுகூட செயல்படுத்தப்படவில்லை. அத்தனை தீர்மானங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன," என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தது குறித்து தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு பின்வருமாறு தெரிவித்துள்ளது:
"இலங்கையில் உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும். இதுதான் அங்குள்ள தமிழர்களுக்கு உண்மையான நிவாரணம் ஆகும். இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். சண்டை நிறுத்தப்பட்டால் அவர்களுக்கான நிவாரணத்தை இலங்கைத் தமிழர்களே தேடிக் கொள்வார்கள்.
தோற்றுப் போய் விட்டோம்... "இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த முக்கியமான தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உறுதிமொழிகள் என்ன? ஒன்றும் இல்லை.
இதில் மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல்? என்ன நடந்தது என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும்.
கிடப்பில் தீர்மானங்கள்... இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, அக்டோபர் 24-ம் தேதி மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அன்றைய தினம் அறிக்கை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, "நாம் நம்பிக்கை கொள்கின்ற அளவுக்கு, பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார்' என்றார்.
அது முதல், இலங்கைத் தமிழர் பிரச்னையில் அரசின் வேகம் குறையத் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
பொங்கி எழுந்த வேகத்தில்...இலங்கையில் நமது சொந்தங்கள் கொல்லப்படுகிறார்கள், அங்குள்ள குழந்தைகள் குண்டுவீசி அழிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வு எப்போதாவது தமிழர்களுக்கு ஏற்படுகிறது. அதனால், பொங்கி எழுகின்றோம்.
ஆனால், பொங்கி எழுந்த வேகத்திலேயே அந்த உணர்வு அடங்கிப் போய் விடுகிறது. கடந்த மாதம் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அப்படிப்பட்டவைதான்'.
"யுத்தத்தில் அழிக்கப்படுபவர்கள் புதைக்கப்படவில்லை; அங்கே விதைக்கப்படுகிறார்கள்" - "சுப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நவம்பர் 1ம் திகதி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.
இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும்.
இங்கும் வெளி நாடுகளிலும் இலங்கைத் தமிழர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சே சங்கீதம் போல் இருக்கும். பழகுவதற்கு அவர்கள் இனிமையானவர்கள். அத்தகையவர்கள் இன்று சொந்த மண்ணில் வாழ முடியவில்லை.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களுக்கு எதிராக நடத்தும் இந்த போரில் இலங்கை ராணுவத்துக்கு இன்று வரை வெற்றி கிட்டவில்லை. அவர்கள் ஆண் பிள்ளைகள்தானா என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது நிறுத்த வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது. இல்லை என்றால் உறவினர்களை பறி கொடுத்த தமிழர்களும் - மண்ணில் உதிரம் சிந்திய பெண்கள், குழந்தைகளின் ஆன்மாவும் அவர்களை சும்மா விடாது.
யுத்தத்தில் அழிக்கப்படுபவர்கள் புதைக்கப்படவில்லை; அங்கே விதைக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமை தொடர்ந்து நடந்தால் இலங்கை என்றுமே உருப்படாது. இலங்கையில் மட்டுமல்ல - எந்த நாட்டிலும், எந்த மண்ணிலும் அப்பாவி குழந்தைகள் பெண்கள், முதியோர்கள் தாக்கப்படக் கூடாது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கான ரூ. 10 லட்சத்தை அளிப்பதாக அறிவித்தார்.
"சுப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.