"இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம்"
மத்திய அரசு தீர்வு காணும்!
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில் திங்கள்கிழமை - 06 ஒக்ரோபர், திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபே சியில் பேசினேன். இலங்கையில் இருந்து வரும் செய்திகள் எங்களை கலங்கடித்து வருகிறது என்று அங்கு நடந்து வரும் கொடுமைகளை அவரிடம் எடுத்துச் சொன்னேன் கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள் என்று நா தழுதழுக்க பிரதமர் என்னிடம் கூறினார். பிரதமரின் அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தந்தது.
இளகிய மனம் படைத்த பிரதமரும், சோனியா காந்தியும் இலங்கைப் பிரச் னையில் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் இரு வரும் நமக்கு வழிகாட்ட வேண்டும்.
அந்த வழி இந்தியாவைக் காப்பாற்று கின்ற வழியாக மட்டுமல்லாமல் இனப் படுகொலையை தடுக்கின்ற வழியாகவும் அமையும் இல்லையெனில் அடுத்து என்ன செய் வது என்பது குறித்து திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு ஒத்துழைக் கும் என்று நம்புவோம். இல்லையெனில் இலங்கை தமிழர்களோடு சேர்ந்து நாமும் சாவோம்.

[இலங்கைப் பிரச்னை தொடர்பாக தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி. உடன் (இடமிருந்து) நிதி அமைச்சர் க. அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின்.]
ஒருவேளை மத்திய அரசால் பிரச்னை யைத் தீர்க்க முடியாவிட்டால் தமிழர்களாகிய நம்மால் கைகட்டி உட்கார முடி யாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்திய அரசு தமிழர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று பிரதமரை கேட்டு கொள்கிறேன்.
29-1-1956 சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் "தாய் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்'' என்ற தீர்மானத்தை நான் (கருணாநிதி) முன்மொழிந்தேன். பொன்னம்பலனார் வழிமொழிந் தார். இன்றைய தீர்மானமும் அதுதான்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று யாரும் எங்களைச் சொல்ல முடியாது. இலங்கைப் பிரச்னை தொடங்கிய காலம் முதலே எங் களது போர் முழக்கமும் தொடங்கி விட் டது பிரதமர் என்னிடம் பேசிய பிறகு தில்லி யில் உள்ள இலங்கை தூதரக அதிகா ரியை அழைத்து மத்திய அரசு எச்சரித் துள்ளது. இது மீறப்பட்டால் இந்த அரசு தேவைதானா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும் தனி ஈழம் பிறந்துதான் ஆக வேண்டுமா என்ற விவாதம் இப்போது நடந்து வருகிறது. பல நாடுகள் சமாதான முயற்சி யில் ஈடுபட்டும் இலங்கையில் அமைதி ஏற்படவில்லை.
ஒருவேளை தமிழனின் ரத்தம் முழுவ தும் இலங்கை மண்ணில் அபிஷேகம் செய்யப்பட்டால்தான் அமைதி ஏற்ப டுமோ என்னமோ தெரியவில்லை. தமிழர்களின் ரத்தம் அபிஷேகம் நடக்காமல் இலங்கையில் அமைதி பூ பூக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டு நான் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தேன். இந்த ஒரு பிரச்னையிலாவது தமிழர்கள் அனைவ ரும் ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒரு முகமாக இருந்து பிரச் னைக்குத் தீர்வு காண்போம் என்றார் கரு ணாநிதி.
அமைச்சர்கள் க. அன்பழகன், ஆர்க் காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், துரை முருகன், வீரபாண்டி ஆறுமுகம், க. பொன்முடி, பரிதி இளம்வழுதி, திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், மாநிலங்களவை உறுப்பி னர்கள் கவிஞர் கனிமொழி, திருச்சி என். சிவா, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் விழாவில் பேசினார்கள். [நன்றி: தினமணி]


Comments
Sri Lanka War last 6 months did not open their mouth in central governnment, But now till date open their mouth isn't possible.
Posted by: S.Nagarajan | January 12, 2009 12:36 AM